கவிதை ஒன்று எழுதலாமென்று
விறுவிறென்று
சிவப்பு விளக்கில் கூட
நிற்காமல் நடக்கிறேன்.
தபால் பெட்டியில் அபாய அறிவிப்புக்கள்.
பூட்டிய கதவைத் திறக்கும்போதே
தனிமை முட்டித் தள்ள
தொலைக்காட்சி திருப்புகையில்
"முகாம்களிலும் பட்டினிச்சாவு".
தொலபேசி அலற
பிறந்த தேசத்து அகதிகளுக்கான பணத்திரட்டல்.
வெதுப்பகத்து ஏதோ திரள் ஒன்று
பசி போக்கக் குளிர்ந்து கிடக்க
ஒரு மிடர் தண்ணீரால் தொண்டை நனைத்து
இணையம் திறந்தால்
இறப்பு
அழிவு
அலட்சியம்
அநியாயம்.
இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.
சிவப்பு
பச்சை
நீலம்
கறுப்பு என
கண்ணீரில் கரைந்து
என்னை மாற்றுகின்றன வர்ணக் குழைவுகள்.
காதலைத் தேடினேன்
அங்கும் காத்திருப்பு
சந்தோஷம்
சிரிப்பு
தோல்வி
அழுகை
முற்றும்.
மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.
சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
48 comments:
///அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.///
;;(((
மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.
மொத்தமும் இதில் அடங்கிவிட்டது ஹேமா
//இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.//
வலிகளோடு
வர்ணங்களும் இயலாமை ஆகின
அறையில் தனிமை படுத்தப்பட்ட சுகத்தில் அழத்தெரிவதில்லை தான்
வசதியற்றுமா போயிற்று சிரிக்க ...
உங்கள் வலிகளை இதைவிட எங்களுக்கு உணர்த்த முடியாது
//சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி //
ம்..
//மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.
சிரிப்பு தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!
மிக அருமை. சோகத்தை எழுத்துக்களில் கலந்து தந்துவிட்டீர்கள்.
///அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.///
வேற என்ன சொல்லணும் இந்த ஒத்த வரி எல்லாத்தையும் சொல்லிடுச்சே
:)
என்னடா ஹேமா,..சில நேரங்களில் ரொம்ப கஷ்ட்ட படுத்தி விடுகிறாய்.வேறு ஒன்னும் சொல்ல தெரியலை.take care.
இது,கவிதையாக இருக்கட்டும்.
//இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.
சிவப்பு
பச்சை
நீலம்
கறுப்பு என
கண்ணீரில் கரைந்து
என்னை மாற்றுகின்றன வர்ணக் குழைவுகள்.//
என்னதான் நிறங்கள் மாற்றி எழுதினாலும் எழுத்துக்களின் வடிவங்கள் ஒன்றுதான் தோழியே....அது வலிமிகுந்த மனதின் வெளிப்பாடாகத்தான் இருக்குமேயொழிய வேறெப்படி இருக்கமுடியும்...
//சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!//
சில நேரங்களில் பலரின் முன் இப்படித்தான் செய்கிறது. என்ன செய்வது
நல்ல கவிதை....
சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!//
உங்களுக்கு மட்டுமில்லை... தருணங்களை பொருத்து அப்படித்தான் அமைந்து போகிறது நிறைய பேருக்கு. கவிதை நல்லா இருக்கு.
:).. அழகான வரிகளில்.. வலிகள்..! வலிகள் இல்லாத வாழ்க்கை தேவை இல்லாதது..! நாம் கொடுத்து வைத்தவர்கள்..!
மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
மிக அருமையான வரிகள்.
/அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.///
அருமை
adade ithuvum nalla iruke
rasithen
//
சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!! ///
உண்மைதான்.... தமிழர்கள் கேளிக்கை பொம்மைகலாகிவிட்டோம்..... !! கொடுமை....
மலர்தோட்டத்தை அழித்த வெற்றிடத்தைப் பார்க்கும் போது மனம் விம்மும் கணம் போல இருக்கிறது சில வரிகள்!
தனிமை சுவீகரிக்கொண்ட மனிதர் எவரும் ஒவ்வொரு பொருட்களிலும் மனிதத்தையே தேடுவர் என்பது புரிகிறது - இக்கவிதையில்!
