மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.
தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.
கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.
விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.
சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.
பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
71 comments:
me the first?????!!!
நான் தான் firsta..
இப்படி ஒரு கமெண்ட போட எவ்வளவு நாளா try பண்னேன்.
Hema,
My options
First Para
&
Last single line :)
"சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ."
ஆமாங்க .... திரும்ப கூடாது .... தட்டி பார்க்க வேண்டும்
"தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க ஞாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே."
எழுத்து பிழைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன் ....
"கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை."
பலர் இன்னும் கதவு மூடுவதற்கு என்றே நினைக்கிறார்கள் .. திறக்கவும் தான்
சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.
///
ஆகா!!! கதவைப் பற்றி பலர் எழுதியிருந்தாலும் .....உங்கள் வரிகள் அருமை!
"விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்."
ஆகா அருமையான விளக்கம் தரும் வரிகள்
"சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே."
மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஒரு விரோத மனப்பான்மையை தான் வளர்த்து கொண்டு வருகிறான்
"பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!'
அழகு
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
வாழ்வதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது ....... அந்த நிலைமைக்கு சமுதாயத்தை உள்ளாகி வைத்து இருக்கிறான் மனிதன்
தன்னம்பிக்கை
வரிகள் சிறப்பு ஹேமா
அதிலும் முதல் பத்தி ...
போராட்டம் தானுங்க வாழ்க்கை அனால் அந்தப்போராட்டம் எப்படிப்பட்டது என்பதில் தான் பிரச்சனையே
//கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க ஞாயமில்லை//
:-)
யன்னல்கள்???
wat meaning
pls contact me-
ramnirshan@gmail.com
அருமையான பதிவு ஹேமா,
இப்படி வலுவான பதிவிட்டால் சுகந்து படிப்பேன் நான் .
இப்படி இதயத்தில் அறைந்து சொல்லுங்கள் நாம் சாதித்தாக வேண்டும் என்று.
நன்றி ஹேமா ,
வாழ்க வளமுடன்.
ஹேமா..
உணர்ச்சிமிக்கதொரு கவிதை நீண்ட நாட்களுக்கு பின்..
முதல் கதவின் வரிகள் ரசித்து படித்தேன்..
கடைசிவரிகள் உத்வேகத்தை ஊட்டும் வரிகள்..
வாழ்க்கையே பலருக்கு போராட்டம் தானே ஹேமா...போராடிகொண்டுதான் இருக்கிறோம்..வெற்றி கிடைப்பதற்க்கு அல்ல..வெற்றி பெற ஆனா வெற்றி கிடைச்சா எப்பிடியிருக்கும்,பெற்றா எப்படியிருக்கும்?
இது தான் ஹேமா
//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
arumai HEMA
கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
நிஜம் தான் ஹேமா
பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
உண்மை தான் ஹேமா
நண்பர்கள் கவனத்திற்கு
தமிழர்ஸ் தளத்தில் உங்கள் இணைக்கலாம் வாங்க...
ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள்
மனதில் அறைகிறார் போல் இருக்கிறது ஹேமா. அருமை.
பிரபாகர்.
வீரமான கவிதை...
ஹேமா... உன் தளத்தை கவிதை படிக்க மட்டுமே வருகிறேன்...
கவிதையைச் சுற்றிலும் ஏகப்பட்ட விட்ஜெட்டுகள்.. அவை லோடு ஆவதற்குள் என் கணிணி செத்துவிடுகிறது.. தேவை இல்லையெனக் கருதினால் தூக்கிவிடுங்கள்...
இங்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கும்,இதே பிரச்சினை இருந்தால் என்னுடன் குரல் கொடுங்கள்...
‘தட்டுங்கள் திறக்கப் படும்’...
ஹேமா, உங்கள் கவிதையில் வேகம் தெரிகிறது.
