*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 27, 2009

தோழா நீ எங்கே...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !

கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!

என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !

என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !

முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!

வாராயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

33 comments:

சந்தான சங்கர் said...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ//

பயிரிட்டவன்
உயிரிட்ட இடத்தில்
ஈழமும் பூத்து குலுங்கும் ஓர் நாள்
அன்று உன் தோள் தேடி
துவளும் மலர்களின்
மழலை கேள்விகளுக்கு
விடையளிக்க வருவாயா தோழா...!!


நெகிழ்வு தோழி..

சத்ரியன் said...

//முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !//

எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோமே,
இன்றைய பொழுதுக்குள் உன் குரல் கேட்டுவிட்டால்
போதுமென்றே .... செவிபசியுடன் காத்துக் கிடக்கிறோம்.

உரிமையுடன் அழைக்கிறேன்.. வாடா அண்ணா...........

ப்ரியமுடன் வசந்த் said...

//முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.//

இப்பொழுதும் கிடைத்துவிடுவார் திடீரென்று தோன்றி உரையாற்றுவார் என்றுதானே அனைத்து தமிழுள்ளங்களும் ஏங்கிகொண்டிருக்கின்றனர்..

மாவீரர்தினத்தில் ஒரு மாவீரனுக்கான கவிதை ....

tamiluthayam said...

வாழ்வதற்கான ஒரே நம்பிக்கையை கொடுத்தது உன் இருப்பு தான். அந்த நம்பிக்கையும் ஊனமாகி விட்டது. ஆனாலும் நம்புகிறோம்... நீ வருவாய் என...

Kala said...

எத்தனை எத்தனை தோழர்கள்,மகன்கள்,
கணவன்மார்கள் ,இளங்கன்னிகள் ,
சகோதர,சகோதரிகள்,பெற்றோர்கள்
அனைவர்களையும் தொலைத்து{கழுகுகளிடம்}
திசை மாறிய பறவைகளாய் நாம் பறந்து
திரிகின்றோம். உங்கள் கவிதையில்....
அத்தனை வரிகளும் இதயத்தையும் ,கண்களையும்
கலங்க வைக்கின்றன.அனுபவித்தால்தான்
அதன் வலிகள் புரியும் .கவிதை வரிகளில்
ஐந்து நிமிடத்தில் சொல்லி விடலாம்
ஆனால் அனுபவத்தை,{அனுபவித்தவை}
அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை,
வேதனையை,துன்பத்தை,நினைவுகளை
யார் யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்!
அப்படிப் பகிர்ந்தாலும், அவர்களுக்கு அது அனுபவப்
பாடம் இல்லை. { அவை நமக்கு கொடுத்த}
“பாடத்தை” எப்படிக் ஹேமா மறக்க முடியும்?

மாவீரர்களின் உயிர்துடிப்பு அடங்கவில்லை
ஒவ்வொரு தமிழ் இதயங்களிலும் “அவர்கள்”
உயிர் விதை தூவப்பட்டிருக்கின்றன.....அதுவரை
காத்திருப்போம். வீரமகன்களுக்கும்,மகள்களுக்கும்
தமிழ்மண்ணின்,தமிழ்மக்களின் முழந்தாளிட்டு,சிரந்தாழ்த்தி
வணங்குகின்றேன்{றோம்}.

V.N.Thangamani said...

nee varuvaai enak kaaththirunthen. yen maranthaai ena naan ariyen....
varalaam, varakkoodum ena nambuvom.

தமிழ் நாடன் said...

ஒரு இக்கட்டான நிலையிலும் இன்று தமிழினம் துவண்டு போய்விடவில்லை!
தலைவன் கொடுத்த நெஞ்சுரம் இன்று இளையோர் மனத்தில் வேர் பாய்ச்சியிருக்கிறது!
தமிழீழத் தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் என்று முழங்குவோம்!
ஒன்றாய் வீழ்ந்தால் பல நூறாய் எழு எழுவோம்!

புலவன் புலிகேசி said...

தலைவன் இல்லை என்று முடிவு செய்து விடாதீர்கள். அவர் இருக்கிறார். நிச்சயம் அவர் குரல் கேட்கும்..தமிழினத்துக்கு நீதி கிடைக்கும்..

தமிழ் அமுதன் said...

//முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.//

இப்போதும் அதே நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!

நேசமித்ரன் said...

நெகிழ்வு தோழி..

Unknown said...

விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ///

நெகிழவைத்தாய் தோழி,,,,,
அன்பு தோழன் ஸ்ரீதர்,

க.பாலாசி said...

//என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே //

nalla kavithai....

தேவன்மாயம் said...

உங்கள் உண்ர்வுகளில் மீண்டும் மீண்டும் உயித்தெழுவார்!!

விஜய் said...

கண்டிப்பாக உயிர்த்தெழுவார்

விஜய்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சரியான நேரத்தில் தலைவனைத் தேடியிருக்கிறீர்கள்.
நெகிழ்வான கவிதை ஹேமா.