மனதின் ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்.
அத்தனை உண்மை வரிகளில்..வலிகளில்..
meendum oru soga kavidhai.. :(
kavidhaiyin aarambathil ithu oru santhoshamaana oru kavidhaiaaga irukkum ena enninen..
//அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.//
வலிக்க செய்கின்றது ஹேமா
நன்றி....
நன்றி ஜீவன்.ஏதாச்சும் சொல்லியிருக்கலாம் !
நவாஸ் வாங்க.ரொம்பநாளாச் சொல்ல நினைச்சது
நன்றி கதிர்.
தமிழனின் வாழ்க்கை = வலி.
ஜமால் சூழல்தான் மனசைச் சிரிக்க வைக்கிறது.
விஜய் போன கவிதையில் உங்கள் ஆதங்கம் ஏன் எப்பவும் நான் கவலையா இருக்கிறேன்ன்னு...!
கண்ணன் வாங்க.
வாங்க உழவன்.கேள்வியாக் கேக்கிறீங்களே.சொல்லிட்டேன் என் மனசை.
நன்றி நேசன்.அழாமலும் கொஞ்சம் எழுதப்பாக்கிறேன்.
பா.ரா அண்ணா எப்பிடி கவிதையே என் கதைதானே !
பாலாஜி சிரிப்பையே சிரிக்கவைத்தேனே எப்பிடி !
வாங்க ஆரூரன்.நான் சரியாய்த்தானே சொல்லியிருக்கேன்.
பாலா,பாருங்க நான் என்ன பாவம் பண்ணினேன்.நீங்க சொன்ன மாதிரியே பண்றீங்க.பரவால்ல.
மேடி,நம்பி நம்பியே நடுத்தெருவில் நிற்கிறான் தமிழன் நின்மதியில்லாமல்.
ஜெகன் வாங்க.தனிமை என்பதையும் வித்தியாசப்படுத்துவோம்.நாங்கள் விரும்பாமல் காலத்தின் கொடுமையால் தள்ளப்பட்டோம் தனிமைக் கூண்டுக்குள்.
அதுதான் வலி அதிகம்.
செய்யது நன்றி.நீங்கள் எப்பவுமே கேட்கும் கேள்விக்குப் பதிலாகவே என் மனதின் உண்மை உணர்வுகள் இந்த வரிகள்.
என்ன செய்ய கனகு.நிச்சயம் சந்தோஷமான வரிகளைத் தரத்தான் நினைத்தேன்.முடிவில்
ஆகியது இப்படித்தான்.
இன்னும் முயற்சி செய்கிறேன் சிரிக்க !
வாங்க ஞானம்.அழாமலே இருக்கிறேன்.ஆனால் சிரிக்க வரவே மாட்டுதாம்.என்ன செய்ய !
சென்ற கவிதையில் மிக மிக ஆதங்கத்தோடு அஷோக்.ஸ்ரீராம் கேட்டுக்கொண்டார்கள் ஏன் என் கவிதைகள் எப்போதும் சோகமாகவே இருக்கு என்று.
இன்னும் எல்லோருமே எப்பவும் என்னிடம் கேட்கும் கேள்வி இது.நான் வெணுமேன்று எழுதுவதில்லை.
ஏதாவது எழுதுவோம் என்றால் என் சூழ்நிலை ,நான் வாழும் இடம், உறவுகளின் பிரிவு ,என் நாடு,
சனங்கள் என்று எல்லாமே எதுவும் எனக்கு நின்மதியில்லாமலே இருக்கு.என்ன செய்ய நான் ?
அப்படி இருந்தும் மனதை ஒரு நிலைப்படுத்துவேன்.காதலோடு பேசுவேன்.அவையெல்லாம் ஒரு கணம்தான்.மீண்டும் என் சுயம் மாறாது.முயற்சிக்கிறேன் என்னை மாற்ற முடியவில்லைத் தோழர்களே.
கை கொடுங்கள்.நானும் ஒரு நாள் சிரிக்க.நிச்சயம் சிரிப்பேன்.நானும் என் மக்களும் சிரிப்போம்.
