மிளகு கேட்டவன்
உயிர்கள் பறித்த
வெறியோ....வலியோ
முகம் இறுகினாலும்
இன்னும்
சின்னப் புன்னகையோடு
சிரித்தபடிதான் அவன்
புத்தம் சரணம் கச்சாமி !
சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்
புத்தம் சரணம் கச்சாமி!!!
(மே 13 முதல் மே 18 வரையான உயிரழிவுகளின் நினைவாக)
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
51 comments:
வலிக்க செய்யும் வரிகள்!
இதயம் வலிக்கும் வரிகள்
விஜய்
வலி (மை)யான வரிகள் ஹேமா
இதயம் வலிக்கும் வரிகள்
:(((
சுருக்...
என்றிருக்கிறது சுருக்கமான வரிகள்
மனம் கனத்து போயிற்று ஹேமா!
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா, ஆகாஸ பார்வை என்ன சொல்லு ராசா
இது தான் நினைவுக்கு வந்தது
:(
வலி வரிகள் ....
இதயம் கணத்துப்போயிற்று........
காலங் கடந்தாலும் எங்கள் நரக ஞாபகங்களோடு, மனிதமது தூங்கி விட்ட பூமியில் துயில் கொள்ளுகின்ற புத்தனைத் துயிலெழுப்புவதற்கான வலிகள் கலந்த வரிகள் அருமை.
:-( ....... -(
எப்போது விடியும்.. என்கிற ஏக்கமும் தவிப்பும் கூடுதலாகிப் போனது
வலிகள்...வலிகள் ....
மௌனம் தான் பதிலாக தர இயல்கிறது தோழி
காலங்கடந்தாலும் எதுவுமே மற(று)க்கப்படுவதில்லை..
.
ம்ம்ம்
வலிகள் உங்களுக்கு மட்டுமே சொந்தம்
ஏனென்றால் சிரிக்கும் புத்தனின்
புது இலக்கணம் படைத்தவர்கள் நாங்கள்:(
//மரணம் இல்லா வீடொன்றில்
மிளகு கேட்டவன்
உயிர்கள் பறித்த
வெறியோ....வலியோ//
உடல் அனுக்களில் ஊசி நுழைகிறது.
//சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்//
படிக்க படிக்க கண்ணீர்....
அற்புதமான வரிகள்....
மரணம் இல்லா வீட்டில் மிளகு கேட்டவன் இன்று ரணத்தை பார்த்தபடி உள்ளுக்குள் கசிகிறான்.காலம் புத்தனின் சார்பில் காத்திருக்கிறது தீர்ப்புகளை நோக்கி.மனம் வருந்துவது மற்றெல்லாவற்றையும் விட எளிதாகவும் அவமானமாகவும் இருக்கிறது ஹேமா.
ஆசை துறந்த புத்தன்...ஆசையோடுதான் என்கிறான்... நல்ல வரிகள் ஹேமா. புத்தன் வந்த திசையிலே போர்...புனித காந்தி மண்ணிலே போர்..என்ற வரிகள் நினைவுக்கு வந்தன..
//
சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்
புத்தம் சரணம் கச்சாமி!!!//
கருத்திடவும் கை நடுங்குகிறது....
நன்று
உன் எதிரே புத்தன் தோன்றினால்
அவனைக் கொன்றுவிடு ......
எல்லா சிங்களப் பேய்களும் புத்தனை மதிக்கவில்லை
தேரர்களின் செருப்பாய் இருக்கிறான் புத்தன் ...
கோபம் இன்னும் சூடாக பொங்க வேண்டும் ஹேமா ...
உயிரும் நடுங்கும் வலி
முழுமையாக உணரவில்லை. இரண்டு காரணங்கள். அதென்ன 13 வரைக்கும். அதற்குப்பின்னால்? வேறு ஏதும் காரணங்கள் உண்டா?