கேட்பாரற்ற பொழுதுகளில் என்றுதானே இருக்க வேண்டும்? ஏன் "கேட்பாராற்ற"?
கவிதை வழக்கம் போலவே சூப்பர்.
ஹேமா..
உணர்ச்சிக் கவிதை
இனிய நன் நடை
வாழ்த்துகள்
அருமையான கவிதை ஹேமா
தன்னம்பிக்கையை அள்ளித் தரும் வரிகளுக்கு ஒரு சல்யூட்
ஹேமா மிக சோகமான வரலாறு
கூறும் கவி.
முன்பிருந்த தேசம்,முன்பிருந்த
மனிதநேயம் ,உண்மைகள் எல்லாம்
மறைக்கப் பட்டு....
அன்று..”தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்”
என்றார்{நியாயம், சத்தியம் ,தர்மம்
நிலைத்திருந்தது}ஆனால் இன்று..
தட்டத்தட்ட..கேட்க்கேட்க...
உண்மைகள் கூட மூடப்பட்ட நிலையில்...
இயல்பான வாழ்கையைத் தொலைத்து..
வீடில்லை,விலாசமும் இல்லாமல்
குருதி சிந்தும் வாழ்கையுடன்...
எந்தத் தடைகளும் இல்லாமல்...
அதனுடன் தர்மமும் சேந்திருந்த
பரந்த சுதந்திர
தேசத்தில்...
இன்று எவையெல்லாமோ நுழைந்து
கேட்பாரற்ற நிலையில்.....அத் தேசம்.
{ஹேமா என் சிந்தனை ஒட்டம்}
இனத்தின் மனம் செத்த கதவின் முன் கவிதை கூக்குரல்
கடவுளுக்கும் கேட்கட்டும்
விஜய்
//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
ம்ம்ம்ம்ம்ம்ம்
உங்கள் தவிப்பை கவிதையாக பகிருகிறீர்கள்... மன ஆறுதலை என்ன விலையேனும் வாங்கி தர நினைக்கிறோம். மன ஆறுதல் எங்கே கிடைக்கும்.
அருமையான கவிதை வரிகள்
தொடக்கம் மிக அழகு
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
தமிழனது தலைஎழுத்தையே மாற் ற த்துடிக்கும் தேசமிது என்ன சொல்வேன்...
அத்தனை வரிகளும் அருமை
a poem tat moves heart... inspiring!
//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
உண்மையான வரிகள்... பாராட்டுக்கள்...
அருமையான உணர்ச்சிக்கவிதை ஹேமா. வாழ்த்துக்கள்
திரும்பவும் சோகப்பாட்டா????
சாமீ.. இவங்களுக்கு டெய்லியும் 2 கடி ஜோக்கு வரமா கொடுங்க!
-
ஏமாற்றத்தின் வடிவமாக மூடப்பட்ட கதவு தோன்றுகிறது. கேட்பாரற்ற பொழுதுகள் வலிக்கின்றன.
//பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!
//
மாயமாக இருக்கிறது இவ்வரி(லி)கள்!
ஜன்னல்கள் திறக்க பிரயத்தனப்படும் காற்றாக இருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள்!
-
//யாரும் இறந்திருக்க ஞாயமில்லை//
நியாயமில்லை என்பதுதானே சரி?
இப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்றது நியாயமில்லீங்க!
யப்பா கண்ணுல விளக்கெண்ணை ஊத்திட்டு படிப்பாங்களோ
ஞாயம் அப்பிடின்னும் தமிழா வார்த்தை இருக்குதுப்பா
மர்க்கட ஞாயம் கேள்விப்பட்டதில்லையா ?
ஓய்! என்னங்காணும் சுவாமி
நீளமா பேசாதேள் !
சுளுக்கிண்டுடும் நாக்கு
நான் சுவாமி ஓம்கார் இல்லப்பா
சுவாமி ஓம்சைக்கிள்
நான் அவா இல்லை
அவரண்ட பொய் வேணா அப்பிடி பேசுப்பா
நீரு எந்த சாமியா இருந்தா எனக்கென்ன ஓய்..
