தனக்குள் புதைத்தபடி
நல்லவனாய் நடிக்கிறான் ஒருவன்.
கொஞ்சம்
கேட்டுத்தான் பாருங்களேன்
அவனையே.
என் புன்னகை பார்க்க.
பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை.
வேணாம்...தேவையே இல்லை
தேவை எனக்கு
என் இயல்பில் புன்னகை.
முறைக்கிறான்...முறைக்கிறான்
முறையோ என்று
எரிகிறான்...எரிக்கிறான்.
புன்னகை பறித்து
அன்பின் இடைவெளி குறைத்து
போர்க்களம் ஆக்குகிறான்.
சுயநலத்தின் மொத்தமாய்
சுள்ளான்போல ஒரு உருவம்.
புன்னகை புதைக்கும் பைத்தியக்காரன்.
என் புன்னகையை மீட்டிருக்கிறேன்
எத்தனையோ தடவைகள்
கெஞ்சி மன்றாடி.
சுவரில் தொங்குகிறான் நிழலாய்.
விழி சுழற்றி
பார்த்து முறைக்கிறான்.
தருகிறான்
அருகில் இருக்கும்வரை.
கள்ளன்
பிரிகையில் கொண்டே போகிறான்
தன்னுடனேயே.
என்ன செய்ய நான் ?
சிறைப்பட்டதாய் என் சிரிப்பு.
தெரியவில்லை மீட்டு எடுக்க.
வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.
விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
38 comments:
//பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை.//
சரிதான். நல்ல வரிகள்
//முறைக்கிறான்...முறைக்கிறான்
முறையோ என்று
எரிகிறான்...எரிக்கிறான்.
புன்னகை பறித்து//
ஏன் இத்தனை முறை?
//என்ன செய்ய நான் ?
சிறைப்பட்டதாய் என் சிரிப்பு.
தெரியவில்லை மீட்டு எடுக்க.//
//விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!//
இது நல்லா இருக்கு.
//பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை.
வேணாம்...தேவையே இல்லை
தேவை எனக்கு
என் இயல்பில் புன்னகை.//
ஹிஹிஹிஹி சரிதான்... நல்லா இருக்கு ஹேமா
//வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.//
வாழ்த்துக்கள்
"போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் "
பிரிவு காலங்களில் வெறும் கோடாக
மட்டுமே
நல்லா இருக்குங்க
intha comment horanadu,karnataka vil irunthu poda patathu.....
nalla irukku
arumaiyana kavithai onu eluthi irukkiren...
vanthu parunga...
//பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை.
வேணாம்...தேவையே இல்லை
தேவை எனக்கு
என் இயல்பில் புன்னகை.//
நல்ல வரிகள்.
இரவல் புன்னகை கூட இப்போதெல்லாம் கடின சிந்ததனைக்குப்பின் தான் கிடைக்கிறது.
//வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.//
என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியலை..
மீண்டும் ஒரு நல்ல கவிதை
நன்றி
//தருகிறான்
அருகில் இருக்கும்வரை.
பிரிகையில் கள்ளன்
கொண்டே போகிறான் தன்னுடனேயே.
என்ன செய்ய நான் ?
சிறைப்பட்டதாய் என் சிரிப்பு.
தெரியவில்லை மீட்டு எடுக்க.//
அருமையான வரிகள்
Hi Hema akka...eppadi irukinga??
kavithai vazhkkam pola super.....
உதட்டின் ஓரம் போதுமா ?
கவிதை நல்லாயிருக்கு ஹேமா!
கவிதை நல்லாயிருக்கு அக்கா
//
முறைக்கிறான்...முறைக்கிறான்
முறையோ என்று
எரிகிறான்...எரிக்கிறான்.
//
செய்வினையும்..செய்யபாட்டுவினையும் சும்மா பூந்து விளையாடுது உங்க வரிகளில்.. அருமை :)
//
வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.
//
கண்டிப்பா அது அதிசயம் தான் :)
//வேந்தர்களின் விலங்கிற்கும்
அகப்படாத என் புன்னகை
இவன் பூ விலங்கிற்குள்
அகப்பட்டது அதிசயம்தான்.//
பூக்கள் மென்மையானவையல்லவா அதன் விலங்கு இப்படித்தான் இதயங்களைக் கவர்ந்து ஈர்த்துவிடும்.
சாந்தி
Punnagaiyilumaa iraval?
விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!//
என்ன போயிட்டரோ??
அட இதைத் தான் சொல்லுறதோ புளொக் விடு தூது என்று???
கவிதையில் தூது அருமை...
ஆக்க பூர்வமான கருத்துக்களைச் சொல்லும் நிலையில் மன நிலை இல்லை... மன்னிக்கவும்!
அத்தனையும் அருமை
வாழ்த்துக்கள்
hema,
ennA ithu romance spl kavithaiya????
innum erndu thadavai padithu parthuvittu varugiren
பரிதாபம் தூது போக
யாரோ எல்லாம்
இரங்கித் தருகிறார்கள்
இரவல் புன்னகை
விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும்
அற்புதமான வரிகள். வழக்கம்போல் மீண்டும் ஒரு நல்ல கவிதை ஹேமா.
