சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்.
எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள்.
வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்.
எதிர் காலக்
குருத்துக்கள்
குடல் சுருங்கி
ஆரோக்யத்தில் வறுமை
கல்வியில் வறுமை
ஆதிகால மனிதர்களாய்.
சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன.
காலத்துக்குக் காலம்
மனிதப் புதைகுழிகளின்
இடங்கள்தான்
மாறுகிறதே தவிர
உயிர்கள்... என்னவோ
தமிழனதுதான்.
எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.
வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
60 comments:
me th 1 st ah
nalla irukku kavithai
வந்தேன்...வந்தேன்.மேவி வந்தாச்சு.
சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்.
sattaiadi
எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள்.
ratham kudikum peigal
வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்.
namathu avalam
சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன.
valikindrathu
எதிர் காலக்
குருத்துக்கள்
குடல் சுருங்கி
ஆரோக்யத்தில் வறுமை
கல்வியில் வறுமை
ஆதிகால மனிதர்களாய்.
kodumai intha nilamai
காலத்துக்குக் காலம்
மனிதப் புதைகுழிகளின்
இடங்கள்தான்
மாறுகிறதே தவிர
உயிர்கள்... என்னவோ
தமிழனதுதான்.
endru maraiyum intha avalam
எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.
வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது
எண்ணுவதற்கு இயலாத விஷயங்கள்.
நேற்று என் மாமாவிடம் (ஈழத்தமிழர் அவர்) பேசிய பொழுதும் இதையேதான் எதிரொலித்தார். என் அக்கா, வேலை செய்யும் இடத்தில் ஈழப்ப்போராட்டத்தினால் வேலைகள் தள்ளிப் போகிறதாம்.
சமாதான சாலையில் பிச்சையெடுப்பது தவறில்லை என்று எனக்குப் படுகிறது.. நின்று கொண்டிருக்கும் இடம் அப்படி...
உங்கள்/எங்கள் எண்ணத்தின் படி வருங்கால சிங்களம் தமிழ்சோறு தின்னட்டும்!!!
வாழ்த்துக்களுடன்
ஆதவா
துயரம் ததும்பும் கவிதை.. வெகு நாட்களுக்குப் பிறகு தோழி ஹேமாவின் கவிதை.. தொடர்ந்து எழுதுங்கள்..
காலத்துக்குக் காலம்
மனிதப் புதைகுழிகளின்
இடங்கள்தான்
மாறுகிறதே தவிர
உயிர்கள்... என்னவோ
தமிழனதுதான்///
துயரத்தை கவிதையாக்கி விட்டீர்கள்!!
சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்.///
நெஞ்சை உறுத்துகிறது!
// சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்.//
பிச்சைக்காரனை ஏளனமாய் பார்க்கும் ஒரு கூட்டம்,
அவன் தட்டில் காசு திருடும் ஒரு கூட்டம்,
அவனை வைத்து அரசியல் செய்யும் மிகப் பெரிய கூட்டம்.
முதல் விடயம்.
இனி ஆட்டோ தேவையில்லை உங்கள் பதிவை படிக்க
மாற்றி விட்டீர்கள் டெம்ப்ளேட்
\\சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன.\\
உச்சம் ஹேமா!
வேதனை கொட்டும் வரிகள்...:-((
// எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள். //
புத்தன் வழி நடப்பதாய்
பித்தம் பிடித்து நடப்பவர்கள்.
கொல்லாதே என்றான் புத்தன்
கொல்லு அதை என்றார் சிங்களர்.
// சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன. //
சூரியன் கூட எரிந்து போகின்றான் எம் மக்கள் துயரம் கண்டு
//எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.
வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!//
வருங்கால சிங்களன்
தமிழ் ஊட்டசத்தில் வேனும்னா
சமையல் செய்யும்
ஆனால் அவன் ஒரு போதும்
தமிழன் பாட்டன் சொத்தில்
தம்பிடி உருண்டை கூட புடுங்க முடியாது.
எங்களின் துயரச்சிதறல்களினை கவிதையாக்கியிருக்கிறீர்கள்!
