*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, December 17, 2009

மாற்றங்கள்...

எப்போதாவது நான் கடக்கும்
ஒரு தெரு
ஒரு வீடு
ஒரு தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் ஒரு பூனை
குருவிக்கென தொங்கும் உணவு
சிவப்புக் கார் ஒன்று.

இன்று...
"நல்வரவு ஜஸ்மின்"
கதவில் பெரிதாய் எழுதிய வாசகம்.

ஓ....
நீண்ட நாள் காதலர்கள்
கல்யாணம் எப்போ நடந்து
குழந்தை பெற்றிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்
கடந்து செல்கிறேன்.

பின்னொரு நாளில்
மீண்டும் அதே தெரு
அதே வீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

இவற்றோடு
புதிதாய் சாய்த்தி வைக்கப்பட்ட
சின்னச் சைக்கிள்
விளையாட்டுக் கார்.

ஓ... குழந்தை வளர்ந்திருக்கிறாள்.
அம்மாவின் கைபிடித்து
அப்பாவின் மடியில்
ஜஸ்மின்
அழகாய்ச் சிரிக்கிறாள்

இன்னொரு ஆறு மாதமிருக்கும்
பாதை மாறியதாவும் இல்லை
மறதியும் எனக்கில்லை.

அதேவீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

காரின் நிறம் மாறியிருக்கிறது.
தோட்டத்தில் இருக்கும்
அப்பா மாறியிருக்கிறார்.
அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.

எப்போ புரிந்து தேடுவாள்
தன் அப்பாவை !!!

ஹேமா(சுவிஸ்)

71 comments:

S.A. நவாஸுதீன் said...

மீ த ஃப்ர்ஸ்ட்

அத்திரி said...

அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை மிக கூர்ந்து கவனிக்கிறீர்கள் ரொம்ப நல்லா வந்துருக்கு ஹேம்ஸ்...!

S.A. நவாஸுதீன் said...

///காரின் நிறம் மாறியிருக்கிறது.
தோட்டத்தில் இருக்கும்
அப்பா மாறியிருக்கிறார்.
அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.///

///எப்போ புரிந்து தேடுவாள்
தன் அப்பாவை !!!///

வேண்டாம் இந்த மாற்றம் எந்த குழந்தைக்கும்.

க.பாலாசி said...

இந்தமுறை வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள்...

இதுதான் இன்றைய காலமோ???

நல்ல கவிதை....

அ.மு.செய்யது said...

ஓஹ்.இது சுவிஸ் கவிதையா ??? ஒரு வேளை இந்தியக்கவிதையாக கூட இருக்கலாம்.

நல்லா வந்திருக்கு ஹேமா !!!

Ashok D said...

அட... கவித கவித....

தமிழ் உதயம் said...

ஒரு நல்ல குறும்படம் பார்த்த பாதிப்பு- உங்கள் மிகச் சிறந்த கவிதையை வாசித்த போது.

சிவாஜி சங்கர் said...

Nalla irukkunga..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

V.N.Thangamani said...

கவிதை நல்லா இருக்கு, அப்பா மாறினது நல்லா இல்லை.
அப்பா மாறினதையும் அந்த குழந்தை ஜீரணிக்க வாழ்த்துவோம்.
வாழ்க வளமுடன்.

பூங்குன்றன்.வே said...

//காரின் நிறம் மாறியிருக்கிறது.
தோட்டத்தில் இருக்கும்
அப்பா மாறியிருக்கிறார்.
அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.

எப்போ புரிந்து தேடுவாள்
தன் அப்பாவை !!!//

இதெல்லாம் சகஜம் ஆன ஒரு சமாச்சாரமா இருக்கு இந்த காலத்துல..ஆனா அப்படி தப்பு பண்ற பெற்றோர் தன்னோட பிள்ளைகளை பற்றி நினைக்க மறப்பது வருந்தக்கூடிய ஒன்று. இயல்பான அருமையான கவிதைஹேமா.

ராஜவம்சம் said...

ஏங்க ஏ இப்படி........

அண்ணாமலையான் said...

கவிதைகளில் சந்தோஷம் ஒரு தோஷமா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

பெற்றோர் தவறிழைக்கையில் பாதிப்பு குழந்தைக்கு தான்

நல்ல அருமையான கவிதை ஹேமா

குழந்தையின் முகம் பார்த்து கவலை மறக்காதோர் இந்த அவனியில் உண்டோ ? .

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

இது இந்திய கவிதையாக இல்லாத பட்சத்தில் ரசிக்க முடிகிறது! பாவம ஹேமா! அந்த குழந்தை....

- இரவீ - said...

பாதை மாறியதாவும் இல்லை
மறதியும் எனக்கில்லை.
அதே நல்ல கவிதை,
அதே நல்ல நடை,

ஆனால் - புதிதாய் ஒரு கண்னோட்டம்.

