ஆனால் நான் சொல்லவில்லை
வானம் அழுகிறது என்று!
பூக்கள் உதிர்ந்து விட்டதாம்.
என்றாலும் நான் சொல்ல மாட்டேன்
பூக்கள் அழகாய் இல்லை என்று.
விண்மீன்கள் ஒளி இழந்துவிட்டதால்
இரவும் நிலவும் இல்லாமலா!
அழகையே கொள்ளையடிக்கும்
எல்லையில்லா உலக அழகு.
ஓடி ஒளிந்து
முன் பின்னாய் பதுங்கி
கையசைத்து
கண்களை உயர்த்தி விரித்து
பூனையின் சீற்றத்தால்
முற்றத்து
மூலையில் முனகும்
குருவியைப் பிடிக்க முயலும்
குழந்தை போல நான்.
காதுகளே என் பார்வையாய்.
மனதிற்குள் ஓவியக் கண்காட்சி.
அங்கே எல்லாம்
எல்லோருமே ஓர் உருவமாய்.
ஆமாம்....
என் முன்னால் இறுக்கமாய் இருக்கும்
கறுப்பு என்பது எப்படியிருக்கும் ?!!!
அந்தப் படத்தில் இருக்கிற கறுப்புப் புள்ளியை அப்படியே உற்று பார்த்துக் கொண்டிருங்கள்.அந்தக் கறுப்புப் புள்ளிகளைச் சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே மறைந்துவிடும்.
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
41 comments:
ஹேமா,
வித்தையெல்லாம் வேற காட்டுவீங்களா நீங்க!?
//என் முன்னால் இறுக்கமாய் இருக்கும்
கறுப்பு என்பது எப்படியிருக்கும் ?!!!//
இதென்ன குழந்தைத்தனமா? கருப்பா தான் இருக்கும்.
//சத்ரியன் ...
ஹேமா,
வித்தையெல்லாம் வேற காட்டுவீங்களா நீங்க!?
//என் முன்னால் இறுக்கமாய் இருக்கும்
கறுப்பு என்பது எப்படியிருக்கும் ?!!!//
இதென்ன குழந்தைத்தனமா? கருப்பா தான் இருக்கும்.//
சத்ரியன்,வர வர குசும்பு கூடிப்போச்சு உங்களுக்கு.இருங்க வாறேன்.
"நடந்த துயரத்தை மட்டுமே உற்று நோக்கி கொண்டிருந்தால் நமக்காக காத்திருக்கும் சந்தோச தருணங்கள்
தன்னாலே மறைந்து விடும் ..." --சொல்லாமல் சொல்லி விட்டு .....எழுதுவதெல்லாம் பிறருக்குக்காக
மட்டும்தானா ஹேமா?"மூடிய கதவையே உற்று நோக்குவதில் நமக்காகத் திறந்திருக்கும் மற்றொரு கதவைப்
பார்க்கத் தவறி விடுகிறோம் ..."ஹெலன் ஹெல்லர் சொல்லியதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
//அண்ணாதுரை...ஹேமா?"மூடிய கதவையே உற்று நோக்குவதில் நமக்காகத் திறந்திருக்கும் மற்றொரு கதவைப்
பார்க்கத் தவறி விடுகிறோம் ..."ஹெலன் ஹெல்லர் சொல்லியதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.//
வாங்க ஐயா,இப்போதான் உங்களை நினைத்திருந்தேன்.நீங்கள் என் அப்பா போலவே சொல்கிறீர்கள்.சொல்வதை மூளை ஏற்றுக்கொண்டாலும் மனம் இழந்தவைக்கான ஈடு,
தொலத்தவைக்கான தவிப்போடுதானே ஏங்குகிறது.முயற்சியின் முனை முறித்துப் போகிறது பிரிவுகள்.
//ஓடி ஒளிந்து
முன் பின்னாய் பதுங்கி
கையசைத்து
கண்களை உயர்த்தி விரித்து
பூனையின் சீற்றத்தால்
முற்றத்து
மூலையில் முனகும்
குருவியைப் பிடிக்க முயலும்
குழந்தை போல நான்.//
காட்சியை கண்முன் கொண்டுவந்த கவிதை வரிகள்.
ஹேமாக்கா,கலக்கறீங்க.
வேதனைகளை வெளிப்படுத்திதான் நாம் நம்மை ஆற்றுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
காதுகளே என் பார்வையாய்.
மனதிற்குள் ஓவியக் கண்காட்சி.
அங்கே எல்லாம்
எல்லோருமே ஓர் உருவமாய்.
ஆமாம்....
என் முன்னால் இறுக்கமாய் இருக்கும்
கறுப்பு என்பது எப்படியிருக்கும் ?!!!
