*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 30, 2010

முடிவின் முடிவில்...

ஒருதலைப் பட்சமாய்
சொல்லிக்கொள்ள என்னவனாய்
கவிதைகளுக்குள்
ஆச்சரியக் குறியும்
கேள்விக் குறியுமானவன்
பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி.

என்னிடம் செய்திகள் பகிர்தலில்
இஷ்டமில்லாதவன்
இரவின் வயிற்றையும்
பகலின் நெஞ்சையும் கிழிக்க
கேள்விகளோடே காத்திருந்தவன்.....

உலகம் அழிதலும்
நிச்சயமற்ற மனிதர்களின் வேள்வியும்
எப்போவென வெறியோடு
பிரசண்டமாய் பிராணசங்கடம் தர
அகலமுடியா இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....

வானம் தொடங்கி பூமிவரைக்குமான
அபயக்குரலும் அவிப்பலியும்
அவனோடும் என்னோடும் அதிர
அந்தரஊஞ்சலில் என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.

யார் தடுக்க இனி !

சிதைந்த உடலைத்
தழுவ
அணைக்க
இணைய
இறுக்கி முத்தமிட.

அவனாலும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

31 comments:

அப்பாதுரை said...

முடிவின் முடிவில்
அருமையான தலைப்பு; தலைப்புக்கேற்ற கவிதை; கவிதைக்கேற்ற படம் (எங்கே பிடித்தீர்கள்? உயிரை உலுக்கும் சித்திரம்)

Madumitha said...

ப்பா.. சிலிர்க்கவைக்கும்
கவிதை. படம் நிறைய
விஷயங்களைச்
சொல்கிறது.
நிறைய எழுதுங்கள் ஹேமா.

Unknown said...

//இனி யார் தடுக்க !//

எல்லாம் முடிந்தபின்
துயரம் தோய்ந்த விழிகளில்
கண்ணீரும் ரத்தமாய்
வருகிறது

Ashok D said...

வார்த்தை பிரயோகம்... க்ஷ்னத்தில் தோன்றிய கவிதையாக தான் இருக்கும்... அற்புத நடை..... புதிதாய் பிறந்தக் கன்றுக்குட்டியை போன்றதோர் அழுகு... கலக்கிட்டீங்க ஹேமா :)


மனமிருந்தால் மார்க்கபந்து... மார்க்கமுண்டு
cheers.......

விஜய் said...

நல்லா இருக்கு ஹேமா

ஆரம்பத்தொடக்கமாக

வாழ்த்துக்கள்

விஜய்

Chitra said...

முதலில், படத்தை பார்த்ததுமே மனதை உலுக்கியது. பின்னே, கவிதையும்.

க.பாலாசி said...

//வானம் தொடங்கி பூமிவரைக்குமான
அபயக்குரலும் அவிப்பலியும்
அவனோடும் என்னோடும் அதிர
அந்தரஊஞ்சலில் என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.//

அருமையான சொல்லாடல்ங்க...

வலியில் மிகையும் கவித்துவம்.... ஒன்றிற்கொன்று பொருத்தம்....

சத்ரியன் said...

//ஒருதலைப் பட்சமாய்
சொல்லிக்கொள்ள என்னவனாய்//

’அவனை’ப்பற்றி சொல்லாமலே விட்டிருக்கலாம்.

ஹேமா,
ஊரிலிருந்து வந்தாய் தானே. அங்கிருந்து கொண்டு வந்த விடயங்களை கவிதையாக்கலாமே.

sathishsangkavi.blogspot.com said...

//சிதைந்த உடலைத்
தழுவ
அணைக்க
இணைய
இறுக்கி முத்தமிட.

அவனாலும் கூட!!!//

அழகான அழமான வரிகள்....

தமிழ் உதயம் said...

உலகம் அழிதலும்
நிச்சயமற்ற மனிதர்களின் வேள்வியும்
எப்போவென வெறியோடு
பிரசண்டமாய் பிராணசங்கடம் தர
அகலமுடியா இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....




வார்த்தைகள் எப்படி வந்து, ஒன்றையொன்று கோர்க்கிறது. வியக்கிறேன்.

நேசமித்ரன் said...

//பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி//

சித்திரம் சிலிர்க்க வைக்கிறது
கவிதையின் நீரோட்டத்தில் கால் புதைவது தெரியாமல் நின்று கொள்ளலாம் போல ...

அகரத்துவக்கம் முடிவின் முடிவு

வாழ்த்துகள் !!!

நட்புடன் ஜமால் said...

மிரட்டுது ஹேமா! படம்.