ரிஷபன் said...

மனதை வருடிய கவிதை..

ஸ்ரீராம். said...

மாறுவது என்பது குழந்தையின் மனதில் பதிந்து விட்டால், அதுவும் இயல்பானதாகி விட்டால் ஆறு மாதங்களோ மூன்று வருடங்களோ கழித்து குழந்தை அம்மாவைக் கேட்கும், "ஏம்மா...இன்னுமா அதே ஆளு? அடுத்த ஆளு எப்போ? எனக்கு போரடிக்குது... உனக்கு அடிக்கலை?"

ஹேமா said...

நவாஸ் உங்க முதல் வருகைக்கும் ஆதங்கமான கருத்துக்கும் நன்றி.இங்கு என்னை பாதிக்குமொரு விஷயம் இது.

..................................

அத்திரி உங்களை இப்போ அடிக்கடி என் பக்கம் பாக்கிறேன்.சந்தோஷம்.

...................................

வசந்து....வாழ்வியல்ன்னா இப்பிடித்தான்.எல்லாமே கண்ணில தட்டுப்படும்.சில விஷயங்களை எழுத்தில கொண்டு வரமுடில.
அவ்ளோதான்.

..................................

பாலாஜி,இது இயல்பு நடையா இல்லை கவிதைக்கு இதுவும் ஒரு நடையா ? இப்படியும் எழுதிப் பார்த்தேன்.நல்லாவே இருக்கு.பா.ரா அண்ணாவைப பாருங்க.இயல்பா வீட்ல நடக்கிறதைச் சொல்லியே கலக்கிட்டு இருக்கார்.

//இதுதான் இன்றைய காலமோ???//

இதுவும் இன்றைய காலம்.தப்புன்னு சொல்லி வாதாடல.ஆனா நடுவில இந்தக் குழந்தைங்க பாவம்.

...................................

செய்யது இது ஆரம்பத்தில சுவிஸ் கவிதையாத்தான் இருந்திச்சு.
நம்மவங்களும் மாறிட்டு வாறாங்களே !சில நேரம் தப்பா தெரியல.பிடிச்சவங்க பிடிச்சவங்களோட வாழ்றாங்க.
பிடிக்காத வாழ்கையோட ஏன் வருஷக்கணக்கா போராடணூம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்தக் காலத்தில் நடப்பதை இயல்பாக சொல்லி விட்டிருக்கிறிர்கள் ஹேமா.

ஹேமா said...

அஷோக் கவுஜன்னு நான் சொன்னேனா ?கவிதைதான்.

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி தமிழ்.கவிதைக்கான வார்த்தைகளை வைத்து அழகுபடுத்தாமல் எழுதிப்பார்த்தேன்.
நல்லாத்தானே இருக்கு.

:::::::::::::::::::::::::::::::::

சிவாஜி சங்கர் வாங்க.வருகைகு நன்றியும் சந்தோஷமும்.

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ராதாகிருஷ்ணன்.என்னோட மாமா பெயரும் உங்க பெயர்தான்.
நீங்க வந்ததும் கருத்துச் சொன்னதும் சந்தோஷமாயிருக்கு.

:::::::::::::::::::::::::::::::::::

மணி குழந்தை பாவம்தான்.ஆனாலும் பழகிடும்ன்னு வச்சுக்குவோம்.
அப்பாவை பிடிக்கல அவங்க மாத்திக்கிட்டு சந்தோஷமா இருக்க்காங்களே !என்ன தப்பு?

ஹேமா said...

நன்றி பூங்குன்றன்.பெற்றோரும் சுயநலவாதிகள்தான்.

::::::::::::::::::::::::::::::::

ராஜவம்சம் உலக நடப்புக்கள் நாகரீக வளர்ச்சியில் இந்த நிலைமையும் ஒன்று.என்ன செய்யலாம் ?

:::::::::::::::::::::::::::::::::

அண்ணாமலையான் என்ன செய்ய் நான்? என் மனதில் எழும் சந்தோஷக்களும் தோஷமாய் முடிகிறதே !இன்றைய நடப்பைத் தானே சொல்ல முயன்றேன்.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி ஸ்டார்ஜன்.நாளடைவில் குழந்தைகள் புது உறவோடு சந்தோஷமாக இணைந்துகொள்கிறார்கள்.

::::::::::::::::::::::::::::::::

ஏன் சரவணன் எங்கள்ளுக்குள்ளும் இது மெல்ல மெல்லப் புகுந்துகொண்டுதான் இருக்கிறது.இது இங்கு மட்டும் நடக்கும் நடப்பு அல்ல.முழுதாகத் தப்புன்னு சொல்றதுக்கும் இல்லையே !

