*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, October 11, 2009

முகமூடிக் காதல்...

இப்போ எல்லாம்
அடிக்கடி
உன் மடியில்
விட்டுச் சென்ற
பறவையின் இறகாய்
பசிக்கு ஏங்கும் ஒரு சிறு பாலகனாய்
ஏதோ ஒரு வளர்ப்புப் பிராணியாய்
உன்னோடு அணைந்தபடி
பால் சுரக்காத் தாயாய் நீயும்.

நிழல்தரும் இலைகள்போல
நீயும் சருகாவாய் ஒரு பொழுதில்
அன்று முடிவில்லாச் சூரியன்
சுட்டெரிப்பான்
விட்டும் போவான்
இன்றைய நிழலில்
நாளை நீறான சாம்பலாய் நான்.

அனிச்ச இதழைவிட
உன் அன்பு இதம்
மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்
மழைத் தூறலிலும் வானின் கீறலிலும்
வானவில்லாய் நீ
எந்த நேரத்திலும்
சுவடே இல்லாமல் 

அழிந்தும்விடலாம்.

காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்
அத்தனையிலுமே உன் விம்பம்
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

58 comments:

மேவி... said...

me the first

மேவி... said...

"முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!"

இது வரை இல்லாத சோகம் ஓன்று இதில் தெரிகிறதே ... ஏன் ???

யாழினி said...

வாவ் அற்புதமான கவிதை! ஏன் இவ்வளவு சோகம் ஹேமா?

//காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்.
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!//

என்னை கவர்ந்த வரிகள் ஹேமா...

ஹேமா said...

//டம்பி மேவீ...
"முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!"

இது வரை இல்லாத சோகம் ஓன்று இதில் தெரிகிறதே ... ஏன் ???//

மேவீ,முன்னுக்கு ஓடி வந்திட்டீங்களா?வாங்க வாங்க.இப்பிடி எத்தினை சோகக் கவிதை எழுதியிருக்கேன்.இதென்ன புதுசா !

ஹேமா said...

//யாழினி...
வாவ் அற்புதமான கவிதை! ஏன் இவ்வளவு சோகம் ஹேமா//

யாழினி சோகங்களும் அழகுதான்.
எத்தினை சோகப்பாட்டுக்களை நல்லாயிருக்கு,நல்ல படம்ன்னு ரசிச்சிருக்கோம்.அதுபோலத்தான் இந்தக் கவிதையும்.இண்ணைக்கு என் உணர்வு இப்பிடி இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

உணர்வுகள் தெளிவாய் முகமூடியின்றி. அழகான கவிதை ஹேமா.

kanagu said...

/*காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்.
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!*/

வரிகள் எல்லாம் அருமைங்க ஹேமா... :) :)

Kala said...

ஒவ்வொரு வரியிலும் ஒரு ஏக்கம்
கிடைக்காதென்று தெரிந்தும், கிடைக்க
வேண்டுமென்றொரு ஆதங்கம், முடியாதென்று
தெரிந்தும் நீ வேண்டும் என்றொரு எண்ணம
அப்பப்பா......படிக்கவே கஷ்ரமாய்......ஏனென்றால்
ஹேமா நானும் பெண்தான் .

காதல் கற்றுக் கொடுத்த பாடம், வலி,தடயம்,
ஞாபகம் அத்தனையும் மறைத்து{முகமூடியால்}
சிரித்து ஒரு பெண்ணால்தான் வாழ முடியும்
என்பதற்கு இக் கவி ஓர் உதாரணம் ஹேமா.

அனுபவப் பாடமா?அனுபவம் கேட்ட பாடமா??
அனுபவத்தைப் பார்த்த பாடமா???

துபாய் ராஜா said...

வலி தரும் வரிகள் ஹேமா...

பாலா said...

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!


இது நகைச்சுவை கதை ஹேமா இத
புகுத்துநீங்கன்னா சோகம் வருவதற்கு பதிலா சிரிப்பே வரும்
(எனக்கு தெரிஞ்சத சொன்னேன் மன்னிசுகுங்கோ , வலுக்கட்டாயமா எழுதுனத போல தோனுது இந்த கவிதை .முடிஞ்சவரை அப்படி எழுதுறத குறைச்சுகுங்களேன் ( இது ஒரு சின்ன ரிக்வஸ்ட் அவ்ளோதான் !!!!) )

Ashok D said...

