*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 18, 2009

இழப்புக்களின் வரிசையில்...

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.

அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும் விட்டாய்.

எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளும்புகிறது பார்.

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய் சென்றாய்.
பெரியதொரு பெருமூச்சோடு
நிம்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.

மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!

ஹேமா(சுவிஸ்)

39 comments:

Ashok D said...

கடைசி பேரா சூப்பருங்கோ :)

அன்புடன் நான் said...

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நான் ஒரு அசடாய் !!!//


ப‌ய‌ப்புடும் புள்ள‌க்கிட்ட‌ மீண்டும் என்ன‌ ச‌வ‌காச‌ம்???
அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்..... அச‌டாய் ம‌ட்டும் இருக்காதீக‌ .

Ashok D said...

/தத்துவத்துள்
காதல் தளம்புகிறது பார்/
த த வா.. ரைட்டு
தளமபுகிறது சரியா?

S.A. நவாஸுதீன் said...

//எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளம்புகிறது பார்.//

இழப்புகளில் இலவசமாக கிடைப்பது தத்துவம் மட்டுமே ஹேமா. சரியாச் சொன்னீங்க

S.A. நவாஸுதீன் said...

//ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நான் ஒரு அசடாய் !!!//

அருமை. நல்ல கவிதை ஹேமா.

பிரபாகர் said...

//இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நான் ஒரு அசடாய் !!!
//
மிக அழகான வரிகள்... ரொம்ப நல்லாருக்குங்க....

பிரபாகர்.

அ.மு.செய்யது said...

//ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நான் ஒரு அசடாய் !!!//

சூப்பர் ஹேமா....

இன்னும் காதலைத் தாண்டி நிறைய எழுதலாமே !!!

இந்திய நேரப்படி, சுவிஸ் வானொலியில் உங்கள் நிகழ்ச்சி எப்போது வருகிறது??

Rajan said...

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது---

அட !
இது நல்லா இருக்கே

V.N.Thangamani said...

கவிதை அருமை ஹேமா.

/// இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும் நான் ஒரு அசடாய் !!! ///

இப்படித்தான் வேதியலின் காரணமாய்
பருவத்தே அசடாய் வழுக்கிவிழ நேரிடுகிறது .
அது இயற்கையின் விளையாட்டு.

tamiluthayam said...

ஏதோ ஒன்றுக்காக நாம் அலைகிறோம் அல்லது அழுகிறோம். காதல் மட்டும் விதிவிலக்கா...
என்னிலும் சிறந்த துணையை நீ அடைந்தால் அன்பே என்னை மறப்பாய்... என்னிலும் தாழ்ந்த துணையை நீ அடைந்தால் அன்பே என்னை நினைப்பாய்... இது தான் காதல். கிடைக்கும்போது தூரம் செல்லும்... எட்டிப்போகும் போது தொடச்சொல்லும். நல்ல கவிதை ஹேமா... கண்ணாடி முகத்தை காட்டுகிறது... கவிதை உள்ளத்தை காட்டுகிறது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமை ஹேமா. வியக்க வைக்கிறது கவிதை. காதல் பலரை அசடாக்கி விடுகிறது என்பது எத்தனை உண்மை.
உங்களிடம் தெரிவிக்க என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. என்னை மெயிலில் தொடர்பு கொள்ள முடியுமா?

Admin said...

//உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய்
பெரியதொரு பெருமூச்சோடு
நின்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.//

அருமையான வரிகள்

கவி அழகன் said...

காதலியின் எதிர் பார்ப்பு மனதை தொடுகிறது

க.பாலாசி said...

//உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய்
பெரியதொரு பெருமூச்சோடு
நின்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.//

ஆகா...காதலும் கவிதையில் ஆவேசமாய்....கள்வன் யாரோ....

நல்ல கவிதை...

சத்ரியன் said...

//மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.//

இன்றைய பெண்கள் காதலன் "காதலுடன்" இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. "புத்தி சாதுர்ய"த்துடனும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

ராசாக்களா எல்லாம் முழிச்சிக்குங்கப்பா.

நல்லா சொல்லியிருக்கீங்க ஹேமா.

தமிழ் said...

அருமை

rvelkannan said...

காதல் கவிதையா.. இது. வீழ்ந்து ... எழுந்து ... மீண்டும் வீழ்ந்து எதற்கு ஹேமா இந்த 'விளையாட்டு'

- இரவீ - said...

//பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய்
பெரியதொரு பெருமூச்சோடு
நின்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.//


அருமை. நல்ல கவிதை ஹேமா.

ப்ரியமுடன் வசந்த் said...

//உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!//

ஆவேசம் அருஞ்சொற்பொருளில் வேசம் என்றுதானே வரும் அப்போ
வேசமான முடிவு சரியா?

தங்கள் அசட்டுக்கவிதையும் அருமையா இருக்குங்க ஹேமா...

நேசமித்ரன் said...

கடைசி வரியில் கவிதை முழுமை அடைகிறது அல்லது கவிதை ஆகிறது

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் இல்லை கவிதை நெய்தல்

ஹேமா !!!!

நல்லா இருக்கு !

பா.ராஜாராம் said...

எழுத்து முதிர்ந்து கொண்டே இருக்கு hemaa

//எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளம்புகிறது//

ரொம்ப பிடிச்சிருக்குடா ஹேமா.

Thenammai Lakshmanan said...

//எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.//

நிறைவான உங்கள் அன்பை வெளிப்படுத்தி இருக்கும் விதம் அற்புதம் ஹேமா

விஜய் said...

நான் ஒரு அசடாய் !!!

காதலில் விழுந்தாலே அசடாகிவிடுவது இயற்கைதான்

அசடாக்கியவர் நலமா?

வாழ்த்துக்கள்

விஜய்

நசரேயன் said...

//இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நான் ஒரு அசடாய் !!!//

ஒரு ஜீவன் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?

ஆ.ஞானசேகரன் said...

//இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!//


ம்ம்ம் நல்லாருக்கே... ஏன் அப்படி ஒரு அசடு?

பித்தனின் வாக்கு said...

// நானும் ஒரு அசடாய் !!! ///
இந்த ஒரு வரியில் மொத்த காதலும் வந்து விட்டது. வழக்கம் போல கவிதை அட்டகாசம், என்ன ஒரு அருவி போல கொட்டாமல், இடை இடை ஒரு துண்டு விழுவது போல ஒரு பிரேக். நன்றி ஹேமா.

Kala said...

படத்தில்
எவ்வளவு மென்மையான மலர்கள்
சூழ்ந்த...{பாசங்கள் சூழ்ந்த..}

அதைவிட..மென்மையான அந்த!1
இதயதில்! தீயா!!{அவ்வளவு வதை
பட்டுக் கொண்டிருக்கும்} பாவம் அந்தச்
சின்னஞ் சிறு இதயம்
இவ்வளவும் அனுபவிக்கும் அந்தப் பெண்ணின்
ஓட்டத்தில் புனைந்த கவி.

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.\\\\
ஆம் அன்றய தினம் அந்த வீர தினம்
ம{பெ}ண்ணைக் காதலிப்பதாகவும்
அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும்விட்டாய்.\\\\
ம{பெ}ண்ணையும் விட்டு அம்மாவை
நினைத்தவுடன் வந்த பயத்தில்
இரண்டையும் விட்டு தொலை தூரம்
போய்விட்டாய்...
எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளம்புகிறது பார்.\\\\
ஆம்!ம{பெ}ணிடமும்—உனக்கே தெரியால்,
தெரிய வாய்பில்லாமல்...இதன் மேல்
கொண்ட “பற்று”,பாசம்,அன்பு நிறைந்திருக்கின்றது
{ மரம்==சுதந்திரம்}சுதந்திரமாய் வீசும் காற்று வீடுக்
கதவு பூட்டியிருந்தால் உள் வருமா?நாமாகத்தான்
தேடிப் போகவேண்டும்\\\\
உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய்
பெரியதொரு பெருமூச்சோடு
நின்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.\\\\\
இளங் கன்று பயமறியாது என்பது போல்...
உன் துணிச்சல் பிடித்திருந்த்து.என்னிடம் வந்து
“என்னை”வாழ்த்தி விடை கொடு என்றாய்...
போய் வர,,,,ஆனால் என்னைப் பற்றிச் சிந்திக்காமல்...
ஏக்கப் பெருமூச்சோடு...பிரிந்தாலும்...பற்றுக்காய்
அதே துணிச்சலும் ,பிடிவாதமுமாய்..
மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!\\\.
கொஞ்சமாக இருக்கும் பலத்தை எதிர்பார்ப்பை
துணுச்சலைக் காட்டாமல்..புத்திசாலித் தனத்துடன்..
செலவு செய்ததைச் சேமிக்கப் பார்!அதற்காகத் தான்!!
நட்பின்{ நாட்டின்}அன்பின் அணைப்பில்,ஆனந்தக்
கண்ணீரில்.....கையில் கிடைக்குமென்ற துணிச்சலான
நம்பிக்கையுடன்......காத்திருக்கின்றேன்.