நட்புடன் ஜமால் said...

எப்போதாவது நான் கடக்கும்
ஒரு தெரு
ஒரு வீடு]]

இது இப்படியாகவே இருக்கையில் ஒரு வகையில் நிம்மதி

புலவன் புலிகேசி said...

//ஓஹ்.இது சுவிஸ் கவிதையா ??? ஒரு வேளை இந்தியக்கவிதையாக கூட இருக்கலாம்.//

அதேதான் ஹேமா..இந்தியாவிலும் இப்படித்தான்...நல்ல கவிதை

Anonymous said...

உண்மையை கவிதையா பரிமாறியிருக்கீங்க ... குழந்தை பாவம் தான் கண்டிப்பா மறுப்பதற்கில்லை... இப்படி தான் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலோர் குழந்தைகளுக்காகவே விட்டு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கினறனர்..
அம்மா அப்பாவை மாற்ற எத்தனையோ காரணம் இருக்கலாம் அல்லவா? அதே அப்பா குழந்தைக்கு நல்லது அதே கணவன் மனைவிக்கு தகுந்தவனாக இல்லையோ என்னவோ? பெண்ணின் மனதையும் கொஞ்சம் பார்க்கலாமே...

Anonymous said...

செய்யது இது ஆரம்பத்தில சுவிஸ் கவிதையாத்தான் இருந்திச்சு.
நம்மவங்களும் மாறிட்டு வாறாங்களே !சில நேரம் தப்பா தெரியல.பிடிச்சவங்க பிடிச்சவங்களோட வாழ்றாங்க.
பிடிக்காத வாழ்கையோட ஏன் வருஷக்கணக்கா போராடணூம்.

ஆமோதிக்கிறேன் ஆனால் இதற்கு எத்தனை பெண்களுக்கு நம்முள் துணிவு இருக்கிறது? தேவையான மாற்றங்கள் தேவை தான்..

ஆ.ஞானசேகரன் said...

நிகழ்வை அழகாய் செதுக்கியுள்ளீர்கள் ஹேமா

Chitra said...

பல வீடுகளில் உள்ள நிஜத்தை சொல்லியிருக்கீங்க.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு ஹேமா

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை
மனதை வருடிய கவிதை..

அன்புடன் நான் said...

மாற்றங்கள்.... இப்படியா இருக்கும்.... இதெல்லாம் உயர் தேசங்களில்தான் மிக இயல்பாய் இருக்கும்... மற்றப்படி.... ஏழ்மை தேசங்களில் எட்டிப்பார்க்காத மாற்றங்கள் இவை. சரியா... ஹேமா?

rvelkannan said...

நல்ல கவிதை ஹேமா
//கவிதைக்கான வார்த்தைகளை வைத்து அழகுபடுத்தாமல் எழுதிப்பார்த்தேன்//
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

thiyaa said...

மூடிய சமூக அமைப்பு எங்களுடையது. திறந்த சமூக அமைப்பு மேலைத் தேசத்தவனுக்குரியது. இப்போது எல்லாம் தலைகீழ்.

நல்ல கவிதை

புலம்பெயர்வின் வாடை கவிதையில் பட்டுத் தெறிக்கிறது.

எங்களில் பெண்கள் திருமணம் செய்தபின் திருமதியாகி விடுகின்றனர்.

ஆனால் மேலைநாடுகளில் பெண்கள் திருமணமான பின்னும் செல்விதான் செல்விதான்.

இப்பதான் காரணம் விளங்குது.

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு ஹேமா...
இனிவரும் காலங்களில் இது வெகு சகஜமாகிவிடும்...

இவண்-
தமிழ்ப்பறவை

விஜய் said...

மாற்றங்கள் நிதர்சனமானவை, ஆனால் தாம்பத்யத்தில் அது கொடுமையானது.

வித்யாசமான கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

Nathanjagk said...

வளர்-சி​தை மாற்றம்!
பூ​னைக்கும் ​வே​லையில்​லை; ​பொல்லாத ​பொதுக்கண்களுக்கும் ​பொழப்பில்​லை.. எப்பப் பாரு குறுக்கும் ​நெடுக்கும் அ​லைகின்றன.
அப்பா என்பவர் அம்மாவின் து​ணை​ மட்டுமல்ல; அப்பா அப்பாவாக இல்லாத பட்சத்தில் அப்பா தப்பாகத்தான் ​தெரிவார் என்கிறாள் அப்பாவைத் ​தேடும் பாப்பா!

அரங்கப்பெருமாள் said...

