*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, April 12, 2010

கலைக்கப்பட்ட பறவை...

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி.

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.

எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.

என்றாலும்....
எங்கள் சாபங்களை விழுங்கிக்கொண்டே
ராட்சத பறவைகள்
முன்னேறியபடி.
எங்கள் கூடுகளுக்குள்ளும்
அவைகளின் குடியிருப்பு.

குரல் உடைக்க
ஒரு சந்தோஷப் பாடல் பாட
முயன்றும் முடியாமல்.

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்.

ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு

திரும்பவும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!

ஹேமாப் பறவை வாடகைக் கூட்டுக்கு வந்தாகிவிட்டது.
என் உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?சுகம்தானே.மீண்டும் சந்திக்கிறதில மிக மிகச் சந்தோஷம் நண்பர்களே.என்னைத் தேடிய அன்பு நண்பர்கள் அனைவருக்க்கும் என் அன்பின் நன்றி.
இன்னும் தொடர்வோம்.

ஹேமா(சுவிஸ்)

47 comments:

விஜய் said...

விடுமுறை முடிந்ததா ?

ரொம்ப நாளா நீங்க இல்லாம ஒன்னும் களை கட்டலை

வாழ்த்துக்கள்

கலா said...

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.


மீண்டும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!\\\\\\

ஹேமாவின் வலி சொல்லும் வரிகள் இவை
அருமையான வரிகள். இவைக்குள் அளவெடுக்க முடியாத
சோகச் சுமைள் அடக்கம்.

rvelkannan said...

ஹேமா வருகையை பார்த்ததும் மகிழ்ந்தேன்
கவிதை படித்ததும் வருத்தமுற்றேன்
மென்சோகம் என்னையும் பிடித்தது
(... அனைவரும் நலமா ...?)

அம்பிகா said...

நல்வரவு ஹேமா!
\\மீண்டும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!\\
வலியை சொல்கின்றன வரிகள்.
அருமையான கவிதையோடு வருகை.

அப்துல்மாலிக் said...

வெல்கம் பேக்
விடுமுறை நல்லபடியாக இருந்ததா
பேக் டூ பெவிலியன்

தொடருங்க

சத்ரியன் said...

//எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு அது.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.//

ஹேமா,

வலி இன்னும் தொடர்ந்த படியே...

மீளட்டும் உங்கள் மகிழ்வு.

Anonymous said...

//எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு அது.//

ம். கஷ்டமாத்தான் இருக்கு. ஊருக்குப்போய் எல்லாம் பாத்துட்டு வந்து வலியோட எழுதியிருக்கீங்க போலிருக்கு.

கலா said...

கலைக்கப் “பட்ட’’ பறவை

படம்:::

தலைப்பும்,படமும் மிக நன்று

கவலைகள் கிடக்கட்டும்....
மறந்து விடு
காரியம் நடக்கட்டும்...
தொடங்கி விடு

வனிதைக்கு;
என் மலரும் வதனத்துடன்...
மலர்க் கொத்தை
கொடுக்கின்றேன்!!
நன்றி தோழி.

ஜெயா said...

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்.

கூடுகள் கலைந்த தவிப்போடு
மீண்டும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி ஹேமாப் பறவை வாடகை வீட்டுக்கு வந்தாகி விட்டது...

நலமா ஹேமா? ஊரில் எல்லோரும் நலமா? உங்கள் கவிதை வரிகளில் வலி புரிகிறது.வலியும் தவிப்பும் எங்கள் வாழ்வோடு கலந்து விட்டது தானே ஹேமா.....
உங்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தோம். எழுத்தை தொடருங்கள். வாழ்த்துக்களுடன்.....

ஜெயா said...

கலைக்கப் பட்ட பறவை மீண்டும் பறக்க சிறகை விரிப்பது போல அழகான படம் கவிதைக்கு பொருத்தமாக உள்ளது.....

ப்ரியமுடன் வசந்த் said...

how r u hems?

welcome back hema...

Priyamudan...vasanth

Unknown said...

Good work, Hema.

Ramesh said...

கவிதை மனசைக்கூட கலாய்க்குது
எப்படி இருக்கீங்க??
தொடருங்கள் வாழ்த்துக்கள் புதுவருட...

Chitra said...

Welcome Back, Hema!
Best wishes!

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.