இனி யார் தடுக்க :(

------------

நிலாவோடு நடந்த (ஊரில்) நாட்களை எழுதுங்களேன் ஹேமா ...

காயத்ரி said...

படம் கிலியூட்டுகிறது... கவிதை கனக்கவைக்கிறது... அருமை ஹேமா...

அம்பிகா said...

சிலிர்க்க வைக்கும் படமும், கவிதையும்.
அருமை

NILAMUKILAN said...

அருமை

நசரேயன் said...

//பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி.//

ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கு, எந்த தொலைகாட்சியிலே செய்தி

//என்னிடம் செய்திகள் பகிர்தலில்
இஷ்டமில்லாதவன்//

ரெம்ப நல்லவரு போல தெரியுது

//இரவின் வயிற்றையும்
பகலின் நெஞ்சையும் கிழிக்க
கேள்விகளோடே காத்திருந்தவன்.....//

உங்க கவுஜைப் பார்த்து காணாம
போயிட்டானா?

//இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....//

ரத்தக் காட்டேரி மாதிரி இருக்கு

//என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.
//

லெக் பீசா, சிக்கன் பீசா இல்ல காமடி பீசா கடிச்சி திங்க

ராஜவம்சம் said...

படமும் பொருளும்
ரொம்ப டெரரா இருக்குங்க

{நாபயந்தேபோய்ட}

கவி அழகன் said...

supper

அப்துல்மாலிக் said...

இந்தகவிதை ரொம்ப டெர்ரரா இருக்கே ஏன்?

ஸ்ரீராம். said...

அப்பாதுரை கருத்தை வழிமொழிகிறேன்...
வார்த்தைகள் நீங்கள் தொட்டதும் அழகாய் வந்து அதனதன் இடத்தில் அமர்கின்றன ஹேமா..

ஹேமா said...

நேற்று ஏனோ மனம் வலிக்க வந்த கவிதை இது.மனதிற்கு நிறைவாய் எனக்குப் பட்டது.

கருத்துக்கள் பல கோணத்தில்.
சொன்ன எல்லோருக்குமே
அன்பின் நன்றி.

ஹேமா said...

அப்பாத்துரை...நன்றியும் அன்பும்.


மது....உங்களுக்கும் நன்றி.


செந்தில்...முதல் வருகைக்கு நன்றி.சில சமயங்களில் சோகமும் மனதை இதமாக்கும்.


அஷோக்...மனம் கிடந்து உழட்ட உளறிய வார்த்தைகள்தான் நொடியில் பதிவாகியது.மனமும் மார்க்கமும் !


விஜய்...."ஆரம்பத்தொடக்கம்" ம்ம்ம்...எழுதிடலாம் !


சித்ரா...எனக்கும் ஒரு ஆசை என் பதிவில் உங்களைச் சிரிக்க வைக்கணும்ன்னு !


பாலாஜி...எப்போதும் என்னை ஊக்குவிக்கும் உங்கள்
அன்புக்கு நன்றி நண்பா.


சத்ரியா...நான் ஊர்ல இருந்து ஒண்ணுமே கொண்டு வரலையே !இதுக்கு முதல் 2 கவிதையும்
உப்புமடச் சந்திலயும் போட்டிருக்கேனே !


சங்கவி ..நன்றி கருத்துக்கு.


தமிழ்... அன்பான உங்கள் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.


நேசமித்ரன்....மித்ரா உண்மையாவே ரசிச்சிருக்கீங்கன்னு நம்புறேன்.நன்றி.


ஜமால்...நீங்க இன்னும் உப்புமடச் சந்தி பாக்கலியா ?
பாருங்க நிலா இருக்கிறா.


காயத்ரி...முதன் முதலா வந்திருக்கீங்க.பயப்படாம வாங்க.அடிக்கடி கவிதை இப்பிடி வராது .எப்பாச்சும்தான் !


அம்பிகா...உங்கள் தொடர்ந்த அன்புக்கு நன்றி தோழி.


முகிலன்...சும்மா சொல்லிட்டுப் போகக்கூடாது அருமைன்னு !
உங்க கவிதையை விடவா !


நசரேயன்...நசர் அமெரிக்கப் பேய்ன்னு நினைச்சீங்களா !


ராஜவம்சம்....என்ன ராஜவம்சம் {நாபயந்தேபோய்ட} என்ர தமிழ்ல சொல்லிப் பாத்தீங்களோ !


யாதவன்...உங்கள் முதல் வருகைக்கு நன்றி யாதவன்.


அபுஅஃப்ஸர்.....இப்பிடியெல்லாம் கவிதை போட்டாத்தானே இந்தப் பக்கம் வாறீங்க.உங்களை வரவழைக்கத்தான் அபு.