கொஞ்சம் சிரமான வாழ்க்கைதான் என நீங்கள் எண்ண்க் கூடும்.
//அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.
//
பல்வேறு கருத்து வேறுபாடுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் நிச்சயமாய் சொல்லுவேன், இந்த வரியை எழுத நேர்ந்திருக்காது.சண்டையும் சச்சரவும் குடிகொண்டிருக்கும் அந்த இல்லத்தில்.அதனால் அச்சிறுமி இன்னும் பாதிப்படையலாம். அதை விட இது மேல் என எண்ணத் தூண்டியிருக்கிறது இந்த அமெரிக்க வாழ்க்கை.

இது என் மனம் குழம்பியதைக் காட்டவில்லை மாறாக,இவர்களின் வாழ்க்கை முறை என்னை எழுதத் தூண்டுகிறது.தனி மனித வாழ்க்கை இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. நாம் இன்னும் கூட்டுக் குடும்பம் சிறந்ததா? தனிக் குடும்பமா? என பட்டிமண்டபம் நடத்தும் மனஓட்டத்தில் இருக்கிறோம். இதை ஜீரணிப்பது என்பது கடினம்தான்.

துபாய் ராஜா said...

என்னன்னு சொல்ல... ஏதேதோ எண்ணங்களை எற்படுத்தியது ஹேமா இந்த கவிதை....

ஹேமா said...

ரவி வாங்க.ரொம்ப நாளாவே இதைப் பத்தி எழுதணும்ன்னு நினைச்சிருந்த கண்ணோட்டம்தான்.எங்கள் சமூகக் கட்டுக்குள் இதைப்பத்தி எழுதவும் கொஞ்சம் பயம்.எனக்கும் இதில முரண்பாடான கருத்து இருக்கு.
எழுதினதால பலதரப்பட்ட கருத்துக்களும் கிடைக்குது.
பார்க்கலாம்.

:::::::::::::::::::::::::::::::::::

ரிஷபன் வாங்க.உங்க கருத்துக்கும் சந்தோஷம்.

:::::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்....
மாறுவது என்பது குழந்தையின் மனதில் பதிந்து விட்டால், அதுவும் இயல்பானதாகி விட்டால் ஆறு மாதங்களோ மூன்று வருடங்களோ கழித்து குழந்தை அம்மாவைக் கேட்கும், "ஏம்மா...இன்னுமா அதே ஆளு? அடுத்த ஆளு எப்போ? எனக்கு போரடிக்குது... உனக்கு அடிக்கலை?"//

ஸ்ரீராம் வித்தியாசமான கருத்து.

:::::::::::::::::::::::::::::::::

ஜெஸி கருத்துக்கு நன்றி.சொல்லவும் பயமாயிருக்கு.இது எங்களின் வாழ்வியல் இல்லை என்கிறார்களே !

ஹேமா said...

ஜமால் வாங்க.சந்தோஷமாயிருக்கு கண்டது.அசையாப் பொருள் எல்லாம் பேசாமத்தான் இருக்கு.அசையிற மனுசன் தான் குழம்புறான்.

:::::::::::::::::::::::::::::::::::

//புலவன் புலிகேசி ...
அதேதான் ஹேமா..இந்தியாவிலும் இப்படித்தான்...நல்ல கவிதை//

புலவரே பாருங்க சிலபேர் ஒத்துக்கவே இல்லையே.எங்கள் சமூகத்துள் நிச்சயம் இந்த ஊடுருவல் இருக்கிறது.தப்பென்பதும் இல்லை.

::::::::::::::::::::::::::::::::::

//தமிழரசி ...
உண்மையை கவிதையா பரிமாறியிருக்கீங்க ... குழந்தை பாவம் தான் கண்டிப்பா மறுப்பதற்கில்லை... இப்படி தான் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலோர் குழந்தைகளுக்காகவே விட்டு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கினறனர்..அம்மா அப்பாவை மாற்ற எத்தனையோ காரணம் இருக்கலாம் அல்லவா? அதே அப்பா குழந்தைக்கு நல்லது அதே கணவன் மனைவிக்கு தகுந்தவனாக இல்லையோ என்னவோ? பெண்ணின் மனதையும் கொஞ்சம் பார்க்கலாமே...எத்தனை பெண்களுக்கு நம்முள் துணிவு இருக்கிறது? தேவையான மாற்றங்கள் தேவை தான்..//

தமிழரசி என் மனநிலையிலேயே சொல்லியிருக்கிறீர்கள்.பிடிக்காத வாழ்க்கையோடு ஏன் போராடவேணும்.சந்தோஷமாகப் பிரிஞ்சு ரெண்டு பேரும் பிடிச்ச வாழ்க்கையை வாழ்வதில் என்ன தப்பு ?சமூகம் கலாச்சாரம்ன்னு ஏன் இன்னும் கண்ணைக் கசக்கிக்கிட்டு கிடக்கணும்.குழந்தைகள் பாவம்தான்.
துணிவு வேணும் தமிழரசி.எங்க சந்தோஷத்தை நாங்க சமூகத்தின் கையில குடுத்திட்டு அழுதிட்டு இருக்கோம்.