..... very nice!

ஆடுமாடு said...

நல்லாருக்கு ஹேமா.
எப்படியிருக்கீங்க?

க.பாலாசி said...

//தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.//

ரைட்.. அவளோ தூரமா போனீங்க... வாங்க வணக்கம்...

தேவன் மாயம் said...

விடுமுறை முடிந்து வந்து விட்டீர்களா- வருக!! வருக!!!

தேவன் மாயம் said...

எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு அது.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.
///

வருத்தத்துடன் உங்கள் நெஞ்சம் படும்பாடு தெரிகிறது!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெல்கம் பேக்

தமிழ் மதுரம் said...

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்//




இன்றும் எம்மவர்களின் பயணமும் வசதி வாய்ப்புக்களையும் , நவீன உலகினையும் சார்ந்தே இருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இல்லை என்றால் நாங்கள் எல்லாரும் வெளி நாட்டில் வாழுவோமா?

தமிழ் மதுரம் said...

ம்...கவிதை இழப்புக்களிற்கூடாக இருத்தலினைத் தேட முனைகின்ற எம்மவரின் வலிகள் சுமந்த வாழ்வியலின் தத்ரூபமாக நகர்ந்து செல்கிறது.


’’எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு அது.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை...



சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? தாய் மடியின் தாலாட்டில் தவழ்ந்து விட்டு, புலம் பெயர் தேசம் நோக்கி வந்ததன் வெளிப்பாட்டினைத் தங்கள் கவிதை விளக்கிச் செல்கிறது எனலாம். பனி நிறைந்த வாழ்வியலுக்குள் அன்றாடப் பணிக்குச் செல்லவில்லை என்றால் வாழ்வின் சுவை குறைந்து விடும் என்பது தானே வெளிநாட்டில் நிஜம்?


வாழ்வியலின் வலிகள் நிறைந்த, சோகத்தினூடே இரு தேசங்களின் இணையற்ற நினைவுகளைப் பதியமிட்டுச் செல்கிறது கவிதை. கலைக்கப்பட்ட பறவை...வாழ்வியலின் இருப்பிடத்தைத் தேடும் ஜீவராசியின் வசந்தகாலக் அறை கூவல்.

அன்புடன் அருணா said...

Welcome back Hema!
ஒவ்வொரு வரிகளிலும் வலி...வலி...வலி.

தமிழ் உதயம் said...

ஹேமாப் பறவை வாடகை வீட்டுக்கு வந்தாகிவிட்டது



ஒரு வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது போல் உள்ளது. ஈழத் தமிழை வாசிக்க முடியாமல் இருந்தேன். வந்து விட்டீர்கள். நேற்று தான் உங்களை நினைத்தேன்- தற்செயலாக.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க ஹேமா

- இரவீ - said...

வாங்க வாங்க பறவை முனியம்மா? எப்படி இருக்கீங்க?
கவிதை மிக அருமை.

meenakshi said...

'பசுமை நினைவுகள் தவிர, தர ஏதுமற்ற குளக்கரை அது'
'துரத்த திராணியற்று, மாறிய திசையில் பயணிப்பதை தவிக்க முடியாமல்...'
அருமை ஹேமா! கவிதை சோகத்தை கொட்டுகிறது.

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

வாங்க ஹேமா வாங்க... என்னதான் வசதியாய் இருந்தாலும் வாடகைவீடு சொந்த நாடு போல் சுகம் தராதுதான். கட்டுண்டோம்.காத்திருப்போம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தலைப்பும்,படமும் மிக நன்று .நல்வரவு ஹேமா!

ரசிகன்! said...

adadaa!!!

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி
//

azhagaana aazhamaana vaarththaigal!!!


:)

ஸ்ரீராம். said...

"பங்கசுக்கள்"

அர்த்தம் புரியவில்லை.

சொந்த ஊர் சென்று திரும்பியதில் இருந்த மொத்தத் துயரத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள். பணிதேச வாடகைக் கூட்டில் மரியாதைகள் தொடரட்டும். சிதைக்கப் பட்ட பெருங்காடு சீக்கிரம் துளிர்க்கட்டும். சோகங்கள் சென்று சந்தோஷங்கள் மிஞ்சட்டும்.