கவிதையின்___என் கண்டோட்டம் ஹேமாவிடமும்...
பொறுமையுடன் படிக்கும் அனைவரிடமும்....மன்னிக்க
வேண்டுகிறேன்,.....

ப்ரியமுடன் வசந்த் said...

கலா இப்படி பின்றீங்களே

இப்படி சிறப்பாய் எ(ழு)லுதும் தாங்கள்

விரைவில் தனித்தளத்தில் எ(ழு)லுதுங்கள்

எ(ழு)லுதுங்கள்

எ(ழு)லுதுங்கள்

எ(ழு)லுதுங்கள்.......

Kala said...

சுருங்கச் சொன்னால்…
ஒரு பெண்ணுக்கும்,மாவீரனுக்கும்
நாட்டுக்கும்,{மண்} நடந்த,நடந்துகொண்டிருக்கும்
ஒரு
போராட்டம்.
அப் பெண் காதலியாய்...இழந்து
தோழியாய்.....உணர்வூட்டி
தாயாய்.....புத்தி சொல்லி ஊக்கம்
கொடுப்பது “அந்த வீரமகனுக்கு”
காதல் என்று சொல்ல முடியவில்லை
தியாகம் என்று சொல்லலாம்!!

Kala said...

வசந் நன்றி
அது என்ன?எ{ழு}லுதுங்கள்
எந்த நாட்டுப் பாஷை?
ஓஓஓஓ நக்கலா?

தமிழ் நாடன் said...

ஹேமா இது கவிதையா? வாழ்க்கையா?

எதுவாக இருந்தாலும் இதில் உள்ள யதார்த்தம்தான் நெஞ்சை தொடுகிறது.

அம்மாவோ, சகோதரியோ, நண்பியோ,மனைவியோ, மகளோ.... யாராயிருந்தாலும் அசடாய் இருப்பதை விரும்புவதில்லை நான்!

மேவி... said...

sorry madam konjam late agiruchu

ஸ்ரீராம். said...

என்ன பரிதாபம்? சேமித்த கணங்களில் காதலுக்கு விலை இல்லை என்று வானம் வெளித்த பின்னும் இருக்கலாமா? அந்த ஆவேச அசடனை விட்டு வெளியில் வந்தால் உங்களுக்குண்டான நிலத் துண்டு இல்லாமலா போகும்? பழுத்த இலைகளை சாதா சிறையிலிட்டு வெட்க சிறையிலிருந்து வெளிக் கிளம்பி சந்தோஷ உலகங்களை பார்ப்பது எப்போது?

அரங்கப்பெருமாள் said...

//எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்//

சுட்ட சட்டி சட்டுவம் கறி சுவையறியுமோ? - சிவவாக்கியார்


//உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.//

பெண்ணையும் படைத்து கண்ணையும்
படைத்த இறைவன் கொடியவனே - கண்ணதாசன்

சந்தான சங்கர் said...

//இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!//

கசடற
கற்றிருக்கின்றீர்கள்
காதலை ஓர்
அசடாய் இருந்தும்..


அருமை ஹேமா..

அன்புடன் மலிக்கா said...

/இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் /

என்ன செய்வது தோழியே நாம் சிலநேரம் அசடாய் இருக்க ஆசைப்படுகிறோம்..

அத்தனை வரிகளும் அருமை..

Nathanjagk said...

காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது - அ​டேங்கப்பா உண்​மையில் தத்துவஞானிதான்!

நின்மதியாய் இருக்கிறாய்.. இங்க ஒரு ஆணி இருக்கு! நிம்மதி-ன்னு எழுதுங்க!

ஆனாலும் நின்மதிங்கறது கூட அழகாத்தான் இருக்கு.. நின்+மதி = உன் நி​னைவாக இருக்​கேங்கிற மாதிரி!

கம்பன் வீட்டுக் கட்டுத்த​ரையும் கவிபாடும் என்று ​​சொல்வாங்க.. ​ஹோவிடம் ஸ்​பெல்லிங் மிஸ்டேக்கும் கவிபாடும் ​போலிருக்கே!! (அழாதீங்க ப்ளீஸ்!!)

க​டைசி பாரா.. பாரம்!

Nathanjagk said...

இன்​​னொரு ஆணி...
தளும்புகிறது..
இ​தையும் புடுங்கிடுங்க

ஜோதிஜி said...

ஏற்கனவே சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

சூழ்நிலைகள் வரிகளை உருவாக்குவது
சூழ்நிலையை உள்வாங்கியதால் வெளியே வருவது.

இரண்டாவது வீர்யம். அது நீங்கள்.

Post a Comment