இந்த கவிதையின் நோக்கத்தை பழைய கவிதைகள் மாதிரி சற்று விவரித்து யோசித்துப் பாருங்கள் விட்ட இடங்களை நிரப்பக்கூடிய முழுமையான திறமை உங்களிடம் உண்டு.
வலியும்
வேதனையும்
கோபமும்
புரிகிறது
ஹேமா.
வலி தைக்கிறது மனதை.
புத்தம் சரணம் கச்சாமி!!!
ஆமாம்... புத்தனுக்கு வலிக்குமா?
சுலபமாய் சொல்லிவிட்டான் புத்தன்! :(
வலியில் பதைக்கிறது மனம்.
:-(
வலியை மறப்போம். மரணித்தவர்களை நினைத்து வழி தேடுவோம்.
புத்தம் மரணம் கச்சாமி :(
நல்லாதான்யிருக்கு... ஆனால் புத்தரை இழுத்தது எனக்கு உடன்பாடில்லை...
புத்தநிலை என்பது வேறு ஹேமா...
அதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்
கேக்கவே கஷ்டமா இருக்கு... நிதர்சனம் பிரசவித்த வரிகள்
வலிகள் சுமந்த நாட்கள் .. வாழ்த்துக்கள்
புத்தனும் கண் மூடிகொண்டான் அன்று. தலை குனிந்தான்.. இன்று
வலி... :(
முகம் இறுகினாலும்
இன்னும்
சின்னப்புன்னகையோடு
சிரித்தபடிதான் அவன்
புத்தம் சரணம் கச்சாமி!
காலத்திற்கேற்ற கவி வரிகள். சின்னப் புன்னகையோடு சிரித்த படி புத்தர் படம்.....
புத்தனின் கரங்களிலும் ரத்தம்
இதயத்தின் வலி
16 வரிகளில் கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள் ...
மனசு வலிக்குது தோழி....
இவன் புததனா எத்தனா? உயிர் வலி தந்த கவிதை.
யாழ்.
ஹேமா ,
வலி வேண்டாம் ..விழிக்கட்டும் உன் கவி
முடிந்தது பேசி இலாபமா?
வீழ்ச்சியை விட்டொழி
எழுச்சி,வீச்சு,வீரம்,விவேகம்
உன் கவியை அணைக்கட்டும்
//மே 13 முதல் மே 18 வரையான உயிரழிவுகளின் நினைவாக//
னு எழுதி இங்க (மே 13) போட்டதும் , 14, 15, 16, 17 மற்றும் 18 தொடர்ந்து பதிவு வரும்னு பாத்தா கானோமே...
:-(((((( x 1000
//சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்//
வலி தெரித்த வரிகள் ஹேமா
vali niraintha varthaigal
//ஜோதிஜி.....முழுமையாக உணரவில்லை. இரண்டு காரணங்கள். அதென்ன 13 வரைக்கும். அதற்குப்பின்னால்? வேறு ஏதும் காரணங்கள் உண்டா?
இந்த கவிதையின் நோக்கத்தை பழைய கவிதைகள் மாதிரி சற்று விவரித்து யோசித்துப் பாருங்கள் விட்ட இடங்களை நிரப்பக்கூடிய முழுமையான திறமை உங்களிடம் உண்டு.//
ஜோதிஜி.....நீங்கள் வந்ததே சந்தோஷம்.மிக்க நன்றி.
கறுப்பு ஆடிபோல இனி மே 13-18 ம் எங்களின் பேரழிவுகளின் ஊழி வலி.
அவ்வளவு மட்டுமே.தொடர்ந்த அழிவுகளானாலும் பெருக்கெடுத்த இரத்தம் இந்தக் காலகட்டத்தில் அதிகம்.
அவர்களின் வேதனை.
ஊனமுற்றவர்கள் தொகை என இழப்பு அழிவு என் கண்ணீர் அஞ்சலி நினைவு மாத்திரமே.அரசியல் தாண்டி என் இனம்,என் மக்கள்,என் தேசம்,என் மண் அவ்வளவே என் ஆதங்கம்.
வேறெதுவும் இல்லை.
Post a Comment