*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 19, 2009

நான் ஓர் கடவுள்...

பிணம் எரித்து வெந்த சதை பிடுங்கி
சரிகின்ற மலையைச் சரி செய்து
நூல் கட்டி நிமிர்த்தி நாளைய பொழுதின்
நன்மை சொல்லும் நான் ஓர் கடவுள்.

பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்...
பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.

எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம்.

காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள்.

காலையும் மாலையும்
இணையும் இரவில்
சிலசமயங்களில்
உங்களுக்குக் கேட்கலாம்
என் காலடி ஓசை.

சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து,
தன்வந்தரியாய் (தேவ மருத்துவன்)
தன்மாத்திரை (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
என்கிற நுண்மூலங்கள்)
பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்.

நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே.

உங்களுக்குள் புகுந்து ஓலமிடும்
ஓநாய்கள் உயிர் வெறுக்க
விரட்டி வேட்டையாடிச்
சுட்டுச் சுவைத்து,

அதன் பின்னும்
கேட்கக்கூடும் பின் இரவுகளில்
உங்கள் பூட்டுக்களோடு உரசும்
என் காவல் கம்புகளின் சத்தம்.
உங்களின் கதவுகளின் அருகில்
காவலாய் காத்திருக்குக்கும்
நான் ஓர் கடவுள் !!!

"நான் கடவுள்"தொடர் கவிதைக்கு எனக்குப் பிணைப்புத் தந்தவர்

மேவி http://mayvee.blogspot.com/

நான் இணைக்க நினைப்பது,
புதியவன்
http://puthiyavanonline.blogspot.com/
ஜமால் http://adiraijamal.blogspot.com/

ஹேமா(சுவிஸ்)

83 comments:

நட்புடன் ஜமால் said...

பாலாவுக்கு தெரியுமா!

நட்புடன் ஜமால் said...

\\காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்\\

வார்ததை உபயோகம் அருமை!

உங்கள் ராட் மாதவ் said...

Me the first :-))

உங்கள் ராட் மாதவ் said...

//உங்களின் கதவுகளின் அருகில்
காவலாய் காத்திருக்குக்கும்
நான் ஓர் கடவுள் !!!//

காவலனும் ஒரு தெய்வம் !!!!

உங்கள் ராட் மாதவ் said...

கவிதை படிக்கும்போது 'பிதாமகன்' நினைவுக்கு வருகிறது. நன்று.

உங்கள் ராட் மாதவ் said...

//பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்...
பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.//


.....அனல் பறக்கிறது....

S.A. நவாஸுதீன் said...

அழுத்தமான வார்த்தைகள். நல்ல சொல்லாடல்

உங்கள் ராட் மாதவ் said...

//நிபந்தனை-நிதானம்
நித்திலம்(முத்து)
நிடதம்(எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்//

வரிகளை பிரித்தெடுத்தால் 'தொலைந்து போன தமிழ் சொற்கள்' என்றொரு பதிவே போடலாமே? :-)

ஹேமா said...

வாங்க ஜமால்.எப்பவும்போல ஓடி வந்தாச்சு.கவிதையை ரசிச்சீங்க சரி.

கடைசியா என்னமோ எழுதியிருக்கே !கவனிச்சீங்களா?

ஹேமா said...

//RAD MADHAV said...
கவிதை படிக்கும்போது 'பிதாமகன்' நினைவுக்கு வருகிறது. நன்று.//

மாதவ்,கொஞ்சம் பிந்திட்டீங்க.
பரவாயில்லை.அடுத்த முறை ஜமாலைக் கவனிச்சுக்கலாம்.

உண்மைதான் பிரபல்யமான படங்களோடு அதன் சாடையில் உள்ள கவிதையானதால் அப்படி ஒரு பிரமை ஏற்படுகிறதோ ஒரு வேளை !

ஹேமா said...

வாங்க சைட் அகமட்.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் பெயரைத் தமிழில் எழுதியிருக்கிறேன்.சரியா? சரியான சொல் அமைப்பைத் தாருங்கள்.

VASAVAN said...

நெருப்பொறி பறக்கிறது கவிதையில், சூப்பர் ஹேமா.

//மாதவ்,கொஞ்சம் பிந்திட்டீங்க.
பரவாயில்லை.அடுத்த முறை ஜமாலைக் கவனிச்சுக்கலாம்.//

பெருச சிறுசு முந்த முடியுமா?

புதியவன் said...

//காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள்.//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...ரொம்ப அழகான கற்பனை ஹேமா...