ஸ்ரீராம்...நன்றியும் அன்பும் உங்களுக்கு ஸ்ரீராம்.

thamizhparavai said...

புரியலை ஹேமா.... :-(

"உழவன்" "Uzhavan" said...

நல்லா எழுதுறீங்க :-)

நமக்கு இந்த காதல் கவிதையே எழுத வராது:-)

சுந்தர்ஜி said...

நெகிழ்வாயிருந்தது படித்தபின்.படத்துக்கும் உணர்வுக்கும் நெருக்கம் அதிகம்.சபாஷ் ஹேமா.

சிநேகிதன் அக்பர் said...

படமும் கவிதையும் மிக அருமை.

தலைப்பு அதைவிட அருமை.

ஹேமா said...

சுந்தர்ஜி...வந்தீங்களா.
வாங்க வாங்க.
இனி அடிக்கடி சந்திக்கலாம்.


அக்பர்...உங்கள் அன்புக்கும் நன்றி என்றும்.

Nathanjagk said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

உறவின் பிரிவுத்துயர் செறிந்த கவிதை. கணவனை (அல்லது காதலனை) இழந்தவளின் ஒற்றைக் குரலாகக் கவிதையைக் காண்கிறேன். ​

அந்தப் பொருளை நோக்கி முன்னேற விடாமல் கவிதை காட்டும் காட்சிகள் திரையிடுகின்றன. சில வரிகள் அவசியமற்று குழப்பத்தை விளைவிக்கின்றன. கவிஞனின் நோக்கம் கவிதையைப் பயணிக்க ​வைப்பதே. ​தெளிவு:தெளிவின்மை என்ற விழுமியங்கள்​தேவையில்லை. கவிதையில் பயணமே முக்கியமானது.

என்னால் இந்த கவிதையில் ஒரு இழப்பின் மரணத்தின் பிரிவின் வாசத்தை மட்டுமே நுகரமுடிகிறது. 'சிதைந்த உடல்' என்ற ஒற்றை வரியே இதர வலுவில்லாத வரிகளைத் தகர்த்திவிட்டு கணவனை இழந்தவளின் வேதனை என்பதாக உணர்த்திவிடுகிறது. கவர்ச்சியாக்கிக் காட்டும் முனைப்புள்ள படிம வரிகளால் கவிதையில் இயல்பான அழகு குலைந்து கிடப்பதாக உணர்கிறேன். வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்ட சில வரிகளால் கவிதை வாசிப்புக்கு அதிக ​நேரம் எடுத்துக் கொள்கிறது.

தன்னியல்பு இல்லாத படைப்பாக இதைப் பார்க்கிறேன். மற்றபடி எப்போதும் போல் எடுத்துக் கொண்ட ஒற்றைக் கருத்தை வலுவாகச் சொல்லும் உங்களின் சாரம் இக்கவிதையிலும் குடிகொண்டிருக்கிறது.

கவிதையின் அழகு விசாலமான கட்டுமானங்கள் கொண்ட வார்த்தைகளால் படிமங்களால் மட்டும் வருவதில்லை. அது ஒரு மயக்கம். அந்த மாதிரியான பூடக படிமங்கள் குறிப்பிட்ட கருப்பொருட்களுக்கு (அல்லது கருப்பொருள்களற்றவைகளுக்கு) மட்டும் பொருந்தி வருவன. சில கருப்​பொருட்கள் இயல்பாகவே செவ்வியல் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவற்றுக்கு வலிந்து சுமத்தப்படும் மாயத்தன்மைமிகு (பூடக) படிமங்கள் ​கருத்துக் குலைவையே காட்டும். அல்லது கவிஞனின் தயக்கத்தைக் காட்டுவதாக அமைந்துவிடும்.​

கவிதைக்கான கருப்பொருள், நடை, கட்டு இவைகளை யாரும் யாருக்கும் அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை. படைப்பூக்கம் தளும்பிய ஒரு கலைவடிவே கவிதையாற்றுதல். குலைவும் அழகே என பறைசாற்றுவதும் இஃதே. குலைவுறச் செய்வதிலும் (நிர்மூலமாக்குவதிலும்) ஒரு ஒழுங்கின் அவசியத்தைக் காண்பதும் இக்கலையே. அந்த அழகை யாசித்தே கவிதைகளை நாடுகிறோம். சிலரின் கவிதையில் அழகை விட எழுதியவர்களின் இயல்புத்தன்மையைத்​தேடுகிறோம். அது இல்லாதது ஏமாற்றமாக முடிகிறது.

