தமிழ் பாடம் சொல்லித் தந்ததை மறக்க முடியவில்ல.
முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.
மூத்திரக்காய் உடைத்து ஊற்றி
சிலேட்டில் எழுத்து அழித்ததையும் மறக்கவில்ல.
"ஏண்டா லேட்"என்று வாத்தியார் கேட்க
"பிட்னிப் புல்லில யாரோ செத்துக்கிடக்கிறாங்க.
அவங்க எழும்பிப் போறவரைக்கும்
பத்தைக்குள்ள ஒழிச்சிருந்தேன் சார்"
வெங்கடாசலம் சொன்னதையும் மறக்கவில்லை.
சின்னக் காளிகோவில் அதுவர ஒரு அரசமரத்தடி புத்தர்
பிறகு ஐயனார் சிலை - பாலம் - வயல்வெளி - ஆறு கடக்க
ஒண்ணு ரெண்டு மூணு என்று மேல்கணக்கு முக்கில்
படிகளைப் பாடமாய் படித்தபடி
அப்பாவின் கை பிடித்து நடந்ததையும் மறக்கவில்லை.
போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை !!!
[பா.ராஜாராம் அவர்கள் கேட்டதற்கான நினைவலை]
(ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
32 comments:
மொத்தத்தில் மறக்க முடியா நினைவுகளின் தொகுப்பாட்டம். நன்று. வாழ்த்துக்கள் ஹேமா...
//போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை !!!//
மறக்க முடியவில்லை... ஆம் எப்படி மறப்பது???
ரொம்ப நெகிழ்ச்சியான மலரும் நினைவுகள் ஹேமா
நெகிழ்வான கவிதை நிறைவான எண்ணங்கள்
இனிமையான நினைவுகளை அழகாக கவிதையாய் தந்திருக்கிறிங்க....
இதுதான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றதோ....
கவிதையும் வந்தாத்சு நினைவுகளையும் மீட்டாச்சு...
மிக நெகிழ்வான நினைவுலகிற்கு அழைத்துச் சென்ற கவிதை இது பா.ரா. வின் தளத்திலேயே சொல்ல நினைத்தேன்
நல்ல கவிதை
சாபக்கேடான நாட்டில் எல்லாமே கதையும் ,கண்ணீரும்தான்
அன்நிகழ்வுகளை,நிகழ்ந்தவைகளை மறக்க முடியுமா?ஹேமா
அஃதிணைகள் அழிந்தால் பரவாயில்லை உயர்திணைகள் ஓ!ஓ
என் தொடக்கப் பள்ளி சில மாணவ,மாணவிகள் உயிருடன்{ இன்று }
இல்லையே ஹேமா
பின்னோக்கி நெகிழ வைத்த கவிதை நன்றி சகி.
//போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று...//
இதில் "என்" என்றச் சொல் கொண்டாடும் உரிமை தான் இந்தக் கவிதையின் மிகப்பெரும் பலம் ஹேமா.(இப்படி இன்னும் எத்தனையோ பேருக்கு சொந்தமில்லையா? நாம் பயின்று கடக்கும் பள்ளிகள்)
நிறைவான நினைவலைகள்!
நெகிழ்ச்சியான மலரும் நினைவுகள் தோழி..:-)))
மொத்தத்தில் எமது வாழ்க்கை நினைவாகவே முடிந்துவிடுகிறது அக்கா!! அருமையான நினைவுகள்! மெய்ச்சிலிக்கின்றது!!!!
//முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு//
//மூத்திரக்காய் உடைத்து ஊற்றி
சிலேட்டில் எழுத்து அழித்ததை//
நாங்கள் கோவக்காய் பயன் படுத்துவோம்.
மிகவும் அருமையா இருந்த கவிதை என்னுள்,எனது ஞாபகச் சிறகை விரிக்கிறது. மகிழ்ந்த காலங்களை நினைப்பதுவும் ஒரு சுகம்தானே!!
நெகிழ்வான வரிகள்
எப்படியும் மனம் கனத்து விடுகிறது தங்கள் வரிகளில்
நல்ல நினைவு மீட்டல் ...
நினைவுகள் - மறக்க இயலாத நினைவுகள்...
வாழ்க்கை நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கின்றதோ...
// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.//
என் சிறுவயது கணித ஆசான் அரசு அவர்களை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.
போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை !!!
மனம் நெகிழ வைத்த வரிகள்
என் பள்ளி நினைவலைகள் மீண்டும் உதிக்கின்றது
நல்ல நினைவலைகள்....!! இடையிடையே.... சோகக் அலைகள் ...!! அருமை....!!!
Nalla pathivu-palli ninaivuhaludan,aanalum ungal soham kadaisi varihalil Hema.
நல்ல நினைவனைகள் ஹேமா... எல்லோருக்கும் இது போன்ற நினைவலைகள் இருக்கும். அழகான வார்த்தைகளை கோர்த்து சிறப்பான ஒரு கவிதையை தந்து இருக்கிறீர்கள்.
