*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, October 19, 2009

நேற்றைய இரவில்...

வெள்ளைத் தெருவில் குடியிருப்பு
பலகாலமாய்.
குடிசையும் கூடும்
வாழ்வும் நிரந்தரமாயிற்று.

மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.

மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில்
இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்.

காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.

காரணம் சொல்லாத கோடாங்கி.
இயல் இனம் மாறாத கார்க்கோடகன்.
இல்லையேல்
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம் !!!

இகழ்தலுக்காட்பட்டு (நன்றி நேசன்)

ஹேமா(சுவிஸ்)

51 comments:

ஹேமா said...

கவிதை புரியாட்டிச் சொல்லுங்கோ...
கடைசியாச் சொல்றேன்,

நேசமித்ரன் said...

அருமை வாழ்த்துக்கள் ஹேமா கவிதை அடுத்த நிlaiயை அடைந்திருக்கிறது

வால்பையன் said...

கடைசியா வேண்டாம் இப்பவே சொல்லுங்க!

எனக்கு புரியல!

சந்தான சங்கர் said...

//மரபணு கொல்லாமல்தொடரும் நகர்வில்இன்னும்இரையூட்டி...இரையூட்டிவளர்ந்த ஒரு மிருகம்.//

ஒன்றை ஓன்று
கொன்று கொண்டு
கொன்றவனையும்
தின்று பின்தொடரும்
தொன்றல்லவா
வாழ்க்கை சங்கிலி...

நற்கருத்து ஹேமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கும் சுத்தமாப் புரியல தோழி..

தமிழ் நாடன் said...

நம்ம சிற்றறிவுக்கு எட்டல சகோதரி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!
பாதிதான் புரிஞ்சது!

வேல் கண்ணன் said...

//இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்....//
//...இல்லையேல
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம்//
புரியாமல் போகுமோ..
வேறு (அடுத்த)கட்டத்துக்கு ஹேமா -வும்
கவிதையும் நகர்கிறது. வாழ்த்துக்கள் ஹேமா

இராகவன் நைஜிரியா said...

சகோதரி அப்படியே ஒரு விமர்சனமும் போட்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு சௌகர்யமா இருக்கும்.

இந்த ரேடியோ, இன்னிக்கு ஆபிஸ் என்னை போட்டுக் கொடுத்துவிட்டதுங்க.

அது மாட்டுக்க பாட ஆரம்பிச்சுடுச்சு.. அந்த நேரம் பார்த்து ஜி. எம் வேற வந்துட்டாரு... சமாளிக்க ரொம்பவே கஷ்டப் பட்டுடேங்க...

ஹேமா said...

இப்பிடித்தானே நேசமித்ரன் கவிதையை ஒவ்வொருநாளும் பாத்துப்ப் பாத்து முழிச்சிட்டு நான் வருவேன்.இப்பத்தான் தெரியுது அவருக்கு மட்டும் நல்லா புரிஞ்சிருக்கும் அதன் கரு.

அப்புறம் பாலா.அப்புறம் தேனு.
அப்புறம் விஜய்ன்னு என்னைக் குழப்ப்க்கிட்டே இருக்காங்க.அதான் நானும் எழுதிப் பாத்தேன் சரியா வந்திடிச்சு.ஆனா இப்பிடியே அடிக்கடி எழுதினா நானே குழம்பிடுவேன்.
அதனால எழுதல.ஆனா பாருங்க நேசன் ஓடிவந்து வாழ்த்துச் சொல்லிட்டார்.அப்போ அவருக்குக் கவிதை புரிஞ்சுபோச்சு.இன்னும் கொஞ்ச நேரம் குழம்புங்க எல்லாரும்.ஒரு சின்னக் கதைதான்.

இதில பாவம் ராகவன் தான்.

வாலும் இண்ணைக்கு அதிக ஆர்வமா இருக்கார்.அவரைத் தேடிட்டு இருந்தேன்.அவர் பதிவ்க்கு பின்னூட்டம் போட வேணாம்ன்னும் சொல்லிட்டார்.அதனால அவருக்கு இனிய பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

///வால்பையன் said...

கடைசியா வேண்டாம் இப்பவே சொல்லுங்க!

எனக்கு புரியல!//

எனக்கும் புரிய மாட்டேங்குது ஹேமா!

