*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, July 27, 2009

கண்ணுக்குள் என்னவன்...

கண்ணாடி வழி கவனித்தேன்
கண் ஒன்று என்றுதான்.
அடுத்த கணம் அசந்துவிட்டேன்
கண்ணுக்குள் என்னவனோ!

கேட்டிருந்தேன் பூ ஒன்று.
பூப்பறிக்கப் போனவன்
பூந்தளிர் உன் சிறகுக்குள்.
சிக்கினானோ சிலவேளை!
என்னைவிட நீ அழகோ
இல்லை...
உன் காந்தக்கண் கூட அழகோ!

பறித்தது நீ...
பறிகொடுத்தவள் நான்.
இமையென்ற சிறைக்குள்ளே
சிறையாகிப்போனானே.
இமைக்காமல் கிடக்கின்றான்
உன் ஆழ விழிக்குள்ளே.

பொம்மை காட்டினாயா
பொத்தி வைத்த
பூஞ்சிரிப்பால் மயக்கினாயா.
பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.

விட்டுவிடு என்னவனை.
வேண்டாமடி பூ எனக்கு.
எனை விட்டுப் பிரிந்தபோது
அவன் விட்ட சுட்ட கண்ணீர்
நான் நீந்தும் வெந்நீராய்
இப்போதும்.

உலகளவு காதல்
என்றாலும்...
அடி தோழி
என் காதல் உன் விழி அளவு !!!

ஹேமா(சுவிஸ்)

படம் தந்தது நண்பர் கடையம் ஆனந்த்.நன்றி ஆனந்த்.
கண்ணைப் பிடித்த நண்பர் சாமிநாதனுக்கும் வாழ்த்துக்கள்.

62 comments:

உங்கள் ராட் மாதவ் said...

கவிதையும் கூடவே புகைப்படமும் அழகோ அழகு. வாழ்த்துக்கள்...

Admin said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதையோடு படமும் அழகாகியது.......

S.A. நவாஸுதீன் said...

படம் போன்றே கவிதையும் அழகு

துபாய் ராஜா said...

கவிதை அருமை.

மீனும்,குழந்தையும் மிக அருமை.

அன்புடன் நான் said...

நல்லா இருக்கு படமும்...கவிதையும்.

ஹேமா said...

வாங்க வங்க மாதவ்.எங்க போனீங்க இவ்ளோ நாளும்.வரக்கூடாதுன்னு இருந்தீங்களோ!

ஆனந்துக்கு நன்றி சொல்லுங்க.படம் அவர் தந்தது.நன்றி மாதவ்.

ஹேமா said...

சந்ரு நன்றி சின்னக் கருத்துக்கு.

ஹேமா said...

பிரியமுடன்.... வசந்த்,காதல் கவிதை என் பக்கம் வர வச்சிடுச்சு.வாங்க.நன்றி.

நட்புடன் ஜமால் said...

கவிதை அம்பூட்டு அழகொன்னு இல்லை

படத்தை பார்த்தால்.

ஹேமா said...

நன்றி நவாஸ்.நானும் அந்தப் படத்தை ரசித்தே அதற்கு ஒரு கவிதை எழுத என்று நினைத்திருந்தேன்.

இனி ஆனந்த் வந்துதான் சொல்லணும் எப்பிடின்னு.

ஹேமா said...

//நட்புடன் ஜமால் ...
கவிதை அம்பூட்டு அழகொன்னு இல்லை

படத்தை பார்த்தால்.//

ஜமால்,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீண்டும்.

யார்...அங்கே.இவருக்குக் கொஞ்சம் பிறந்தநாளும் அதுவுமா கொஞ்சம் சொக்லேட் கொடுங்கள்.என் கவிதை அழகு இல்ல.அதைவிட அந்தப் படம்தான் அழகுன்னு சொல்லிட்டார்.

ஹேமா said...

துபாய் ராஜா,முதன் முதலா வந்திருக்கீங்க.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஹேமா said...

நன்றி கருணாகரசு.உங்கள் புரட்சியான கவிதைகளுக்கு இது ஈடில்லை.
ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.

நேசமித்ரன் said...

கவிதை அழகு
நல்லா இருக்கு படமும்
வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நன்றி ஹேமா!

தங்கள் கவிதையை அழகில்லை என்றதன் நோக்கம் படம் மிக அழகு என சொல்லத்தான்.

அது உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறன்.

Kala said...

