தமிழன்னை தவமிருக்கிறாள்.
நொந்திருக்கிறாள்.
அவதி அவளுக்கு
வேதியல் மாற்றங்களாலும்.
தன் குழந்தைகளின் இழவுகளுக்கு
அழுதழுது கண்களிலும் புண்.
உயிர்கசிந்து
ஊண் உருகிக் கிடக்கிறாள்.
கனத்த பாரம்
கைகளிலும் தோள்களிலும்.
பாவம் கொஞ்சம் தூங்கட்டும்.
உற்சாகமாய் பசுமையாய் எழுவாள்
இயற்கை அன்னை உயிர்ப்பிக்க.
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.
அண்டம் விரிப்பாள்.
அவனியெங்கும்
மகப்பேறுகள்.
சூல்கொள்வாள் தானும்.
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப் பூச்சிகள் படைத்து
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்.
தானும் பத்தியம் இருந்து
பேறுகாலம்
பார்த்துக் காப்பாள் அவளே.
முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்.
இன்னும் இனம் வளர்ப்பாள்
மீண்டும் கூடுகட்ட
இருள் விலகும்.
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!
என் இனிய நண்பர்களுக்கு
என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துகள்.
ஹேமா(சுவிஸ்)
நொந்திருக்கிறாள்.
அவதி அவளுக்கு
வேதியல் மாற்றங்களாலும்.
தன் குழந்தைகளின் இழவுகளுக்கு
அழுதழுது கண்களிலும் புண்.
உயிர்கசிந்து
ஊண் உருகிக் கிடக்கிறாள்.
கனத்த பாரம்
கைகளிலும் தோள்களிலும்.
பாவம் கொஞ்சம் தூங்கட்டும்.
உற்சாகமாய் பசுமையாய் எழுவாள்
இயற்கை அன்னை உயிர்ப்பிக்க.
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.
அண்டம் விரிப்பாள்.
அவனியெங்கும்
மகப்பேறுகள்.
சூல்கொள்வாள் தானும்.
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப் பூச்சிகள் படைத்து
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்.
தானும் பத்தியம் இருந்து
பேறுகாலம்
பார்த்துக் காப்பாள் அவளே.
முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்.
இன்னும் இனம் வளர்ப்பாள்
மீண்டும் கூடுகட்ட
இருள் விலகும்.
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!
என் இனிய நண்பர்களுக்கு
என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துகள்.
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
31 comments:
தங்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. அதற்கு சில அடிப்படைக்காரணங்கள் உண்டு. ஆனாபோதிலும் எனக்கும் தாங்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றிகள். தங்களுக்கும், தீபாவளியை கொண்டாடும் அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
இந்த வார்த்தைகளை ரொம்ப
ரசித்தேன் ஹேமா
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் ஹேமா.. :)
கவிதை நல்லா இருந்துதுங்க.. :)
சொல்வதற்கு வார்த்தையில்லை இந்த தமிழினத்தின் நிலைக்கண்டு
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
அருமை ..!
இதைதான் எதிர்பார்த்தேன் உங்களிடம் ..!
இப்படியே தொடர்வோம்..!
தன்னம்பிக்கையுடன்..!
Happy Deepavali Hema.i'll be posting my article on Eezham sent for Manarkeni 2009 soon.Call Thaimzh Eezha thaai.
ஹேமா,
உங்களுக்கும், உறவுகளுக்கும் எங்கள் குடும்பத்தாரின், அன்பும் தீபாவளி வாழ்த்துகளும்!
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.
ஹேமா,
கொஞ்சம் மாத்தி படிச்சிக்கிறேன்.
மலைகளைச் சுருட்டி வைத்து
புலியின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.
நண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரிக்கும், குடும்பத்தினருக்கும் இனிய உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மருதன் நன்றி உங்கள் வாழ்த்துக்கு.ஒருசிலரைத் தவிர ஈழத்தமிழர்கள் யாருமே இப்போ எந்தக் கொண்டாட்டங்களுமே கொண்டாடுவதில்லை.என்றாலும் சில விஷேட நாட்களை நினவில் கொள்வோம்.அவ்வளவே.
::::::::::::::::::::::::::::::
பாலா இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இப்போ எல்லாம் பயமாயிருக்கு.நீங்க சொல்றது உண்மைதானான்னு.(சும்மா)
:::::::::::::::::::::
நன்றி கனகு.எப்பிடிப் போகுது தீபாவளி.சந்தோஷமாயிருங்க.
::::::::::::::::::::::::::::::
அபு.ஏன் நல்ல நாட்களிலும் கவலைப்பட.
நல்லதே நடக்கும் என நம்புவோம்.
நன்றி ஜீவன்.உங்கள் சந்தோஷம் கண்டே எனக்குச் சந்தோஷம்.எப்பவும் இப்பிடி நினைக்க முடிவதில்லை.மனம் சோர்வடைகிறதே !
:::::::::::::::::::::::::::::::::
நன்றி டாக்டர்.தமிழீழத் தாயை எதிர்பார்த்தே காத்துக்கிடக்கிறோம் நாங்கள்.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி சத்திரியன்.எங்காச்சும் என்னை வம்பில மாட்டிவிட்ன்னே இருக்கீங்க.
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!//
கவிதை அருமையாக இருக்கு ஹேமா. ஆனா...
//மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்// இந்த இடமும்...
//முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்// இந்த இடமும் எனக்கு விளங்கலயே....
மற்றவை நிறைவாய் இருக்கு.
