*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 07, 2009

அது....

அது.....அது...
அதுதான் அது...
சின்னதாய்...பெரிதாய்
அழகாய்... வித விதமாய்
வடிவங்கள் மாறினாலும்
இயக்கும் கையில் இயங்கும்
இயல்பாய்...
மாறாத மனம் கொண்டதாய்
அதற்கென்றே விதிக்கப்பட்ட
தனிப்பட்ட குணமுள்ளதாய்.

நண்பனோ எதிரியோ
தயவோ தாட்சண்யமோ இன்றி
எதுவுமே... எல்லோருமே
சமமாய்
நீட்டிய திசையில்
தன்பணி நிறைவாய்.

ஆயிரம் காரணங்கள்
ஆயுதங்கள் கையிலேந்த.
தட்டிக்கொடுக்கும் கையையே
தனக்கெதிராய் திசை திருப்பும்.
கணங்கள் நொடிகளுக்குள்
உலகப் பந்தில்
உயிர்.....
ஒரு இதுவாய்.

யார் கையிலும் ஆயுதம் இங்கு.
கொலைவெறி...இரத்த தாகம்.
எல்லோருமே எஜமானர்கள்.
யார் யாரையும் கொல்லலாம்.
வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழும்
மயிரை விட மோசமாய்.

மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.
மிருகங்களில் கூட
ஏதோ எங்கோ ஒன்றுதான்
அதிசயமாய்
தன் இனத்தைத்
தானே தின்னும்.
மிருகங்களை வென்றவனாய்
இங்கு மனிதனும் இப்போ.

வலிக்கிறது...
மனம் ஒரு மாதிரியாய்.
சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கி
சச்சரவே வாழ்வாய்.
சரித்திரமும்
சாதனைகளும் படைக்க
மானிடம் தேவை.
மனிதன் இல்லா மண்
ஏன் ??? எதற்கு.
மனிதம் இல்லா மனம்
ஏன் ??? எதற்கு.

அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

S.A. நவாஸுதீன் said...

மனிதன் இல்லா மண்
ஏன் ??? எதற்கு.
மனிதம் இல்லா மனம்
ஏன் ??? எதற்கு.
******************
வலியை உணர முடிகிறது ஹேமா.

- இரவீ - said...

வலியோடு வாழ்க்கையின் வாக்கியங்கள் ...

Radha N said...

மனிதம் சிலநேரங்களில்
மரித்து விட்டதாய் தோன்றலாம்
அது தோன்றும் தருணங்களில் பலரை
மரித்து விடவும் செய்துவிடும்.
மனிதம் மரித்து விட
மறுக்கும் தருணங்களில் அந்த
மனிதன் மரித்து விட நேரிடும்.

என்ன செய்வது எல்லாம் வாழ்க்கைச்சூழல்

Jerry Eshananda said...

பிரமிக்கிறேன் ஹேமா, அர்த்தமுள்ள, உணர்வுள்ள வரிகள்.

கும்மாச்சி said...

அருமை ஹேமா, கவியுள்ளம் உங்களிடம் இயல்பாக இருக்கிறது.

நேசமித்ரன் said...

பொய் சொல்ல விரும்ப வில்லை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் போன கவிதையை போல .....

:)

துபாய் ராஜா said...

//அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!//

இதுவே எங்கள் கோரிக்கையும்...

சத்ரியன் said...

//யார் யாரையும் கொல்லலாம்.
வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழும்
மயிரை விட மோசமாய்.//

ஹேமா,

கற்பனைச் செய்தால் தான் கவிதை வரும் என நினைத்திருந்தேன்.
கொப்பளிக்கும் கோபத்திலும் வரும் என உங்கள் வலைப்பக்கம் வந்த பின்புதான் தெரிந்துக் கொண்டேன்.

ஒருவேளை,
இன்றைய உலகில்((மனிதம்) இல்லாததைத் தேடித்திரிகிறோமோ?

(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்?)

நட்புடன் ஜமால் said...

தயவு செய்து வாழவிடுங்கள்

மனிதனை மனிதனாய் ...

நட்புடன் ஜமால் said...

(கடந்த இரு வாரமாக ஏன் இத்தனைக் கோபம்?)]]

நானும் கேட்க நினைத்தேன்

ஏன் ஹேமா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:((((

தமிழன்-கறுப்பி... said...

வரவில்லை என்றல்ல ஹேமா படித்துக்கொண்டுதானிருக்கிறேன், என்ன வந்ததுக்கான தடயத்தை எழுதிப்போவதில்லை, ஆனால் உப்புமடம் சந்தி பக்கம் இன்னும் படிக்க இருக்கு நாலைஞ்சு பதிவு விடுபட்டுப்போச்சு...

:)

தமிழன்-கறுப்பி... said...

//தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!//

மனிதன் தன்பாட்டில் இருந்தாலே போதுமானது.

:)

Admin said...

//மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.
மிருகங்களில் கூட
ஏதோ எங்கோ ஒன்றுதான்
அதிசயமாய்
தன் இனத்தைத்
தானே தின்னும்.
மிருகங்களை வென்றவனாய்
இங்கு மனிதனும் இப்போ.
//


அருமையான வரிகள்

thamizhparavai said...

:-((

ப்ரியமுடன் வசந்த் said...

//உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.//

வலியொட சொல்லியிருகீங்க..

இங்கேயும் ஃபாலோவர் விட்ஜெட் சேர்த்துடுங்களேன்......

Muniappan Pakkangal said...

Uyir kodukka Kadavulum,uyir edukka Manithanumaai-nalla varihal Hema.Kathiyoda oru padam,romba payamuruththaatheenga.

அன்புடன் நான் said...

வலி + வருத்தம் = அது

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழும்
மயிரை விட மோசமாய்.

பளிச்சென்ற வரிகள்


அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!

செவிட்டில் அறையும் வரிகள்

அன்புடன்
ஆரூரன்

ஆ.ஞானசேகரன் said...

//அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!//

அருமையான வரிகள் ஹேமா... பாராட்டுகள்,....

Anonymous said...

ஆழமான கருத்துகள்.

கலையரசன் said...

அருமை என்று ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடமுடியாது!

Admin said...

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

யாழினி said...

//வலிக்கிறது...
மனம் ஒரு மாதிரியாய்.
சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கி
சச்சரவே வாழ்வாய்.
சரித்திரமும்
சாதனைகளும் படைக்க
மானிடம் தேவை.
மனிதன் இல்லா மண்
ஏன் ??? எதற்கு.
மனிதம் இல்லா மனம்
ஏன் ??? எதற்கு.//


உண்மையில் வலிக்கின்றது மனிதம் மறந்து போன மனிதனை காண்கையில்!

மேவி... said...

:(((

"உழவன்" "Uzhavan" said...

//மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.//
 
அருமை தோழி. என்ன செய்ய. மனிதம் தொலைந்ததுகண்டு மனம் வலிக்கத்தான் செய்கிறது.

Post a Comment