ஹேமா.. என்ன ஆச்சு.. நானே இங்க சோகம்தான் கடந்த ஒரு மாசமா..

உங்கள் கவிதைகளைவிட உங்கள் பேச்சும்(பதிலுரைத்தல்) நீங்கள் இடும் பின்னோட்டங்களும் அழகு :)

கவி அழகன் said...

அழகாக அடுக்கிகொண்டே செல்கிறீர்கள் உங்கள் காதல் வரிகளை வாழ்கையை உணர்வுகளை

ஆ.ஞானசேகரன் said...

//முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!//

ஏன் சோகத்துடம் முடித்துவிட்டீர்கள் ஹேமா...? காதலின் வரிகள் வழக்கம் போல அழகு

ஹேமா said...

நன்றி நவாஸ்.உள்ளுக்குள் அவிந்தாலும் முகமூடியோடு வெளியில் சிரிக்கும் ஒரு உள்ளத்தின் வேதனையாக சில வரிகள்.

*********************************

கனகு வாங்க,உங்களை இப்போ காண்பதில் சந்தோஷம்.

***********************************

// கலா...
அனுபவப் பாடமா?அனுபவம் கேட்ட பாடமா??
அனுபவத்தைப் பார்த்த பாடமா???//

கலா இதுக்கு பதில் சொன்னா நிறையச் சொல்லணும்.வேணாம் விடுங்க.அது கவி.....தை !

ஹேமா said...

நன்றி ராஜா.சில வலிகள் வலிக்க வலிக்கத்தான் சுகமும் அதற்கான தண்டணையும்.

**********************************

பாலா,நான் நரிக்கதையை நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ள
மாட்டேன்.அது ஒரு நீதிக்கதை.
ஆதாவது முடிந்தளவு முயற்சி செய்துபார்.முடியாவிட்டால் அதற்காகவே முண்டிக்கொண்டு கிடக்காமல் அடுத்த வேலையைப் பார் என்பதுபோல.அதோடு அந்தக் கவிதையின்படி எனக்கில்லை என்று தெரிந்தபின்னும் காதலுக்காகக் காத்துக் கிடக்கும் ஒரு உள்ளம்.ஏமாறத்தான் போகிறேன் என்று தெரிந்தபின்னும் அன்புக்காக ஏங்கிக் கிடக்கிறது.ஏன் நரிக்கதை இங்கு உதாரணம் சரிவராது என்கிறீர்கள் ?

விஜய் said...

ஏமாற்றங்கள் இயற்கையின் நியதி ஹேமா. ஆனாலும் அது சில பேரை குறிவைத்து தாக்குகிறது. நானும் அதற்கு விதிவிலக்கில்லை. வலிகளை அனுபவமாக எடுத்துக்கொண்டு வாழ வேண்டும். யார் ஆறுதல் சொன்னாலும் தீராது இருந்தாலும் இந்த நண்பனுக்காக மாற்று சிந்தனைகளை மனதில் விதையுங்கள்.

ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி

அரங்கப்பெருமாள் said...

//அனிச்ச இதழைவிட
உன் அன்பு இதம்.//

//நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.//

//நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.//

உங்களுக்கு மட்டு எப்படி கிட்டுகிறது இப்படிப்பட்ட வார்த்தைகள்?

அப்துல்மாலிக் said...

நல்ல வரிகள் எப்பவும் போல்

தமிழ் பாடல் வாடையே இல்லாத இந்த நாட்டில் உங்க வலைத்தளம் மூலம் எஃப்.எம் கேட்டுக்கிட்டு இருக்கேன்

- இரவீ - said...

//காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்//

சில்லு சில்லாய் உடைந்து ...
வலியின் உச்சம் ஹேமா.

thamizhparavai said...

ரசித்தேன் ஹேமா....
ஓவியமும் அருமை...
//காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்.
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.//
நல்லா இருந்தது...
சோகமும் ஒருவித சுகம்தான் ரசித்தால்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேமா...

கவிதைகும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு இருக்கட்டுமாக...