கவிதை முழுமையாக புரியாவிட்டாலும் அருமை... உங்களுக்கு என் வாழ்த்துகள் ஹேமா.....
M..mm..
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நிறமிழந்த மலர்கள் மீது குவியும் பலவண்ணப் பட்டாம்பூச்சிகள்...அங்கு காணாமல்போன நிறங்கள் வார்த்தைகளில் பாரா பாராவாய்....!
கவிதை அருமை. நன்றி.
//நன்றி சத்ரியன்.எங்காச்சும் என்னை வம்பில மாட்டிவிட்ன்னே இருக்கீங்க.//
மன்னிக்கனும் ஹேமா,
கவிதை உங்களுடையது. அதை விளங்கிக் கொள்வது மட்டும் என் விருப்பம். என் விருப்பத்தைத் தான் நான் வெளிப்படுத்தினேன். அதனால் ஹேமாவிற்கு எந்த வில்லங்கமும் வரப்போவதில்லை.
அந்த "மயிர்க்கொட்டி புழு ", என்னன்னு விளங்கில்ல தாயீ.
எனது கணினி கண் திறக்க மறுத்ததால் படிக்க முடியவில்லை. கவிதையில் வார்த்தை ப்ரயோகங்கள் மிக அழகு. கணினி சரியானவுடன் தொடர்கிறேன்.
நியாயமான எதிர்பார்ப்பு, வர்ணங்களாய் வாழ்த்தும் வலியும்.
தீபாவளி கொண்டாடும் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
வாழ்க இந்த நம்பிக்கை
நன்றி ராஜா.துபாயில் எப்படி தீபாவளி ?நிறைவான கொண்டாட்டம் விடுமுறை எல்லாம் உண்டா?எனக்கு இங்கு எதுவும் இல்லை அதுதான் கேட்டேன்.
::::::::::::::::::::::::::::::::
வாங்க இராகவன்.இப்போ என் பக்கம் வருவது குறைந்துவிட்டது.ஏன் ?உங்கள் நண்பர் உருப்படாதர் எப்படி இருக்கிறார்.நான் கேட்டேன் சொல்லுங்க.இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும்.
::::::::::::::::::::::::::::::::
நேசன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபஒளி வாழ்த்துக்கள்.கவிதை அமைப்புச் சரில்லையாக்கும்.ஒண்ணுமே சொல்லாமப் போய்ட்டீங்க !
காருணாகரசு உங்கள் அன்பான வாழ்த்துக்கு என் நன்றி.என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள்.
கவிதை புரியவில்லையாஆஆஆஆ !
::::::::::::::::::::::::::::::::
ஞானம் உங்க தீபாவளி எப்படி !சிங்கப்பூரில் அமர்க்களமாயிருக்குமே.என்ன கவிதை புரியவில்லை என்று !சரி பார்க்கலாம்.
:::::::::::::::::::::::::::::::::::
மணி...ம்ம்ம்ம்,உங்களுக்கும் புரியலயா !
:::::::::::::::::::::::::::::::::
என் எண்ணத்தின்படி தமிழன்னை எங்கள் இனத்தைப் பெருவாரியாகப் பெருக்கி வளப்படுத்தத் தொடங்குகிறாள்.
இனி வாசித்துப் பாருங்கள்.
ஜெஸி உங்களுக்கும் அன்பான இனிய தீபஒளி வாழ்த்துக்கள்.
:::::::::::::::::::::::::::::::::
வாங்க ஸ்ரீராம்.இண்ணைக்கு என்ன சிக்கனமாய் சிந்தனைக்கு.வருகிறேன் பார்க்க.
:::::::::::::::::::::::::::::::::
நன்றி கோபி உங்கள் வருகைக்கும்.இனி அடிக்கடி சந்திப்போம்.
:::::::::::::::::::::::::::::::::
சத்ரியன்,மயிகொட்டிப்புளுகள்தானே பட்டாம்பூச்சிகளாகிறது.தமிழினத்தின் பெருக்கத்தை இப்படிச் சொல்லிப் பார்த்தேன்.இனி வாசிச்சுப் பாருங்கோ.
சரியா இல்லாட்டி எனக்கும் சொல்லுங்கோ.நானும் புரிஞ்சுகொள்வேன்.
:::::::::::::::::::::::::::::::::::
எப்பிடிப் போச்சு தீபாவளி விஜய்.குட்டிக்கவிதைகள் பூந்திரி கொளுத்தி மகிழ்ந்தார்களா.சரி கணணியைச் சரியாக்குங்கள் சீக்கிரம்.
:::::::::::::::::::::::::::::::::
வாங்க ரவி.என்ன ஆச்சு உங்களுக்கு.இப்போ எல்லாம் அடக்கியே வாசிக்கிறீங்க.அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி கதிர்.தமிழனின் வாழ்வு நம்பிக்கை வன்டிலேயேதான் கனகாலமாய் ஓடிக்கொண்டிருக்கு.
பார்க்கலாம்.
அருமையாய் வந்திருக்குடா ஹேமாம்மா.வாழ்த்துக்கள்!
// வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!! //
கண்டிப்பாய் இது நிறைவேறும் அதுவரை காத்திருப்போம். நம் எதிர்பாப்பும் இதுவே. அந்த நாள் விரைவில் வரும். காத்திருப்போம்.
நன்றி ஹேமா.
இருள் விலகும்.
அன்பின் ராஜன் ராதா மணாளன்
கனத்த கவிதை. வார்த்தைகள் இரும்பால் வார்க்கப்பட்டது போல் மனதில் பாரம்...
உங்கள் கவிதை சூப்பர்.............
Post a Comment