மானோ,மீனோ.குழந்தையோ,குமரியோ,பெண்ணோ!இவைகள்,இவர்கள்
எல்லோரிடமும்’யாரையும்’கவரும் தன்மை கண்களுக்கல்லவோ

காரிகை நீ ‘ஆழ’விடுத்த கவிதை அளவிட முடியாது
உலக விழிகள் மொய்த்து அளவெடுக்கின்றன.

நட்புடன் ஜமால் said...

அவன் விட்ட சுட்ட கண்ணீர்
நான் நீந்தும் வெந்நீராய்
இப்போதும்.
]]


அம்பூட்டு கண்ணீரா!

Anonymous said...

அழகான கவிதை. ரொம்ப நல்லாயிருக்கு.

ஹேமா said...

ஆனந்த்,உங்களை முதாலாவதாக எதிர்பார்த்தேன்.இப்போதான் வந்திருக்கீங்க.

முடிந்தால் உங்கள் நண்பர் சாமிநாதனையும் வந்து ஒரு பின்னூட்டம் தரச்சொல்லுங்க.

ஹேமா said...

நேசன்,உங்கள் குடைஞ்செடுக்கும் ஆரோக்யமான கவிதைகளை விடவா !நன்றி.

ஹேமா said...

ஜமால்,நானும் சும்மாதான்.
பிறந்தநாள் பேபி சந்தோஷமா இருக்கணும் எப்பவும்.

ஹேமா said...

//Kala said...
மானோ,மீனோ.குழந்தையோ,குமரியோ,பெண்ணோ!இவைகள்,இவர்கள்
எல்லோரிடமும்’யாரையும்’கவரும் தன்மை கண்களுக்கல்லவோ

காரிகை நீ ‘ஆழ’விடுத்த கவிதை அளவிட முடியாது
உலக விழிகள் மொய்த்து அளவெடுக்கின்றன.//

கலா நன்றி.தோழி உன் விழி மொய்த்த என் குழந்தைநிலா வும் சந்தோஷக் களத்தில் இப்போது.

மேவி... said...

kavithaiyaai kulanthai irukka.... piragu kavithaiyai padikka eppadi manasu varum ????


kulanthai avvalavu alagu

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

காதல் கவிதை அழகாக இருக்கிறது. படமும் அழகு.

அப்துல்மாலிக் said...

படத்திற்கேற்ற கவிதையா? இல்லை கவிதைக்கு படமா

எப்படியிருந்தாலும் ரசித்தேன்

அமுதா said...

அழகு

சத்ரியன் said...

//பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.//
*****கள்ளியடி நீ.*********

தோழியை கள்ளி என்றெல்லாம் திட்டக்கூடாது, சரியா தோழி.
உங்களிடம் அன்பும், கோபம் சரி பாதி இருக்கும்போல் தெரிகின்றது.

கும்மாச்சி said...

படமும் கவிதையும் அருமை, வாழ்த்துக்கள்.

Unknown said...

அழகு.... அழகு....!!

கவிதையுடன் சேர்ந்ததால் படம் அழகா...... இல்லை... படத்துடன் சேர்ந்ததால் கவிதை அழகா....... என்று தெரியவில்லை.......!!!


வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்....!!!

Unknown said...

அட... இத எல்லாரும் சொல்லீட்டாங்களா...!! அப்போ வித்தியாசமா சொல்லீடுறேன்....!!



கவிதையும் ... படமும்...... நல்லாருக்கு......... ஆனா....... நல்லால...........!!!

ஹேமா said...

ஆனந்த்,மேவி கண் வச்சுட்டார்.குழந்தைக்குச் சுத்திப் போடச் சொல்லுங்க.

நன்றி மேவி ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்தப்பக்கம்.

ஹேமா said...

ஜெஸி எங்கே ஆளைக் காணேல்ல.
நல்லூர்த் திருவிழாத் தொடங்கியாச்சு.ஒருவேளை ஊருக்குப் போயாச்சோ எண்டுகூட நினைச்சன்.

ஹேமா said...

//அபுஅஃப்ஸர்...
படத்திற்கேற்ற கவிதையா? இல்லை கவிதைக்கு படமா

எப்படியிருந்தாலும் ரசித்தேன்//

அபு,படத்துக்குத்தான் வரிகள் கோர்த்துப் பார்த்தேன்.ரசிச்சால் சரி.

ஹேமா said...

அமுதா வாங்க வாங்க.எங்கே ரொம்ப நாளாக் காணோம் உங்களை ?

ஹேமா said...