உனக்கு கும்மி அடிக்கனும்னா அதுக்குன்னு வேற எடம் இருக்கு அங்க வா ! இங்க எதுக்கு குடுமி ஆட்டிட்டு இருக்க ...
http://www.athishaonline.com/
ஏன்?எல்லோருக்கும் {எழுத்துச்}சண்டை
இதோ விளக்கம்.....
ஞாயமில்லை......இது இலங்கை பேச்சுத்
தமிழ்.
உ=ம் சந்தையிலோ,கூவி விற்பவரிடத்திலோ
ஒரு பொருள் வாங்கும் போது அவர் அதிக
விலை சொன்னால்....
வாங்குபவர் குறைத்துக் கேட்பார்
எப்படித் தெரியுமா?
நீ சொல்லும் விலைக்கு வேண்டாம்
எனக்கு ஞாயமாய் போட்டுக் கொடு
என்பார் வாங்குபவர்
இன்னும் சில... ஞாயமாகப் பேசு,ஞாயமாகச்
சொல்லு,ஞாயமாகக் கேளு....இன்னும் பல...
நியாயத்தைச் சுருக்கி சொல்வதுதான் ஞாயம்
சகோதரர்களே!இதுஇலங்கையின் பேச்சுத் தமிழ்
வேண்டாம்----வேணாம்
இயலாது—ஏலாது
முடியாது—ஒண்ணாது இப்படிப் பல சொற்கள்.
நாம் அனைவரும் தமிழர்கள் தான்!
எழுத்துத் தமிழ் தான் அனைவருக்கும்
ஒன்று.ஆனால்...பேச்சுத் தமிழ்
நாட்டுக்குநாடு,ஊருக்குஊர்,கிராமத்துக்குகிராமம்
ஏன் சேரிக்குசேரி பேசுவது வித்தியாசப்படும்
எழுதியவர் இலங்கையர் அதனால் இவ்
வார்த்தை நுழைந்ததொன்றும் குற்றமில்லை.
தாய் மொழியையும், தாய் மண்ணையும்
மறக்க முடியுமா?
இப்ப எனக்கு ஞாயம் சொல்லுங்கள்!!
\\\\யப்பா கண்ணுல விளக்கெண்ணை ஊத்திட்டு படிப்பாங்களோ
ஞாயம் அப்பிடின்னும் தமிழா வார்த்தை இருக்குதுப்பா\\\\
இது எந்த ஊர் வார்தையப்பா!?
தனித்து {யப்பா} எழுத்தும் போது வராது
அப்பா கண்ணுல விளக்கெண்ணை ஊத்தித்தான்
படிப்பார்களோ
ஞாயம் அப்படியென்று தமிழ் வார்த்தை இருக்குதாப்பா
{இருக்கின்றதாப்பா}
இப்படி எழுதிவிட்டு அப்படிக் கேட்கலாமா ஐயா!
நல்லாத்தான் வச்சுருக்க பேரு வெங்காயம்
நான்தான் சொல்லிட்டேன் நான் அவா கூட்டம் இல்லே, குடுமி இல்லே அப்பிடின்னு
உன்கூட நான் எதுக்கு அடிக்கணும் கும்மி
அவாளா பார்த்து வேணா கும்மியடி
கலா மேடம்...
உங்க முதல் பின்னூ.. கலாக்கல்!
உ.ம.சந்தி வந்தா உங்க பின்னூவை படிக்காம போறதில்ல!
நீங்க பிளாக் ஆரம்பிச்சா.. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்!
ஆனா 2வது பின்னூவில் கொஞ்சம் அலசவேண்டியிருக்கு..
ஞாயம் - என்பது நம் நாக்கு தடவுகிற அவசரத்தில் உதிக்கிற ஒரு மலுப்பலான ஒலிப்பிரதி.