புதியவன் said...

//நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே.
//

ஹா...என்ன ஒரு சொல்லாடல்...இரு முறை படித்து சிலாகித்தேன்...

புதியவன் said...

//நான் இணைக்க நினைப்பது,
புதியவன் http://puthiyavanonline.blogspot.com/
ஜமால் http://adiraijamal.blogspot.com///

என்னையும் இணைத்தாகிவிட்டதா...?...ம்...முயற்சிக்கிறேன்...

ஹேமா said...

//பெருச சிறுசு முந்த முடியுமா?//

வாசவன்,இப்போதைக்கு இந்தக் கவிதை பதிவில இருக்கிற 2-3 நாள் வரைக்கும் நான் ஓர் கடவுள்.இங்க யா...ரும் சின்னவங்க பெரியவங்க இல்ல.நானே எல்லாம் !

கும்மாச்சி said...

நல்ல கவிதை, இன்னு எழுதுங்கள். கடவுள் எங்கும் இருக்கிறார்.

ஹேமா said...

புதியவன்,எனக்கு ஒரே குழப்பமாகத்தான் இருந்தது.எப்படிக் கரு எடுப்பது,எங்கு தொடங்கி எங்கே முடிப்பது என்று.புலம்புவது போல இருக்குமோ என்று கூட ஒரு பயமாய் இருந்தது.சரியா அமைஞ்சிருக்கா?

யாரும் அறப்படிச்சவங்க திட்டாம இருந்தா சரி.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை என்னும் வார்த்தை இந்த கவிதையை பாராட்ட போதாது.. என்ன தோழி நீங்க.. நல்லா எழுதிட்டு குழப்பமா இருக்குன்னு சொல்றீங்க.. உண்மையிலேயே கவிதை அமர்க்களம்...

ஹேமா said...

வாங்க கும்மாஞ்சி,நானும் கடவுள்.நீங்களும் கடவுள்தான்.அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ-மனிதம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் கடவுளின் வீடு.

கும்மாஞ்சி,உங்கள் பதிவுகளின் கீழ் எனக்குப் பின்னூட்டம் தர முடியவில்லை.தமிழிஸ்ல் தருகிறேன்.

ஹேமா said...

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.
காணோமே என்று நினைத்தேன்.
உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் மனதுக்கு உற்சாகமாய் இருக்கிறது.நன்றி.

Muniappan Pakkangal said...

Enna ore mirattala irukku.Kavithai padikkave payama irukku.

அப்துல்மாலிக் said...

படத்தையும், கவிதைகளின் வரிகளையும் பார்க்க/படிக்கயில் ஒரு விதம் பயம் இருந்துக்கொண்டேதான் இருந்தது... அழுத்தமான வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\கடைசியா என்னமோ எழுதியிருக்கே !கவனிச்சீங்களா?\\

என்ன ஹேமா!

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! டேகா!

Anonymous said...

அருமை

நட்புடன் ஜமால் said...

\\நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே.
\\

சந்தம் போட்டு சிந்து பாடலாம் போல் இருக்கே ...

நட்புடன் ஜமால் said...

\\அறப்படிச்சவங்க\\

ஆஹா! என்ன ஹேமா! ...

நல்லா இருக்கு வார்த்தை...

ஹேமா said...

ஜமால்,அற ன்னா முழுதுமாக-மிகவும் படிச்சதா அர்த்தம்.

நசரேயன் said...

ஆமா.. நீங்க ஒரு கவிதை கடவுள் தான்

- இரவீ - said...

//பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா//

கடவுளே!!!... கடவுளே!!!...
உனக்கும் இந்த நிலைமையா???

- இரவீ - said...

//காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள்//

உங்களுக்கு ஒரு இளநீ???

நசரேயன் said...

//காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள் //

பதநீர் க்கு பதிலா "கள்" கொடுக்க மாட்டாங்களா?

இன்னைக்கு இந்த ஒரு கும்மியோட முடிச்சிக்கிறேன்

- இரவீ - said...

//காலையும் மாலையும்
இணையும் இரவில்
சிலசமயங்களில்
உங்களுக்குக் கேட்கலாம்
என் காலடி ஓசை.//

அந்த நேரத்துல்ல வேற யேதோ வரும்னுல்ல சொல்லுவாங்க ...

- இரவீ - said...

//நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே//

ஆசை ... தோசை... அப்பள... வடை.

- இரவீ - said...