யோவ் பாலா நீங்க மட்டும் தான் புரியாம எழுதுவீங்க நாங்க எழுதுனா உனக்கு சிரிப்பு வருதாடி மாப்ள..இரு உனக்குன்னு ஒரு கவிதை ரெடி பண்ணி உன்னிய மாதிரி பின் நவீனத்துவ ஆளுகள டார் டாரா கிழிக்கிறேன்...இது நிச்சயம்...

Anonymous said...

பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம்,புதுக் கவிதை,மரபுக்கவிதை,இதனை விட இன்னும் பல வகை,

ஒரு புள்ளி
ஒரு வட்டம்
ஒரு ஆரை
கணித சமன்பாடு,
ஒரு புள்ளியில் தொடங்கிறது ஒரு கணிதம்.

இரண்டற கலத்தல் ஒரு நீட்டிப்பு,
இரண்டையும் பிரித்தல்?
இப்படித்தான் ஆரையும் சமன்பாடும்
பிரிந்தன,

இரவு எப்போதும் போல இருக்கவில்லை,
அந்த இரவில் காகம் பறந்தது,
குயில் கூவியது,
ஒரு புள்ளியின் தொடக்கம் மீண்டும் வரைகிறது ஒரு உருவம்.

எப்போதும் வரைந்த உருவம்
மீண்டும் அதனால் முப்பரிமாணம் தெரியாமல்
முழிக்கிறது,

பேப்பரில் வரைந்த படம்
பேப்ப்பரில் வரையப்படிகிறது,
காகிதம் ஒன்றுதான்
பரிமாணங்கள் புதிது.

ஸ்ரீராம். said...

படக் காட்சிகளில் சூழ்நிலையின் பாவனையை விளக்க பின்னணியில் காட்டும் காட்சிகள் போல கவிதையில் உவமைகள் நம்மை உணர வைக்கின்றன. ஆனால் கவிதை என்றாலே சோகமாகவும் விரக்தியாகவும்தான் எழுத வேண்டுமா? ஒரு நிகழ்கால மகிழ்ச்சிக் கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லாயிருக்குங்க . அந்த படத்தில் பெண்ணின் முகம் மிகவும் அழகு.

ஈரோடு கதிர் said...

//பால் சுரக்காத் தாயாய் நீயும்.//

ரசித்த வரி

கவிதை அழகு

கார்த்திகைப் பாண்டியன் said...

சோகம் ததும்பும் வரிகள் தோழி..

வேல் கண்ணன் said...

:-) .... :-)

முகமூடியணிந்த பேனா!! said...

வலிமையான உவமைகள் ,

செறிவான வார்த்தைகள்

வலியின் வேதனையை ஆழமாய் சொல்கிற நேர்த்தி அருமை ...

ஆரூரன் விசுவநாதன் said...

//மழைத் தூறலிலும் வானின் கீறலிலும்
வான்வில்லாய் நீ.
எந்த நேரத்திலும்
சுவடே இல்லாமல் அழிந்துவிடலாம்.//

//முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!//

நல்ல வரிகள்

வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

//முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!//


ஹேமா,

என்றோ ஓர் நாள் இறப்போம் எனத் தெரிந்தே, வாழ்வோம் என தினம் போராடும் இந்த நொடியைப்போல...!

ம்ம்ம்ம்ம். கனக்கும் நினைவுகள் தான்.!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

மெல்லிய உணர்வுகளை அழகாய் கோர்த்து கவிதையாக்கி இருக்கிறீர்கள்.
காதல் வலியை அருமையாய் பிரதிபளித்திருக்கிறீர்கள். அருமை!!

ஹேமா said...

//D.R.அஷோக்...
ஹேமா.. என்ன ஆச்சு.. நானே இங்க சோகம்தான் கடந்த ஒரு மாசமா..

உங்கள் கவிதைகளைவிட உங்கள் பேச்சும்(பதிலுரைத்தல்) நீங்கள் இடும் பின்னோட்டங்களும் அழகு//

வாங்க அஷோக்.இல்லையே எத்தனை சந்தோஷமான கவிதை இருக்கு பாருங்க.எல்லாருமே சொல்லிச் சொல்லியே என்னை இப்பிடி ஆக்கிட்டீங்களோ !

*********************************

வாங்கோ.கிழவரே.வாழ்க்கைதான் கவிதை.கவிதைதான் வாழ்க்கை.விளங்கிச்சோ !