வாழ்த்துக்கள் ஹேமா..இனி மீண்டும் உங்கள் கவிதைகளில் நனையலாம்

Nathanjagk said...

சொந்த மண்ணின் ஈரங்களைச் சுமந்து பறக்கும் பறவையின் குரலாக இருக்கிறது கவிதை. செளக்யமா?

//பங்கசுக்கள்// ???
fungus??

/குரல் உடைக்க
ஒரு சந்தோஷப் பாடல்/

/எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு/

/ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி/

வார்த்தைப் பிரயோகங்களில் வித்யாசத்தையும் வலிமையையும் காண்கிறேன். சபாஷ்!!

பித்தனின் வாக்கு said...

ஆகா ஹேமு, வந்தாச்சா, விடுமுறைக்காலங்கள் எப்படி இருந்தது. மறுபடியும் ஆட்டம் ஆரம்பமா?. எழுதுங்க. எழுதுங்க. கவிதை நல்லாயிருக்கு.

கண்ணகி said...

வந்துட்டீங்களா ஹேமா.....

அசைய முடியா சிறகுகளை

அசைத்தபடி நான்...

வலி..வலிதான்..எவ்வளவு நாளானாலும்..

V.N.Thangamani said...

ஐ ஹேமா,
நலமா,
கசப்பதுவும் இனிப்பதுவும்
காய்ந்து பின் துளிர்ப்பதுவும்
இயற்கையின் வேளையடி- என் தோழி
இதுவுமொரு சுகந்தானடி.
அடிபடாத தங்கம் - ஒரு
அணிகலன் ஆகாதடி.
துக்கம் இல்லாத சுகமும்
துளியும் சுவைக்காதடி தோழி
சூட்சுமம் அறிவாயடி தோழி
சுகத்து நல் வாழ்வாயடி.
வாழ்க வளமுடன்.

Ahamed irshad said...

நல்ல கவிதை.

வரிகள் அருமை..

Ashok D said...

ரொம்ப நல்லா இருக்குங்க ஹேமா

Welcome back, Happy life :)

"உழவன்" "Uzhavan" said...

ஹேமாப் பறவை வாடகைக் கூட்டுக்கு வந்தாகிவிட்டது//
 
நல்வரவு :-)

ரிஷபன் said...

மீண்டும் உங்கள் பதிவு பார்க்க மிக்க மகிழ்ச்சி..

M.S.R. கோபிநாத் said...

ஹேமா, ஒருவழியா போய்ட்டு வந்தாச்சா? கவிதை அதிரடியா இருக்கு..

ஹேமா said...

வாங்க வாங்க விஜய்.ரொம்ப நாளுக்குப் பிறகு பாக்கிறதில சந்தோஷம்.சுகம்தானே நீங்களும்.

***********************************

கலா....வரணும்.எப்பிடி இருக்கிறீங்க.எங்கள் வலிகள் நிரந்தரமானவை.என்றாலும் மறக்க முடியாத வடுக்களாய்.என்னதான் செய்யலாம் !

மலர்க்கொத்துக்கு நன்றி தோழி.
படத்தையும் ரசித்திருக்கிறிங்க.
சந்தோஷம்.

***********************************

வாங்க வேல்கண்ணன்.இருக்கும்போது உணர்வதைவிட போய் கண்டு வரும்போது இன்னும் சோகம் அதிகமாகவே உணர்கிறேன்.

***********************************

நன்றி அம்பிகா.புன்னகைக்குள் சோகம் புதைக்கப்பட்டவர்கள் நாங்கள்.கவிதைகள் வரம்.

***********************************

அபு....சுகம்தானே.வந்தாச்சு,இனி என்ன கண்ணீர்தான் என்றாலும் கவிதைக்குள் கலக்கலாம்.

***********************************

சத்ரியா...வலியோடு வலிந்து வாழப் பழகிக்கொண்ட்டோம்.வாழ்வோம்.
நன்றி தோழா.

***********************************

அம்மிணி....நான் சோகமாய் எழுதிவிட்டு உங்கள் பக்கம் வந்து சிரித்துக்கொள்வேன்.
அதுவே சந்தோஷம்.

