*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, February 14, 2009

கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...

Valentines

கால் நொடிந்த காத்திருப்புக்கள்
க(கா)த்திருப்புக்களாய் குந்தியபடி.
ஆற்றாமைகள் ஆமையாய்
கைகளையும் கால்களையும்
முடக்கிக்கொண்டு.
கோபமும் சோகமும் சந்தோஷமும்
ஒன்றையொன்று முறைத்தபடி.


உன் பார்வைப் புகையால்
கண்களுக்குள் காளான் விதைகள்.
என்னதான் நினைக்கிறாய் நீ?
நீயேதான் என்கிறாய்
வந்தாலோ...
முள்வேலி போட்டல்லவா
பொத்திப் பாதுகாகிறாய்
இதழை.
காலங்களும் கேலி செய்ய
காத்திருக்கிறேன் பார்
உன் உதட்டோரம்.
நீ என் பெயர் சொல்வதும் இல்லை.
என்னை நெருங்க விடுவதும் இல்லை.
முகத்தில்
நெருஞ்சி முள் வளர்த்து
நெருக்கம் குறைக்கும் கிராதகன் நீ.
இங்கே பார்...
ஒற்றை நரைகூட
எட்டிப் பார்த்து நகைக்கிறது.


மெழுகு தோய்த்த உன் முத்தங்களில்
எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை.
பேசிக்கொள்கிறார்கள்
எங்கள் ஊரின் A9 பாதைகூட
திறப்பதற்கு ஆயத்தமாம்.
உன் பாதை திறக்க
தவமல்லவா இருக்கிறேன்.
கொஞ்சம் திறந்துதான் விடேன்
இந்தக் காதலர் தினத்திலாவது.
நீ என்ன இலங்கை இராணுவம் போல
முத்தக் காவலனா
இல்லை என் காதலனா.


பொறுமை எருமையாய் மாறும்.
முள்வேலி பிய்த்து எறியும்.
நீ ஒரு நாள் தூங்கும் காலம்
என் கத்தரி தூங்காது.
வேலி வெட்டித் தறிக்கும்
மீட்டு எடுப்பேன்
என் முத்தத்தை நானே!!!


                                        மீசைக் காதலன்...
மலர்கள் மகரந்த மடல் கீறிக்
காத்திருக்கின்றன
சூரியனின் முத்ததிற்காய்.
மண்ணும் காத்திருக்கிறது
மழை முத்தத்திற்காய்.
இரவின் முத்ததிற்காய்
பனித்துளி காத்திருக்க
நான் தனிமையின் ஒரு ஓரமாய்.


என் ஊரில்
திருவிழாக்காலமும்
இல்லை இப்போ.
தொலைந்தாலாவது தேடி எடுத்து
துளி முத்தம் தருவாய்.


காற்று நிரவிய பலூனாய் பார்
உன்னைச் சுற்றியே என் பறப்பு.
பைரவக் கடவுளின் நாய்போல
காவலுக்கு
மீசை வளர்த்த பைரவன் நீ.
வெட்கம்,சிணுங்கல்,ஊடல்,கூடல்
அணைப்பு,ஆதரவு
ஆசையாய் இல்லையா அறிய .
காதலே கடவுளாய் கதை நான் எழுத
நீயோ
முற்றும் துறக்கும் முனிவன்
கதைக்குள் மூழ்கியபடி.


முத்தப்போர் முடிக்க
ஆயுதம் களைந்து வா.
காலியாய் விடு கொஞ்சம்.
இதழ் சுற்றி
இதமாய் ஒரு வேலி அமை.


காத்திருந்து...காத்திருந்த
அலுத்த எனக்கு
கன்னத்தில் ஒரு முத்தம்
கயவனடா நீ.
கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்
இந்தக் காதலர் தினத்திலாவது!!!


ஹேமா(சுவிஸ்)

65 comments:

ஆதவா said...

நான் தான் முதல்........
va

ஹேமா said...

ஆதவா,வாங்க வாங்க முதன் முதலா.காதலர் தினமும் அதுவுமா!

Muniappan Pakkangal said...

Kavithaiyai oru muththam ithazhoram meesai kuththamal intha kaathalar thinathilavathu-nalla varigal Hema.The trhrill in the kiss itself is the bristle with the Meesai.

ஆதவா said...

காதலர் தினமும் அதுவுமா காதல் கவிதையோட வந்திருக்கீங்க.. வாங்க வாங்க....

காதலின் அடையாளமான முத்தத்தை சுற்றியே கவிதை செல்லுகிறது..
சில வரிகள் கெஞ்சலும் சீண்டலுமாக...  காதல் வார்த்தைகள் அவை.

எங்கள் ஊரின் A9 பாதைகூட
திறப்பதற்கு ஆயத்தமாம்.


சந்தடி சாக்குல இதையும் இழுக்கிறீர்களே!!! இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ற வரிகள் இவை.  காதலால் மட்டுமே முடியும்...

நீ என்ன இலங்கை இராணுவம் போல
முத்தக் காவலனா


இலங்கை ராணுவம் காவலன் என்று சொல்லாதீர்கள்.... அவர்கள் முத்தக் கொலையாளிகளாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும்....