இது எல்லா தமிழனுக்கும் சாதாரணம். வாழைப்பழத் தோல் வழுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான் என்று 23 முறைக்கு மேல் சொல்ல முடியுமா எந்த செந்ந்ந்ந்தமிழனாலும்...?
அதுமாதிரி கலோக்கியலான ஒரு வார்த்தைதான் ஞாயம்.
ஆனால் சுந்தரத் தமிழில் திகழ்கிற இந்த கவிதையில் அந்த கலோக்கியலின் இடைச்செருகல் கொஞ்சம் அபஸ்வரமாகப் படுகிறது.
ஹேமா(சுவிஸ்)-ன் கவிதையைத் தாண்டிய பதிவுப் பாசத்தால் தான் இங்கு வருகிற நண்பர்கள், சகப்பதிவர்கள் மற்றும் பதிவுக் கொலைவெறியர்கள் (என்னை மாதிரி) அவருக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை (அப் கோர்ஸ்.. கண்ணுல விளக்கெண்ணை, வெறும்வெண்ணை எல்லாம் விட்டுக்கொட்டு) கண்டெடுத்து சொல்கிறார்கள்.
நியாயமாப் பாத்தா.. இந்தக் கவிதை இலங்கையர் அடையாளத்தோட இருக்கவில்லை..... எனக்கு! இருந்தும் இதற்குள் ஒரு ப்ரத்யேகமான அடையாளத்தைக் கண்டுபிடித்து அதற்குள் புதைந்து கொள்ளும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. உங்களுக்கு இதில் மாவீரர் தின ஞாபகங்கள் (நியாபகங்கள்..? என்றும் கலோக்கியலாமா?) வருகிறதென்றால் அது கவிதையின் சிறப்பு!
சுகமான கவிவரிகளுக்குள் ஒரு சிறு முள்ளாக (நான் ஆணியென்று குறிப்பிட்டிருந்தேன்) ஒரு எழுத்துப் பிழை.. அதை எடுத்துவிட முனைகிறேன்.. றோம்!
சுருக்கமாக.. ஞாயம்.. எல்லா அவசர தமிழ் நாக்கிலும் தெரிக்கிற ஒலிப்பிழைதான்..! அதற்கென்று நில அடையாளம் கிடையாது.. யாது... து..! அதுவே ஒளிப்பிழையாக வரும்போதுதான் கண்கள் லூப்ரிகேஷன் போட்டுக் கொள்கின்றன.
ஸோ.. இவ்வளவு டைப் பண்ணியிருக்கிறேன்.. அதனால நான் சொல்றது சரின்னு சொல்லிடுங்க கலா.. ப்ளீஸ்..! முதுகு வலிக்குது..!
//ஞாயம் அப்படியென்று தமிழ் வார்த்தை இருக்குதாப்பா
{இருக்கின்றதாப்பா}
இப்படி எழுதிவிட்டு அப்படிக் கேட்கலாமா ஐயா!//
ஓம் சைக்கிள் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரெண்டு மிதி மிதிக்கலாம் என்றுதான் இருக்குது.. சைக்கிளாச்சே! ஓம்... தப்பா எடுத்துக்காதீங்க! சும்மா லுலூலாயி... ஐ லைக் இட்!!
கலா,
உங்கிளின் இந்த பண்புமிக்க பாடத்திற்கு பதிவுலகமே கட்டுப்படட்டும்..! பண்பைப் பாடம் நடத்த முடியாதுதான்.. ஆனா சில விஷயங்களுக்குப் பாடம் அவசியமே!! நன்றி!
தம்பி ஜகன்
நல்லா மிதிங்க
அப்பத்தான் சைக்கிள் ஓடும்
நன்றி
அண்ணா... ண்ணா...
அதெல்லாம் காமடிக்கு சொல்றது சீரியஸா எடுத்துக்காதீங்க! உங்களுக்கு என் அன்பு என்றென்றும்!