Thenammai Lakshmanan said...

/மரபணு கொல்லாமல்தொடரும் நகர்வில்இன்னும்இரையூட்டி...
இரையூட்டிவளர்ந்த ஒரு மிருகம்.//


ப்ரமாதம் ஹேமா

கேசவாரிப் பறவை கேள்விப் பட்டது இல்லை
அது என்ன ஹேமா

தங்கள் பாரட்டுக்கு நன்றி ஹேமா
ப்ரம்ம ரிஷி பட்டம் கிடைத்தது போல் இருக்கு

வால்பையன் said...

//வாலும் இண்ணைக்கு அதிக ஆர்வமா இருக்கார்.அவரைத் தேடிட்டு இருந்தேன்.அவர் பதிவ்க்கு பின்னூட்டம் போட வேணாம்ன்னும் சொல்லிட்டார்.அதனால அவருக்கு இனிய பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள். //

உங்கள் வாழ்த்து எனக்கு எப்பவும் உண்டுன்னு தெரியுமே!

பின்னூட்டம் போட வேண்டாம்னு சொன்னது கமாக்கதைகளுக்கு மட்டும் தான்! கடை பக்கமே வராம போயிறாதிங்க!

Kala said...

காயசித்தி___உடல் நீடித்திருக்கச் செய்தல்

காரகன்_______ஒருவருடைய வாழ்க்கையில்
குறிப்பிட்ட அம்சத்தை நிர்ணகிக்கும் கிரகம்

காராம்பசு___நாக்கும் மடிக்காம்பும் கறுப்பு
நிறத்தில் இருக்கும் பசுமாடு

கோடாங்கி____உடுக்கை அடித்து குறிசொல்பவர்

கார்கோடகன்_________பாம்பு

இகழ்தலுக்காட்பட்டு_____அவமானம்,கேலிக்குட்பட்டு

காராடை_______??????

கேசவாரிப்பறவை_____?????
சில குறிப்பு முடிந்தால் புரிந்து படியுங்கள்.

விஜய் said...

தூள் கிளப்பிட்டீங்க ஹேமா

எனக்கு சரி அடி

இப்பவாவது தெரிஞ்சுக்கோ எப்படி எழுதனும்னு எனக்கு சொல்ற மாதிரி இருக்கு.

இனிமே புரியாத கவிதைகள் எழுதவே மாட்டேன் ஹேமா

வாழ்த்துக்கள்

விஜய்

- இரவீ - said...

எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு ...

ஹேமாவுக்கு என்னமோ ஆச்சு அப்டீனு ...

ஸ்ரீராம். said...

மன்னிச்சுக்குங்க...எனக்கு கவிதை வராதுன்னு முதல்லயே சொல்லி இருக்கேன்..கஷ்டப் பட்டு படித்து புரிந்து கொள்ள முயற்சிப்பேன்...நேரா எழுதினாலே புரியாது...இப்படிப் படுத்தினா எப்படி! சுவிஸ் வாழ்க்கை ரொம்ப காலமாய் பெர்மனன்ட் சிட்டிசென் ஆயாச்சு...ஆனாலும் நிற வெறி போல சமாச்சாரங்கள் தொடர்கின்றன...என்பது போல எடுத்துக் கொண்டேன்!!! அவங்கவங்க எடுத்துக்கற அர்த்தம்தானே...கோச்சுக்காதீங்க...

பாலா said...

வாவ் வாவ் ம்ம்ம்ம்ம்
ஹேமா
வெறும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடவா ??
போலாம் ரைட் பச்சை விளக்கு எரிகிறது ம்ம்ம்ம்

Ashok D said...

நான் வளர்கிறேனே மம்மி..

good

Admin said...

புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது... அனால் புரிந்தது...

M.S.R. கோபிநாத் said...

கவிதை நன்றாக இருந்தது.

ப்ரியமுடன் வசந்த் said...

எதிரி நம்பர் த்ரீ
இன்னும் எத்தினி பேரோ தெரியலியே

நேசமித்ரன் வாழ்க....வளர்க நின் புகழ்

இன்னும் எத்தனை பேருக்கு என்னோட எதிரியாகும் வாய்ப்பு கிடைக்கப்போகுதோ தெரியலியே

ப்ரியமுடன் வசந்த் said...