கஷ்டமான வரிகள்
//எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள்.//
அருமை தோழி
//வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்.
/
எப்படி இரு வரியும் என்னை தைத்தது
//எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.//
நச்
//சக்தி...இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது.//
சக்தி உலகம் எங்குமே அவலம்.மனிதம் மரத்துவிட்டதா ?செத்தேவிட்டதா ?
//ஆதவா...உங்கள்/எங்கள் எண்ணத்தின் படி வருங்கால சிங்களம் தமிழ்சோறு தின்னட்டும்!!!//
ஆதவா இயலாமையின் எல்லையில் நாங்கள்.எதையோ சொல்லி மனதையாவது ஆற்றிக்கொ(ல்)ள்வோம்.
வாங்க,கா.பாண்டியன்.தொடர்ந்தே எழுத நினைக்கிறேன்.கருக்கள்தான் சூல் கொள்ள மறுக்கிறது.நன்றி.
வாங்க தேவா.கருத்துக்கு நன்றி.உங்கள் பக்கத்திற்கு நீண்ட நாட்கள் பின்னூட்டம் தரவில்லை.அதற்கான பதிவு எனக்குக் கிடைக்கவில்லை.
//இராகவன் நைஜிரியா...
பிச்சைக்காரனை ஏளனமாய் பார்க்கும் ஒரு கூட்டம்,
அவன் தட்டில் காசு திருடும் ஒரு கூட்டம்,
அவனை வைத்து அரசியல் செய்யும் மிகப் பெரிய கூட்டம்.//
சரியான அரசியல்வாதிதான் நீங்க இராகவன்.சரியாச் சொல்லிட்டீங்க.
ஜமால்,கருத்துக்கு நன்றி.டெம்லேட் மாத்தினது பத்தி யாரும் சொல்லலயேன்னு பாத்தேன்.சந்தோஷம்.
கீழை ராஸாவும் சொல்லியிருந்தார்.இங்க வரமுடிலன்னு.அவரையும் கேக்கணும்.
வாங்க அமுதா.நன்றியும் கூட.
//ஆ.முத்துராமலிங்கம்...
வருங்கால சிங்களன்
தமிழ் ஊட்டசத்தில் வேனும்னா
சமையல் செய்யும்
ஆனால் அவன் ஒரு போதும்
தமிழன் பாட்டன் சொத்தில்
தம்பிடி உருண்டை கூட புடுங்க முடியாது.//
தோழரே உங்கள் ஆவேசம்தான் எங்கள் ஆவேசமும்.ஆனாலும் நடப்பது என்ன?அதர்மம்தானே தலை தூக்கி நிற்கிறது.
//கவின்...
எங்களின் துயரச்சிதறல்களினை கவிதையாக்கியிருக்கிறீர்கள்!//
கவின் வேற என்னதான் செய்யமுடிகிறது.
வாங்க சுரேஷ்.உங்க கருத்தூட்டமும் நச் என்றே இருக்கிறது.நன்றி.
//நசரேயன்...
கஷ்டமான வரிகள்//
வாங்க நசரேயன்.கஸ்டமானாலும் தாங்கித்தானே ஆகணும்.முடிவுதான் தெரியல.
அருமையான கவிதை ஹேமா..
எப்பொழுதும் போல் உண்மையின் வழியும், வார்த்தைகளின் அழகும் நிரம்பி வழியுது
என்ன கொஞ்ச நாளா உங்களை ஆளையே காணும்...
வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்.//
வாவ்! என்ன வரிகள்! ரொம்ப ஆழமான வரிகள் ஹேமா!
இந்த டெம்ப்லேடில் உங்கள் தளத்தை பார்வையிட சுலமாக இருக்கிறது ஹேமா...
விடுமுறை முடிந்து ஒரு உணர்வுப் பூர்வமான கவிதையோடு வந்தது விட்டீர்கள்...
உள்ளத்து உணர்வுகளை ஊசி முனை வார்த்தைகள் கொண்டு எழுதியிருக்கிறீர்கள் ஹேமா...
//சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன.//
அருமையான சொல் வீச்சு...
//வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் //
:(
எல்லோருக்கும் நீங்க அக்கா ஆகிடிங்க .......
சரி போன போகுது ....
எனக்கு நீங்க தங்கச்சியாக இருக்குங்க ...
நான் யூத் அக இருக்கும் வரை நீங்களும் யூத் தான்
"சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்."
களமும் காலமும் ஒரு நாள் மாறும் .....
"எம் சொத்தையே...
எம் உரிமையையே...
கொள்ளையடித்து
தெருவில்
விரட்டியடித்த
புத்தன் தந்த புனிதர்கள்."
புத்தர்க்கு இது தெரிந்து இருந்தால் அந்த புனிதர்களை தந்து இருக்கமாட்டார்....
பாவம் அவரு
"வாழ்வின்
துயரக் கொடியில்
காயவிட்டிருக்கும்
கட்டாயக் கைதித்
துணிகள் நாம்."
அமாங்க .......
"எதிர் காலக்
குருத்துக்கள்
குடல் சுருங்கி
ஆரோக்யத்தில் வறுமை
கல்வியில் வறுமை
ஆதிகால மனிதர்களாய்."
இல்லைங்க .....
வசதி வாய்ப்பு இருக்கிறவங்க வெளி நாட்டில் போய் செட்டில் ஆகிடாங்க...
பாவம் வசதி இல்லதாவங்க .......
"சூரியன் கூட
கண்
கூசிச் சுருங்குகின்றான்.
இரவும்
பகலும் கூட
இரத்தக் கறையோடேயே
உறங்கி எழும்புகின்றன."
எங்கே செல்லும் இந்த பாதை என்று தெரியாமல் போகிறார்கள் ....
"காலத்துக்குக் காலம்
மனிதப் புதைகுழிகளின்
இடங்கள்தான்
மாறுகிறதே தவிர
உயிர்கள்... என்னவோ
தமிழனதுதான்."
அரசியல் புதைகுழி இருக்கும் வரை இந்த நிலைமை மாறது....
"எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது."
பாவம் செய்கிறது சிங்கள இனம்....
"வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!"
பேதி தான் ஆகும் .......
ஹேமா ...
சிங்கள மக்கள் தமிழ் மக்கள் உடன்யான நட்பு முறை எப்படி இருக்கு அங்கே ?????
அவர்களக்கும் அரசுயின் பார்வை தான் இருக்கிறதா ????
hema,
yetho oru feel missing intha kavithaiyil...
athu enathu entru enakku solla theriyala ......
நன்று....
"எல்லா இரவுகளும் விடியும்" என்று எங்கோ படித்திருக்கிறேன்...
தமிழர்களுக்கான விடியல் வெகு விரைவில் என்று நம்புவோம்...
திக்கி திக்கி பேசியது மனது
திக்காமல் கிடைத்தது தழும்பு...
உரிமை குரல் எதிரொலிக்கவில்லை
உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை...
இதோ இன்று என் இனமக்களுக்காக
போராளியாய்...
-பித்தன்
Glad to see u back in track Hema.Puthaikulikali idangal thaan maaruhirathe thavira,pracical words Hema.One of my post is without ur comment Hema.
மேவி சரி,நானும் நீங்களும் மட்டும் எப்பவும் யூத் தா இருப்பம்.சரியா.
மேவி,இப்போதான் கவிதையை நிறைவாப் பாத்திருக்கீங்க போல.கருத்து நிறைவா வந்திருக்கு.நன்றி.
என்ன மிஸ்ஸிங்ன்னு நினைக்கிறீங்க.எனக்கு அப்பிடித் தெரில.சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கு.
//மேவி சிங்கள மக்கள் தமிழ் மக்கள் உடன்யான நட்பு முறை எப்படி இருக்கு அங்கே ?????