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே....
மீட்டெடுத்து மீட்டப் பட்ட நினைவின் நரம்புகள் சேர்க்கும் சுருதிகள் சேர்த்தது சுகம்...
சந்தோசம் தான ... எங்க எல்லோருக்கும் பள்ளி பருவத்தை நியாபகப்டுத்திட்டீங்க ...
சேட்டை கொஞ்சம் அதிகமோ..
கவிதைவரிகள் உடைத்துவிட்டது...அந்த சுவற்றைப்போல என்னையும்.இதே போல என் பள்ளியையும் எழுதி என்னேடு படிதவர்களுக்கு அதை காணிக்கையாக்க வேண்டும் என்பது என் ஆசை.
நல்ல நினைவுகள்
//போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரியமுடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை !!!//
ஏன் ஹேமா நீங்க திரும்ப ஊருக்கு போகமாட்டீங்களா?
சுவ்ஸ்லயே செட்டில்டா?
உள்ளத்தை உருக்கிய நினைவுக் கவிதை.
வாழ்த்துக்கள்.
நினைவலைகள் மனதை எங்கோ இழுத்து சென்று விட்டன.
கண்களை ஈரமாக்கிய வரிகள்.
நெகிழ்ச்சியான பதிவு.
arumaiyana kavithai ....
kadasi vari innum stress thanthu irukkalame
piragu naan convent la padithathal... oru attachment enakku thontra villai intha kavithai paditha pin
ரெட் மாதவ் வந்தாச்சு.நயன் தாரா படம் புத்தகத்துக்குள்ள வச்சிருக்ககூடாது.சரியா.
நவாஸ் வந்தாச்சு.அழகாக் கவிதை எழுதி கவிஜன்னு சொல்லக்கூடாது சரியோ.
வேல்கண்ணன் புதுசா வந்திருக்கார்.
அவரை எல்லோருமா கை தட்டு வரவேத்துக்குவோம்.
சந்ரு வந்திட்டார்.பாருங்க இவர் கொப்பியை.தமிழ் எவ்ளோ அழகா எழுது வச்சிருக்கார்ன்னு.
நேசன் வந்தாச்சு.அப்பாடி....கவிதை கலக்கலா எழுதுறார்.என்ன சிலசமயம் புரியாத ஆழமான தமிழில இருக்கு.அதான்...
கலா வந்திட்டார்.இவரும் காதல் கவிதை மன்னிதான்.என்ன கொஞ்சம் குழப்படி.
சத்ரியன் குழப்படி பண்ணாம இருங்க.கலாவும் சத்ரியனும் சத்தம் போடாம நல்ல பிள்ளைங்களா இருங்க.இவர் காதல் கவிதை மன்னன்.
கார்த்திகைப் பாண்டியன் என்னா இருந்து இருந்து இந்தப் பக்கம் காணமுடில.ஒழுங்கா வரணும் சரியா.
கலை.இவர் இப்போ என்ன செய்றார்ன்னே தெரில.அக்கா தம்பி எல்லாம் வீட்ல.இங்க ஒழுங்கா வகுப்பு வராட்டி...சரியா பதிவு ஒண்ணும் போடறதில்ல.கவினும் கமலும் இல்லாம கொஞ்சம் குழப்படி குறைஞ்சிருக்கு.
அரங்கப்பெருமாள்.இவரும் புதுசா சேர்ந்திருக்கார்.கை தட்டி எங்களோட சேர்த்துக்குவோம்.
அத்திரியும்,நடுவில ரொம்ப காலம் காணல.யூத் இவரும் நல்ல ஒரு பதிவாளர்.
ஜமால்தான் எப்பவும்,என்னாச்சும் வந்து படிச்சிட்டு போவார்.ரொம்ப நல்ல பெடியன்.
இராகவன்வாங்கோ...வாங்கோ.
எப்பிடி விடுமுறை எல்லாம்.
சந்தோஷமா.நீங்க திரும்பவும் வந்தது மிக்க சந்தோஷம்.இனிக் கலக்கலாம்.
சக்தி வந்திருக்காங்க.இவங்க ரொம்ப அமைதி.நல்ல கவிதை,கட்டுரைகள் எழுதுறாங்க.
மேடி வந்துக்கார்.இவரோட கொப்பி பார்த்தா சின்னதா இருந்தாலும் சிந்திக்க வைக்கும்.இவரும் பரவாயில்ல.
முனியப்பன்.இவர் ஒரு டாக்டர்.
அப்பாபிள்ளை.ரொம்பச் செல்லம்.
ஆனாலும் பாருங்க நல்ல படிக்கிறார்.
எங்க பள்ளிக்கூடத்துக்கும் ஓடி வந்திடுவார்.
ஆனந்த் வந்தாச்சா.இவரும் ஒழுங்கா வந்து படிக்கிறார்.மனசுக்கு பிடிச்ச மட்டுமே நல்லா இருக்குன்னு சந்தோஷமா சொல்லுவார்.இல்லா சும்மா ஒரு நல்லாயிருக்குதான்.
