இன்று...
என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நேற்றுத்தான் பார்த்தது போலிருக்கிறது
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதும்.
பறவைகள் அப்படியே
மனிதர்கள்
பூக்களும் கூட.
மாறச் சாத்தியம் இல்லை.
நானும் அப்படியே.
சாலைகள் கொஞ்சம் ஒடுங்கிவிட்டதோ
மலைகள் கொஞ்சம் மெலிந்திருக்குமோ
காடுகளிடை வீடுகளோ
என்பதைத் தவிர.
நீண்டு வளைந்த காலம்
போதையேறித் துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
தாயின் வயிற்றை உந்தி உதைத்து
முகமெங்கும்
உப்புப் பூக்க வைக்கும் கர்வம்
வளரும் அந்தக் கருவுக்கு.
நான் மாத்திரம் அப்படியே.
சிறு வழி
பின் பெரு வெளி தாண்டி
வெயிலும் மழையுமாய்
சேற்றுக் கிடங்குகள் கடந்து
கற்கள் அகற்றி
விவாதங்களை வேதனைகளை
குடைகளாய்
விரித்து மடக்கி
ஆசை கனவு காதல்
வெட்கம் வேதனை உட்புகுத்தி
என்னையே எனக்கு அறிமுகமாக்கி,
ஆரத்தி எடுக்கும்
அழகான நங்கையாய்
பொட்டிட்டுப் பூவும் செருகி
பருவம் கோர்த்து மையலாக்கிய வயது.
நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
38 comments:
நானும் அப்படியே உணர்கிறேன்...
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!
]]
nice ...
எல்லோரும் இப்படியே இருக்க முடிந்தால் பிரச்சினைகளே கிடையாது தோழி..
நாளும் கவிதையாய் வளரும் "ஹேமாவை" வாசித்துகொண்டிருக்கிறேன்
இன்று போல் என்றும் வாழ்க
அப்படியே இருங்கள்..மாற வேண்டாம்.மாறினால் இது போல் அழகான கவிதைகளை யார் எழுதுவதாம் ??
இன்னைக்கு புதுசா பொறந்தோம்ன்னு தினமும் நினைங்க ஹேமா
மாற்றம் தேவை கண்டிப்பா
இல்லைன்னா வாழ்க்கை செல்லும் ஆனால் சுவையாய் செல்லாது...
வாழ்த்துக்கள்...
//கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
தாயின் வயிற்றை உந்தி உதைத்து
முகமெங்கும்
உப்புப் பூக்க வைக்கும் கர்வம்
வளரும் அந்தக் கருவுக்கு.//
அழகான வார்த்தை கோர்வை...
//அழகான நங்கையாய்
பொட்டிட்டுப் பூவும் செருகி
பருவம் கோர்த்து மையலாக்கிய வயது.//
உண்மைதானோ?
//நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!//
அப்படியே இருங்கள் தோழியே....
நீண்டு வளைந்த காலம்
போதையேறித் துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
adadaada wow
தாயின் வயிற்றை உந்தி உதைத்து
முகமெங்கும்
உப்புப் பூக்க வைக்கும் கர்வம்
வளரும் அந்தக் கருவுக்கு.
nallairukku ithuvum
ஹேமா..
கவிதை நல்லா வந்திருக்கு
நீண்டு வளைந்த காலம்
போதையேறித் துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.
:)
நம்மை புதுப்பித்துக்கொள்ளும் கணங்கள் குழந்தைகளாக ஆகிப் பார்க்கும் போது மட்டுமே ... ஆகிபார்த்திருக்கிறீர்கள் அல்லது அப்படியே இருக்க முனைகிறீர்கள் உங்கள் மொழியிலும் கவிதைகளின் போக்கிலும் நிறைய நல்ல மாற்றங்கள் ஹேமா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அழகு கவிதை
Happy Birthday Hema.
Many Happy Return of the Day.
அழகான கவிதை ஹேமா! என்ன தான் இருந்தாலும் நாங்கள் மனதளவில் குழந்தைகள் தான் என்ன! :)
//Anonymous said...
Happy Birthday Hema.
Many Happy Return of the Day.//
??????
பிறந்த நாளா இன்று உங்களுக்கு தோழி?
இப்பொழுதுதான் புரிகிறது ஹேமா.....
எப்படி உங்களால் இப்படியெல்லாம் எழுத முடிகிறதென்று.......
வாழ்த்துக்கள்
வித்தியாசமான தலைப்பு
வரிகள் அனைத்தும் அருமை
நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!//
அருமை... எல்லோருக்கும் அப்படித்தான்!!!
//நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!//
எப்போதும் நாம் நாமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவன் நான்...அருமையான கவிதை...
(பெருநாளைக்கு ஊர் சென்று விட்டு நேற்று தான் வந்தேன்...தங்களின் பத்து வரங்கள் தொடர் பதிவில் கலந்து கொள்ளாமைக்கு மன்னிக்கவும்)
மனதில் குழந்தையாய்,
ஆரோக்கியத்தில் இளமையாய்
அனுபவத்தில் பாட்டியாய்,
தொடர் கவி சமைக்க
அவனிக்கு வந்த நாள் வாழ்த்துக்கள்!
ரசித்தேன் ஹேமா...
கவிதை நடையில் நல்ல மாற்றம்..
இந்த நடை நன்றாக இருக்கிறது. தொடரவும்..
நான்காவது பத்தியில் கொஞசம் பழைய தொனி இருக்கிறது. செப்பனிட்டு வார்த்தைகளைக் கோர்த்திருந்தால் இன்னும் சூப்பர்...
திடீர் மாற்றம் மகிழ்ச்சி தருகிறது. இன்னும் நிறையப் படியுங்கள்.. நிறைய எழுதுங்கள்...
//நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!//
நல்ல அழகு வரிகள் ஹேமா...
Entha maatramum illaamal naan-that is the thing needed Hema.Self review is important in one's life as it shapes the life.
//நீண்டு வளைந்த காலம்போதையேறித்
துவண்டு கிடக்கிறது.
கலவியின் பின் கிடக்கும் கருநாகமாய்.//
தெளிந்துவிட்ட வார்த்தைகள்.
//நேற்றுத்தான்...பார்த்தது போலிருக்கிறது
என்னை.மனதில் குழந்தையாய்எந்த
மாற்றமும் இல்லாமல்இப்போதும் நான் !!!//
நினைவுகளின் பசுமைக்கு
வயதில்லை..
வாழ்த்துக்கள் ஹேமா..
ஆம் அப்படித்தான்!
நன்று!
என்றும் அப்படியே இருங்கள்..மாற வேண்டாம்.மாறினால் இது போல் அழகான கவிதைகளை யார் எழுதுவதாம் ??
செய்யது சொன்னதுதான் நானும் சொல்லவந்தேன். இதமான கவிதை
//என்னையே எனக்கு அறிமுகமாக்கி,
ஆரத்தி எடுக்கும்
அழகான நங்கையாய்
பொட்டிட்டுப் பூவும் செருகி
பருவம் கோர்த்து மையலாக்கிய வயது.//
):!
ஆம் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் காலம் எங்கோ சென்று விடுகிறது...நம் மனம் தான் என்றும் சிறு பிள்ளை போல ....
நல்ல புனைவு...
மனதில் இளமை மாறாமல் இருப்பது ஒரு வரம்தான்...
இன்றுபோல் குழந்தை மனதோடு என்றென்றும் இனிமையாக வாழ எனது அன்பு வாழ்த்துக்கள் ஹேமா....
// நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!! //
நல்லாத்தேன் இருக்குது...!! பட் நடைமுறைக்கு ஒத்துவருமா....?
தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..
என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை...
/ / நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!! //
இப்படியே இருந்துட்டா எந்த பிரச்சனையும் இல்லை. கவிதை நல்லா இருக்கு. இயற்கையுடன் ஒன்றி இருக்கும் பாங்கும் அருமை. வாழ்த்துக்கள் ஹேமா.
வெகு இளமையான கவிதை ஹேமா..
//ஆசை கனவு காதல்
வெட்கம் வேதனை உட்புகுத்தி
என்னையே எனக்கு அறிமுகமாக்கி,//
வாழ்வில் நம்மையே நமக்கு அறிமுகம் செய்வது மிக முக்கியம். வாழ்த்துக்கள்.
//
நேற்றுத்தான்...
பார்த்தது போலிருக்கிறது என்னை.
மனதில் குழந்தையாய்
எந்த மாற்றமும் இல்லாமல்
இப்போதும் நான் !!!
//
அதே மருத்துவமனையிலேதான் இருக்கீங்களா!!!!
நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
நெஞ்சை தொட்ட அற்புதமான கவிதைகள்
வாழ்த்துக்கள்.. எனது " எங்கே போகிறோம் " கவிதையை கீழ்க்கண்ட தளத்தில் காணுங்கள்
www.vnthangamani.blogspot.com
இவன் வி. என்.தங்கமணி
n_thangamani@yahoo.com
Post a Comment