//ஓநாய்கள் உயிர் வெறுக்க
விரட்டி வேட்டையாடிச்
சுட்டுச் சுவைத்து,//

ஹல்லோ, என் ஓநாய சாப்பிட்டது நீங்களோ ...

- இரவீ - said...

//உங்கள் பூட்டுக்களோடு உரசும்
என் காவல் கம்புகளின் சத்தம்.
உங்களின் கதவுகளின் அருகில்
காவலாய் காத்திருக்குக்கும்//

தடியெடுத்தவன் எல்லாம் ....
.................
..........
கடவுளானு கேக்க வந்தேன்.

நசரேயன் said...

கும்மி அடிக்க ரவீ இருக்காரு .. நானும் வாரேன்

- இரவீ - said...

//எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம்.//

நல்லதொரு சாயுஜ்யம்.

நசரேயன் said...

//பிணம் எரித்து வெந்த சதை பிடுங்கி
சரிகின்ற மலையைச் சரி செய்து
நூல் கட்டி நிமிர்த்தி நாளைய பொழுதின்
நன்மை சொல்லும் நான் ஓர் கடவுள். //

ஆமா.. ஆமா.
முடியை கட்டி மலையை இழுப்பாரு

நசரேயன் said...

//பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்...
பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.//

பயமாத்தான் இருக்கு

நசரேயன் said...

//எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம். //

உங்க உள்ளத்தை சரி பாதி அண்ணாச்சி இன்னும் கொள்ளை அடிக்கலையா

நசரேயன் said...

//காலையும் மாலையும்
இணையும் இரவில்
சிலசமயங்களில்
உங்களுக்குக் கேட்கலாம்
என் காலடி ஓசை.//

குளிரிலே ஓடினா சத்தம் வராதே

நசரேயன் said...

//சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து
தன்மாத்திரை பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்.//

சிக்கன், மட்டன் எல்லாம் சப்பிட்டவங்களுமா?

நசரேயன் said...

//நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே.//
கோனார் உரை?

- இரவீ - said...

//கும்மி அடிக்க ரவீ இருக்காரு .. நானும் வாரேன்//
வாங்க வாங்க ...
கடவுள் கோச்சுகிட்டா தோப்புகரணம் மட்டும் நீங்க தான் ...

- இரவீ - said...

///நசரேயன் said...

//எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம். //

உங்க உள்ளத்தை சரி பாதி அண்ணாச்சி இன்னும் கொள்ளை அடிக்கலையா///
இப்ப அங்க முழுவதும் அண்ணாச்சி தான் இருக்கார் .

ஆதவா said...

கடவுள் என்ற ஒற்றைச் சொல்லைக் கண்டாலே எங்கிருந்தோ ஓடிவந்து இதழோரம் அமர்ந்து கொள்கிறது புன்னகை! ஏனெனில் நான் எழுதுவதும் படிப்பதும் பார்ப்பதும் கேட்பதும் எண்ணுவதுமாகிய எல்லாவற்றிலும் இடைவெளியின்றி நீக்கமற நிறைந்துள்ளான்.

எனக்கான கடவுள் எனக்குள்ளேயே என்று நினைக்கும் வரை நான் மேற்படி சொன்னதையேதான் சொல்வேன்..

நான் ஓர் கடவுள்.. சரியான தலைப்பு.. கத்தி விளிம்பில் நடந்து எழுதவேண்டும்.. சிலசமயம் கத்தி முனை மழுங்கியிருக்கவும் செய்யும்.. நீங்கள் அழகான தமிழில் முடித்துவிட்டீர்கள்.

பரதேசியின் பசியறியா இறைவன் என்று நீங்கள் சொல்லும் பொழுதே, இறைவனை கொஞ்சமேனும் வெறுக்கத் தொடங்கிவிட்டீர்கள். மேலும் எனக்குள்ளே ஓர் உலகம் என்ற கோட்பாடு, கடவுளருக்குப் பொருந்தாது!! ஏனெனில் கவிஞர்களுக்கே பிரபஞ்சம் தாளின் விளிம்பிலிருக்க, கடவுளர்கள் எக்கணக்கிட்டு எதை அடக்க?

நி கர வார்த்தைகளின் அணிவகுப்பு பிரமாதம். சொல்லால் விளையாடியிருக்கிறீர்கள்.. சொற்கள் அடிபடாமல் அடுக்கி நிற்கின்றன.

கடவுளே!!! (நீங்கதாங்க ஹிஹி)

வாழ்க வாழ்க.!!! ஹிஹி.....

