சுற்றிய புள்ளிகளாய்
குட்டிக் கைகள்
குட்டிக் கால்கள்
குட்டிக் கொட்டாவி
குட்டிக் கனவோடு
தூரத் தெரியும் தாரகைச் சிதறலாய்
பனி நனைத்த மேனியாய்
சிலிர்க்கும் எனக்குள்
வானம் தந்த
கருவண்ணத்தில்
ஓர் உருவம் !
தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்
பாதை வகுத்து
ஒளி பரப்பி
ஆதவனாய்
பச்சையம் பீச்சும்
அது!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
40 comments:
நல்லாருக்கு...
ரசித்து படித்தேன் சகோதரி! அழகாய் வந்திருக்கிறது.
//தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்//
இந்த வரிகள் மிக அற்புதமாயிருக்கிறது.
பிரபாகர்.
நல்லாயிருக்கே :)
கவிதையும் வரிகளும் அழகு...
ரசித்தேன்
//தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்
பாதை வகுத்து
ஒளி பரப்பி
ஆதவனாய்
பச்சையம் பீச்சும்
அது !!!//
அடடா.... செ(ம்)மயான பின்னல். ஆரம்பமும் அசத்தல்.
///தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்///
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஹேமா.
வழக்கம் போல பின்னி எடுக்கின்றாய் ஹேமு(இப்படிக் கூப்பிடலாமா). பறிச்சு பொறியல் பண்ணி சாப்பிட்டு தூக்கம் போடும் வாலைப்பூவின் பின்னால் ஒரு கவிதையா? சூரிய ஒளியின் கவிதையும் சூப்பர். நல்லா யோசிக்கின்றாய். நன்றி ஹேமு.
வித்தியாசமான பார்வை.
நல்ல வரிகள் ஹேமா!
அருமை அருமை ஹேமா
அருமையான படையல் தந்துள்ளீர்கள் நன்றிம்மா ஹேமா!
கவிதையும் அதன் வரிகளும் மிக அழகு தோழி வாழ்த்துக்கள்..
நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்
http://fmalikka.blogspot.com
அழகு!!!
//குட்டிக் கைகள்
குட்டிக் கால்கள்
குட்டிக் கொட்டாவி//
ஹேமா,
ரொம்ப ரொம்ப ரொம்ப ....அழகு.
அருமையான கவிதைடா ஹேமா!
தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டுட்டன்.கத்துக்கிடோம்ல..சிங்கம்ல நாங்க!
ஓற்றைப்புள்ளியை சுற்றிய புள்ளிகளாய் குட்டிக்கைகள் குட்டிக்கால்கள் குட்டிக்கொட்டாவி குட்டிக்கனவோடு வானம் தந்த கருவண்ணத்தில் ஓர் உருவம்...அழகான பிரசவம் ஹேமா.வாழ்த்துக்களுடன்*****
அருமைங்க.. அரும!!
very nice. i like it.
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
//தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து//
புது வருஷம் புது மொழி புது சிந்தனை
கலக்குறீங்க
சகோ
மனதைத் தொட்ட கடைசி வரிகள்.. அழகு..
வித்தியாசமான அழகிய கவிதை ஹேமா.
கவிதையும் கருத்தும் மிக அழகு.
தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்
பாதை வகுத்து
ஒளி பரப்பி
ஆதவனாய்
பச்சையம் பீச்சும்
அது !!!//
வாழை பூ எடுத்து
வலை பூவாக்கி பிரசவிக்கும்
வரிகளில் பிறக்கும்
அன்பு...
வாழ்த்துக்கள் தோழி..
ஆக, சுகபிரசவம் :)
வாழ்த்துக்கள்.
//தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்
பாதை வகுத்து
ஒளி பரப்பி
ஆதவனாய்
பச்சையம் பீச்சும்
அது !!!//
என்னது உங்க கவிதையா?
நல்ல ரசனை மிக்க கவிதைங்க ஹேமா...
பிரசவம் பிரசவித்த விதம் புதுமை ஹேமா.....
பா ரா சொன்னதை நானும் சொல்லிக்கிறேன்...
வசந்த், கலா எங்கே காணோம்...பொழிப்புரை யார் எழுதுவார்கள்?
நல்லாருக்கு கவிதை..
அடேய்!கவிதை அருமையடா
ஹேமா!!
கலக்கிறீங்க சகோ!!
வாழ்த்துகள் தோழி!1
கவிதை சூப்பர் ஹேமூ...!
ஹேம்ஸு.... எனக்கு அந்த
வாழைப் பூ.....தான்
பிடித்திருக்கிறது!!
பறிக்கலாமா?
ஆஆஆஆஆ....காஆக
கவிதை ரொம்ப அருமை.
ஹேம்ஸ் வழ்க்கம்போலவே கவிதை நல்லா வந்துருக்குங்க...
ம்ம் நிறைய செல்லப்பேரெல்லாம் வாங்கிட்டீங்க...
பச்சையம்ன்னா குளோரோபில்ன்னு ஒரு நிறமின்னு எப்பயோ படிச்ச ஞாபகம்... சரியா ஹேம்ஸ்?
பச்சை பிரசவம்
அழகான கவிதை குழந்தை
வாழ்த்துக்கள்
விஜய்
விஜய் சொன்னதே நானும் சொல்றேன்
பச்சைப் பிரசவத்தில் அழகான கவிதைக் குழந்தை
ஹேமாவுக்கு மட்டும் தொடர்ந்து கவிதை பொங்கும் ரகசியம் என்ன? புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ்ப்பெண்கள்
Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
இயற்கையை கவிதையாக்கிய விதம் அழகு.........வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்குங்க ஹேமா! வழக்கம் போல கலக்குறீங்க.
:-)..
நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன், நல்ல கருத்துகள்!
தோழிக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
அன்போடு,
இசக்கிமுத்து..
யக்கோவ் எனக்குப் புரியலைக்கா...
Post a Comment