அவர்களக்கும் அரசுயின் பார்வை தான் இருக்கிறதா ???//
மேவி இங்கு-அதுவும் நான் இருக்கும் இடத்தில்(Bern) சிங்களச் சகோதரர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.ஜெனீவாப் பகுதிகளில் கொஞ்சம் கூடிய எண்ணிக்கையினர் இருக்கிறார்கள்.ஒற்றுமையில் ஒரு பிரச்சனையுமில்லை.ஆனாலும் எங்களுக்கும் சரி அவர்களுக்கும் சரி ஊரில் நடக்கும் அரசியல் பற்றின கருத்துக்கள் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது.
//பித்தன் ...
நன்று....
"எல்லா இரவுகளும் விடியும்" என்று எங்கோ படித்திருக்கிறேன்...
தமிழர்களுக்கான விடியல் வெகு விரைவில் என்று நம்புவோம்...
திக்கி திக்கி பேசியது மனது
திக்காமல் கிடைத்தது தழும்பு...
உரிமை குரல் எதிரொலிக்கவில்லை
உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை...
இதோ இன்று என் இனமக்களுக்காக
போராளியாய்...
-பித்தன்//
வாங்கோ பித்தன்.முதன் முதலாக வந்திருக்கிறீங்க.என்ன செய்யலாம் பித்தன் புலம்புவதே வாழ்வாப்போச்சு ஈழத்தமிழனுக்கு.
முனியப்பன் வாங்க.
நான் வரேன்.புதுப்பதிவா?
வரேன் வரேன்.
....துயரம்
//எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.//
வரிகளில் வலிகள்.
//நிலா அம்மா...என்ன கொஞ்ச நாளா உங்களை ஆளையே காணும்...//
நிலா அம்மா வாங்கோ.ஒரு வாரம் வீட்டில விருந்தாளிகள்.நிறைய வேலைகள்.அதுதான் கணணி ஓய்ந்துவிட்டது.
ஷீ-நிசி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//புதியவன்...
இந்த டெம்ப்லேடில் உங்கள் தளத்தை பார்வையிட சுலமாக இருக்கிறது ஹேமா...
விடுமுறை முடிந்து ஒரு உணர்வுப் பூர்வமான கவிதையோடு வந்தது விட்டீர்கள்...//
புதியவன்,வாங்கோ.டெம்லெட் நல்லா இருக்கா.சந்தோஷமாயிருக்கு.
என்னதான் விடுமுறையும் சந்தோஷமும் சும்மா பேருக்குத்தான்.மனம் முழுக்க எங்கள் சகோதரர்கள் படும் துன்பத்திலதானே அழுந்திக் கிடக்கிறது.
நன்றி பிரேம்,அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.நன்றி.
//ஜீவன் ...
....துயரம்//
நன்றி ஜீவன்.தமிழனோடு கூடப் பிறப்பு துயரம்.
வாங்க அத்திரி.ரொம்ப நாளுக்கு அப்புறமா வாறீங்க.சுகம்தானே.உங்க பக்கம் வந்தேன்.இந்திய அரசியல் எனக்குப் புரியல.திரும்பிட்டேன்.
எதிர்காலச்
சிங்கள
மண் வளத்திற்கு
தமிழனின் பசளை
தூவப்படுகிறது.//
ஹேமா இது தான் யதார்த்தம்?? இதனை இனி யாரால் தான் மாற்ற முடியும்??
கொஞ்ச நாளாகப் பதிவுகளும் பின்னூட்டங்களும் போட முடியாத சூழ் நிலையில் இருந்தேன். என்னைத் தூக்கி மடி மீது வைத்து என் சிறு வயதில் போராட்டம் பற்றி சிந்தனையை ஊட்டிய ஒரு கேணல் அண்ணா பற்றிய செய்தி என் மனதின் மீது இடியாக இறங்கி விட்டது.
தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.
கவிதை கடைசித் தமிழனின் யதார்த்தம்.
///சமாதானச்
சாலையோரம்
பிச்சைக்காரனாய்
எம் இனம்///
முதல் வரிகள் வேதனையை தந்தாலும்
///வருங்காலச்
சிங்களம்
தமிழ்
ஊட்டச் சத்துடன்
சமையல்
செய்யட்டும் !!!////
முடிகின்ற வரிகளில் கோபத்தையே ஏற்ப்படுத்துகிறது!.
hai iam saran.
Post a Comment