//சத்ரியன்...
//பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.//
*****கள்ளியடி நீ.*********

தோழியை கள்ளி என்றெல்லாம் திட்டக்கூடாது, சரியா தோழி.
உங்களிடம் அன்பும், கோபம் சரி பாதி இருக்கும்போல் தெரிகின்றது.//

சத்ரியன்,என் எழுத்துக்களை
வைத்தே பலபேர் சொல்லியாச்சு.
இப்போ நீங்களுமா !

கீழை ராஸா said...

//உலகளவு காதல்
என்றாலும்...
அடி தோழி
என் காதல் உன் விழி அளவு !!!//

VERY NICE ( I HAVE SOME PROBLEM WITH TAMIL FONTS)

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படம் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.. கவிதை நல்ல அழகு, அந்த விழிகளைப்போல

மேவி... said...

@ hema :

ippo laptop en kitta illainga....piragu net pakkam adikkadi vara mudiyatha madiriyana sulnilai.

athan time kidaikkum pothu varen unga blog kku

மேவி... said...

40

மேவி... said...

"சத்ரியன் said...
//பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.//
*****கள்ளியடி நீ.*********

தோழியை கள்ளி என்றெல்லாம் திட்டக்கூடாது, சரியா தோழி.
உங்களிடம் அன்பும், கோபம் சரி பாதி இருக்கும்போல் தெரிகின்றது."


ada freeya vudunga ppaa ....hema chinna ponnu yetho soliruchu...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///கேட்டிருந்தேன் பூ ஒன்று.
பூப்பறிக்கப் போனவன்
பூந்தளிர் உன் சிறகுக்குள்.
சிக்கினானோ சிலவேளை!
என்னைவிட நீ அழகோ
இல்லை...
உன் காந்தக்கண் கூட அழகோ!///

ரசனை மிக்க வரிகள்.

வாழ்த்துக்கள்......

கார்த்திகைப் பாண்டியன் said...

படம் போன்றே கவிதையும் அழகு.. குட்டி பாப்பா சோ க்யூட்..

sakthi said...

பறித்தது நீ...
பறிகொடுத்தவள் நான்.
இமையென்ற சிறைக்குள்ளே
சிறையாகிப்போனானே.
இமைக்காமல் கிடக்கின்றான்
உன் ஆழ விழிக்குள்ளே.

அருமை ஹேமா

ஹேமா said...

//கீழை ராஸா...VERY NICE ( I HAVE SOME PROBLEM WITH TAMIL FONTS)//

வாங்கோ ராஸா,கணணியில் சிக்கல் இருந்தும் என் பக்கம் வந்து பின்னூட்டம் தருகிறீர்களே.மிக மிக நன்றி.கருத்துக்கும் கூட.

ஹேமா said...

நன்றி ஞானசேகரன்.உண்மையில் அந்தக் குழந்தையும் கண்ணும் மலங்க மலங்கப் பார்க்கும் மீனும் நிறைந்த அழகு.இந்தப் படத்தை எடுத்தவருக்கே அத்தனை பாராட்டுக்களும்.

ஹேமா said...

//"சத்ரியன் said...
//பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.//
*****கள்ளியடி நீ.*********

தோழியை கள்ளி என்றெல்லாம் திட்டக்கூடாது, சரியா தோழி.
உங்களிடம் அன்பும், கோபம் சரி பாதி இருக்கும்போல் தெரிகின்றது."


//Mayvee...ada freeya vudunga ppaa ....hema chinna ponnu yetho soliruchu...//

நன்றி மேவி,நேரம் கிடைக்கிறப்போ கண்டிப்பா வாங்க.எனக்காக
சத்ரியன் கிட்ட கதைச்சு சமாதானப்படுத்தினதுக்கு நன்றி சொல்றேன்.

ஹேமா said...

நன்றி அபூ பக்கர்.முதன் முதலா வந்திருக்கிறீங்க.கருத்துக்கும் மிக்க நன்றி அபூ.

- இரவீ - said...

நல்ல கவிதை ஹேமா ...

படம் அழகோ அழகு.

ஹேமா said...

//கார்த்திகைப் பாண்டியன் ...
படம் போன்றே கவிதையும் அழகு.. குட்டி பாப்பா சோ க்யூட்..//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.குட்டிப் பாப்பாவுக்கு
சுத்திப் போடணும்.ஆனா யார்...
எங்க இருக்கான்னுதான் தெரில.

ஹேமா said...