********************************

// ஆ.ஞானசேகரன்...
ஏன் சோகத்துடம் முடித்துவிட்டீர்கள் ஹேமா...? காதலின் வரிகள் வழக்கம் போல அழகு//

இன்றைய ஞாயிறு எனக்குக் கொஞ்சம் சோகமாய் ஆகிடிச்சு. என்ன செய்ய ஞானம்.எல்லாரும் சொல்றீங்க.அடுத்த கவிதை பாருங்களேன்.

ஹேமா said...

நன்றி விஜய் கவிதை(கள்).நீங்கள் ஒன்றும் தப்பாய்ச் சொல்ல
வில்லையே.ஏன் மன்னிப்பு?வாழ்வில் சோகம் இயல்பு.சோகமே வாழ்வானால் என்ன செய்யலாம் விஜய் !மாற்றுச் சிந்தனைகளுக்குள் மூழ்கி எழும்போது திரும்பவும் அணைத்துக்கொள்வது அதே சோகம்தானே.

*********************************

//அரங்கப்பெருமாள் ...
உங்களுக்கு மட்டு எப்படி கிட்டுகிறது இப்படிப்பட்ட வார்த்தைகள்?//

வாங்க பெருமாள்.எங்க காணோம் ரொம்பநாளா.சுகம்தானே.
வார்த்தைகளுக்கா பஞ்சம்.எழுதித் திட்டும் வாங்கறேனே.நீங்க பாக்கல ?

*********************************

சந்தோஷம் அபு.நீங்க ரேடியோ கேக்கிறதைக் கேட்டு எனக்குச் சந்தோஷம்.எப்பவும் கேட்டுக்கிட்டே இருங்க.

சத்ரியன் said...

//கவிதைதான் வாழ்க்கை.விளங்கிச்சோ !//

ஹேமா,

லைட்டா...!!!

ஹேமா said...

//- இரவீ -
சில்லு சில்லாய் உடைந்து ...
வலியின் உச்சம் ஹேமா.//

வாங்க ரவி.சில வலிகளை ரசித்தே உணரமுடிகிறது.யாரால் அந்த வலிகள் வருகிறது என்பதை பொறுத்தது வலியின் அளவுகோல்.
அதுதான் உச்சம்.

***********************************

//தமிழ்ப்பறவை ...நல்லா இருந்தது...
சோகமும் ஒருவித சுகம்தான் ரசித்தால்...//

அண்ணா வாங்க.வேலைகளுக்கு நடுவிலயும் ஓடி வந்து உற்சாகம் சொல்லிட்டுப் போறீங்க.நன்றி.போன கவிதையில் சொன்னதைக் கவனத்தில எடுக்கிறேன்.ஆனாலும் என் இயல்புன்னு ஒண்ணு என்னோடயே ஒட்டிக் கிடக்கு.அதை மாற்ற முடியவில்லை.அதுவும் அழகாய்த்தானே இருக்கு.பாருங்க இண்ணைக்கு சோகத்தைக்கூட ரசிச்சு இருக்கீங்க.

பா.ராஜாராம் said...

வணக்கம் அத்தை!(சத்ரியன் தளத்தில் இருந்து வர்றேன்..ஹி.ஹி.)

அருமையா வந்திருக்குடா கவிதை..எனதன்பு சகோதரி!

ஹேமா said...

//பிரியமுடன்...வசந்த்...
கவிதைகும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு இருக்கட்டுமாக...

யோவ் பாலா நீங்க மட்டும் தான் புரியாம எழுதுவீங்க நாங்க எழுதுனா உனக்கு சிரிப்பு வருதாடி மாப்ள..இரு உனக்குன்னு ஒரு கவிதை ரெடி பண்ணி உன்னிய மாதிரி பின் நவீனத்துவ ஆளுகள டார் டாரா கிழிக்கிறேன்...இது நிச்சயம்...//

வசந்து....என்னாசுப்பா.ஏன் பாலாகூட இவ்ளோ கோவம்.பாவர் அவர் அழகாத்தானே கவிதை எழுதுறார்.விட்டிடுங்க எனக்காக.