***********************************

ஜெயாக்குட்டி...எப்பிடி இருக்கு ஜேர்மன் வாழ்க்கை.கடும்குளிர் போய் இதமான சூடும் குளிருமாய் இருப்பதாய் நினைக்கிறேன்.
ஏனென்றால் இங்கும் அப்பிடித்தான்.
நித்திரை கொள்ள அவ்வளவு சுகம் இந்தக் காலநிலை.வலிக்குள்ளும் ரசிக்கும் மனநிலையையும் தைரியத்தையும் எங்களுக்குத் தந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி ஜெயா.

எனக்காகக் காத்திருந்த உங்கள் கையோடு இணைந்திருக்க எப்பவும் ஆசைதான்.படம் கவிதைக்காக நேரமெடுத்து தேடியது.
பிடித்திருக்கிறது உங்களுக்கு.
சந்தோஷம் ஜெயா.

ஹேமா said...

வசந்து....ஊரில இருந்து பின்னூட்டம்.அசத்திட்டீங்க.
அன்புக்கு நன்றி.சுகம்தானே !
சீக்கிரமா வாங்க.பதிவுலகம் வெளிச்சம் இல்லாத மாதிரி இருக்கு.

***********************************

கருத்துக்கு நன்றி சுரேஷ்.

***********************************

வாங்க றமேஷ்.நான் சுகம் றமேஷ்.
எப்பிடி இருக்கு ஊரும் உறவுகளும் அதோட நீங்களும்.வருஷம் எப்பவும் பிறக்குது ஆனால் அது எங்களுக்கில்லையோ !

***********************************

சித்ரா...வாங்க என்னதான் வேதனைகள் இருந்தாலும் உங்கள் பக்கம் வந்தால் வாய்விட்டுச் சிரித்துவிட்டு வருவேனே.
நன்றி தோழி.

***********************************

வாங்க ஆடுமாடு.உங்க முகம் பார்க்ககூடியதா படம் இணைச்சிருக்கீங்க.சந்தோஷம்.
நானும் சுகம்.நீங்களும்தானே !

***********************************

பாலாஜி...கலக்குறிங்க கவிதைல.
பின்ன...உங்க நாட்டுக்கு பக்கத்து நாட்டுக்குதான் வந்திருந்தேன்.
சொல்லிட்டுத்தானே போனேன் !

***********************************

டாக்டர்...வருத்தமா இருக்கிறேன்னு மட்டும் சொல்லிட்டுப் போனா எப்பிடி.மருந்து தர வேணாமோ !நன்றி தேவா.அன்புக்கும் கூட.

***********************************

நன்றி வருகைக்கு
ராதாகிருஷ்ணன் ஐயா.

***********************************
கமல் மீள்வருகைக்கு மிக்க நன்றியும் சந்தோஷமும்.சோர்ந்துபோய் விடுவீர்களோ என்று நினைத்திருந்தேன்.

//கமல்... வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்//

இன்றும் எம்மவர்களின் பயணமும் வசதி வாய்ப்புக்களையும் , நவீன உலகினையும் சார்ந்தே இருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இல்லை என்றால் நாங்கள் எல்லாரும் வெளி நாட்டில் வாழுவோமா?//

கமல்...நிறைவான கருத்துக்கு நன்றி.இல்லை கமல்.பணம் பயண வசதி வாய்ப்புகளுக்காக மட்டுமல்ல வெளிநாடு.அதற்காகத்தான் சொல்லியிருக்கிறேன் சுதந்திரமும் எமக்குண்டாண மரியாதயும் என்று.நாம் பிறந்த மண்ணில் தமிழனுக்கு அறவே இல்லாத இவை இரண்டும்.பணத்தை நிறையச் சேர்த்துக்கொண்டு போய் இருந்து பாருங்கள்.தெரியும்.

***********************************

வாங்க அருணா.வலியானாலும் வாழ்ப்பழகிக்கொண்டோம் தோழி.நன்றி.

ஹேமா said...

வாங்க தமிழ்.ஈழத்தமிழைச் சுவாசிக்க அவ்வளவு பிடிக்குமா !சந்தோஷம்.நிறைய எழுதிட்டாப் போச்சு.ஊக்கம் தர நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன குறை !

அதென்ன தற்செயலா நினைக்கிறது.
எனக்கு நாள் முழுக்க தும்மிச்சே !