அழகாய் இருக்கும்
ஹேமா உங்கள் கவிதையை போல்
வானம் இருண்டு கிடக்கிறதாம்.
ஆனால் நான் சொல்லவில்லை
வானம் அழுகிறது என்று!
பூக்கள் உதிர்ந்து விட்டதாம்.
என்றாலும் நான் சொல்ல மாட்டேன்
பூக்கள் அழகாய் இல்லை என்று.//
நோக்கண் நோக்க பொறுத்தது... அதாவது 1.அழகிய ரோசா செடியில் முள். 2.முள் செடியில் அழகிய ரோசா... பார்வை மனதைப் பொறுத்தது...கவிதை வாசம் வீசும்...
அய்யய்யோ மறந்து போய்ட்டேன். படம் எங்கே எடுத்திங்க?
வித்தியாசமா இருக்கு!
//ஓடி ஒளிந்து
முன் பின்னாய் பதுங்கி
கையசைத்து
கண்களை உயர்த்தி விரித்து
பூனையின் சீற்றத்தால்
முற்றத்து
மூலையில் முனகும்
குருவியைப் பிடிக்க முயலும்
குழந்தை போல நான்.//
இந்த வரிகள் எங்கோ கொண்டு போய் விட்டது..
Nice Hema.
//வானம் இருண்டு கிடக்கிறதாம்.
ஆனால் நான் சொல்லவில்லை
வானம் அழுகிறது என்று!//
வானம் அழுதால் (மழை வந்தால்) கார்மேகம் தூரம் சென்று வெளிச்சம் வந்து விடும்...
அந்தப் படத்தில் இருக்கிற கறுப்புப் புள்ளியை அப்படியே உற்று பார்த்துக் கொண்டிருங்கள்.அந்தக் கறுப்புப் புள்ளிகளைச் சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே மறைந்துவிடும்.]]
உண்மை தான் ஹேமா!
நாம் ஒன்றின் மீது அதிக கவணம் செலுத்துவோமானால் அருகே உள்ள அனைத்தும் மறைந்தே போகும் ...
//என் முன்னால் இறுக்கமாய் இருக்கும்
கறுப்பு என்பது எப்படியிருக்கும் ?!!!//
வரிகளும் அழகு...
அந்த படமும் அழகு...
பாராட்டுகள் ஹேமா...
வலியை வார்த்தைகள் ஒவ்வொன்றும்
விளம்புகிறது
நட்புடன் ஜமால் said...
அந்தப் படத்தில் இருக்கிற கறுப்புப் புள்ளியை அப்படியே உற்று பார்த்துக் கொண்டிருங்கள்.அந்தக் கறுப்புப் புள்ளிகளைச் சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே மறைந்துவிடும்.]]
உண்மை தான் ஹேமா!
நாம் ஒன்றின் மீது அதிக கவணம் செலுத்துவோமானால் அருகே உள்ள அனைத்தும் மறைந்தே போகும்
ரிப்பீட்டு.
கவிதை வலி.
படமும் கவிதையும் அழகு
உங்க ப்ரொஃபைல் படமும் அழகு
நலம்தானா தோழி? உங்கள் கவிதை சிந்திக்க வைக்கிறது.
உண்மைதான். உதிரும் பூக்களெல்லாம் அழகில்லை என்று சொல்ல முடியுமா?
அந்தக் கறுப்புப் புள்ளி , கண்ணால் காண்பது எல்லாம் உண்மையல்ல என்கிறது. வாழ்த்துக்கள்.
//துபாய் ராஜா...காட்சியை கண்முன் கொண்டுவந்த கவிதை வரிகள்.
ஹேமாக்கா,கலக்கறீங்க.//
வாங்க தம்பி துபாய் ராஜா.
கமல்,கவின் இல்லாத குறை.
சுகம்தானே !நன்றி உங்க கருத்துக்கு.
//அத்திவெட்டி ஜோதிபாரதி...
வேதனைகளை வெளிப்படுத்திதான் நாம் நம்மை ஆற்றுப் படுத்திக் கொள்ள வேண்டும்.//
உண்மைதான் ஜோதிபாரதி.
எழுதுவதால் மனதிற்கு நிறையவே நின்மதி கிடைக்கிறது.உங்கள் வரவு மிகுந்த சந்தோஷம்.
//சக்தி...அழகாய் இருக்கும்
ஹேமா உங்கள் கவிதையை போல்.//
வாங்கோ சக்தி.கறுப்பு எப்பவுமே அழகுதானே !