**********************************

//அனானி ...
பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம்,புதுக் கவிதை,மரபுக்கவிதை,இதனை விட இன்னும் பல வகை,//

என்னமோ நல்லாத்தான் இருக்கு கவிதை.ஆனா ஒண்ணும் புரியல.முதல்ல உங்க பேரே உங்களுக்குத் தெரில.அதைச் சொல்லுங்க முதல்ல.

*********************************

//ஸ்ரீராம்....
படக் காட்சிகளில் சூழ்நிலையின் பாவனையை விளக்க பின்னணியில் காட்டும் காட்சிகள் போல கவிதையில் உவமைகள் நம்மை உணர வைக்கின்றன. ஆனால் கவிதை என்றாலே சோகமாகவும் விரக்தியாகவும்தான் எழுத வேண்டுமா? ஒரு நிகழ்கால மகிழ்ச்சிக் கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?//

ஸ்ரீராம்..எத்தனை சந்தோஷமான கவிதைகள் பதிவிட்டிருக்கேன்.(குறைவுதான்)அதுக்குத்தானே உப்புமடச் சந்திக்கு வாங்க சிரிக்க்லாம்ன்னு தொடங்கினே.ம்ம்ம்...அதுவும்.
சரி அடுத்த கவிதை சந்தோஷம்தான்.உங்களுக்காக.

ஹேமா said...

//பித்தனின் வாக்கு...
ரொம்ப நல்லாயிருக்குங்க . அந்த படத்தில் பெண்ணின் முகம் மிகவும் அழகு.//

அந்தப் படத்தை நீங்களும் தமிழ்ப்பறவை அண்ணாவும் நல்லா ரசிச்சிருக்கீங்க.எனக்கும் அந்தக் கவிதைக்கு ஏற்ற படமாய் அமைந்திருந்தது.

***********************************

// கதிர் - ஈரோடு சைட்...
//பால் சுரக்காத் தாயாய் நீயும்.//
ரசித்த வரி கவிதை அழகு//

வாங்க கதிர்.உங்க வருகையும் கருத்தும் மிகுந்த சந்தோஷம் தருகிறது.

********************************

வாங்க கார்த்தி.வாழ்க்கையே சோகமாப் போகுது.என்ன செய்ய.
மனம் அதுக்குள்ளேயே சுத்துது.

********************************

வேல்கண்ணன் என்னாச்சு.ஒண்ணுமே சொல்லாம...!

ஹேமா said...

//முகமூடியணிந்த பேனா!! ...
வலிமையான உவமைகள் ,
செறிவான வார்த்தைகள்
வலியின் வேதனையை ஆழமாய் சொல்கிற நேர்த்தி அருமை//

வாங்க தாமோதரன்.உங்க கருத்த்க்கு நன்றி.உங்கள் பெயர் மாற்றம் சந்தோஷம்.அடிக்கடி சந்திக்க்லாம் இனி.

***********************************

ஆரூரன் விசுவநாதன் ... உங்க உற்சாக வார்த்தைகளுக்கும் நன்றியும் சந்தோஷமும்.

**********************************

//சத்ரியன்...என்றோ ஓர் நாள் இறப்போம் எனத் தெரிந்தே, வாழ்வோம் என தினம் போராடும் இந்த நொடியைப்போல...!//

சத்ரியா ரொம்பக் கடிக்காம நல்லமாதிரி ஒரு பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.சின்னக்குட்டி சாரல் என்ன பண்றா.

*********************************

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் ...
மெல்லிய உணர்வுகளை அழகாய் கோர்த்து கவிதையாக்கி இருக்கிறீர்கள். காதல் வலியை அருமையாய் பிரதிபளித்திருக்கிறீர்கள். அருமை!!//

நன்றி சரவணன்.சந்தோஷம்.இனி அடிக்கடி சந்திக்கலாம்.வாங்க.

********************************

//பா.ராஜாராம் ...
வணக்கம் அத்தை!(சத்ரியன் தளத்தில் இருந்து வர்றேன்..ஹி.ஹி.)
அருமையா வந்திருக்குடா கவிதை..எனதன்பு சகோதரி!//

அண்ணா எங்க அடிக்கடி காணாமப் போயிடறீங்க.தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கு.சித்தப்பா எப்பிடி இருக்கார்.சுகம்தானே.பாருங்க இணையம் எத்தனை உறவுகளைத் தருகிறது.சந்தோஷமாகவே இருக்கு.இன்னொரு குட்டிச் செல்லமும் வந்திட்டா.