புரியாம எழுதுறதுதான் இப்போ பேசனா

சாரி ஃபேசனா?

ஹேமா said...

நேசனுக்கு என் நன்றி.உங்களுக்கும் சந்தோஷம்.ஆனா பாருங்க எத்தனை பேர் குழம்பி நிக்கிறாங்க.

எப்பவும் ஒண்ணும் சொல்லாம போற வாலு சீக்கிரமா விளக்கம் கேக்கிறார்.

சங்கர் கொஞ்சம் யோசிச்சிருக்கார்.

கார்த்தி,தமிழ்நாடான் புரியவே இல்ல சொல்றாங்க.

கண்ணனுக்கும் என்னமோ கொஞ்சம் புரிஞ்சிருக்குமோ.

இராகவன் பாவம் குழந்தைநிலா வானொலி கேட்டு மாட்டியிருக்கார்.
அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லல.ஒண்ணும் ஆகியிருக்காது
ன்னு நினைக்கிறேன்.

ஞானத்துக்கும் அதே குழப்பம்.

தேனுவுக்கு சந்தோஷம்.

கலா கொஞ்சம் கண்டுபிடிக்க விளக்கம் கொடுத்திருக்காங்க.
யாருக்காவது உதவிச்சா ?

விஜய் சரியா புரிஞ்சிருக்கார்.விஜய் எழுதக்கூடாதுன்னு இல்ல.
பாருங்க எவ்வளவு பேர் அவஸ்தைப்படறாங்கன்னு.

ரவி எனக்கே என்னமோ ஆச்சுன்னு முடிவே பண்ணிட்டார்.தேவையா இது !

ஸ்ரீராம் கொஞ்சம் கவிதையின் முதல் வரியைத் தொட்டுப்ப் பார்த்திருக்கார்.

பாலாவுக்கு அளவில்லாச் சந்தோஷம்.என்ன புரிஞ்சுக்கிட்டார்னும் சொல்லியிருக்கலாம்.எனக்கும் சந்தோஷமாயிருக்கும்.

அஷோக் நான் வளந்திட்டேனாம்.

சந்ரு உள்ளே வெளியேன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டார்.

கோபி பாருங்க நல்ல சமாளிப்பு.
நல்லாருக்காம் கவிதை.

வசந்து...இது ரொம்பக் கவலை.
என்னை மூணாவது எதிரின்னே சொல்லிட்டார்.
அப்போ எனக்கு முன்னுக்கு
அந்த இரண்டு பேரும் யாரு !

ஹேமா said...

சரி கவிதைக்கு விளக்கம்.
என் எண்ணத்தில் !

//வெள்ளைத் தெருவில் குடியிருப்பு
பலகாலமாய்.
குடிசையும் கூடும்
வாழ்வும் நிரந்தரமாயிற்று.//

வெள்ளைக்காரன் நாட்டில் குடியிருப்பு.30 வருடங்களாக நாங்கள் தமிழர் இங்கு.அதனால் இங்கு நிரந்தமாய் ஆகிவிட்டோம்.

//மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.//

அவர்கள்து மாற்று வாழ்வுக்குள் கொஞ்சம் பழகிக்கொண்டாலும் முழுமையாக எங்களால் அவர்களோடு ஒன்றமுடியாமல் கேலிக்கு அவதிக்கு உட்படுகிறோம்.

//மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில்
இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்.//

இதில் எங்கள் மனிதர்கள் வருடங்கள் சென்றாலும் அதே மரபணு மாறாமல் இன்னும் தனக்குள் எங்கள் இயல் குணாதிசயங்களைக் கூடுதலாகத் தானும் வளர்த்து தலைமுறைக்கும் ஊட்டிவிட்டபடி.

//காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.//

இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால்....நேற்று யாரோ முகம் தெரியாத ஒரு எங்கள் மனிதர் இரவு 11.50 மணிக்குப்பிறகு தொலைபேசி எடுத்து என்னையே கேட்கிறார் நீங்கள் யார்..நீங்கள் சுவிஸ்ல் எங்க இருக்கிறீங்கன்னு.அவருக்கு என்னைத் தெரியுமாம்.சரி எனக்குத் தெரியேல்ல.
சரி பரவாயில்ல என்ன விஷயமா எடுத்தீங்கன்னா ஏன்னு சொல்லத் தெரியேல்ல அவருக்கு.அப்போ நான் நல்லாத் திட்டிட்டேன்.
வெள்ளைக்காரன் ஒருநாளும் இரவு
8 மணிக்குமேல யாருக்கும் போன் எடுக்கவே மாட்டான்.இது யாரென்றே தெரியாத ஒரு நபர் இரவு 12 மணியில்...!