இவரோட கொப்பில படவிமர்சனங்கள் பர்த்துத்தான் நான் இப்போ எல்லாம் நான் படங்கள் பாக்கிறது.இப்போ ரொம்ப நாளாக் காணோம்.
தமிழ்ப்பறவை என்னோட அருமை அண்ணா.இவருக்கு சின்னச் சிக்கல் வேலைல.அதனாலதான் பள்ளிக்கூடம் அடிக்கடி வாறதில்ல.
என்றாலும் அழகா படங்கள் கீறி வச்சிருக்கார்.
இரவீ வந்திருக்காரா.எப்பாச்சும் எப்பாச்சும் தன்னோட கொப்பில எதையாச்சும் எழுதி வைக்கிறார்.
நல்ல ஒரு ரசிகர் மட்டும்.முயலுக்கு மூணு கால்ன்னு சொல்ற நண்பரும் கூட.
கருணாகரசு வந்திட்டார்.நிறையப் படிச்சிருக்கார்.ஆனாலும் இங்கயும் வந்து போவார்.சமூகச் சிந்தனையோட கவிதைகள் எழுதுறார்.ஈழத்துக் கவலையும் அடி மனசில இருக்கு.மேடைப் பேச்சாளரும் கூட.
வசந்த் இப்போ எல்லாம் அடிக்கடி வாறார்.ரொம்பக் குசும்பு.நான் சுவிஸில தான் இனி.ஊர்ல போய் அங்க அடிமையா நின்மதி இல்லாம இருக்கிறதை விட இன்னொரு நாட்டில சந்தோஷ்மா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
முகிலனுக்கு இப்போ நிறைய நேரம் கிடைக்குது.அடிக்கடி வந்து படிச்சு போறார்.நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்துக் கதை சொல்றார்.
துபாய் ராஜா வந்திருக்கார்.நடிகைகள் படமெல்லாம் போட்டு அழகா காதல் கவிதைதான்.பள்ளிகூடம் ஒழுங்கா வாறார்.
மேவி ஒரு சின்னப் பெடியன்.
தன்னால முடிஞ்சதை எழுதி வச்சிருக்கார் தன்னோட கொப்பில.
குழந்தைநிலாவின் ஆரம்பகால சிநேகிதன்.என்ன எப்பவும் நக்கீரர் போல ஏதாச்சும் குறை சொல்லுவார்.
எனக்குத் திருத்தவும் மனசு வராது.
இன்னும் என்னை எழுதச் சொன்ன பா.ராஜாராம் வரல.வரட்டும் அவரை முட்டிக்காலிலதான் நிப்பாட்டணும்.
இல்லாட்டி அவரோட சித்தப்பாகிட்ட சொல்லிக் குடுக்கணும்.
//இன்னும் என்னை எழுதச் சொன்ன பா.ராஜாராம் வரல.வரட்டும் அவரை முட்டிக்காலிலதான் நிப்பாட்டணும்.
இல்லாட்டி அவரோட சித்தப்பாகிட்ட சொல்லிக் குடுக்கணும்.//
மிகவும் ரசித்து சிரித்தேன் :)
நல்லதொரு கவிதை
"ஆஜர் டீச்செர்!."..அமிர்தம் சொல்லி இங்கு வர வாய்த்தது.
வந்தால் ராஜா முட்டிக்காலில்...ஆனாலும் சிரிப்பு அடங்கலை.
இன்னும் சித்தப்பா வரலை...டீச்சர் நினைவில் கொள்ளுங்கள்,
பிரம்படி.
உக்கி.
பெஞ்சு மேல் ஏறி நிற்றல்.
இவ்வளவும் பாக்கி.
ஐயோ பாவம்
சித்தப்பா..
கண்ணீர் வரவைத்த கவிதை..
வாங்கோ வாங்கோ அமிர்தம் அம்மா,ராஜா.ஏன் சிரிப்பு வாத்தியார் பிந்தி வந்தாலும் முட்டிக்கால் போடத்தான் வேணும்.எங்கே சித்தப்பா.சுகம்தானே.ஆளையே காணோம்.இன்னும் ராஜா வரலன்னா அவரோட பதிவுக்குப் போய் சொல்லிக் குடுத்திருப்பேன்.நல்ல வேளை சித்தப்பா பிரம்பு எடுக்க முந்தி அமிர்தம் அம்மா சொன்னபடியா பள்ளிக்கூடம் பிந்தினாலும் வந்து தப்பிச்சிட்டீங்க.இனி இப்பிடி செய்யாதீங்க.சித்தப்பா இன்னும் வரல.பாவம் அவர் வயசுக்கு மூத்தவர்.என்னமோ அவருக்கு வரமுடில.அவரை வாற நேரத்தில மட்டும் பாத்துக்குவோம்.
அமிர்தம் அம்மா முதன் முத்லா வந்திருக்காங்க.நன்றி சொல்றேன்.
Post a Comment