அவங்க அப்பாக்கு வாழ்க்கையே இப்போதான் லைட்டா விளங்கிச்சாம்.
பாவம் சாரல்.அப்பனுக்கு பாடம் சொல்லிக் குடுப்பா பாருங்க !

Thenammai Lakshmanan said...

//காலப்புள்ளிகள் சாட்சியமாய்
எத்தனை சில்லாய்
உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்.
நீ இல்லை என்பது தெரிந்தும்
ஏன் இத்தனை ஆசையும் ஆதங்கமும்.

முட்டாளாகிப் போவேன் ஒருநாள்.
எட்டாத பழம் புளிக்கும்
என்றுணர்ந்த நரியை விட
மோசமாய் !!!//

பின்னீட்டீங்க ஹேமா

யாரை மனசை யார் முன்மொழிவது ஹேமா

என் மனமும் மனசாட்சியும் நீதானா

நட்புடன் ஜமால் said...

மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்.]]

க்ளாஸிக் ...

ஹேமா said...

//தேனம்மைலட்சுமணன்..யாரை மனசை யார் முன்மொழிவது ஹேமா

என் மனமும் மனசாட்சியும் நீதானா//

தோழி இப்போதான் மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது.
5 நிமிடங்கள் கூட இல்ல.எங்கே தேனுவைக் காணோமே என்று.அதே கணம் நீங்கள் என்னிடம் இருப்பது உண்மையில் என்ன நடக்கிறது இங்கே என்பதுபோல.சுகம்தானே தேனு.பயண அலுப்புகள் எப்பிடி !

ஹேமா said...

//நட்புடன் ஜமால் ...
மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்.]]
க்ளாஸிக் ...//

வாங்கோ...வாங்கோ ஜமால்.உங்களைக் காணவே ஒரு சந்தோஷம்.சுகம்தானே.இந்த வரிகளை யாரும் ரசிக்கவில்லையோ என்று நினைத்தேன்.ஏனென்றால் நான் ரசித்து எழுதினேன்.நன்றி ஜமால்.இன்னும் உங்கள் கணணி சரிவரவில்லையா !

நேசமித்ரன் said...

அன்பின் ஹேமா

வணக்கம் !! உங்களின் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் இந்த நீண்ட பின்னூட்டம் தயவு செய்து தாங்கள் வாசித்ததும் அழித்து விடுங்கள் .எல்லோரையும் போல அருமை அற்புதம் பேரதிசயம் என்று பின்னூட்டம் இட விருப்பம் இல்லை ! உங்களின் கவிதைகள் மீதும் என் சகோதரி என்ற உரிமையிலும் சொல்ல விழைகிறேன் .கவிதைகளில் மொழி ஓட்டம் என்பது மிக இன்றியமையாதது . 'இப்போ எல்லாம்' என்று வழங்கு மொழியில் துவங்கும் கவிதை' நாளை நீறான சாம்பலாய் நான்' நாளை நீறான என்பது காலக் குழப்பம் தரும் பதமாக தோன்றுகிறது .'எத்தனை சில்லாய் உடைந்து கிடக்கிறேன் பார்.
அத்தனையிலுமே உன் விம்பம்' இந்த வாக்கியத்திலும் கொஞ்சம் இடறுகிறது எனக்கு

கொஞ்சம் கவனம் தேவை என்று தோன்றுகிறது சகோதரி

பாலா said...