போய் அவனிடம் மூச்சா வாங்கிக் குடிங்க.அப்பாச்சும் சில நல்ல பழக்க வழக்கங்களைப் பழகிக்கொள்ளலாம்.
இதனால்தான் எங்கள் இனத்துக்கே இந்தக் கேடுன்னு நல்லாப் பாடிட்டு இனி எடுத்தா போலிஸுக்கு நம்பர் கொடுப்பேன்னு சொல்லிட்டு வச்சிட்டு எழுதினதுதான் இந்த வரிகள்.

காயசித்தி - உடலை விருப்பப்படி மாற்றவல்ல சக்தி.
காரகன் - செய்பபவன்,படைப்பாளி.
காரடை - அரிசி மாவினால் செய்யப்படும் அடை.

இங்கு செய்மதி துளைத்து என்பது தொலைபேசியைக் குறிக்கிறேன்.

//காரணம் சொல்லாத கோடாங்கி.
இயல் இனம் மாறாத கார்கோடகன்.
இல்லையேல்
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம் !!!//

எனவே எப்பவும் போலத் திட்டுகிறேன்.
எவ்வளவு காலம் எந்தத் தேசத்தில் தன் இயல் தன் இனத்தின் குணம் மாறாத தமிழன்.

கோடாங்கி - குறிசொல்பவர்
கார்க்கோடகன் - இரக்கமற்றவன்,பாம்பு

கேசவாரிப்பறவை - நேற்றுத்தான் நானும் வானொலியில் கேட்டறிந்தேன்.அதை இக்கவிதைக்குள் கொண்டு வர ஆசைப்பட்டேன்.சரியாகவும் அமைந்தது.இப்பறவை முன்னொரு காலத்தில் இருந்ததாம்.தன் கூரிய நகங்களாலேயே மிருகங்களை ஏன்...மனிதர்களைக்கூட பிறாண்டியே கொன்றுவிடுமாம்.

இப்போ விளங்கிச்சா !என் கவிதையில் என் எண்ணத்தில் மாற்றமில்லை.கொஞ்சம் நாகரீகமான சொல்லில்திட்டியிருக்கிறேன்.அழகான சொற்களைப் புகுத்திக் குழப்பியிருக்கிறேன்.அவ்வளவும்தான்.

இதைத்தான் நேசன்,பாலா,விஜய்,
தேனு,பா.ரா அண்ணா.....ஏன் வசந்தும் கூடச் செய்கிறார்கள்.

நானும்...!ஆனால் கவிதை எழுதுவதைவிட அதற்கு விளக்கவுரை தர எனக்கு மூச்சே வாங்குது.ஆளை விடுங்கோ.இனி நான் இப்பிடி எப்பவும் எழுதேல்ல.எப்பாச்சும் ஒரு நாளைக்கு மட்டும் எழுதிக்கிறேன்.

இன்னும் சந்தேகம்னாலும் கேளுங்க !

தமிழ் அஞ்சல் said...

சிறப்பு சொல்லாடல்கள்!
புரியவில்லை என்றாலும்
புரிந்து கொண்டோம்
உங்கள் விளக்கத்தில்...

தொடர்ந்து எழுதி
விளக்கம் சொல்லுங்கள்
சில விஷயங்களை
கற்றுக்கொள்கிறோம்...

Muniappan Pakkangal said...

Kaaranam sollatha Kodangi,nice.your info on Kesavaariparavai is new.

மேவி... said...

விளக்கத்திற்கு நன்றி

மேவி... said...

மன்னிக்க வேண்டும் .... சில கவிதைகளுக்கு பின்னோட்டம் போடவில்லை

அன்புடன் நான் said...

