சிலையாய் இருந்தேன்.
என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி.
இரவலாய் சிறகுகள் கிடைத்தால்
கொஞ்சம் பறக்கலாம் போல.
எழும்ப வைத்தது
தூரத்து நிலவைத் தேடும்
நட்சத்திரங்களின் பாடல்.
இரவல் மூச்சுக்கள் பற்றி
இறாக்கைப் புத்தகங்களுக்குள்
இரவல் சிந்தனைகள் தேடினேன்.
கிடைத்தது.
மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்.
ஆனால் மனுஷியாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.
இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொண்டு
மீண்டும்...
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!
வாழ்வியல் பற்றி எழுத மாட்டேனாம்
என்று தூண்டியவர் மேவீ
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
42 comments:
nice kavithai
//......
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலத்த
எங்களை விட உயர்ந்தவையே.//
ஹேமா,
உண்மைச் சொல்லும் (கவிதை) வரிகள். உணர்ந்தாலும் திருந்தத்தான் (என்னையும் சேர்த்து) ஒருவருமில்லை.
( எனக்க்கு என்பதை "எனக்கு" என்றும்,
தொலத்த என்பதை "தொலைத்த" என்றும் திருத்திவிடுங்கள் )
மெல்லிய சோகம் கவிதையில் தெரிந்தாலும் நல்ல கவிதை
நல்லா இருக்கு ஹேமா
சில திருத்தங்கள்
இறாக்கைப் - இறக்கைப்
எனக்க்குப் - எனக்கு
தொலத்த - தொலைத்த
சிறிது சோகம் கலந்திருந்தாலும்
சொல்லாடல் அழகு
பிழைகளை திருத்துங்கள் சகோ
///ஆனால் மனிதனாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.
இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்துகொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!///
அழுத்தமான அடர்த்தியான வலி வரிகள். நல்லாஇருக்கிறது கவிதை.
அருமை. வாழ்த்துக்கள் ஹேமா .
உங்கள் கவிதைகளில் எப்பொதும் ஒரு மெல்லிய சோகம் ஏன்??
//என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி//
//எழும்ப வைத்தது
தூரத்து நிலவைத் தேடும்
நட்சத்திரங்களின் பாடல்.//
//மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்//
அருமையான உவமைகள் அழகு.
//தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.//
உண்மையான உண்மை.
//இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்துகொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!//
இந்த எண்ணம் தோன்றாத மனிதரே இருக்கமுடியாது.
நீங்கள்மனுஷிஎன்றே விளித்து எழுதுங்கள் ஹேமா
கவிதை நன்றாகவந்திருக்கிறது ..
வாழ்த்துக்கள்
//தனித்த இரவொன்றில்
சிலையாய் இருந்தேன்.
என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி.//
சிறப்பு
வாழ்த்துக்கள் ஹேமா
"பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்."
நன்றாக இருக்கிறது கவிதை. பாராட்டுக்கள்
Iravalai sirahuhal kidaithaal konjam parakkalaam pola-you are teriffic in your words Hema.Keep it up,A top class poet you are.
அடுத்த முறை சுமாரான கவிதை எழுத என் வாழ்த்துக்கள்.
//இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!//
அடர்த்தியான கரு.. கவிதையும்
'காக்கை குருவி எங்கள் சாதி' என்றான் பாரதி. நீங்கள் உயர்ந்தவை என்கிறீர்கள்.
//இரவல் மூச்சே வேண்டாம்//
மிகவும் அருமை
// இறாக்கைப் புத்தகங்களுக்குள் //
இறாக்கை - இறக்கையா...? இறாக்கையா...?
// மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும். //
ஆஹா.... இயற்கையின் இரவல்கள்.... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க....!!
//இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!! //
அருமை.... அருமை....... !! இந்த வரிகள் ரொம்ப டச்சிங்'கா இருக்குதுங்க....!!
நல்லாருக்கு ..!!! வாழ்த்துக்கள்...!!
இரவல் எதிலும் தேவையில்லை தான்
-----------------
ஹேமா காதலாய் ஒரு கவிதை எழுதுங்களேன் சோகமற்று.
//பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே//
வாழ்வியல் அழகியல் சார்ந்து மட்டும் அல்ல
இம் மாதிரியான உண்மைகள் சார்ந்தும் என்பதை
மீண்டும் சொன்ன உங்கள் கவிதை அருமை
/தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே//
அருமை..:-)))
முதல் இரண்டு பத்திகளும் நல்லா அடர்த்தி வரிகள் ஹேமா,..கவிதை முடித்து நிமிரும் போது சோகம் நிறைகிறது.இன்னதென்று அறுதியிட இயலாத சோகம்...