ஹேமா said...

வாங்க முனியப்பன்,அபு, எழுதச் சொன்னது மேவி.எழுதினது மட்டும்தான் நான்.பயம் வேணாம்.

ஹேமா said...

வாங்க ஆனந்த்.நன்றி.நீங்களும் பயந்திட்டீங்களா !

ஹேமா said...

நசரேயன் ,இரவீ நல்ல ஒரு கவிதை.சரியா தப்பான்னு யோசிக்க வேண்டிய கவிதை.எனக்கே எழுதிட்டேனே தவிர இன்னும் எனக்குள்ள ஒரு யோசனை.
சரியா ...தப்பான்னு.நீங்க இரண்டு பேருமே அதைப்பத்தி ஒண்ணுமே யோசிக்காமஒரே....கும்மியடிச்
சிருக்கீங்க.ஒரு வாரமா கருக்கட்டி பிரசவிக்க நான் பட்ட பாடு.இருங்க உங்க இரண்டு பேருக்கும் வரேன்.

ஹேமா said...

ஆதவா,நீங்களாச்சும் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.கவிதையின் கருவும், நான் எடுத்துக்கொண்ட சொற்களும்,
அவைகளைப் பிரயோகித்த முறைகளும் சரியா?

நட்புடன் ஜமால் said...

\\ஹேமா said...

ஜமால்,அற ன்னா முழுதுமாக-மிகவும் படிச்சதா அர்த்தம்.\\

அர்த்தம் தெரியும் ஹேமா!

நட்புடன் ஜமால் said...

எங்கூர்ல

அகராதி பு(ப)டிச்சவன்னு செல்லமா திட்டுவாங்க

நட்புடன் ஜமால் said...

சொற்களின் தேர்வும் உபயோகித்த விதமும் அழகுதான்

கரு பற்றி கருத்துசொல்ல இயலாது.

Anonymous said...

வார்த்தை பிரயோகம் அருமை... போராடி பார்த்தேன்... கவிதையின் கரு இன்னதென்று.... என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை ஹேமா...

விளக்குங்களேன்! நானும் ருசிக்கிறேன்!

Arasi Raj said...

எப்டி ஹேமா இப்டி எல்லாம் எழுத முடியுது

அருமை.......ஆனா முழுசா புரியல

தமிழ் மதுரம் said...

சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து
தன்மாத்திரை பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்//


அப்ப மகிந்த ராஜபக்ஸவும் கடவுளோ??

- இரவீ - said...

//ஹேமா said...

நசரேயன் ,இரவீ நல்ல ஒரு கவிதை.சரியா தப்பான்னு யோசிக்க வேண்டிய கவிதை.எனக்கே எழுதிட்டேனே தவிர இன்னும் எனக்குள்ள ஒரு யோசனை.
சரியா ...தப்பான்னு.நீங்க இரண்டு பேருமே அதைப்பத்தி ஒண்ணுமே யோசிக்காமஒரே....கும்மியடிச்
சிருக்கீங்க.//

பாருங்க - நிறைய பேருக்கு முழுவதும் புரியல ... (ஐ ஜாலி நாங்க மட்டும் மக்கு இல்ல)

- இரவீ - said...

//ஒரு வாரமா கருக்கட்டி பிரசவிக்க நான் பட்ட பாடு.//
உங்க வார்த்தை விளையாட்டில் அந்த உழைப்பு தெரியுது - இருந்தாலும் என் மரமண்டைக்கு முழுவதும் விளங்கஇல்லை.

- இரவீ - said...

//இருங்க உங்க இரண்டு பேருக்கும் வரேன்.//
ஹேமா - யாரோ இன்னொரு ரவி இருக்காங்க போல ... மேலே (என் பெயரில்) உள்ள பின்னூட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

- இரவீ - said...

//ஹேமா said...

ஜமால்,அற ன்னா முழுதுமாக-மிகவும் படிச்சதா அர்த்தம்//
அப்ப அரவேக்காடு இதற்க்கு எதிர்மறையா?

- இரவீ - said...

//நட்புடன் ஜமால் said...

எங்கூர்ல

அகராதி பு(ப)டிச்சவன்னு செல்லமா திட்டுவாங்க
//
அட ஆமாங்க - என்ன கூட சொல்லிஇருக்காங்க ...

- இரவீ - said...

//கமல் said...

சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து
தன்மாத்திரை பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்//


அப்ப மகிந்த ராஜபக்ஸவும் கடவுளோ??
//

இப்ப என்ன பண்ணுவீங்க ... இப்ப என்ன பண்ணுவீங்க ...

மேவி... said...

"பிணம் எரித்து வெந்த சதை பிடுங்கி
சரிகின்ற மலையைச் சரி செய்து
நூல் கட்டி நிமிர்த்தி நாளைய பொழுதின்
நன்மை சொல்லும் நான் ஓர் கடவுள்."

ஹேமா இங்க நீங்க பிணம் என்று சொல்ல்வது கடந்து போன நேரத்தையா....
அல்லது இன்று மனிதன் செய்யும் செயலால் நாளை அவன் சந்திக்க போகும் விளைவுகளையா?????
ஆமாம் நாம் எல்லோர் கிட்டையும் நாளை பற்றியும் நாளைய முடிவுகளை பற்றியும் ஒரு கண்ணோட்டம் இருக்கும் ......
அதை கம்பர் பண்ணின விதம் நன்று ......



"பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்..."

ஆமாங்க
மனிதன் தானிடம் இல்லாத வற்றை வைத்து தான் கடவுள் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கினான் ......





"பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்."

ஆமாங்க .......
மக்கள் எல்லோரும் இல்லாதவற்றை கூடுக்கும் ஒரு இயந்திரமாக தான் கடவுளை seeing......




"எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம்."

கடவுளை பற்றி ஒரு திரை விழுந்த தகவல் தான் இருக்கு நாமகிட்ட




"காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள்."

அருமை




"காலையும் மாலையும்
இணையும் இரவில்
சிலசமயங்களில்
உங்களுக்குக் கேட்கலாம்
என் காலடி ஓசை."

அது இரவு வேளை இல்லைங்க ....
அதுக்கு வேற பெயரு ......
அழ்வார் பட்டு ல நரஷிம்ம அவதாரத்தில் பற்றிய பாட்டில் வருமுங்க.......




"சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து
தன்மாத்திரை பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்."

இது எனக்கு புரியல ......
தனிய ஒரு பின்னோட்டத்தில் சொல்லவும் .......




"நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே."

ஆமாம் உங்க thinking process பத்தி சூப்பர் ஆ சொல்லி இருந்க்கிங்க

"உங்களுக்குள் புகுந்து ஓலமிடும்
ஓநாய்கள் உயிர் வெறுக்க
விரட்டி வேட்டையாடிச்
சுட்டுச் சுவைத்து,"

இருக்கிற கடவுள்கள் நாமக்கு உள்ள இருக்கும் தீய வற்றை ஒட்டுவதில்லை ....
நீங்களாவது செய்யுங்க




"அதன் பின்னும்
கேட்கக்கூடும் பின் இரவுகளில்
உங்கள் பூட்டுக்களோடு உரசும்
என் காவல் கம்புகளின் சத்தம்.
உங்களின் கதவுகளின் அருகில்
காவலாய் காத்திருக்குக்கும்
நான் ஓர் கடவுள் !!!"

அப்ப நீங்களும் மற்ற கடவுள்களை போல் நம்பிக்கை தர மாட்டிங்க .....
இந்த மேட்டர் சமந்தமாக பெரியார் ஒன்னு சொன்னார் கோவில்கள் பூட்டு போடுவதை பார்த்து
"தானையே காத்து கொள்ள தெரியாத கடவுள் ; மக்களை எப்படி காப்பாத்துவார் "
என்று ஒரு முறை கேட்டார் ....

ஆதவா said...

அர்த்தம் எடுத்துக் கொள்ளல் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது. நான் எடுத்துக் கொண்ட அர்த்தங்களைப் பகிர்தல் மற்றவருக்கும் இடையூறு வரலாம்.. (டேய் ஆதவா இப்ப என்ன சொல்ல வர?)

நீங்கள் கேட்பது இயல்பாக அல்லாமல் ஒரு மாறுபட்ட கடவுள். இருப்பவர் சரியில்ல, அந்த நாற்காலியத் தா, நான் ஆகிறேன் எனும் கடவுள்தனம். உரிமை என்று கூட சொல்லலாம்தானே!

ஆனால் கதவுகளுக்கு அருகே காவலிருந்து அடுத்தவரின் பிரைவேசியை கெடுக்கவேண்டாம் கடவுளே!!!

மேவி... said...

padam asathal ...
nalla irukkunga...
kavithai nalla match antha padam .
frm where did u get tht pic??

ஹேமா said...