அன்பு தோழி நீங்க எழுதியதில்... அந்த "காரவடை" மட்டும்தான் என்னறிவுக்கு எட்டியது. நான் ஏதோ தீபாவளி பலகார கவிதைன்னு நினைத்தேன் . நல்ல வேளை விளக்க உறை தந்திட்டிங்க.மிக அருமையாக இருந்தது... மீண்டும் ரசித்து படித்தேன்.

கொஞ்சம் வெளிப்படையாக எழுதினால்தான் எனக்கெல்லாம் புரியும். என்னறிவு அவ்வளவுதான்.


அப்புறம் அந்த வானொலியை.. நாங்க விருப்பப்பட்டா இயக்குவது போல் செய்யவும். மிக்க நன்றி.

பித்தனின் வாக்கு said...

// மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு //
புலம்பெயர் வாழ்வை அழகாய் கூறுகின்றீர்கள்.
// மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில் //
பண்பாட்டை மிக அழகாய் உணர்த்துகின்றிர்கள்.
// காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.//
திட்டுவதில் கூட நாகரிகம் பாவிக்கும் பாங்கு அருமை.

S.A. நவாஸுதீன் said...

கவிதை வாசித்தவுடன் ஒரளவு புரிந்தது. உங்கள் விளக்கம் மேலும் தெளிவடையச் செய்தது. பிண்றீங்க ஹேமா. இதுமாதிரியும் எழுதுங்க. நல்லா வருது உங்களுக்கு.

தமிழ் நாடன் said...

முதல் மூன்று பத்திகள் எனக்கும் புரிந்தது. ஆனால் கடைசி இரண்டி பத்திகள் புரியாததால் அவை எந்த புள்ளியில் இணைகின்றன என்று புரியவில்லை.

இப்போ நல்லா புரிந்திட்டது அம்மோய்!

அது என்ன “எங்கள் மனிதர்” ஏன நாங்கள் உங்கள் மனிதர்கள் இல்லையா? நம்மனிதர்கள் என்று விளிக்கவெண்டியதுதானே?

ஹேமா said...

நன்றி மணி.இது ஒண்ணு எழுதினத்துக்கே மூச்சு வாங்குது விளக்கம் எழுது.அம்மாடி...!

:::::::::::::::::::::::::::::::::

நன்றி டாக்டர்.உங்கள் காணொளி இன்னும் வரவில்லை.ஆவலோடு காத்திருக்கிறேன்.

::::::::::::::::::::::::::::::

டம்பிக்கு இருக்கு நல்லா உதை.
எப்பாச்சும் வந்து சும்மா சாட்டுக்கு என்னாச்சும் சொல்லிட்டுப் போறதுக்கு.

ஹேமா said...

வாங்க கருணாகரசு.உங்களுக்கும் வானொலிப்பிரச்சனையா ! என்ன செய்யலாம்.யோசிக்கிறேன்.

இராகவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரில.முன்னொருக்கா வாலும் சொல்லியிருந்தார்.ஆனால் வானொலி கேட்கிறவர்களுமிருக்கிறார்கள்.ஏன் நானும்தான் !

:::::::::::::::::::::::::::::::::

பித்தனின் வாக்கு,நம்மவங்களை நாகரீகமாத் திட்டக்கூடாது.
அவங்களுக்குப் புரியவும் மாட்டுது.

::::::::::::::::::::::::::::::

நன்றி நவாஸ்.சுகம்தானே.தீபாவளிக் களைப்போடு வந்திருக்கிறீங்க போல.பிடிச்சிருக்கா இப்பிடி எழுதுறது.
சரி பார்க்கலாம் யாராவது என்கூட அடுத்த சண்டைக்கு வரட்டும் !

ஹேமா said...

//தமிழ் நாடன்...
முதல் மூன்று பத்திகள் எனக்கும் புரிந்தது. ஆனால் கடைசி இரண்டி பத்திகள் புரியாததால் அவை எந்த புள்ளியில் இணைகின்றன என்று புரியவில்லை.

இப்போ நல்லா புரிந்திட்டது அம்மோய்!

அது என்ன “எங்கள் மனிதர்” ஏன நாங்கள் உங்கள் மனிதர்கள் இல்லையா? நம்மனிதர்கள் என்று விளிக்கவெண்டியதுதானே?//

நன்றி வாங்க தமிழ்நாடான்.புரிந்ததா இப்போ.நேற்றுப் புரிந்த மட்டில் நீங்கள் சொல்லியிருக்கலாம்.என்னை நான் அளந்திருப்பேனே.