நன்றிகள் உபரியாக இப்போது - நம்ம் சைக்கிள் அண்ணாவுக்கு!
கடைசி வரிகள் அருமை ஹேமா.. உண்மையும் கூட...
ஆனா... மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு அந்த அளவிற்கு புரியவில்லை :(
//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
சிந்திக்ககூடிய வரிகள்.... மிக்க நன்றி ஹேமா
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற வரிகளை நினைவூட்டிய கவி வரிகள்
அருமையாக இருக்கிறது ஹேமா!
ஜெகநாதன் அவர்களே!உங்கள் கருத்துரைக்கு
நன்றி.முதுகு வலிக்கு நான் பொறுப்பல்ல..
எழுத்துப் பிழை,சொற்பிழைஅவர் விடவில்லை
{தமிழைக் கொலை செய்யவில்லை}
செய்திருந்தால் நானும் சுட்டிக் காட்டிருப்பேன்
அவர் சுட்டிப் பெண்போலும்...”தமிழ் மண்ணை”
{எங்கள்}அள்ளி{இதில்சேர்த்து}கொஞ்சு தமிழுடன்
விளையாடியிருக்கிறார்.
நியாயம்-ஞாயம் புதுமையென்று களைய வில்லை
பழமையை{பேச்சுத் தமிழை} இழுத்து போர்திருக்கிறார்
{கோர்த்திருக்கிறார்}
இப்போது அதிகம் புதுக் கவிதைதான் இதற்கு
அதிக வரையறை கிடையாது.பண்டிதர்கள்
முனைவர்கள்,தமிழ்தேசிகர்கள்தான்
எழுத வேண்டும் என்றும்இல்லை
எழியதமிழ்,பேச்சுத்தமிழ்,
புழக்கத்தமிழ்களில் கூட எழுதலாம்{சொல்,எழுத்து,வாக்கியம்}
மட்டும் தவறாக வரக்கூடாது.
நீங்கள் சுந்தரத்தமிழில் கருத்துரைகள் இடவில்லையே ஏன்?
அந்நியரின் ஆங்கிலச் சொற்கள் அல்லவோ {சில}குதித்து
விளையாடுகின்றது.உங்கள் வலைத்தளத்திலும்{ஒன்றரைக்
கண் ரைபிள்} தயவுசெய்து தமிழ் எழுதும் போது தமிழில்
எழுதுங்கள். இது கொலையில்லையா?இது ஆங்கில நாகரீகத்தைக்
காட்டுகிறது,அது{ஞாயம்}தமிழ் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. கூட்டுகிறது
{இன்னும் அழியவில்லையென்று}நீங்கள் பிறந்து ,வளர்ந்து,படித்துத்தான்
ஆங்கிலம் கற்றிருப்பீர்கள் அம் மொழி உங்களை அறியாமலே வந்து
சுந்தரத் தமிழில் கலக்கின்றது.உங்களால் தவிர்க்க முடியவில்லை.
பேச்சுத் தமிழ் கருவிலிருக்கும் போதே அத்தனை பேர்கள் பேசுவதையும்
உள் வாங்கி,பின் பிறந்தவுடன் தாலாட்டுக் கேட்டு{தாலாட்டு சுந்தரத் தமிழில்
இல்லை}பேச்சுத் தமிழில்தான்! வளர்ந்தவர். பேச்சுத் தமிழில் எழுதினால்......???
அடுத்து கலா மேடம்.....இங்கும் தமிழ் விளையாடுகிறது
சகோதரி,அம்மா,தோழி,பாட்டி ,கலா என்றாவது போட்டிருக்கலாம் ஏன்?
போடவில்லை!என்னைப் பற்றி ..வயதென்ன?நிறமென்ன?மதமென்ன?கலாச்சாரமென்ன?