***********************************

ம்ம்ம்ம்...நேசன்.புரிஞ்சுபோச்சு.
கவிதைல என்னமோ பிடிக்கல உங்களுக்கு.என்னமோ
"வந்தேன்"ன்னு சொல்ற மாதிரி இருக்கு.குறை என்னன்னும் சொல்லியிருக்கலாம் நேசன்.
சரி ...நன்றி சொல்லி வைக்கிறேன்.

***********************************

இ.....ரவீ.....வால் நல்லாத்தான் வளந்திட்டுது.இருக்கு உங்களுக்கு !

***********************************

மீனு....ஊர்ல வந்து 10 நாளாகியும் மனசு இன்னும் எதிலயும் ஒட்டல.அதான் கவிதையும் இப்பிடி வந்திட்டுது.சரி அடுத்த கவிதைல கலக்கிடலாம்.சரியா தோழி.

***********************************

ராஜா....எங்களைப்போலவே உங்கள் பதிவுகளிலும் நான் காண்பது வீட்டை விட்டு வந்த சோகம்.என்ன செய்யலாம் ராஜா !சில விதிகளை மாற்றுவதென்பது முடியாமலிருக்கிறதே !

***********************************

ஜெஸி....அன்புக்கு நன்றி தோழி.சுகம்தானே !உங்கள் விடுபட்ட பதிவுகளும் பார்த்தேன்.

***********************************

ரசிகன்.....உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.இனி அடிக்கடி சந்திக்கலாம் தோழரே.

ஹேமா said...

ஸ்ரீராம்....வாங்கோ வாங்கோ.பங்கசுக்கள் ஜெகன் சொலியிருக்கார்.புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.சோகத்தில நனையவைக்கிறேன்.சுகம்ன்னு சொல்றிங்க.சந்தோஷம்.

***********************************

ஜே....எப்பிடி இருக்கீங்க.கண்டதில சந்தோஷம்.என்னமோ நேசன் சரின்னு ஒத்துக்கல.நீங்க நல்லாருக்குன்னு சொல்றிங்க.
என்னமோ குறைவான மாதிரி இருக்குப்போல !

***********************************

ஹாய்...சுதானந்த சுவாமிகளே சுகம்தானே !ஹேமுவும் நல்ல சுகம்.இனித் தொடரும் தொடரும் !

***********************************

வாங்க கண்ணகி.வலியானாலும் எழுத்துக்களால் மருந்து போட்டு ஆற்றிக்கொள்ளலாம் தோழி.பதிவுகளோடு சந்திப்போம்.

***********************************

வாங்க மணி.நீங்களும் சுகம்தானே.உங்கள் அன்பான வார்த்தைக்கும் ஆறுதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.அன்பால் இணைந்திருப்போம் என்றும்.

***********************************

இர்ஷாத் உங்கள் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.

***********************************

ஹாய்....அஷோக் என்னாச்சு.
நேரமில்லையாக்கும்.சரி சரி இப்பாச்சும் கண்டுகிட்டீங்களே !

***********************************

நன்றி உழவன்.மீண்டும் சந்திக்கிறதில நிறைவான சந்தோஷம்.

***********************************

ரிஷபன்...மீண்டும் தொடர்ந்து எழுதுவோம் எங்கள் உள்ளங்களை.நன்றி அன்புக்கு.

***********************************

கோபி...இது நீங்களா வேற யாருமான்னு உங்க தளம் வந்து சோதிச்சு உறுதிப்படுத்திக்கிட்டேன்.
அது நீங்களேதான்.ஏன்னா M.S.R கோபிநாத்ன்னு இருந்ததால வந்த சந்தேகம்.

அப்புறம் கவிதை பெரிசா எழுதியிருக்கீங்கன்னு பாத்து ஏமாந்திட்டேன் !

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பித்தனின் வாக்கு said...

ஹேமு, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது இன்னிக்குப் போட்ட பதிவு காக்கா சுட்ட வடையைப் படித்து சிரிக்கவும்.

கவிதன் said...

அந்த வல்லூறுகளை வேட்டையாடும் நாள் வரும்.... கலங்க வேண்டாம் தோழி..... வரவில்லை என்றாலும் பரவாயில்லை. சாகும்வரை அந்த நம்பிக்கையுடனேயே வாழ்ந்துவிடவேண்டும் என்கிறது மனம்.

Fan of ..laajee.., said...

ohh my god, Romba supper blog ka, I like it very much..

feel very proud about u ka..,

Post a Comment