சக்தி மீண்டும் மீண்டும் வந்து ஊக்கம் தருவதற்கு மிக்க நன்றி.

ஹேமா said...

கும்மாச்சி,படத்தின் அழகால்
என் எழுத்து அடிபட்டுப் போய்விட்டது.நன்றி.

ஹேமா said...

//லவ்டேல் மேடி ...
அட... இத எல்லாரும் சொல்லீட்டாங்களா...!! அப்போ வித்தியாசமா சொல்லீடுறேன்....!!



கவிதையும் ... படமும்...... நல்லாருக்கு......... ஆனா....... நல்லால...........!!!//

மேடி நீங்க என்ன சொல்ல வாறீங்க.எது நல்லா இருக்கு.
எது நல்லா இல்லை ?
சும்மா சொல்லுங்க PLS.

ஹேமா said...

//இரவீ ...
நல்ல கவிதை ஹேமா ...

படம் அழகோ அழகு.//

ரவி நான் நினைச்சது சரியாப்போச்சு.படம் என் வரிகளையும் கொள்ளை கொண்டு போயிடுச்சு.இனி ஆனந்த் படத்துக்கு கவிதை எழுதப்போறதில்ல.போங்க.

Muniappan Pakkangal said...

Un Kaanthakann kooda azhaho-you select words aptly Hema.

Admin said...

தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..

உங்கள் கருத்துக்களுக்கு இங்கே http://shanthru.blogspot.com/2009/07/blog-post_29.html அழைக்கப்படுகிறீர்கள்..

NILAMUKILAN said...

மீன் சாப்பிட கூசும் இந்த கவிதையை படித்தபின்பு. இக்கவிதை அந்த மீன் தன துணையை தந்துவிட அச்சிறு பெண்ணிடம் இறைஞ்சி கொண்டிருக்குமாறு புரிந்து கொண்டேன்.

அகநாழிகை said...

ஹேமா,
கவிதை ரசிக்கும்படியாக இருந்தது.
அம்மா கவிதை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. எனது தேர்வுகள் காரணமாக அதிகம் வலைப்பக்கங்களில் உலாவ முடியவில்லை. இனி வருவேன். அன்பிற்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Unknown said...

//ஹேமா said...

மேடி நீங்க என்ன சொல்ல வாறீங்க.எது நல்லா இருக்கு.
எது நல்லா இல்லை ?
சும்மா சொல்லுங்க PLS. //


நீங்க நல்லவிங்களா .... கெட்டவிங்களா ன்னு கேக்குற மாதிரி இருக்கு .....


மீ டெல்லிங் சேம் ஆன்சர் : தெரியலீங்களே......!! ஆஆவ்வ்வ்வ்வ்.....!!!

பா.ராஜாராம் said...

ஹேமா...நல்ல கவிதையும் பட தேர்வும்...ஒருவேளை படத்திற்கான கவிதையோ...அவலங்கள் அற்ற ஹேமாவை பார்க்க அழகாய் இருக்கிறது.நன்றி..ஹேமா!(மற்றொன்று...தளத்தில் பாட்டு கேட்பது..மிகுந்த இதம்)

ஹேமா said...

// பா.ராஜாராம் ...
ஹேமா...நல்ல கவிதையும் பட தேர்வும்...ஒருவேளை படத்திற்கான கவிதையோ...அவலங்கள் அற்ற ஹேமாவை பார்க்க அழகாய் இருக்கிறது.நன்றி..ஹேமா!(மற்றொன்று...தளத்தில் பாட்டு கேட்பது..மிகுந்த இதம்)//

நன்றி ராஜா.கடையம் ஆனந்த் தளத்தில் எடுத்த படத்திற்காகவே கவிதை எழுதிப் பார்த்தேன். அவலங்களைக் கொஞ்சம் மறக்க என்றே சில அழகுகளை ரசிக்க-எழுத நினைத்து முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன்.

நானும் மென்மையான பாடல்கள் என்றால் அதனோடு இழைந்து
கொள்வேன்.அவ்வளவு விருப்பம்.

உங்கள் சித்தப்பாவின் தளம் போய் திரும்பி வர மனமில்லாமல் திரும்பி வந்தேன்.தன் நினைவலைகளைக் கொட்டி வைத்திருக்கிறார்.

Anonymous said...

//
உலகளவு காதல்
என்றாலும்...
அடி தோழி
என் காதல் உன் விழி அளவு !!!
//
அற்புதம். அழகான படமும் கூட.

Post a Comment