அடுத்த கவிதை சந்தோஷமாய்த் தரப் பார்க்கிறேன்.என்றாலும் என் வரிகளை ரசித்து உற்சாகப்படுத்தும் உங்கள் அத்தனை பேரின் கைகளையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.
//சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!//
எம்புட்டு தூரம்?
//நசரேயன் ... சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!//
எம்புட்டு தூரம்?//
நசர் ,பாருங்க.லொள்.
சுவிஸ் ல என் வீட்ல இருந்து உங்க வீடு வரைக்கும்ன்னு வச்சுக்கலாம்.
ராமாயணத்தையும்
கலிங்கத்து பரணியையும்
சொல்லி, வெந்த புண்ணில்
வேலாய்.. நானும் கலங்கவைத்து விட்டேன்
வரம் என்ற பெயரில்..
//சிரிப்பு... தூர நின்றுஎன்னைப் பார்த்துச் சிரித்தபடி //
தூர சிரிக்கும் சிரிப்பு உன்னுள் தீர சிரிக்கும் நாள் வரும்
நிச்சயமாய் தோழி...
// காதலைத் தேடினேன்
அங்கும் காத்திருப்பு
சந்தோஷம்
சிரிப்பு
தோல்வி
அழுகை
முற்றும்.
மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.//
ஹேமா வெல்டன். இந்த வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனமான உண்மை எனக்கும் பெருந்தும். தனிமை எனக்கும் பிடித்திருந்தது ஆனால் இப்போது தனிமை கொல்கின்றது. விரைவில் துணை வரும்.
ஹேமா நானும் என் அறையுமாய் .....நலமான வரிகள்
சில சமயம் அப்படி ஒதுங்கிருப்பதும் நலமாய் இருக்கிறது ஹேமா
நேற்று நேசனின் அறை....
இன்று உங்களின் தனியறை...
சில வருத்தங்களுக்குக் காலமே பதில் சொல்லும்
பொறுமையாய் இருங்கள் ஹேமா
//நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.//
ஹேமா,
யார் சொன்னது? ஹேமாவை எப்பொழுதும் தனிமையாய் இருக்க விடுவதில்லை கவிதைகள்...!
என் நண்பன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இது தவிர வேறு எதுவும் காணக்கிடைப்பதில்லை என்று நாழிதள் படிக்கவே மாட்டான். இந்த பதிவு படிச்சு அதுதான் ஞாபகம் வந்தது எனக்கு
நான் எப்பொழுதும் சிரித்தபடியே இருபேன் அழும் நேரங்களை தவிர
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
இது நியாயமில்லை...
படம் மட்டும் சிரிப்பது..
இது நியாயமில்லை...
சிரிப்பு எட்ட நின்று சிரிப்பது...
இது நியாயமில்லை..
சிரிக்க நினைத்தாலும் சோகங்கள் மட்டுமே சுகமாவது...
இது நியாயமில்லை...
அவர்கள் படும் கஷ்டங்களும், அதனால் நீங்கள் படும் துன்பமும்..
இது நியாயமே இல்லை...
கொடுத்த வாக்கை மறந்தது...!
வாங்க கருணாகரசு.அடிக்கடி தொலைஞ்சு போறிங்க.சரில்ல இது.தமிழனின் சிரிப்புக்கு மட்டும்தானே தருணங்கள் இல்லாமல் போகின்றன !எப்படி ?
உண்மைதான் ப்ரியா.கொடுத்து வைத்தவர்கள்தான் நாங்கள்.
என்றாலும் அவர்களின் துன்பம் பார்க்கப் பொறுக்குதில்லையே !
சங்கர் யோசிக்காதீங்க உங்களாலயும் எனக்கு வேதனைன்னு.இல்லவே இல்ல.இது எப்பவோ விழுந்த இடியின் வலி.இன்று முடியாமையில் எல்லையில்தான் புலம்பல் அகோரமாய்.என் மக்கள் சிரிக்கும் காலம் எப்போ !காத்திருப்போம்.இன்னொருவன் எப்போ உயிர்ப்பான் !