"புன்னகை தேடுகிறீர் எனக்குள்..."
தலைப்பே அசத்தல்!
வாவ் சொல்ல வைத்த புன்னகையா வரிகள்
நல்லாயிருக்குங்க
அந்த கடைசி பாரா இருக்கு பாருங்க.... எக்ஸலண்ட்..
வழக்கமான மேக்கப் சொற்கள் இல்லாமல் எளிமையாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் நீளமோ??
சுவரில் நிழலாய் தொங்குதல்... மிக அற்புதமான கற்பனை!.. புன்னகை புதைக்கும் பைத்தியக்காரன் என்ற சொல்லில் கொஞ்சம் டவுட்.... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட குழந்தையைப் போன்றவர்கள்,. பெரும்பாலும் சிரிப்பார்கள் என்பது நானறிந்த வரையில் உண்மை. அப்படியிருக்க சொல் ஒத்துவருமா என்பது தெரியலை.
இரவல் புன்னகை இருவருக்குமுள்ள நெருக்கத்தின் பிளவைக் காட்டுவதற்காக பயன்படுத்தப்படும்.. இயல்பு பிணைப்பின் நெருக்கத்தைக் காட்ட பயன்படும்!!! தேவை இயல்பானதே!!! நல்ல வரிகள்.
வாழ்த்துகள் சகோதரி
விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!
/////////////////
அச்சோடா...அண்ணனை ரொம்ப miss பண்றீங்க போல இருக்கே...
இனிமே பெட்டி படுக்கை pack பண்ணும் பொது புன்னகையை வச்சுட்டு போக சொல்லிடுவோம்
//என் புன்னகையை மீட்டிருக்கிறேன்
எத்தனையோ தடவைகள்
கெஞ்சி மன்றாடி.
சுவரில் தொங்குகிறான் நிழலாய்.
விழி சுழற்றி
பார்த்து முறைக்கிறான்.
//
மிகவும் ரசித்தேன் இந்த அழகு வரிகளை...
//விட்டுவிட்டேன்
இப்போ எல்லாம்
போடா...போ
நீயே வைத்துக்கொள்.
உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!
//
எளிமையான வார்த்தைகளில் புன்னகை தேடியிருக்கிறீர்கள் ரொம்ப நல்லா இருக்கு ஹேமா...
/*தேவையே இல்லை
தேவை எனக்கு
என் இயல்பில் புன்னகை.
*/
ஆமாம்.
/*உதட்டின் ஓரம்
போதுமாம்
சின்னதாய் கொஞ்சம்
திரும்பவும் தான் வரும் வரைக்கும் !!!
*/
:-))
அருமையான வரிகள்
இங்க வந்த எல்லாருக்கும் என்னோட நன்றி.ஆனா எல்லார் கூடயும் நான் டூ.கோவம்.ம்ம்ம்....
யாருமே என் புன்னகையத் திருப்பு எடுக்கவோ வாங்கித் தரவோ முயற்சிக்கல.
நிலா அம்மா சின்ன யோசனையோட போய்டாங்க.
ஆன்ந்த் "அக்கா"ன்னு சொல்றதுக்காகவே கிண்டல் பண்ணிட்டுப் போய்டார்.
மத்த எல்லாருமே கவிதைதான் நல்லாயிருக்கு சொன்னீங்க.
எனக்கு என் புன்னகை வேணும்.இனிமேல் என்னை யாராச்சும் நான்"சிரிக்க மாட்டேங்கிறேன்.எப்ப பாத்தாலும் கவலையா கவிதை எழுதறேன்ன்னு சொல்லக்கூடாது.ஆமா !"
hi hema akka .......enna ippadi solitinga........nane eppovathu varen....unga reply-ka wait panite irunthen.ippadi kovichukitingale......neenga mattum pakkathula iruntha kichu kichu moti sirika vaipen vena enga veetuku vanthu parugalen......
akka-KUM aprom ellarukkum "HAPPY TAMIL NEWYEAR"
By
Jaya
என்ன ஒரு கோபம் ?
நினைத்தது நடந்துவிட்டால் - நிறைவிருக்காது ...
விடுங்க ... என்றாயினும் உங்களுடையதுதானே.
ஜெயா உங்க மேலயும் கோவம்தான்.ஆனாலும் ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்து சுகம் விசாரிச்சு,புது வருஷ வாழ்த்தும் சொன்னதால உங்ககூட நான் இப்போ நேசம் போட்டுக்கிறேன்.OK வா.
ஜெயா,நீங்களும் சுகம்தானே.நான் சுகம் என்பதற்கு இல்லை.
வருஷப்பிறப்பும் இல்லை.இப்போகூட உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் போய்விட்டுத்தான் வந்திருகிறேன்.
மனங்கள் முதலில் சுகமடையட்டும்.பார்போம்
Thanks akka......intha varusham parungalen war mudium........ellarum santhosama iruka poranga, payam, kavalai maranthu vazha poranga.....nan solrathu pazhikkum .........
அழகிய எண்ணங்கள்... அழகிய வார்த்தைகள்... அழகிய வெளிப்பாடு... :)
A loss is a loss.wishing you to get back the smile.
karthik amma
Good morning!!
Post a Comment