என்று தெரியவில்லை அதனால் ஒரு மரியாதையைக் குறிப்பதற்காக...ஆங்கில வார்தை
அப்படி ஒரு வார்த்தை வெளியாகும் போது.......
பேச்சுத் தமிழை சுவாசித்து,அதைப் பற்றி அத்தனையும் அறிந்த ஒருவர்
அப்படி ஒரு வார்த்தை இட்டதில் தப்பில்லை.
மன்னிக்கவும் இதைப் பற்றி இனிமேல் நான்
தொடரப் போவதில்லை .
ஹேமா ஆக்கிரமிப்புக்கு{கருத்துரை இடம்}
மன்னிக்கவும்.
ஏன் நமக்குள் வீண் விவாதங்கள். நாம் அனைவரும் நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இருக்கும்போது தேவையில்லாத சச்சரவுகள் நம்முடைய ஒற்றுமையை குலைப்பதாக கருதுகிறேன். நண்பர் ஜகன்னாதன், சகோதரி கலா அவரவர் கூற்று சரிதான் என்றாலும் இனிமேல் விவாதமற்று நண்பர்களாக இருப்பதே எனது விருப்பம். நான் தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.
பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!
"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
உண்மைதான் ஹேமா
காலத்தின்
கைகளில்
கச்சிதமாக
கலந்துவிட்ட போராட்டங்களின்
விதை விருட்சமாகும் ஓர் நாளில்...
கவிதை(கள்) said...
ஏன் நமக்குள் வீண் விவாதங்கள். நாம் அனைவரும் நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இருக்கும்போது தேவையில்லாத சச்சரவுகள் நம்முடைய ஒற்றுமையை குலைப்பதாக கருதுகிறேன். நண்பர் ஜகன்னாதன், சகோதரி கலா அவரவர் கூற்று சரிதான் என்றாலும் இனிமேல் விவாதமற்று நண்பர்களாக இருப்பதே எனது விருப்பம். நான் தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.//
விவாதத்தில்
தமிழ் வளருங்கள்
தர்க்கம் வளர்க்கவேண்டாம்
விஜய்யின் வார்த்தைகள் சரியே
எல்லோரும் நண்பர்களே...
நல்ல கவிதைங்க ஹேமா...
கீழே இருக்கும் சொற்றொடர் தேசிய தலைவருக்கு பிடித்ததென்று நினைக்கிறேன் (அல்லது அது அவர் சொல்லியதா?)
ஹலோ, ஹேமாவோட இந்த கவிதைக்கு பின்னூட்டம் போடணும்,"ரொம்ப பிடிச்சிருக்கு,உற்சாகமான கவிதை"ண்ணு ...
கொஞ்சூண்டு இடம் கிடைக்குமா?
படம் முடிஞ்சோன்ன எழுப்புங்க பாசு.சண்டை காட்சின்னா பயந்து வரும்...
கவிதை{கள்}சந்தான சங்கர்,மற்றும்
அன்பு நெஞ்சங்களே!
இது எங்களுக்குண்டான காதல்..மோதல்.
ஆஹா..ஆஹா
தவறாய் நினைக்க வேண்டாம்.
இருவரும் தமிழ் மேல் கொண்ட காதலால்..
கருத்து மோதல்தான்.சண்டையல்ல!
அப்படித்தானே!ஜெகன்?{அதற்காக நான்
சொன்னவற்றில் தவறில்லை}
நான் மனங்களை தைப்பது மாதிரி
எங்கும் {எழுத்தில்} குத்தவில்லை
அப்படித் தைத்திருந்தால்
பிரித்து
அன்றலர்ந்த றோஜாவாக இருக்கும்
என் அன்பைச் சேர்த்து தைத்துவிடுங்கள்
உங்கள் இதயத்தில் நண்பர் நண்பிகளே!!
நன்றி சகோதரி
விஜய்
அருமையான வரிகள்.
//கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.?//
ஹேமா,
முட்டி மோது...! என்றழைக்கும் உற்சாக வரிகள்.....!