ஹேமா கவிதை அழகு .... ஒவ்வொரு வாட்டி படிக்கும் போதும் புது அர்த்தங்கள் கிடைக்கிறது .....
"நட்புடன் ஜமால் said...
ஹேமா காதலாய் ஒரு கவிதை எழுதுங்களேன் சோகமற்று."
பாஸ் ஏற்கனவே நிறைய எழுதிடங்க
இன்னும் அழுத்தமாய் சொல்லி இருக்கலாம் ....
(பிறகு நன்றி )
pala murai padithu vitten ... innum padippen
மூச்சில்லாச் சிலை வேண்டாம் ஹேமா
மூச்சுடன் சிலையாய் நம்பிக்கை உ{ஒ}ளியுடன்
கல்லாய் இருக்கும் மனங்களை கலை பொக்கிஷமாய்
வடிப்போம். அவர்கள் கல்லிலும் கலை வடிவம்
உணர்வார்கள்.
ஒவ்வொரு வரிகளும் வடித்தெடுத்த வரிகள்
நன்றி ஆனந்த்.முதல் பார்வையோடு ஓடி வந்ததுக்கு.நீங்களும் எத்தனையோ தரம் சொல்லிட்டீங்க.கவிதை சோகம்ன்னு.என்ன செய்ய நான் !
**********************************
நன்றி சத்ரியன்.நேத்து ரொம்பவே மனசு குழப்பம்.நிறைய எழுத்துப் பிழைகள்.நன்றி கவனித்துச் சொன்னதுக்கு.
*********************************
ஜோதி வாங்க.நன்றி உங்களுக்கும்.ஜோதி அது இறாக்கைதான்.அலமாரித் தட்டுக்களை வீட்டில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
யாராவது சரியாக அறிந்தால் சொல்லட்டும்.றா-ரா வும் எனக்குச் சந்தேகம்தான்.சரியா ?
*********************************
வாங்க சக்தி,நேத்து ஏன் எழுத்துப்பிழைகள் கூடிச்சு ?வேலைக்குப் போகும் அவசரமும் கூட.அதுதானோ !
நன்றி கருணாகரசு.
வந்தமைக்கும்கருத்துக்கும்.ஏதாவது பிழைகள் கண்டால் சொல்ல உரிமை இருக்கு.நானும் திருந்திக்கொள்வேன்.
**********************************
மாதவ் வாங்க.கலகலன்னு சினிமா நடிகைகள் படமெல்லாம் போட்டு கலக்கலா கவிதை எழுத நீங்களெல்லாம் இருக்கீங்களே.அதான் நான் கொஞ்சம் மாறுதலா !சோகமா !
**********************************
//துபாய் ராஜா...//இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்துகொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!//
இந்த எண்ணம் தோன்றாத மனிதரே இருக்கமுடியாது.//
நான் நிச்சயமா மறுதலிக்கிறேன் ராஜா.இரவலிலிலேயே காலம் கழிப்பவர்கள் நிறையப்பேர்.
வாங்க நேசன்.விடுமுறையானாலும் கவிதைக் காற்றுக்குள்தான் நீங்கள்.நன்றி.நீங்கள் சொன்னபடி மனுஷி என்றே மாற்றிவிட்டேன்.
இன்னும் அழகாய்த்தான்
இருக்கி(றேன்)றது கவிதை.
********************************
வசந்த்,வாங்க.என் கவிதைகளை விட உங்கள் சிந்தனைகள் இன்னும் அழகாய் இருக்கு.
*******************************
முதன் முதலாய் வந்த டாக்டர் முருகானந்தம் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.
வாங்க டாக்டர்.எப்பவும் வந்து என்னோட மனசுக்கு மருந்து போட்டுப் போற உங்களுக்கு நான் நிறைய நன்றி சொல்லணும்.
சந்தோஷமாயிருக்கு டாக்டர்.
**********************************
//C .....
அடுத்த முறை சுமாரான கவிதை எழுத என் வாழ்த்துக்கள்.//
யாராச்சும் சொல்லுங்க.இந்தப் பின்னூட்டம் பற்றி.எனக்கு என்னன்னு புரில.என்னைத் திட்றாங்களா.
