*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, November 09, 2009

காதலுக்கு விலையில்லை...

முத்திரை இல்லை
முதலில்.
முகவரி இல்லை !
முன்னுரை இல்லை !
முன்பின் தெரியவில்லை !
என்...
கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!

பிரியமுடன் வசந்த் கவிதையில்
பிரிந்த கவிதை.

ஹேமா(சுவிஸ்)

38 comments:

Thenammai Lakshmanan said...

பாட்டு சூப்பர்ப் ஹேமா

இந்தக் கடிதம் யாருக்கு ஹேமா யாரிடமிருந்து

Ashok D said...

சூப்பர் ஹேமா..

அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க...

ஹேமா said...

//தேனம்மை லக்ஷ்மணன்...
பாட்டு சூப்பர்ப் ஹேமா

இந்தக் கடிதம் யாருக்கு ஹேமா யாரிடமிருந்து//

அச்சோ தேனு யாரும் யாருக்கும் இல்ல.வசந்த் என்னமோ சரியாக் கவலைப்பட்டு எழுதியிருக்கார்.அந்தக் கவிதையை யோசிச்சேன்.அதுதான் இது !

:::::::::::::::::::::::::::::::::

//D.R.அஷோக் சைட்...
சூப்பர் ஹேமா..

அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க...//

எஙக் இண்ணைகு ஆங் ரைட் காணோம்.பின்னூட்டம் வந்திருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

ஜாதி,மதம்,இனம்,மொழி,நாடு இவைகளைத்தாண்டி வீசும் காற்றைப்போல காதலையும் சுவாசிப்போம்ன்னு எங்க தலைவர் சொல்லியிருக்கார் தெரியும்ல...

நீங்க என்னடான்னா முகவரி கேக்குறீங்க...

நானே ஒரு ஆதங்கத்தில் எழுதினேன்..

நீங்க வேறையா...

M.S.R. கோபிநாத் said...

ஹேமா., சூப்பர்.

நான் போன பதிவில் உங்களை தொடர்பதிவிற்கு அழைத்தேன். பார்தீர்களா?

துபாய் ராஜா said...

குட்டி கவிதைன்னாலும்
சுட்டி கவிதை ஹேமா....

Admin said...

சின்னக்கவிதையானாலும் பெரிய விடயங்களைச் சொல்லியிருக்கின்றன.

Prasanna said...

ரொம்ப நல்லாருக்கு :)

நசரேயன் said...

//என்...
கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!//

ஏன் எழுதினது சரி பாதி அண்ணாச்சியா ?

பிரபாகர் said...

நல்லாருக்கு ஹேமா! வசந்த் புலம்பலுக்கு பதில் போல் அருமை...

பிரபாகர்.

ஸ்ரீராம். said...

இவ்வளவு சுருக்கமாக ஹேமாவிடமிருந்து கவிதையா? என்ன ஆச்சர்யம்!

Kala said...

எவ்வளவு அழகாக புரியவேண்டியவர்களுக்கு
புரியும்படி பரிந்துரை செய்துருக்கி{றார்}றது
கவிதை

Kala said...

முகப்பு
------------
அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில்அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ததா?
இன்னொன்றின் மேல் படர்ததா?
ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய்!!




ஹேமா உங்கள்{வலைத்தள} “முகப்பை” பார்த்து
வந்த வரிகள்....உங்களைப் போல் முடியாது என்னால்
முடிந்தது .பின்னோட்டத்தில் வந்ததற்கு மன்னிக்க
வேண்டி.......

ப்ரியமுடன் வசந்த் said...

கலா

சூப்பரு..

பின்னிட்டீங்க..

எங்க ஹேமா இதுக்கு

பதில் சொல்லுங்க

பார்ப்போம்..?

அதகேட்டா

சகுனம்வரட்டும்ன்றாங்க...

சந்தான சங்கர் said...

//முத்திரை இல்லை//

இதழ் முத்திரை வருமென்பதால்


//முகவரி இல்லை !//

அகவரி உள்ளிருப்பதால்

//முன்பின் தெரியவில்லை !//

முன்னும் பின்னும் பார்த்தபின்தானே கடிதமே!!

//கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!//

முதல்ல கிழியபோவது அதுதானே!

V.N.Thangamani said...