தோழி
ஹேமாவிற்கு
மீண்டும் வருத்தத்துடனேயே இந்த பின்னூட்டம் (??) (பாழாய் போன அந்த நரிக்கதைக்கு இத்தனை பின்னூட்டம் தேவைதானா ?) இந்தக்கதை இத்தனை நாள் உயிர் வாழ்வதற்கு காரணம் என்ன தெரியுமா ஹேமா ?" ச்சீசீ இந்த பழம் புளிக்கும் " என்ற இந்த வார்த்தைகளே இந்தக்கதையை இவ்வளவு நாட்கள் தள்ளிக்கொண்டு வந்துள்ளது இனியும் இருக்கும் .நம் வாயிலாக . உங்கள கவிதையில் ஏமாற்றத்தைக் குறிப்பதற்கே இதை பயன் படுத்தினேன் என்பது உங்கள் கருத்து .இந்தக்கதைமீதான படிமம் யாருக்கும் வெறும் ஏமாற்றத்தை மட்டுமே தரவல்லது அல்ல .அதோடு ஒரு பகடி , நையாண்டியையும் சேர்த்தே தர வல்லது .நீங்கள் உங்கள் பினூட்டத்தில் முயன்று முயண்டு முடியாமல் ஏமாற்றத்தைப் பெற்றேன் என்று குறிப்பதற்கே பயபடுத்தினேன் என்கிறீர்கள் . சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் "இது புளிக்கும் " என்ற வார்த்தை சொல்வது என்ன ஹேமா ????.ஒருவேளை "ச்சீசீ இது புளிக்கும் "என்ற வார்த்தையை நீங்கள் பயன் படுத்தாமல் விட்டிருந்தால் இந்த என் பின்னூட்டம் வராது இருந்திருக்கலாம் . நான் முன்னமிட்ட பின்னூட்டத்திலேயே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்பினேன் அது என் தவறே . மன்னிக்க . இதை மின்மடலில் உங்களுக்கு அனுப்பவே என் விருப்பம் தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாததாலேயே இந்த பின்னூட்டம் உங்கள் பதிவில் . மீண்டும் மன்னிக்க. இதில் என்தவறு ஏதேனும் இருப்பின் மின் மடலிடுக
நட்புடன்
பாலா

பாலா said...

மாப்ளை வசந்துக்கு .

சகோதரிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மீசை முறுக்கி முண்டாத்தட்டும் உன் தேனீ மாவட்ட ஆண்மைத்தனம் எனக்கு பிடித்திருக்கிறது மாப்ள .ஆனால் விடயம் என்னவென்றே பாராமல் வேறு மீசை முறுக்கையும் .வேட்டியை முழங்கால் வரை உயர்த்தி கட்டுவதையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் .உடனே நான் குறை சொல்கிறேன் , குறை சொல்கிறேன் என்று கூவுவதையும் தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள் மாப்ளை .நான் பின்னவீன்னகவிதைகள் எழுதுகிறேன் என்று உங்களிடம் சொல்லவே இல்லையே. அப்படி இருப்பின் நீங்களாக நான் எழுதுவது பின்நவீனம் என்று புரிந்து கொண்டது என் தவறல்ல .
இருப்பினும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியே என்னையும் பின்னவீனக்கவிதை எழுதுபவன் என்று எண்ணியமைக்கு .தயவு செய்து நீங்களும் பின்னவீன்னக்கவிதை எழுதி என்னைப்போன்ற முட்டாள்களை கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுங்கள் . அந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கும் .
உன் மச்சான்
மிகப்பெரிய அன்புடன் பாலா

பாலா said...

சொல்லிக்கொள்ள விரும்பாதவை .
எனக்கு யாரையும் குறை சொல்லியோ , சுட்டிக்காடியோ என்னை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமோ , தேவையோ இல்லை
இது என் தவறே ஹேமா
இனிமேல் என்னிடம் இருந்து எந்தக்குறை கூறுதலும் ,சுட்டிகாடளும் உங்கள் பதிவில் இனி இருக்காது
என்னிடமிருந்தும் நீங்கள் "அருமை , அற்புதம் அதி அற்புதம் போன்ற நல்லா விமர்சனங்களை இனி எதிர் பார்க்கலாம் ..

ஹேமா said...

பாலா ஏன் இவ்ளோ கோவம் என்கூட.நானும் நரிக்கதையை உங்க மூலமாக இன்னொரு கண்ணோட்டத்தில் காண்கிறேன்.
அதற்காக இப்பிடியா என்கூடக் கோவிக்கிறது.நான் எழுதுற சரி பிழைகளை உங்களை மாதிரியா உள்ளவங்கதானே திருத்தணும்.
வசந்த்,ஏதோ ஒரு ஆதங்கத்தில்தான் சொல்லியிருப்பார்.விடுங்க பாலா.இது அறிவுத் தேடல்.இங்கு யாரோடும் யாரும் சண்டை போடலாம்.
இதெல்லாம் ஊட்டச்சத்து எம் ஆற்றலுக்கு.இன்னும் நீங்க சொல்லணும் என் தப்புக்களை.
சொல்லாட்டி அது பாலா இல்ல.