//கருணாகரசு...நோக்கண் நோக்க பொறுத்தது... அதாவது 1.அழகிய ரோசா செடியில் முள். 2.முள் செடியில் அழகிய ரோசா... பார்வை மனதைப் பொறுத்தது...கவிதை வாசம் வீசும்...//
கருணாகரசு மனசுக்கு ஆறுதலான உங்கள் வார்த்தைக்கு நன்றி.
படம் நெட்டில் சுட்டது.ஆனால் ஒரு வித்தியாசமான படம்.
//சந்ரு...இந்த வரிகள் எங்கோ கொண்டு போய் விட்டது..//
சந்ரு,வீட்ல செய்த அட்டகாசங்கள் ஞாபகம் வந்திட்டுதோ!
கவிதையும் படங்களும் நன்று. எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த படத்தை...
//இழந்தவைக்கான ஈடு,
தொலத்தவைக்கான தவிப்போடுதானே ஏங்குகிறது.முயற்சியின் முனை முறித்துப் போகிறது பிரிவுகள்.//
ஒரு நிமிஷம் கலங்க வச்சிருச்சுங்க இந்த வரிகள்
அடுத்த கவிதை சந்தோசமா இருக்கணும்னு கேட்டுக்குறேன் சரியா
:)
அழுவாச்சி கவிதை எழுதத்தான் நாங்க இருக்கோம்ல
//Muniappan Pakkangal said...
Nice Hema.//
வாங்க டாக்டர்.நன்றியும் கூட.
//கீழை ராஸா...வானம் அழுதால் (மழை வந்தால்) கார்மேகம் தூரம் சென்று வெளிச்சம் வந்து விடும்...//
நன்றி ராஸா.மனம் வெதும்பும் நேரங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சுகமாயிருக்கு
//ஜமால்...உண்மை தான் ஹேமா!
நாம் ஒன்றின் மீது அதிக கவணம் செலுத்துவோமானால் அருகே உள்ள அனைத்தும் மறைந்தே போகும் ...//
உண்மைதான் ஜமால்.என்றாலும் மனம் சொன்னதைக் கேக்குதா?
குரங்கு அது.
//ஆ.ஞானசேகரன்...
வரிகளும் அழகு...
அந்த படமும் அழகு...
பாராட்டுகள் ஹேமா...//
நன்றி ஞானசேகரன்.படம்தான் இந்தக் கவிதை எழுதத் தூண்டியது.
//திகழ்மிளிர் ...
வலியை வார்த்தைகள் ஒவ்வொன்றும்
விளம்புகிறது.//
அழகு தமிழ் திகழ் தோழி,என் வீட்டுத் தாழ் தள்ளி குழந்தைநிலாவுக்குள் நுழைந்தமைக்கு நன்றி.
வாங்க முத்துராமலிங்கம்.
நடப்பவைகள் மனம் ஆறுதல்படுபவையாக இல்லை.
இன்றைய செய்திகள் உட்பட.
அருமை கவி படைத்த
பெருமை மிகு கவியே
சாரல் போலும் தூவியது
உனது வரிகள்.
வாழ்க பல்லாண்டு நீவிர்.
எல்லாரும் ஒன்றாய்
இங்கே வாழ்த்துகிறோம்.
அட... ஆமாங்க...... கரும்புள்ளியை பார்க்கும்போது ... வண்ணங்கள் அவ்வளவாக தெரிவதில்லை...!!
இதுபோலதான் வாழ்க்கையும், நம் இலக்கை மட்டும் சரியாக கவனித்து சென்றால் ... சுற்றி இருக்கும் இடையூறுகள் தானாக மறையும் ....!!
அழகு ..!! அருமை ...!! வாழ்த்துக்கள் ...!!
ஜமால் மற்றும் லவ்டேல் மேடி சொன்னதை வழிமொழிகிறேன்...
தன்னம்பிக்கை ஊட்டும் படம்
{ஹேமாவா..கொக்கா..}
நன்றி கவிதை ...என்னவென்று
சொல்ல... எல்லாமே அழகுதான்
ஹேமாவைப் போல்.
சொன்ன வாய்க்கு ஒரு சொக்லட்
........
கவிதையும் சூப்பர், படமும் சூப்பர்
கவிதையும் படமும் அருமை, வாழ்த்துக்கள்.
ஹேமா, மேவீ க்கு நீங்க தந்த( திருக்குறள் பற்றிய) குட்டை பார்த்தேன்.அவர் சிந்தனை எனக்கும் பிடிக்கல நானும் கொஞ்சம் மென்மையாய் சண்டைபிடித்துவிட்டு வந்தேன்.
இந்த கவிதை படித்ததும், மனுஷ்யபுத்திரனின் இருட்டு கவிதை ஞாபகம் வந்தது. நல்ல கவிதை ஹேமா.
very very nice u r poems
Post a Comment