நான் வேணுமென்றுதான் பிரித்துச் சொன்னேன்.எங்கள் சில யாழ் மனுசருக்கு கொஞ்சம் ளொள் கூடுதல்.

சத்ரியன் said...

ஹேமா,

தப்பிச்சிட்டேன்.

முதல் மூன்று பத்தியில் உள்ளதைப் புரிந்துக் கொள்ளமுடிந்தது.
(பின்னூட்டங்களைப் படிக்கும் முன்)

இப்பவெல்லாம் கவிதை,
( கடவுள் பாதி மிருகம் பாதி ) நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.(புரிந்தது பாதி, புரியாதது பாதி).

பள்ளியில் தமிழ்ச் செய்யுள்களுக்கு "அருஞ்சொற்பொருள்" தேடவேண்டி இருப்பாதால்தான் புள்ளைங்க "தமிழ் பாடம்"ன்னாலே தலைத்தெறிக்க ஓடுதுங்கள். மறுபடியுமா?

ஹேமாவிற்கு சரின்னு பட்டா சரிதான்.

(சமீப நாட்களாக வலைப்பூ பக்கம் அதிகம் வரமுடியவில்லை. (அலுவலக பணிச்சுமை.))

M.S.R. கோபிநாத் said...

ஹேமா, உண்மையச் சொல்லனும்னா நான் கவிதைகளை இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கவிதைகளை புரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் ஆகும் எனக்கு. எப்படி கவிதை எழுதுவது என்று எனக்கு கொஞசம் சொல்லித்தாருங்கள். நன்றி.

ஹேமா said...

வாங்க சத்ரியன் இப்போ எல்லாம் எங்களை அடிக்கடி மறந்துதான் போறீங்க.சாட்டு அலுவலகம்ன்னு !பாக்கலாம்.

::::::::::::::::::::::::::::::

கோபி கவிதைகள் புரியாத உங்களுக்கு இந்தக் கவிதை எப்பிடி இருந்திருக்கும் !என்றாலும் கவிதையும் அதன் நிகழ்வும் அதற்கான குழப்பமும் பின்னூட்டங்களும் மகிழ்வாய் முடிந்திருக்கின்றன்.

இந்தக் கவிதை எழுதத் தூண்டிய அந்த அனானித் தொல்லைபேசிக்கு நன்றி சொல்கிறேன்.

சத்ரியன் said...

//வாங்க சத்ரியன் இப்போ எல்லாம் எங்களை அடிக்கடி மறந்துதான் போறீங்க.சாட்டு அலுவலகம்ன்னு !பாக்கலாம்..//

அப்போ என்னை "கஜினி"ன்னு சொல்ல வர்றீங்க.எதையும் மற(றை)க்கலைப்பா.
உண்மையத்தான் சொன்னேன். சாக்கு போக்கெல்லாம் எனக்குச் சொல்லத்தெரியாது. (எனக்கேத் தெரியாம எப்பவாவது என் மனைவியிடம் மட்டும் சொல்வேன்....வேற வழி?!)

Kala said...

நான் வேணுமென்றுதான் பிரித்துச் சொன்னேன்.எங்கள் சில யாழ் மனுசருக்கு கொஞ்சம் ளொள் கூடுதல்.\\\\\\\
ஹேமா சரியாச் சொல்லி இருக்கின்றீர்கள்.
ஊறிவிட்டது உரசினாலும் போகுமா?

“நாம்”இனி சிங்கபூருக்கு போனால்
நம்மைக் கவனிக்க நண்பர்கள்{பட்டாளமே}
உண்டு ஹேமா நீங்க வரும்போது
நானும் ஒட்டிக்கலாமா?
சத்திரியா...கருணாகரசு.. மூச்சு .............
“வெளிவரக்கூடாது’

புலவன் புலிகேசி said...

அழகான கவிதை ஹேமா...புரிந்தது.......

Jerry Eshananda said...

நேச மித்ரன் ரசிகர் மன்றத்தில் எப்போ சேர்ந்தீங்க? கவிதை நல்லா வந்துருக்கு. உங்க போன் நம்பர் கிடைக்குமா? பயம் வேண்டாம். உங்களை அடிக்கடி கவிதை எழுத வைக்க.