பாருங்க நேசனும் தன் எண்ணங்களைச் சொல்லியிருக்கிறார்.
அதை அழித்துவிடச் சொல்லியியிருக்கிறார்.
அழிக்கமாட்டேன்.என் பிழைகளை நானும் அறிந்துகொள்கிறேன்.நான் ஒன்றும் பெரிய இலக்கியவாதி இல்லையே !

ப்ரியமுடன் வசந்த் said...

திரு.பாலா சார் இங்கு நான் கூறியது தங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிச்சுக்கங்க...

இனிமேல் கவிதை எழுதுறவங்க தலைவாசல் இருக்குறபக்கம் கூட தலைவச்சு படுக்க மாட்டேன்..

ஹேமா சாரிப்பா...

ஹேமா said...

வசந்த்,ஏன் என்கூட கோவம் உங்களுக்கு.எப்பவும்போல வரணும் நீங்க.எவ்ளோ சிரிக்கப்பண்ற வசந்து.... இப்பிடிச் சங்கடப்பட வைக்கலாமோ !

Muniappan Pakkangal said...

Nee illai enru therinthum-nice Hema.

பாலா said...

எனக்கு கோபம் ஏதும் இல்லை ஹேமா வருத்தமே .மாப்ளை வசந்த் க்கே இன்னம் கோபம் தணியவில்லை என்றே நினைக்கிறேன் அவருக்கு தனி மடலிட்டிருக்கிறேன் இனியாவது கோபம் தணிகிறதாவென்று பார்ப்போம் . ப்ளோகில் அடித்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை ஹேமா எதாவது சொல்ல வேண்டி இருப்பின் மின் மடலில் சொல்லிவிடுங்கள் நான் பதிலளித்து விடுகிறேன் இப்படி பொதுவாய் வைத்து அடித்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை

க.பாலாசி said...

//நிழல்தரும் இலைகள்போல
நீயும் சருகாவாய் ஒரு பொழுதில்.
அன்று முடிவில்லாச் சூரியன்
சுட்டெரிப்பான்.
விட்டும் போவான்.
இன்றைய நிழலில்
நாளை நீறான சாம்பலாய் நான்.//

சாம்பலாய் நான்...சரியான வரிகள்....

//அனிச்ச இதழைவிட
உன் அன்பு இதம்.
மூச்சுக்காற்றின் வெப்பம்
ஒரு யுகத்தின் இனிய தாம்பத்யம்.//

இனிய வரிகள்....

//மழைத் தூறலிலும் வானின் கீறலிலும்
வான்வில்லாய் நீ.
எந்த நேரத்திலும்
சுவடே இல்லாமல் அழிந்துவிடலாம்.//

வார்த்தை கோர்வைகள் அருமை தோழியே....

நான்தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கு....இரண்டுநாள் இடைவிடா பணி அதனாலதான் லேட் ஆயிடுச்சு....

Ashok D said...

@ நேசமித்ரன் சார்... இதையே தான் நான் வேறுவிதமாக சொன்னேன்.

Ashok D said...

//அழிக்கமாட்டேன்.என் பிழைகளை நானும் அறிந்துகொள்கிறேன்.நான் ஒன்றும் பெரிய இலக்கியவாதி இல்லையே //

அது...

நசரேயன் said...

இந்த இம்சைக்குத்தான் நான் காதல் பக்கமே போனதே இல்லை

சந்தான சங்கர் said...

தாமதமாக வந்துவிட்டேன்
முகமூடியுடன் வந்திருப்பதால்
அடையாளம் காணப்பட்ட, காணப்படாத
இத்தனை பின்னோடங்களா?

வலிகளை சொல்லும்
வரிகளில் பிறரை
புண்படுத்தி எழுதுவதுதான் தவறு
புண்பட்டதை எழுதுவது தவறல்ல,,

விமர்சனங்கள்தான்
நிதர்சனம்
எதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதுதான் மெருகேற்றவைக்கும்..

நன்றி ஹேமா..

சேவியர் said...

ஆஹா.. பிரமாதம்...

Post a Comment