குடையென நிழல் தந்து
சட்டெனெ
மறைந்த அதிசயமாய் அது.
சுருங்கிய கணங்களுக்குள்
கண் மடல் தீண்டி
புன்னகைக்கும்
சின்னத் தென்றலின் தழுவலாய்.
மேகமாய் முட்டிய
சின்னக்குடையால்
சிந்திய துளியில்
நனைந்தே போனது
நமைத்த இதழொன்று.
சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
நிமிடத்தில் கடந்த விதம்.
காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.
மெல்ல மௌனம் கலைக்க
மூச்சிளைத்து முகில் பாட
களையாமல் கரைகிறது
களைப்பும் வியர்வையும்.
தோய்த்து உலர்த்திய துணிகள்
காய்ந்து விறைக்க
அடுத்த குடையாய்
வரும் வரை
வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
65 comments:
அருமை
அட...
ஹேமா கலக்றீங்க..
//நமைத்த// புரியலயே.. நகைத்த??
தோய்த்து உலர்த்திய துணிகள்
காய்ந்து விறைக்க
அடுத்த குடையாய்
வரும் வரை
வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!
//
அழகா வந்திருக்குங்க
அன்பு ஹேமா கவிதை அருமை.
நன்றியெல்லாம் இனிமேல் இல்லை.
வாழ்க வளமுடன்.
//மெல்ல மௌனம் கலைக்க
மூச்சிளைத்து முகில் பாட
களையாமல் கரைகிறது
களைப்பையும் வியர்வையையும்.//
அழகான வரிகள்....
சுவிஸ்ல வெக்கை அதிகமோ?
முத்தான முதல் பின்னூட்டம் அத்திரிக்கு நன்றி.
:::::::::::::::::::::::::::::::::
அஷோக் நமைத்துன்னா வாடின - வருத்தினன்னு தானே !தப்பா ?
:::::::::::::::::::::::::::::::::
ராதா நன்றி.இண்ணைக்கு பாட்டுப் பாடி தேடமுன்னுக்கு வந்திட்டீங்க.
::::::::::::::::::::::::::::::::
மணி எதுக்கு நன்றி.உங்க வாழ்த்தே போதும் எப்பவும்.
::::::::::::::::::::::::::::::::::
//பாலாசி...சுவிஸ்ல வெக்கை அதிகமோ?//
பாலாஜிக்கும் பகிடி.இப்போ இங்க குளிர் காலம்.ஐஸ்ல மிதக்கிறோம்.
எப்பவும் கிண்டல் பண்ற அஷோக் இடத்தில நீங்க.
உங்களுக்கும் பாட்டு பாடனும் போல !
//காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.
//
இந்த வரிகள் புரியலை..
பாராட்டுக்கள்..
//வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!//
ஓஹ்...
/காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.//
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய வரிகள்.நல்லா இருக்கு ஹேமா.
//வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!//
நல்லாயிருக்குங்க ஹேமா
(தடங்களுக்கு வருந்துகிறேன்)
காதல் சொட்ட சொட்ட எழுத பெற்றிருக்கிற கவிதைகள் சமீப காலமாக நன்றாக எழுதப் பெறுகின்றன
காதல் ரசகுல்லா சொட்டுதுங்க
உங்களிடமிருந்து சோகமில்லா சுகந்தக்கவிதைகள் காணும்போது மிக்க மகிழ்வுறுகிறேன்
வாழ்த்துக்கள்
விஜய்
நல்ல கவிதை ஹேமா.
சுருங்கிய கணங்களுக்குள்
கண் மடல் தீண்டி
புன்னகைக்கும்
சின்னத் தென்றலின் தழுவலாய்.]]
சுகமாய் ...
காதல் பித்தோ... பேயோ..
பிடித்தது ஹேமாவை..
ஆனாலும் நமக்கு நல்ல கவிதை கிடைக்குதப்பா
அது போதும்
வெரி நைஸ்..
இந்த வாரம் முழுக்க பல்வேறு பதிவர்களின் காதல் மழையில் மற்றும் கவிதை மழையில் நன்றாகவே நனைந்து போனேன். நனைந்தது பிடித்தே இருந்தது.
குடை என் மனசையும் தட்டி சென்றது
கவித கவித!
அருமையா எழுதுறீங்க...
[நான் வளச்சு வளச்சு யோசிச்சாலும் ஒரு கவித வரமாட்டைங்குதே]
நன்றாக இருக்கிறது ஹேமா.கலக்குங்க.
தொட்டுச் சென்ற குடை விட்டுச் சென்றது எதை ஹேமா.....
நிழலையா? நினைவையா?
நல்ல அருமையான கவிதை
என்னை மறந்தேன் ஒரு நிமிடம் !!