வாழ்த்துறாங்களா !
எதுக்கும் நன்றி சொல்லி வைக்கிறேன் இவங்களுக்கு.
வாங்க ஞானம்.நன்றி உங்களுக்கும்.
********************************
பெருமாள் உண்மையில் உணர்ந்துதான் எழுதினேன்.
எங்களைவிட காக்கையும் குருவிகளும் உயர்ந்தவையே.
*********************************
மேடி வாங்க.அழகா நிதானமா ரசிச்சிருக்கீங்க.அது றாக்கைதான்.
அலமாரித் தட்டுக்களைச் சொல்வார்கள்தானே.தெரிந்தால் சொல்லுங்கள்.
i am seeing your blog after a long time...keep writing..kathithais are nice...
ஜமால் வாங்க. காதல் கவிதை எவ்ளோ எழுதினாலும் அதிலுள்ள காதல் தீராது.அப்பிடித்தானே.சண்டே ஸ்பெஷல் காதல் கவிதை போட்டாப் போச்சு.நாங்க மேவீயைக் கண்டுக்க வேணாம்.அவர் சொன்னது எங்களுக்கு சரியா காதில விழல.
**********************************
கண்ணன் உங்கள் கருத்துக்கும் நன்றி.இன்னும் வாங்க.
********************************
கார்த்தி சந்தோஷம்.உங்கள் வாழ்வியல் பதிவும் பார்த்தேன்.அருமை.
***********************************
வாங்க ராஜா அண்ணா.சோகம் கூடும்போதும் சுமையான வரிகள் வந்து தாக்குகிறது.
வாங்க மேவீ.ஏன் வாழ்வியல் பற்றிய கவிதைகள் குறைவாயிருக்கு என்று கேட்டபடியால் வந்த வரிகள்தான் இவைகள்.என்றாலும் மெல்லிய சோகம்தான்.
உங்களுக்கும் நன்றி மேவீ.
என்ன அழுத்தமாய் இன்னும் புரில.மேவீ காதலும் எழுதணும் இடைக்கிடை.இல்லாட்டி சுவாரஸ்யம் இல்லையே.வாழ்வில் காதல் (எதிலும்)இல்லாதபடியால்தானே சோகம் கூடுகிறது.
********************************
கலா நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் எம்மை ஏமாற்றும்போது சிலையாகவே மூச்சில்லாமல் இருந்துவிடலாம் போல ஒரு ஆசைதான்.ஆனால் !
*********************************
வாங்க வாங்க இசக்கிமுத்து.ரொம்ப நாளாவே காணோம்.சுகம்தானே.
ஞாபகமாய் வந்ததுக்கு மிக்க நன்றி.
///மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்.///
அப்பப்போ எழுதுவீங்க பாருங்க.... ரொம்ப அருமைங்க.....
வாழ்த்துக்கள்....
கவிதையில் மெல்லிய சோகம் தெரிந்தாலும் வழக்கம்போல் நல்ல கவிதை ஹேமா
//இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்துகொள்கிறேன் மீண்டும்.
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!///
னராக இருக்கிறது ஹேமா . வாழ்த்துக்கள்.
நல்லாருக்குங்க கவிதை. படித்த எல்லாருக்கும் கவிதையின் சோகம் பற்றி கூறியிருப்பதிலிருந்தே தெரிகிறது அதன் தாக்கம்.
//ஆனால் மனுஷியாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.//
அருமை, அருமை...
அனைத்து வரிகளுக்கு அருமை...
நல்லா இருக்கு ஹேமா...
முதல் மற்றும் கடைசிப்பத்திகள் இன்னும் சிறப்பு...
வாங்க அபூ.இனிய ரம்ழான் வாழ்த்துக்கள்.
**********************************
நவாஸ் உங்களுக்கும் இனிய ரம்ழான் வழ்த்துக்கள்.
**********************************
ஜெஸி நன்றி உங்களுக்கும்.வாங்கோ.
***********************************
நன்றி மணி.கவிதை என் மனதின் தாக்கம்தான்.
**********************************
சந்ரு நிறைய நாளாய்க் காணோம்.
இலங்கைப் பதிரிவாளர் ஒன்றுகூடல் என்று நினைக்கிறேன்.நல்லது.
வாழ்த்துக்கள் சந்ரு.
**********************************
வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.
உங்கள் கருத்து எப்பவும் என்னை ஊக்குவிக்கும்.
தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.
என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...
நல்லாருக்கு
Post a Comment