நசரேயன் said...

எங்கேயும் போகலை.. நம்ம மனசிலே இருக்காரு

அத்திரி said...

தமிழ் நெஞ்சங்களின் உணர்வு வரிகளில்

மேவி... said...

கட்டாயம் குரல் கேட்டு நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்போம். வார்த்தைகள் அழகு

ஹேமா said...

என் உணர்வோடும் தமிழோடு இணைந்துகொண்ட என் இனிய நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

சங்கர் தமிழோடு நன்றி.

சத்ரியன் தமிழோடு வணக்கம்.
அண்ணா எங்களோடுதான் எப்போதும்.

வசந்த் உங்களுக்கும் நன்றி.காத்திருப்போம்.

தமிழுதயம் நம்பிக்கைதானே வாழ்வாகிறது ஈழத்தமிழனுக்கு.

கலா தமிழோடு கை கோர்ப்போம்.

மணி தமிழாய் எங்கள் நம்பிக்கையாய் வருவார் ஒரு நாள்.

தமிழ்நாடான் "தமிழீழத் தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் என்று முழங்குவோம்!"சரியாகச் சொன்னீர்ர்கள்.

புலவரே நம்பிக்கைகளால்தானே எங்களை நிரநிரப்பி முமையாய் இருக்கிறோம்.

நேசன் நன்றி உங்கள் வருகைக்கும்.

ஜீவன் நீங்கள் எப்போதும் எனக்கு நினைவூட்டும் நம்பிக்கையோடுதான் நான்.

ஸ்ரீதர் நன்றி உங்கள் முதல் வருகைகும் உணர்வுக்கும்.

பாலாஜி எதோ ஒன்று குறைகிறது உங்கள் பின்னூட்டத்தில்.நன்றி.

நன்றி விஜய் தமிழின் உணர்வோடு கை கோர்ப்புக்கு.

தேவா நன்றி.அவர் என்றுமே வாழ்ந்திருப்பார்.

ஜெஸி இன்றல்ல என்றுமே தேடும் ஒரு வார்த்தை அவர்.

நசரேயன் உலகத்த தமிழரின் செல்லக் குழந்தை அவர்.என்றுமே எங்களுடையவர்.

அத்திரி தமிழின் உணர்வோடு வந்திருக்கிறீர்கள்.நன்றி.

மேவீ காத்திருப்போம்.காலச் சுழற்சியில் எதுவும் மாறலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !//

காதுகளில் விழட்டும்...


//முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ//

ஹேமா உங்களோடு நாங்களும் அழைக்கின்றோம்...... நீ எங்கே?

thiyaa said...

மனதை பிழிகிறது ...

அன்புடன் நான் said...

தோள் தர தோழர் வருவார்.

விஜய் said...

R U Busy

vijay

Thenammai Lakshmanan said...

//விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்//

விதைகளில் விருட்சங்கள் முளைத்தாலும் தூண்கள் இடியும் ஹேமா

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வுடா ஹேமா!

V.N.Thangamani said...

அன்பு ஹேமா
எல்லாமே நம்பிக்கையில் தான் இருக்கிறது.
எதாலும் எதுவும் முடிந்து போவதில்லை.
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமே.
உலக சரித்திரம் படைக்க வேண்டிய தமிழன்
நாட்டின் சரித்திரத்தோடு முடங்கி விட வேண்டாம்
என்ற இயற்கையின் சுழற்சியில் .....
ஒரு பெரிய வெற்றிக்காக ஒரு சிறிய தோல்வியை
சகிக்கத்தான் வேண்டும்.

பித்தனின் வாக்கு said...

எனக்கு அவருடன் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவரின் வரவுக்காக காத்துள்ளேன். நன்றி ஹேமா.

Anonymous said...

ஆலமரமாய் நின்றிட்டார்
அவருக்கு விழுதாய் உம்மை அவர் ஆக்கிட்டார்...

விருட்சங்களே நீங்கள் வீழ்த்திடுங்கள்...
மண்ணாகிப்போகாது அந்த மாவீரன் கனவு....

thiyaa said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

அன்புடன் மலிக்கா said...

படிக்கும்போது மனத்தை பிழிகிறது.
தோழியே உன் மனவேதனையைபோக்கச்சொல்லி இறைவனிடம் வேண்டுகிறேன்..

ஹேமா said...

தியா

ஞானம்

அரசு

உழவன்

தேனு

மணி

பித்தனின் வாக்கு

தமிழரசி உங்கள் முதல் வருகைக்கும்

என்னோடு கை கோர்த்து ஆறுதல் தந்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.

துபாய் ராஜா said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
இருட்டினில் நீதி மறையட்டுமே..
தன்னாலே வெளிவருவார் கலங்காதே..
ஒரு தலைவன் இருக்கிறார் மயங்காதே.

NILAMUKILAN said...

விரைவில் வருவான். அடங்க மறுப்பான்...ஆறுதல் தருவான்.

Post a Comment