அருமை, வாழ்த்துகள்
வழக்கம் போலவே அருமை
//சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
நிமிடத்தில் கடந்த விதம்.
//
சிலிர்க்கிறது ஹேமா....அழகான கவிதை...
பாதி புரியலை.. பாதி புரியுது, ஆனாலும் படிக்க முடியுது
தோழியே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.
நல்ல கவிதை
(வழக்கம் போல எனக்குத்தான் புரியலை)
வார்த்தை விளையாட்டு அருமை.
ஹேமா, அம்சமான கவிதை. நீங்க சொன்ன மாதிரி கவிதைக் கிறுக்கலாம் என்று உட்கார்ந்தேன். வேறும் காத்து தான் வந்தது..கவிதை வரவில்லை. உங்களைப் போல போன பிறவியில் புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி.
//காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட//
குடையும் மழையும் அருமை ஹேமா காற்புள்ளி அரைப்புள்ளி எப்படி .....
ஹேமா எங்கேயோ போயிட்டீங்க
நல்லா இருக்கு கவிதை ஹேமா.!!
ஆனா நீங்கள் சொல்வது போல் "நமைத்த" என்ற வார்த்தை வாடின என்ற பொருள் தராது என்று நினைக்கிறேன்.
"நமத்து" என்ற ஒரு வார்த்தை பேச்சு வழக்கில் இருக்கிறது.அதற்கு "அழுகிய" அல்லது "நைந்த" என்ற அர்த்தம் தான் வரும்.
Correct Me if am wrong !
"நமைத்து" ?!?!?!?!?!?!?!!?
கவிதை அருமை ஹேமா.
//தோய்த்து உலர்த்திய துணிகள்
காய்ந்து விறைக்க
அடுத்த குடையாய்
வரும் வரை
வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!//
க்ளாஸ்
ஹேமா . வழக்கம் போல் எனக்கு இந்த கவிதையும் பிடிச்சு இருக்கு ....
எதாவது குறையாய் விடுங்க ..... நானும் என் பங்குக்கு தப்பு ன்னு எதாச்சு சொல்லுவேன்ல ஹி ஹி ஹி ஹி
\\\\மேகமாய் முட்டிய
சின்னக்குடையால்
சிந்திய துளியில்
நனைந்தே போனது
நமைத்த இதழொன்று.\\\\
நமைத்த------நமைச்சல் ஏற்படுதல்
{itch} கம்பளிப்பூச்சி மேலில் பட்டதால்
உடம்பு நமைக்கிறது
நமைச்சல்______வேர்க்குருவால்{வியர்வையால் வருவது}
அரிப்பு ஏற்படும் போது {சொறியத் தூண்டும் உணர்வு}
இதற்கு மேல் விளக்கம் தேவையில்லையென
நினைக்கின்றேன் எப்படியான இதழ் என்று
நீங்களே கண்டுபிடியுங்கள்!!
சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
கிஞ்சித்து__ இரக்கம் கிடையாமல்.......
ஹேமா எல்லாக் கவிவரிகளும்
எனக்கு உறவு தேடும் உள்ளத்தை
{உப்புமடச் சந்தை} ஞாபகப்படுத்துகின்றன.
கவிதை அருமை.
அழகான வரிகள்....
ராதா அடிக்கடி காணாம போய்டாதீங்க.அப்புறம் ராதா ராதா நீயெங்கேன்னு நான் பாடித்தான் தேடிகிட்டுத்தான் இருக்கணும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வசந்த்,உங்க கவிதையைவிட இது நல்லாவே புரியுது.இன்னும் நல்லா படிச்சுப் பாருங்க.வேணுமின்னே கேக்கிறீங்க.அதான் அத்திரி சொல்லிட்டார் ரௌடின்னு.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
புதுசா வந்திருக்கிற அண்ணாமலையான் வாங்க.
குடைபிடிச்சு வரவேத்துக்கிறேன்.
.................................
குன்றன் உங்களுக்குப் புரிஞ்சது வசந்த் க்குப் புரியல.இதுதான் கவிதையின் ஒரு வெற்றி.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தம் தெரிவிப்பதுதான் கவிதை.
..................................
வாங்கோ வாங்கோ அரசு.உங்களை நாங்க வலை போட்டுத் தேடிகிட்டு இருக்கோம்.ரஞ்சனி சுகமா ?அதென்ன தடங்கலுக்கு வருத்தம் !உங்க சந்தோஷத்துக்கு நாங்க தடங்கல் இல்லை.
...............................
நேசன் நன்றி.உங்கள் கருத்து நிச்சயம் இன்னும் என்னை உற்சாகப்படுத்தும்.
...............................