*********************************
வரணும் பித்தனின் வாக்கு.தனிமை ஒரு மனிதனுக்குப் பெரிதல்ல.அங்கும் சந்தோஷத்தைத் தீர்மானிக்கமுடியும் அவன் சூழ்நிலையால்.வாழ்த்துக்கள் உங்களுக்கு.
********************************
தேனு,தனிமை எனக்குப் பழகிய ஒன்றுதான்.அது எனக்குப் பெரிய விஷயமில்ல.தனிமையானாலும் எத்தனையோ சந்தோஷங்களை இருந்த இடத்திலேயே அனுபவித்துக்கொள்ளலாம்.என் நிலை அப்படியல்ல.சுற்றிச் சூழல் எல்லாமே நின்மதியற்ற சுழ்நிலை.நான் என்னைப் பொறுத்த மட்டில நலமாக நன்றாகவே இருக்கிறேன்.
நின்மதியில்லை என் மக்கள் என் நாடு என்று நினைக்கையில்.
சத்ரியா சரியாய்ச் சொன்னீங்க.தனிமையும் வலிகளுமே கூடுதலாக என்னை எழுத வைக்கின்றன.
அபு நன்றி.அந்த நண்பருக்கு அது ஒரு பொழுதின் போக்காக இருக்கலாம்.எங்களுக்கோ பொழுதுகள் தொலைவதும் விடிவது பெரும்பாடாய் இருக்கிறதே !
நன்றி யாதவன்.எப்படி மனதார தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல நான் ? நரகாசுரன் இன்னும் உயிரோடுதானே இருக்கிறான் எங்கள் தேசத்தில் !
ஸ்ரீராம் உண்மையில் நியாயமில்லைத்தான்.என்றாலும் என் நியாயத்தையும் கொஞ்சம் பாருங்களேன்.உங்களுக்காகவே சொல்ல நினைத்ததை கவி வரியில் சொன்னேன்.மனம் எப்பவும் சஙகடப் பட்டுக்கொண்டேயிருக்கு.அதற்காக அன்றாட வாழ்வு அப்படியேதான் குழப்பம் இல்லாமல்.முயற்சிக்கிறேன் நீங்கள் நினைப்பதுபோல சில வரிகளுக்கு.நன்றி ஸ்ரீராம்.
// மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.//
நைஸ் ஃபீலிங். உங்க கவிதைகள் ஆழமா இருக்கு. Keep it up
இயலாமையின் வலிகள் உங்கள் கவிதைகளில் வெளிப்படுகின்றன தோழி.. உங்கள் மனக்கவலை புரிகிறது.. ஆறுதல் சொல்லித் தேற்றும் சக்தி எனக்கில்லை.. இருந்தும் - பயணம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.. காலங்கள் மாறும் என்னும் நம்பிக்கையோடு காத்திருப்போம்..
யதார்த்த கவிதைகளுக்கு ஆதரவில்லாததால் புரியாத கவிதை எழுதியிருக்கிறேன்.
வந்து திட்டி விட்டு போங்கள்.
விஜய்
கவிதை சோகங்களைக் கலந்து தாலாட்டும் ரணங்களின் பிரதிபலிப்பு... ஹேமா எப்படி இருக்கிறீங்கள்?? கொஞ்சம் பிசி... அதான் விரிவான பின்னூட்டம் போட முடியவில்லை.
வார்த்தைகளை படித்ததும் சிலிர்த்தது தேகம், வரிகளில் வலிகளின் வேதனை
)!:
Cheer up Hema,relax.
பாலா,பாருங்க நான் என்ன பாவம் பண்ணினேன்.நீங்க சொன்ன மாதிரியே பண்றீங்க.பரவால்ல.
என்னை குறை
சொல்ரவன்னே முடிவு கட்டீடீங்களா?
அப்போ நான் லாம் நல்ல இருக்குன்னே சொல்லக்கூடாதா
என்ன கொடுமை ஹேமா இது ?
அட நம்புங்க உண்மையாவே நல்ல இருக்குங்க
உங்களுக்கு எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சிவரஞ்சனிகருணாகரசு.
கருணாகரசுசிவரஞ்சனி.
தீபாவளி வாழ்த்துக்கள்டா ஹேமாம்மா.
நல்லாயிருக்கு ஹேமா. ! தொடரட்டும் உங்கள் கவிதைகள்.
Post a Comment