ஏன் இந்த புலம்பல், ஹேமா..
எல்லாம் உனக்குள் உண்டு.
இன்பமும் மகிழ்ச்சியும் எங்கோ எவரிடத்தோ இருக்குதென்று தேடாதே.
உன்னையே நீயறிவாய் என் அன்புத் தோழி...

S.A. நவாஸுதீன் said...

வசந்தின் கவிதையிலிருந்து பிரிந்த கவிதையும் கலக்கலா இருக்கு ஹேமா

விஜய் said...

முத்திரை இல்லாத காதல் மனத்தில் முத்திரை பதித்து விட்டது

வாழ்த்துக்கள்

விஜய்

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு ஹேமா.......

கலையரசன் said...

அருமைங்க...

இராகவன் நைஜிரியா said...

சூப்பரோ சூப்பர்...

ஓட்டு போட்டாச்சு..

V.N.Thangamani said...

பதிவு குறித்து சில விளக்கங்கள் வேண்டி உள்ளது. உங்களால் உதவமுடியுமா?.
உதவ மனமிருப்பின் உங்கள் மெயில் ஐடி தெரிவியுங்கள் ஹேமா. எனது மெயில் ஐடி n_thangamani@yahoo.com
நன்றி.

மணி said...

நல்ல காதல் தோல்வி யாருக்கு யாரோ

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.. முகவரியில்லா காதலா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான குட்டிக் கவிதை

க.பாலாசி said...

//கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!//

உண்மைதான். எத்தனை கடிதங்கள் இதுபோல் இருக்கின்றனவோ?

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான வரிகள்......வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

கவிதை காதலிக்கிறது...

தோழி உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

மேவி... said...

padam nalla irukku... photo shop nalla care yeduthu panni irukkinga..

enakkum solli thanga.....

மேவி... said...

kavithaiyil kadasi vari poruntha villai.... innum oru vari add panni iruntha nalla irunthirkkum

சேவியர் said...

நல்லா இருக்கு ஹேமா :D

வேல் கண்ணன் said...

கவிதை... கவிதை படி படி ஹேமா

Tamilparks said...

அன்பு எழுத்தாளர் அவர்களுக்கும்
தங்களின் வலைத்தளம் பார்த்தேன், மிகவும் அருமையான கவிதைகள் எழுதியுள்ளீர்கள், தமிழ்த்தோட்டம் உங்களை பாராட்டுகிறது, நீங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் வலைத்தளத்திலும் வெளியிட ஆவலாக உள்ளோம்.. அவ்வாறு நீங்கள் அனுமதியளித்தால் உங்கள் படைப்புகளை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க கோட்டுக்கொள்கிறோம்..
நன்றி

என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.com

மது said...

என் இனிய தோழி ஹேமா

அழகு கவிதை...படிக்க அழகு அனால் அதன் வரிகள் மனதின் காயத்தை மறைக்கும் முயற்சி ...கவிதைக்கு மிக பொருத்தம் படம் .. ஏதோ ஒரு உணர்வு உங்களுடன் இணைகின்றது ஹேமா..தேடிக்கொண்டு இருக்கின்றேன் இன்னும்..

சத்ரியன் said...

//முகவரி இல்லை !
முன்னுரை இல்லை !
முன்பின் தெரியவில்லை !
என்...
கைக்குக் கிடைத்த
கடிதம்..//

ஹேமா,

முகவரியில்லா கடிதத்தை பிரிச்சது மட்டுமிலாமல் இப்படியா மாட்டிவிடறது?

வசந்து , உங்க கவிதைக்கு பின்னூட்டத்துக்கு பதிலா "ஹேமா" இடுகை போடுறாங்க.

கலா, ஹேமாவின் கவிதைக்கு பின்னூட்டமாவே ஒரு கவிதை போடுறாங்க.

ஒரு ரெண்டு மூனு நாளா நான் வரல. அதுக்குள்ள என்னென்னமோ நடக்குது?

ஹேமா,

என்னாச்சி ரொம்ப சிக்கனமா இருக்கு?

kanagu said...

nalla irukunga Hema... aana yen eppavume sogamaana kavidhaiyaave ezhuthureenga???

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை ஹேமா.

கமலேஷ் said...

கவிதை மிகவும் அருமை... தெளிவான வரிகள்....வலிகள்.... மிகவும் அழகாக இருக்கிறது....

Post a Comment