ஹேமா said...

வாங்க ஞானம்.நிகழ்வுதான் ஆனாலும் நிதர்சமாய் ஏற்றுக்கொள்ளாத ஒரு இயல்பு என்கிறார்களே !

:::::::::::::::::::::::::::::::::

நன்றி சித்ரா நீங்கள் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.பெண்ணின் பக்கம் இருந்து அது சரியா என்றும் சொல்லியிருக்கலாம்.

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி உழவன்.சத்தம் போடாம நல்லாருக்கு சொல்லிட்டீங்க.
தப்பிட்டோம்ன்னு நினைக்கிறீங்கபோல !

::::::::::::::::::::::::::::::::

வாங்க -நிகே- .நன்றி கருத்துக்கு.

::::::::::::::::::::::::::::::::::

கண்ணன் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஹேமா said...

//சி. கருணாகரசு...
மாற்றங்கள்.... இப்படியா இருக்கும்.... இதெல்லாம் உயர் தேசங்களில்தான் மிக இயல்பாய் இருக்கும்... மற்றப்படி.... ஏழ்மை தேசங்களில் எட்டிப்பார்க்காத மாற்றங்கள் இவை.சரியா..ஹேமா?//

அரசு ரொம்பக் கோவமா எனக்குச் சொல்லிட்டீங்க.ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள் இல்லை.
எங்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.அதைப் தப்பு என்கிறீர்களா நீங்கள்?

ஏழ்மை தேசமோ அல்லது எங்கள் சமூகத்தவரோ பயத்தினால் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் அல்லது கணவனின் வருமானத்துள் வாழ்வதால் மட்டுமே அதற்குள் அடங்கிக் கிடக்கிறார்கள்.

நான் பெண்ணை மட்டும் சொல்லவில்லை.ஆணுக்கும்தான்.
பிடிக்காத வாழ்வை வாழவேண்டாம் என்கிறேன்.

::::::::::::::::::::::::::::::

எங்கே கலாவைக் காணோம்.
கலாவால் இன்னும் சொல்ல முடியும்.

:::::::::::::::::::::::::::::::::

தியா புலம் பெயர் வாடையில் எழுதினாலும் இயல்பாகச் சிந்தித்தால் அவர்களிடம்
நித்தச் சண்டையில்லையே!
எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறார்கள்.நாங்கள் அப்படியா ?

ஹேமா said...

விஜய் நீங்கள் சொன்னது சரி.
இப்படியான விஷயங்கள் தாம்பத்யத்தில் கொடுமையானவை என்பது.ஆனால் பிடிக்காவிட்டால் ஆணோ பெண்ணோ பிரிந்து இன்னொருவரோடு வாழ்வது என்பது தப்பில்லையே !

::::::::::::::::::::::::::::::::::

// ஜெகநாதன் ... வளர்-சி​தை மாற்றம்!பூ​னைக்கும் ​வே​லையில்​லை; ​பொல்லாத ​பொதுக்
கண்களுக்கும் ​பொழப்பில்​லை.. எப்பப் பாரு குறுக்கும் ​நெடுக்கும்
அ​லைகின்றன.அப்பா என்பவர் அம்மாவின் து​ணை​ மட்டுமல்ல; அப்பா அப்பாவாக இல்லாத பட்சத்தில் அப்பா தப்பாகத்தான் ​தெரிவார் என்கிறாள் அப்பாவைத் ​தேடும் பாப்பா!//

ஜெகா நீங்க என் பக்கம்.கை குடுங்க.ஆனாலும் எல்லாரும் என்னைத் திட்டிகிட்டு இருப்பாங்க.என்னைப் பத்தின கருத்தும் மனசில வித்தியாசமா பட்டிருக்கும் இப்போ.

ஆணோ பெண்ணோ பிரிவதெனபதில் எனக்கும் உடன்பாடு இல்லை.
என்றாலும் முடியாது என்கிற கட்டத்தில் பிரிவதை ஏற்றுக்கொள்ளலாமே என்கிறேன்.அவ்வளவுதான்.

:::::::::::::::::::::::::::::::::

//அரங்கப்பெருமாள் ...
கொஞ்சம் சிரமான வாழ்க்கைதான் என நீங்கள் எண்ண்க் கூடும்.
பல்வேறு கருத்து வேறுபாடுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் நிச்சயமாய் சொல்லுவேன், இந்த வரியை எழுத நேர்ந்திருக்காது.
சண்டையும் சச்சரவும் குடிகொண்டிருக்கும் அந்த இல்லத்தில்.அதனால் அச்சிறுமி இன்னும் பாதிப்படையலாம்.அதை விட இது மேல் என எண்ணத் தூண்டியிருக்கிறது இந்த அமெரிக்க வாழ்க்கை.

