*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 20, 2010

மகனே வந்துவிடு...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான்
உலகில்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!

ஹேமா(சுவிஸ்)

37 comments:

விஜய் said...

மூளையில் இலவசத்தை
வைத்துகொண்டு

இதயத்தில் ஈரத்தை
காயவிட்டவர்கள்

இதைவிட தமிழனுக்கு வேறு அவமானம் தேவையில்லை

விஜய்

ஈரோடு கதிர் said...

//வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்//

ம்ம்ம்... என்ன சொல்ல

Anonymous said...

:(

ஸ்ரீராம். said...

உணர்ச்சிகள்...

க.பாலாசி said...

கண்ணீர்தாங்க வருது....

நேசமித்ரன் said...

:(

சரித்திரம் திரும்பும்

பனித்துளி சங்கர் said...

புதுமையான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .


.

வேல் கண்ணன் said...

:நெஞ்சு ஆறவே இல்லை ....

கவிதன் said...

சரித்திரத்தலைவனின் தாயே உன்னை தமிழினமே தலை வணங்குகிறது .....!!!

சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கும் வரை இன்னும் என்னென்ன அவமானமெல்லாம் எதிர்கொள்ளப்போகிறோமோ.....

sathishsangkavi.blogspot.com said...

என்ன செய்வது....

நம்மால் கவிதையும் பின்னூட்டம் மட்டுமே போட முடிகிறது....

தமிழ் உதயம் said...

என்னை கொஞ்ச நேரம் அழ விடுங்கள்.

ஜெயா said...

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ!!!

என்ன எழுதுவது என்றே தெரியவில்லை ஹேமா.....

அம்பிகா said...

\\மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை \\
சிலிர்க்க வைத்த வரிகள்.

M.S.R. கோபிநாத் said...

சென்னையில் அன்னைக்கு நடந்த செய்தியை கேள்விப்பட்டேன். மனம் வருந்தினேன்.

- இரவீ - said...

அவமானம் :((

சிநேகிதன் அக்பர் said...

என்னத்தை சொல்ல...

Anonymous said...

மனமிருப்போர்க்கு மார்கமில்லை
மார்கமிருப்போர்க்கு?

Meera said...

//தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான் //


ம்...

பித்தனின் வாக்கு said...

என்ன சொல்ல, ஒரு பெண்ணை, அதிலும் வயதான தாயைத் திருப்பி அனுப்பிய கொடுமையை, சை கேவலாமாக இருக்கின்றது தமிழன் என்றும் இந்தியன் என்றும் சொல்ல.

VELU.G said...

ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை

மீண்டும் பெற்றெடுக்கட்டும்,


அருமையான கவிதை

மின்மினி RS said...

இது வருந்ததக்க விஷயம்; என்ன செய்ய?..

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழக அரசின் இந்தசெயல் வருந்ததக்கது; என்ன சொல்ல.. :((

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

sasikumar said...

வெட்க படுகிறேன் தமிழன் என்று சொல்ல ..

துபாய் ராஜா said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் கலங்காதே... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...

சத்ரியன் said...

ஹேமா,

உன் இயலாமை இங்கே கவிதையாய்.
என் இயலாமை உள்ளுக்குள் அழுகையாய்.

கலா said...

ஹேமாம்மா மன்னிக்கனும்
பின்னோடம் என்று தொடங்க.....
வெள்ளம் அணை உடைத்தால்.....

அடங்கியே போகிறேன்.

ரிஷபன் said...

மனதைத் தொட்டது..

ஹேமா said...

தமிழின் உணர்வால்தான் இணையத்திலும் இணைந்திருக்கிறோம்.அதே தமிழின் உணர்வோடு கை கோர்த்துக்கொண்ட அத்தனை என் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பும் நன்றியும்.அரசியலை ஒரு பக்கம் வைப்போம்.அரசியலற்ற எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வோடு என்றும் கை கோர்த்திருப்போம்.
என்றும் அன்புக்கு நன்றி.

அன்போடு ஹேமா.

MANO நாஞ்சில் மனோ said...

kaalam oru naal maarum nam kavalaikal yaavum theerum.

Anonymous said...

kaalam oru naal maarum nam kavalaikal yaavum theerum.

பா.ராஜாராம் said...

மன்னியுங்கள் அம்மா. :-(

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்ன சொல்ல ஹேமா.

ராஜவம்சம் said...

http://nizamroja01.blogspot.com/2010/04/blog-post.html

chandru / RVC said...

:( நிச்சயம் ஒருநாள் வரலாறு திரும்பும்! கலங்காதிருப்போம்.

meenakshi said...

ஆற்ற முடியாத வேதனை. ஆயினும் இதுவும் கடந்து போகும்.

அன்புடன் மலிக்கா said...

உணர்ச்சிகள் மேலிட ஊறிய கவிதை வார்த்தைகளில் வார்த்தெடுத்து வாரித்தெறித்திருக்கிறது,. அருமை தோழி..

Post a Comment