ஜமால்,எங்க ஊர்ல "அறப்படிச்சவன் கூழ்ப்பானக்குள்ள விழுந்தமாதிரி
"ன்னும் ஒரு பழமொழி சொல்லுவாங்க.

ஹேமா said...

ஷி-நிசி "நான் கடவுள்"படம் வந்த அப்புறம்,அந்தப் படம் அகோரி என்பவர்கள் இருப்பதாயும்,அதை வைத்தே அந்தப்படம் எடுக்கப்பட்டதாயும் சொல்கிறார்கள்.
நானும் அதன் பிறகே சில அகோரி பற்றின தகவல்கள் அறிந்தேன்.அதன் தாக்கமே இந்தக் கவிதை.

ஹேமா said...

நிலா அம்மா,உண்மையிலேயே குழப்பம்தான் இந்தக் கவிதை.எனக்கும்தான்.

ஹேமா said...

//இரவீ...நல்லதொரு சாயுஜ்யம்.//

சாயுஜ்யம்ன்னா என்ன?

விளங்கப்படுத்துங்க.கும்மியடிக்காம நல்ல விசயத்தைப் புரிய வையுங்க.

Poornima Saravana kumar said...

//எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம்//

அழகுங்க!!!!

வார்த்தைகளைத் தேடுகிறேன் பாராட்ட........இன்னனும்....

Poornima Saravana kumar said...

//பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.
//

ஹேமா, வார்த்தைகளை சரியா உபயோகப்படுத்தி அடுக்கியிருக்கீங்க!

ஹேமா said...

மேவி,நீங்களே என்னை மாட்டிவிட்டிட்டு இப்போ கூத்தும் பாக்கிறீங்க.

கடவுளை நாங்க கண்ணால பார்க்க முடியறதில்லை.கடவுள் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் வாழ்வதாய் நான் நினைக்கிறேன்.அவன் எவ்வளவு தன் சமுதாய அக்கறையில் எடுக்கும் பொறுப்பு அவனைக் கடவுளாகும்.
எதிர்காலத்தைக் கூடக் கணிக்கும் சக்தி அவனுக்குக் கிடைக்கிறது.
தீமைகளை அழிக்க முயல்கிறான்.
கோவில்களுக்குப் பூட்டுத் தேவையே வராது.அவனே நாட்டுக்கும் வீட்டுக்கும் பூட்டாய் ஆகிறான்.

படம் நெட்டில்தான் தேடி எடுத்தேன்.எனக்கும் பிடித்திருக்கிறது.
படம் பயமாயும் குழப்பமாயும் இருக்கிறது.

ஹேமா said...

மேவி இப்போ பாருங்க.இன்னும் புரிய வச்சிருக்கேன்.

//"சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து
தன்வந்தரியாய் (தேவ மருத்துவன்)
தன்மாத்திரை (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்கிற நுண்மூலங்கள்)
பதித்து
தன்னை அறிவிக்கும்
நான் ஓர் கடவுள்."//

ஹேமா said...

பூர்ணி,வாங்க.நீங்களாச்சும் என்னைக் குழப்பாம கருத்துச் சொல்லிட்டுப் போனீங்களே !நன்றி பூர்ணி.

ஹேமா said...

ஆதவா,திரும்பவும் வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.எனக்குள் இன்னும் கேள்விகள் எழுப்பிப் போயிருக்கிறீர்கள்.இன்னும் யோசிக்கிறேன்.

Anonymous said...

இது கவிதை...!
(அப்ப இவ்வளாவு நாளும் எழுதினது என்னடான்னு கேக்கிறீங்களா?? அவையும் கவிதயே...இது ஒரு படி மேல்!)

ஹேமா said...

கவின் வாங்கோ.எங்க அடிக்கடி காணமல் போய்....அடிக்கடி லோகோவும் மாறுது.சரி...சரி நடக்கட்டும்.

kuma36 said...

இந்த படத்திற்கு கவிதை எழுதினிங்களா அல்லது கவிதை எழுதிய பிறகு படத்தை தெரிவு செதிங்களா?
நல்ல பொருத்தமக்கா

kuma36 said...

//பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்...
பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.//

அடேங்கப்பா சூப்பர். எவ்வளவு அழகான வரிகள். அருமை

ஹேமா said...

கலை சந்தோஷம் வாங்க.
கடவுளை அறிய கடைசியாய் வந்திருக்கீங்க.நன்றி.

Raja said...

excellent one...I too have written something on the same title but in a different context...

Post a Comment