இயல்பு என்பது இந்த வரிகளை அவர் எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்று மற்றவரும் அறியமுடிவது. ஒரு குறிப்பிட்ட வரிகளைக் ​கொண்டு இன்னார் எழுதியது என்று அடையாளம் ​காட்டுவது. அத்தகு உங்களின் அடையாளத்தை, இயல்பை இழந்த படைப்பாக இதை உருவகிக்க முடியகிறது.

ஹேமா said...

//தன்னியல்பு இல்லாத படைப்பாக இதைப் பார்க்கிறேன். மற்றபடி எப்போதும் போல் எடுத்துக் கொண்ட ஒற்றைக் கருத்தை வலுவாகச் சொல்லும் உங்களின் சாரம் இக்கவிதையிலும் குடிகொண்டிருக்கிறது.கவிதையின் அழகு விசாலமான கட்டுமானங்கள் கொண்ட வார்த்தைகளால் படிமங்களால் மட்டும் வருவதில்லை. அது ஒரு மயக்கம். அந்த மாதிரியான பூடக படிமங்கள் குறிப்பிட்ட கருப்பொருட்களுக்கு (அல்லது கருப்பொருள்களற்றவைகளுக்கு) மட்டும் பொருந்தி வருவன. சில கருப்​பொருட்கள் இயல்பாகவே செவ்வியல் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவற்றுக்கு வலிந்து சுமத்தப்படும் மாயத்தன்மைமிகு (பூடக) படிமங்கள் ​கருத்துக் குலைவையே காட்டும். அல்லது கவிஞனின் தயக்கத்தைக் காட்டுவதாக அமைந்துவிடும்.​கவிதைக்கான கருப்பொருள், நடை, கட்டு இவைகளை யாரும் யாருக்கும் அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை. படைப்பூக்கம் தளும்பிய ஒரு கலைவடிவே கவிதையாற்றுதல். குலைவும் அழகே என பறைசாற்றுவதும் இஃதே. குலைவுறச் செய்வதிலும் (நிர்மூலமாக்குவதிலும்) ஒரு ஒழுங்கின் அவசியத்தைக் காண்பதும் இக்கலையே. அந்த அழகை யாசித்தே கவிதைகளை நாடுகிறோம். சிலரின் கவிதையில் அழகை விட எழுதியவர்களின் இயல்புத்தன்மையைத்​தேடுகிறோம். அது இல்லாதது ஏமாற்றமாக முடிகிறது. இயல்பு என்பது இந்த வரிகளை அவர் எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்று மற்றவரும் அறியமுடிவது. ஒரு குறிப்பிட்ட வரிகளைக் ​கொண்டு இன்னார் எழுதியது என்று அடையாளம் ​காட்டுவது. அத்தகு உங்களின் அடையாளத்தை, இயல்பை இழந்த படைப்பாக இதை உருவகிக்க முடியகிறது.//

ஜே...கை கொடுங்க முதல்ல.
சந்தோஷமாயிருக்கு.என் கவிதையின் அடிமுடி தேடிய தேவர்கள்போல அசத்தலா ஒரு விமர்சனம்.நீங்க சொன்ன அத்தனயுமே உண்மை.

குறைநிறகளை எடுத்துக் காட்டிய விதம் என் அடுத்த கவிதைகளின் நிறைவுக்கு அஸ்திவாரம்.நீங்கள் சொன்னதுபோலவே என் இயல்பைத் தாண்டி நான் சொல்ல நினைத்த விஷயத்தை வித்யாசமாகச் சொல்ல முயற்சித்ததின் விளைவுதான்.

கவிதைகள் கலந்ததோ கடலோடு.
இரைச்சலா அது இசையா
கேட்பவர்களைப் பொறுத்தது அது.
உங்கள் வார்த்தைகளும் அதுபோலத்தான் ஜே !கடல்பெண் சிலசமயம் பெயர் தெரியா அந்த ஒற்றைப் பூவுக்காகக் காத்திருப்பாள் அதுபோல நானும் எனக்கான விமர்சனங்களும் !

Nathanjagk said...

அன்புத் தோழி,
இதை ஆரோக்கியமான முறையில் தாங்கள் எடுத்துக் கொண்டது மிக மகிழ்ச்சி..!
எப்போதும்​போல் உத்வேகமும் தன்னியல்பும் கொண்ட உங்களின் கவிதைகள் படிக்க ஆவலாக உள்ளேன்.
கடலில் நனைந்த காற்று ஜன்னல் திறக்கும்​போது எதுவுமே தடையில்லை. காற்றுக்கென்ன வேலி?

Post a Comment