விஜய் அடிமனதிற்குள் சோகம் படிந்து கிடப்பதால் பாலாடையாய் மிதக்கும் சிலகவிதைகள் சந்தோஷமாய்.
என்றாலும் இந்தக் கவிதைக்குள்ளும் சின்னதாய் ஒரு சோகம் இழையோடியபடிதான்.
.................................
வாங்கோ மாதேவி.உங்கட சமையலை விட இதென்ன பெரிசு !
..................................
ஜமால்..ஜமால் இப்பிடியா வந்து சுகம் சொல்லிப் போறது !
..................................
வேல்கண்ணா எனக்கென்னமோ பேய் பிடிச்சதை நேரில பாத்த மாதிரி.சரி நல்ல பேயாப் பிடிச்சா சரி.
...................................
நைனா..என்ன இங்கிலீசில நைஸ் சொல்லிட்டு ! கவுஜயா மாத்தாம இருந்தா சரி.
...............................
தமிழ் வாரம் முழுக்க மழையில நனைஞ்ச அப்புறமும் சுகமா இருக்கீங்களா !காய்ச்சல் என்னாச்சும் வரலதானே !
..................................
ஜெரி எங்க ஆளையே காணோம்.குடை மனசைத் தட்டிப் போன சந்தோஷம்.கம்பி கீறலதானே !
...................................
வாலு... என்ன அதிசயமா குடை பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம்.
................................
பெருமாள் நீங்க சொன்னதைப் பாத்து சிரிப்பு அடக்கமுடில.மனசில ஏதாச்சும் ஆழமா நினைச்சீங்கன்னா கண்டிப்பா கவிதை எழுதலாம்.இனி அடுத்த பதிவு நீங்க கவிதைதான்.
அழகு அழகு ...
அருமை அருமை ...
வாழ்த்துக்கள் தோழி....
ஜெஸி எங்க அடிக்கடி காண முடியவேயில்லை.உங்க கவிதைகளும் வித்தியாசமான் சிந்தனையோட அழகாவே இருக்கு.
..................................
ஆரூரன் குடை விட்டுப் போனது நினைவையும் நிழலையும்தான்.
அதுதானே சுகமான கவிதை தந்தது.
.................................
ஸ்டார்ஜன் மறந்திடாதீங்க.அடுத்த தரமும் வரணும்.
...................................
நன்றி தியா.அடிக்கடி சந்திக்கலாம்.
ஊர்க்காத்தும் கொண்டு வாங்க.
...............................
வாங்க ஸ்ரீராம்.எங்க உப்புமடச் சந்தில பதிவு 2 க்கு ஒண்ணும் சொல்லக் காணோம்.
................................
புலவரே நன்றி.விருது தூக்கிட்டு வந்திட்டேன்.
.................................
நசர் என்ன புரியல.ஒரு நிமிடத்தில் வந்து போன காதலனை நினைத்து வந்த உணர்வின் வரிகள்.இப்போ வாசிச்சுப் பாருங்க.
...............................
புதுசா வந்திருக்கிற அக்பர் வாங்க.இனி அடிக்கடி கண்டுக்கலாம்.
................................
வாங்க வாங்க துபாய் ராஜா.
காணோமேன்னு தேடிக் களைச்சே போனேன்.உங்க வேலையெல்லாம் ஆறுதலா முடிச்சு வாங்க.
வேலைதான் முக்கியம்.சுகமா இருந்தா சரி,
வானொலி சிலபேர் கஸ்டம்ன்னு சொல்றாங்க.அதான் எடுதிட்டாங்க.
கொஞ்ச நாள் பாக்கலாம்.
இராகவன்,தமிழ்ப்பறவை அண்ணாதான் அடிக்கடி சொல்றாங்க.அவங்களையே கேளுங்க.
.................................
கோபி,என்ன போன பிறவி,
புண்ணியம்ன்னு சொல்லிக்கிட்டு.
இந்தப் பிறவியே வேணாம்ன்னு இருக்கு எனக்கு.ஏதாச்சும் உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தை ரொம்ப ஆழமா ரசிச்சுப் பாருங்க.
கவிதை தானா வரும்.காத்து ஓடியே போய்டும்.
...................................
தேனு,என்னைக் கிண்டல் பண்ணலதானே !அப்பிடீன்னா சந்தோஷம்.
..................................
செய்யது உங்களைக் கண்டதே சந்தோஷம்.உங்களைப் போல வாறதுக்கு கஸ்டப்படுறவங்களுக்காகவே ரேடியோ எடுத்திட்டேன்.
உங்க சந்தேகத்துக்கு கலா பதில் சொல்லியிருக்காங்க.நமைத்து = அரிப்பு,வருத்தம்ன்னு இருக்கு.
..................................
நவாஸ் என்ன இவ்ளோ பின்னுக்கு.எப்பவும் நீங்கதான் முதல்ல...!