சத்ரியன் said...

//“நாம்”இனி சிங்கபூருக்கு போனால்
நம்மைக் கவனிக்க நண்பர்கள்{பட்டாளமே}
உண்டு ஹேமா நீங்க வரும்போது
நானும் ஒட்டிக்கலாமா?
சத்திரியா...கருணாகரசு.. மூச்சு .............
“வெளிவரக்கூடாது’//

கலா,

சரியாப்போச்சு........ ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா .என்னைச் சுற்றி ஏகத்துக்கும் நல்லவய்ங்களா இருக்காய்ங்களே....முடியல....!

ஹேமா இங்க வந்தா பாத்துக்கலாம்.

ஹேமா said...

வாங்க புலிகேசி.எங்க போய்ட்டீங்க.காணோம்ன்னு பாத்தேன்.

::::::::::::::::::::::::::::::::

//ஜெரி ஈசானந்தா...
நேச மித்ரன் ரசிகர் மன்றத்தில் எப்போ சேர்ந்தீங்க? கவிதை நல்லா வந்துருக்கு. உங்க போன் நம்பர் கிடைக்குமா? பயம் வேண்டாம். உங்களை அடிக்கடி கவிதை எழுத வைக்க.//

ஜெரி அடுத்த கவிதை எழுத என்னை ஆயத்தப்படுத்துறீங்கபோல....!

ஹேமா said...

கலா உங்ககூட நான் ஒட்டிக்கிறேன்.
ஒரு கை பாத்திட்டு வரலாம்.சாரல் குட்டிக்கிட்ட நேர போனாத்தான் நிறையப் பேசலாம்.நான் வரமாட்டேன்னு நினைவாக்கும் சத்ரியனுக்கு.வந்தா பாக்கலாம்ன்னு அலட்சியமா....!வாறன் வாறன்.

சாந்தி நேசக்கரம் said...

ஹேமா கவிதையினை இதுவரை இலகுவாய் வாசித்த தங்கள் வாசகர்களாகிய நாங்கள் இனிமேல் அகராதியுடன் தான் உப்புமடச்சந்திக்கு வருவோம். சரியா ?

சாந்தி

க.பாலாசி said...

//மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.//

உண்மையான வரிகள் தோழி....உங்கள் போன்றவர்களுக்கே இந்த நிலை புரியும் என்று நினைக்கிறேன். எங்களாலும் உணரமுடிகிறது.

கவிதை நன்று...எனக்கு புரிந்தவரையில்...

அன்புடன் நான் said...

“நாம்”இனி சிங்கபூருக்கு போனால்
நம்மைக் கவனிக்க நண்பர்கள்{பட்டாளமே}
உண்டு ஹேமா நீங்க வரும்போது
நானும் ஒட்டிக்கலாமா?
சத்திரியா...கருணாகரசு.. மூச்சு .............
“வெளிவரக்கூடாது’//

ரகசியம் எண்டு ஒன்று என்னிடம் சொல்லி விட்டால்...அதை யாரிடமும் மூச்சு விட மாட்டேன்... வேனா சத்திரியனை கேட்டு பாருங்கோ!!!!!!!

துபாய் ராஜா said...

வார்த்தை விளையாட்டு அருமை.

Nathanjagk said...

புலம்​பெயர்ந்து இன்னொரு ​வெளியில் சஞ்சாரிக்குது உங்கள் கவிதை!

வசீகரிக்கும் வரிகளின் ​சொந்தகாரிக்கு என் வாழ்த்துக்கள்!

பறவைக் கூடுகளின் எளிமையால் ​நெய்யப்பட்டிருக்கும் என் ஆத்மாவை ஒரு சிறு காற்றாய் தூக்கி பறக்கிறது (பறந்து கொண்டேயும்..) இருக்கிறது கவிதை!

இறங்க மனமில்லாமல் காற்றின் ​போக்கில் ஒரு பறவை-கூடு-ஆத்மா பறப்பதை யாரும் கண்டால் என்னென்று திதைக்காதீர்கள்! என்னிடமும் கேட்காதீர்கள்!

thamizhparavai said...

nalla vaeLai viLakkam padiththaen. illaiyael purinthirukkaathu.
innum konjam eLimaiyaai irunthaal purinthirukkum hema...

Post a Comment