இது என் மனம் குழம்பியதைக் காட்டவில்லை மாறாக,இவர்களின் வாழ்க்கை முறை என்னை எழுதத் தூண்டுகிறது.தனி மனித வாழ்க்கை இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. நாம் இன்னும் கூட்டுக் குடும்பம் சிறந்ததா? தனிக் குடும்பமா? என பட்டிமண்டபம் நடத்தும் மனஓட்டத்தில் இருக்கிறோம். இதை ஜீரணிப்பது என்பது கடினம்தான்.//

பெருமாள் நீங்களும் சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்.இதை நான் சந்தோஷம் என்று சொல்லமுடியாவிட்டாலும் வாழ்க்கை வாழும் கொஞ்ச நாளுக்குக் கிடைத்த நிம்மதி என்பேன்.

நிலாமதி said...

வெளி நாட்டு வாழ்வில் இதெல்லாம் சகஜம். நம் நாடில் இருந்த பொது சமூக கட்டுப்பாடு.... சமூகத்தால் ஒதுக்க படுவர் என மனதுக்குள் குமுறிக்கொண்டே இருந்தனர். காலமும் மாற மாற்றங்களும் தேவை.

அப்பாதுரை said...

உங்க visuals brilliant! எல்லாம் மிக அருமை.

அப்பாவைத் தேடுமா?
பிள்ளை
அம்மாவின் சிரிப்பில்
புதுமையைக் காணுமா?

அன்புடன் மலிக்கா said...

ஆமாம் ஹேமா ,
வேண்டாம் இந்த மாற்றம் எந்த குழந்தைக்கும்..

உணர்வோடு உறவாடிய கவிதை..

V.N.Thangamani said...

///மணி குழந்தை பாவம்தான்.ஆனாலும் பழகிடும்ன்னு வச்சுக்குவோம்.
அப்பாவை பிடிக்கல அவங்க மாத்திக்கிட்டு சந்தோஷமா இருக்க்காங்களே !
என்ன தப்பு? ///
சந்தோஷமா இருக்கட்டும். எல்லோரும்
சந்தோசமா இருந்தா நல்லதுதான்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்
என்பதுதானே நம் ஆசையே.
ஆனால் அங்கே அப்பா மாறினதில்
எதோ ஒரு உள்ளம் வாடியிருக்குமே.
அது பாவம் தானே.
" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

Kala said...

மனைவி கணவனை மாற்றலாம்....
கணவன் மனைவியை மாற்றலாம்....
காதலன்கள் காதலிகள் கூட மாறலாம்...ஆனால்!
குழந்தைக்கு !!??

முன்நாள் மனைவி,முன்நாள் கணவன்,
முன்நாள் காதலனோ காதலியோ என்று
சொல்லலாம்....ஆனால்!
குழந்தை.....!!??


அவர்களின் சுய நல அக்கரையில் மாறலாம்
பின்னால் பாதிக்கப்படுவது எல்லாவற்றிலும்
அந்தக் குழந்தையே!{தன் பிள்ளை போல்
கவனிக்கும் அம்மாவோ,அப்பாவோ கிடைத்தால்
கொஞ்சம் பரவாயில்லை}இருந்தாலும்
சில சந்தர்பங்களிலும்,சிலநேரங்களிலும்
சொந்த அம்மாவையோ,அப்பாவையோ
அந்தக் குழந்தை தேடும்.....தேடவும் வைப்பார்கள்

உங்கள் கண் நோட்டம் விளைவித்த கவிப் பயிர்
கொஞ்சம் சிந்திக்கத் தூண்டும்!!

ஹேம்ஸ்....ஆஆஆஆ

Thenammai Lakshmanan said...

//செய்யது இது ஆரம்பத்தில சுவிஸ் கவிதையாத்தான் இருந்திச்சு.
நம்மவங்களும் மாறிட்டு வாறாங்களே !சில நேரம் தப்பா தெரியல.பிடிச்சவங்க பிடிச்சவங்களோட வாழ்றாங்க.
பிடிக்காத வாழ்கையோட ஏன் வருஷக்கணக்கா போராடணூம்//

நீங்க சொன்னது நடக்குது ஹேமா உங்க கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன்

எதுக்கு பிடிக்காத வாழ்வை வாழ ஒருவரைக் கட்டாயப் படுத்தணும்

Muniappan Pakkangal said...

You've narrated the changing world.Nice Hema.

ஷங்கி said...

அருமையாக இருக்கிறது. ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அழுவாச்சிக் கவிதையாவே போயிருச்சே!

ஜெயா said...