இந்த கவிதையில் சோகம் இருப்பினும், வேகமூட்டும் வரிகளும் இருக்கிறது. அங்கு தான் தான் "தோழி ஹேமா" தனித்து தெரிகிறாள்..
//"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"
//
தூள்..........!
ஊக்குவிக்கும் வரிகள். ரொம்ப நல்லா இருக்கு ஹேமா.
கலா மேடம்,
மேடத்திற்கு சரியான தமிழ் பதம் பிராட்டியார்.. இது என்னவோ பாட்டியார் என்கிற மாதிரி இருக்கிறது. அதனால் மேடமே இருக்கட்டுமே?
கடந்த இரண்டு நாட்களாக ஃபீவர்.. முகுதுவலிக்கு அதுதான் காரணம். காதில் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' ஒலித்துக் கொண்டிருக்க இதை எழுதுகிறேன். உடல் வலித்தாலும் மனம் லேசாக இருக்கிறது.. இருந்தும் உங்களின் கடைசிக்கு முந்திய பின்னூ என்னை எழுதப் பணிக்கிறது.
சந்ருவின் ஊடகங்களில் தமிழ்க் கொலை நடக்கிறதா என்ற இடுகைக்கு நான் போன்ன பின்னூட்டம் உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமென்று நம்புகிறேன்:
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_30.html
கடைசிப் பின்னூவில்... தாங்கள் கருத்துக்கள் தவறில்லை என்பதையும் கூறியிருக்கிறீர்கள். நல்லது. உங்கள் கருத்துக்களில் நீங்கள் கொண்ட உறுதிக்கு என் பாராட்டுக்கள். உங்கள் தீவிரத்துக்கு என் வாழ்த்துக்கள். இருந்தும், தங்கள் கருத்து சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதன் மூலம் உங்கள் உறுதியையும் தீவிரத்தையும் நீங்கள் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம் -அல்லவா?
* * *
ஒரு டவுட்:
நியாயத்துக்கு - ஞாயம்;
அநியாயத்துக்கு என்னங்க?
* * *
தைப்பதற்கு அன்றலர்ந்த ஒருரோஜா மட்டும் போதாது என்றிருக்கிறது. நன்றி!
* * *
அன்பான கவிதை(கள்), சத்தான சங்கர்..
ஒத்துக்கொள்கிறேன்.. இனி மோதல்கள் இராது என்று நம்புவோம். இந்த மாதிரி தனிப்பட்ட தாக்குதல் எனக்கு பதிவுலகில் மிகப்புதிது. அதனால் இந்த விளக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றிகள்!
வார்த்தைகளா?கத்திமுனைகளா?
தாயே!ஒவ்வொன்றும் வெவ்வேறு
வலிகளையும்,ரணங்களையும்,
கோபங்களையும்,பொருமல்களையும்,
பெருமூச்சுகளையும் வரவைக்கின்றன.
வார்த்தைகளுக்கு இவ்வளவு சக்தி உண்டா?
அபாரம்!அபாரம்!!
"எழுத்தில் குற்றம் மன்னிக்கப்படலாம்"...அதன்
பின்னே பொதிந்து கிடக்கும் உணர்வுகளை மட்டும்
பார்ப்போமே!
நல்ல சிந்தனைகள் நண்பரே..!
வெற்றி நோக்கமன்றி - தோற்றிலும்
ஓயாமை போராடுதல் வாழ்வு..!
இயல்பான வார்த்தைகள் இன்றிஅமையா வரிகளில் நண்பரே..!
//போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"//
சுற்றும் வரை பூமி.
சுடும் வரை நெருப்பு.
போராடும் வரை மனிதன்.
நீ மனிதன்....
என்ற வைரமுத்துவின் வைர வரிகளூம்,
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
என்ற 'ஊமை விழிகள்' படப்பாடலும்
உடனே நினைவிற்கு வந்தன.
Post a Comment