...................................
மேவீ நீங்க குறை சொல்றதுக்காகவே ஒரு கவிதை எழுதணும் இனி.ரொம்ப குசும்புதான் உங்களுக்கு.
அழகான, அழுத்தமான வரிகள்...........
Can you try see my blog......
http://sangkavi.blogspot.com/
//வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!//
எல்லாமே அருமையான வரிகள்
எல்லாம் புரிகிறமாதிரியான கவிதைகள் நடுவே ஒரு சில வரி புரியாமல் ‘இதுவா.. அதுவா’ என குழம்பி.. அப்புறம் பொருள் உணர்ந்து மீண்டு வாசிக்கும்போது அது ஒரு சுகானுபவம்..
நல்லா இருக்குங்க.
வணக்கம் ஹேமா அக்கா. எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வலைத் தளத்திற்கு வந்திருக்கிறேன்..... அதே கலக்கல் கவிதைகள். கவிதையில் வெற்றி நடை போடுகின்றீர்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.....
இரண்டு பதிவுக்கும் சேர்ந்து மேலே ஒரே பதிவில் பதில் சொல்லிவிட்டேனே ஹேமா...
வழக்கமான வலைப்பூக்களை படிக்கும்போது ஏதோ ஒன்றினால் பாதிக்கப் பட்டு என் கணினி நான்கைந்து நாட்கள் திரும்பத் திரும்ப செயல் இழந்தது. சரியானதும் வந்து சேர்த்துப் படித்து பதிலெழுதினேன்.
சில்லென வீசும் பனி காற்றில், சிலுப்பிய சிட்டாய் ஒவ்வொரு வார்த்தயும் ... அருமை ஹேமா.
பிரமாதம் சகோதரி. முன்பைக் காட்டிலும் இப்போது கவிதைகள் வேறு பாதையில் செல்கின்றன. மற்றும் தரமாகவும் உள்ளது.
அன்புடன்
ஆதவா
அன்பு நண்பர்களுக்கு,பொறாமை என்பது பெருநெருப்பு.அது குழந்தைநிலாவிலும் அடிக்கத் தொடங்கியிருக்கு.
என் இனம்தான் எனக்குப் பகை.
அதுதானே இப்படி நாடு நாடாய் அலைகிறோம்.திருந்தவோ முன்னேறவோ இடமேயில்லை.
கஸ்டம்.அன்றே சொல்லி வைத்தார்கள்.கோடாலிக் காம்புகள் என்று.சும்மாவா !
உப்புமடச்சந்தியில் சொறிந்த என் சொந்தம் இங்கும் சொறியத் தொடங்கியிருக்கிறது பெயர் சொல்லாமல்.
அதனால் இனிப் பின்னூட்டங்கள் என் அனுமதியோடுதான்.வழியில்லை.
அந்த அனானிக்கு நன்றி.
அட்டகாசம்
நல்ல கவிதைன்னு நினைக்கிறேன். மூன்றுமுறை படித்துவிட்டேன் - அப்படியும் புரியவில்லை! :))))
[புரியலன்னா நல்ல கவிதை-ங்கறது என்னோட அகராதி] :)
காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.//
துளிதான் என்றாலும்
அதற்கும் வரும்
கிலிதான் அந்த
தடுமாற்றமோ..!!
அருமை ஹேமா
(உங்கள் வருகை குறைகிறதா
இல்லை கரைகிறதா?)
அருமை
குடையெல்லாம் வேனாங்க, அப்பத்தான் உங்க கவிதை மழைல நனையலாம்.
உங்கள் கவிதைக்கான குடையை சுமந்தபடி .. நானும்.....நல்ல கவிதை..
சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
நிமிடத்தில் கடந்த விதம்..
ஆகா அருமையாய் குளிர்கிறது.சூப்பர்
நல்லா இருக்கு ஹேமா...
புதுத்தளங்களில் சுகமான சொற்கள்...
மழையும்,குடையும் படமும் அழகு...
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
இனிமேல் இந்த ஐடியிலிருந்துதான் கமெண்டுவேன்...
-இவண்...
தமிழ்ப்பறவை...
ரொம்ப நல்லாருக்குங்க ஹேமா.
மிக அற்புதமான கவிதைடா ஹேமா!
ரசனை ஆச்சர்ய படுத்துகிறது..வேலைகள்டா கண்ணம்மா.அதான் முன்பு போல வரமுடியாமல் பொய் விடுகிறது.
நமைச்சல்-கலா மிக சரி!
நல்ல அருமையான கவிதை என்மன தையும் தொட்டுச்சென்றது இந்தக்குடை.வாழ்த்துக்கள் சகோதரி.
huh...this is excellent
அழகான கவிதை..
Post a Comment