அருமையான கவிதை வெளிநாட்டில் இயல்பான நடைமுறை அழகாக சொல்லி இருக்கிறிங்க வாழத்துக்களுடன்

மேவி... said...

hema...chanceless..nalla irukku

late ah vanthatharku sorry...

Anonymous said...

அருமை

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா உங்க பின்னூட்டம் வேற எங்கேயோ இருந்து வருது.உண்மையாவே நீங்கதானா அது ?இப்போ எல்லாம் பயமா இருக்கு.அந்தப் பக்கத்துக்குப் போனா பிரவீன் ன்னு இருக்கு.நீங்க இருக்கிறதாவே இல்லையே.ஏன் அங்கயிருந்து ?ஏன் உங்க புளொக்கருக்கு என்ன ஆச்சு.
கடைசியாக்கூட கவிதை போட்டீங்க்களே !

கருத்துக்கு நன்றி அண்ணா.

ஹேமா said...

வாங்க துபாய் ராஜா.இப்போ எல்லாம் எப்பிடி வேலை.இன்னும் அதேபோலவா?என்றலும் உங்களைப் பார்க்கிறதில சந்தோஷம்.

::::::::::::::::::::::::::::::::

//நிலாமதி...
வெளி நாட்டு வாழ்வில் இதெல்லாம் சகஜம். நம் நாடில் இருந்த பொது சமூக கட்டுப்பாடு.... சமூகத்தால் ஒதுக்க படுவர் என மனதுக்குள் குமுறிக்கொண்டே இருந்தனர். காலமும் மாற மாற்றங்களும் தேவை.//

நிலாமதி உங்கள் பின்னூட்டம் பார்த்து நாங்கள் வாழ்வைக் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

:::::::::::::::::::::::::::::::::

//அப்பாதுரை...
உங்க visuals brilliant! எல்லாம் மிக அருமை.

அப்பாவைத் தேடுமா?
பிள்ளை அம்மாவின் சிரிப்பில்
புதுமையைக் காணுமா?//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.என்றும் உங்கள் வாழ்த்துக்கள் தேவை எனக்கு.

::::::::::::::::::::::::::::::::

மல்லிக்கா உண்மைதான் பிடிக்காவிட்டால் பிரிவது என்பது ஒரு வாதமாக இருந்தாலும் நடுவில் குழந்தைகளின் நிலை இரண்டும்கெட்டான்.

:::::::::::::::::::::::::::::::

மணி உங்கள் மீண்டுமான கருத்து உண்மைதான்.அப்போ இதற்குத் தீர்வுதான் என்ன ?

ஹேமா said...

கலாவுக்குப் பொறாமை.வசந்து...என்னை ஹேம்ஸ்ன்னு கூபிட்டுறது !

கலா உங்கள் கருத்து நடுவில நின்று தத்தளிக்கிறதுபோல இருக்கு.நானும் அப்பிடித்தான்.ஆனா எங்கள் குடும்பங்களில் காண்கிறோம்.
வருசக்கணக்கா அடிபட்டுக்கொண்டே வாழ்வார்கள்.அங்கே குழந்தைகள் உட்பட உறவினர்கள் யாருமே அமைதியியாயில்லயே.இதைதான் நான் யோசிக்கிறேன்.வாழ்வின் சந்தோஷங்களின் இழப்புக்கள் எவ்வளவு !

:::::::::::::::::::::::::::::::::

தேனு என்பக்கம்.உங்க ஓட்டு எனக்குத்தான்.

::::::::::::::::::::::::::::::::

வாங்க டாக்டர்.உங்களை நான் சுகம் கேக்கிற நேரமாச்சு.சுகம்தானே !

::::::::::::::::::::::::::::::::::

வாங்க ஷங்கி.முதல் வருகைக்கு மிக்க நன்றி.உங்க அண்ணன் சொன்னாரா.குழந்தைநிலாப் பக்கம் போய்ட்டு வரச்சொல்லி.சரிசரி.அப்பிடி ஒண்ணும் அழுவாச்சி இல்ல நான்.
நடுவில நடுவில பாருங்க நல்ல சந்தோஷமான கவிதைகளும் இருக்கு.உங்க அண்ணா அதையெல்லாம் சொல்ல மாட்டாரே !

:::::::::::::::::::::::::::::::::

வாங்க ஜெயா.நீங்க அதே ஜெயா தானே !இப்போ புளொக்கர் வருது உங்க பேர்ல.சந்தோஷமாயிருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறது.சுகம்தானே ஜெயா.
அடிக்கடி வாங்க.

மேவி... said...

yen en cmd kku reply pannala????

தமிழ்ப்பறவை said...

அது நானேதான் ஹேமா.இனிமேல் ப்ரவீன் பிளாக் தெரியாது. எனது ப்ளாக்தான் தெரியும்...
எனது ப்ளாக்கரை மொசில்லாவில் மட்டும்தான் உபயோகிக்கிறேன்.
குழந்தைநிலா மட்டும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் ஓபன் செய்கிறேன். இங்கு பரணிராஜன் எனும் கூகிள் அக்கவுண்ட் இருக்கும். பயம் வேண்டாம்.

இவண்-
தமிழ்ப்பறவை...

ஹேமா said...

வாங்க மேவீ.உங்ககூட ரொம்பக் கோவமா இருக்கேன்.சின்னப் பொடியன்மாதிரி சுறுசுறுப்பா இருக்கீங்களா?ஏனோதானோன்னு ரொப்ம நாளைக்கு அப்புறமா ஒரு பின்னூட்டம்.அதுக்கு பதில் போடாட்டி அதுக்கும் ஏன்னு கேள்வியுமா... இருங்க இருங்க.

::::::::::::::::::::::::::::::::

வாங்க ஆனந்த்.நீங்களும் ரொம்ப பிஸியாயிட்டீங்க இப்போ !என்றாலும் மறக்காமல் குழந்தைநிலா வருகிறீர்கள் என்பதில் சந்தோஷம்.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா சந்தேகம் போக்கியதுக்கு.

Chitra said...

இங்கு, ஒரு பெண், தனித்துவமுள்ள ஒரு பெண்ணாக முதலில் பார்க்கப் படுகிறாள். அதன் பின் தான், அவள் ஒரு மகள், மனைவி, தாய், சகோதரி, ........ அப்படியிருக்க, அவள் எந்த சூழ்நிலையில் தனது முதல் கணவனை விட்டு வந்தாள் என்று தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. குழந்தைக்காகவோ, சமூகத்துக்காகவோ, தன் உரிமைகளை விட்டு கொடுக்க இங்கு தேவை இல்லை. அதனால், நமது பார்வையில் அவளை குற்றம் சொல்ல முடியாது. அதே சமயம், அப்பா என்றால் யார்? அவன் கொடுமை படுத்துபவனாக இருந்தால், அந்த குழந்தை அன்பு காட்டும் ரெண்டாவது அப்பாவிடம் சந்தோஷமாக வளரும் அல்லவா? எந்த உறவுக்கும், emotional connection, bonding and expectations உண்டு. வீட்டுக்கு வீடு வாசப் படி. நம் ஊரில் கூட, சேர்ந்து இருப்பதால் மட்டும், அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லையே. ஆனால், உங்கள் கவிதையில், எந்த முக்கிய காரணமும் இல்லாமல், அந்த குழந்தை தன் தந்தை விட்டு பிரிய நேர்ந்து இருந்தால், பரிதாபத்துக்குரியதே.

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை ஹேமா. நன்றி.

பித்தனின் வாக்கு said...

// ஹேம்ஸ்....ஆஆஆஆ ///
ஹேமூ அப்படின்னு மாத்திக்கலாம்.

நசரேயன் said...

//அத்திரி உங்களை இப்போ அடிக்கடி என் பக்கம் பாக்கிறேன்.சந்தோஷம்.//
கடை வியாபாரம் நல்லா இருக்குன்னு அர்த்தம்.. இலக்கிய பாசையிலே சொன்னா நல்லா எழுதுறீங்கன்னு அர்த்தம்..

அப்பாதுரை said...

சுவிஸ் கவிதை என்றால் என்ன?

அப்பாதுரை said...

ஏழ்மைக்கும் அன்பின் வெளிப்பாட்டுக்கும் என்ன தொடர்பு கருணாகரசு, புரியவில்லையே?

இந்தக் கவிதையைப் பொருத்தவரை எழுதிய கதை ஒன்று - எழுதாத கதை பதினொன்று என்பேன்.
'கணவன் கொடுமைக்கார'னென்று உடனே தாவும் நம் எண்ணங்கள் நாணயத்தின் மறுபக்கத்தை கையோடு பார்க்க மறக்கின்றன. மனித இயல்பு தான், மறுக்கவில்லை. சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள்.

சத்ரியன் said...

ஹேமா,

தலைப்பையே மீண்டும் ...மீண்டும் வாசிக்கிறேன்.

யாரோ ஒரு அறிஞன் சொல்லிவிட்டுப் போன வாசகம் நினைவில் நிழலாடுகிறது.

“இங்கே மாற்றம் இல்லாத ஒன்று மாற்றம் மட்டுமே”!

சத்ரியன் said...

சொல்ல மறந்துட்டேன் ஹேமா,

நான் மீண்டு(ம்) வந்துட்டேன்.

Raja said...

பிரமாதமாய் இருக்குங்க...

விச்சு said...

சிறுகதை போன்று அழகாக இருந்தது ஹேமா...

Post a Comment