மழை முத்தத்திற்காய்.
இரவின் முத்ததிற்காய்
பனித்துளி காத்திருக்க
நான் தனிமையின் ஒரு ஓரமாய்.



ரசித்த வரிகள் இவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்தத்திற்காகத்தானே காத்திருக்கிறது.!!!

முத்தப்போர் முடிக்க
ஆயுதம் களைந்து வா.



என்னங்க...  முத்தப்போர் முடிக்க ஆயுதம் களையறதா?? கொஞ்சம் இடிக்குதே!! முத்தப்போர் தொடங்க அப்படின்னு கொடுத்திருக்கலாமே!!

முடிவும் அருமை..

இக்கவிதையின் நீளம் போலவே காதலும் நீண்டிருக்கவேண்டும்..!!!!

காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரி

புதியவன் said...

//முள்வேலி போட்டல்லவா
பொத்திப் பாதுகாகிறாய்
இதழை. //

இதழ்களுக்கு முள்வேலி...?

புதியவன் said...

//வேலி வெட்டித் தறிக்கும்
மீட்டு எடுப்பேன்
என் முத்தத்தை நானே!!! //

இப்ப புரிஞ்சது...

புதியவன் said...

//மலர்கள் மகரந்த மடல் கீறிக்
காத்திருக்கின்றன
சூரியனின் முத்ததிற்காய்.///

அழகான சொல்லாடல்...

புதியவன் said...

//கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்
இந்தக் காதலர் தினத்திலாவது!!! //

காதலர் தின கவிதை முழுதும் முத்தத்தை சுற்றியே வருகிறது...

காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா...

அது சரி(18185106603874041862) said...

//
ஆற்றாமைகள் ஆமையாய்
கைகளையும் கால்களையும்
முடக்கிக்கொண்டு.
//

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

......

கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது.....

உங்களுடையது மிக அழகான சொல்லாட்சி!

அது சரி(18185106603874041862) said...

இன்னிக்கு தான் உங்க பதிவை பார்க்கிறேன்...நீங்க தப்பா எடுத்துக்காட்டி ஒண்ணு சொல்லட்டுமா??

உங்க பதிவுல பாதி பக்கம் எம்ப்டியா இருக்கு....நான் கூட பேஜ் லோட் ஆகலைன்னு நெனைச்சேன்....உங்களுக்கு விருப்பமிருந்தா லே அவுட்டை கொஞ்சம் மாத்தலாமே?

நிஜமா நல்லவன் said...

அழகு!

நிஜமா நல்லவன் said...

மாடரேஷன் இல்லையா....இப்ப பார்த்து நான் வெளில போக வேண்டி இருக்கே...)

நிஜமா நல்லவன் said...

சரி பிறகு வருகிறேன்!

உங்கள் ராட் மாதவ் said...

காதலர் தினத்தில் கலக்கலான காதல் கவிதை.
சந்தேகமில்லாமல் எல்லாரும் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு உண்மை சொல்கிறேன்....
நீங்கள் ஒரு சேலை கட்டிய 'கண்ணதாசன்'.

அப்துல்மாலிக் said...

//முள்வேலி போட்டல்லவா
பொத்திப் பாதுகாகிறாய்
இதழை.
//

வரிகள் அருமை ஹேமா

அப்துல்மாலிக் said...

//பொறுமை எருமையாய் மாறும்.
முள்வேலி பிய்த்து எறியும்.
நீ ஒரு நாள் தூங்கும் காலம்
என் கத்தரி தூங்காது.
வேலி வெட்டித் தறிக்கும்
மீட்டு எடுப்பேன்
என் முத்தத்தை நானே!!!//

ஆஹா இந்தளவிற்கு பொறுமையிழப்பா..

அப்துல்மாலிக் said...

காதலர் தினத்தில் ஒரு அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் ஹேமா

VASAVAN said...

காதலர் தினத்திற்கேற்ற அருமையான காதல் கவிதை. கவிதையை படித்ததும் கல்லூரி நாட்களுக்கு திரும்பவும் போய் விடுவோமோ என்ற தோணல்.

Anonymous said...

காதலர் தின ஸ்பேசலா????????
:)))))))

Anonymous said...

செல்ல மறந்துட்டன் காதலர்தின வாழ்த்துகள்>>
கவிதை ஸூப்பர்

நசரேயன் said...

காதலும் அதன் உவமைகளும் அருமை, ஹும் எல்லாத்துக்கும் காலம் தான் பதில் சொல்லும். இன்னைக்கும் யாரும் கும்மி அடிக்கலை,அதனாலே வாழ்த்தோட போறேன்

- இரவீ - said...

முரட்டுத்தனம் கூடவே பிறந்ததா இல்ல வளரும்போது வந்ததா?
எத எடுத்தாலும் ஒரு முரட்டுத்தனம் தெரியுதே ....

முரட்டுத்தனம் கூட எவ்வளவு அழகு ? அழகான கவிதைக்கு நன்றி.

- இரவீ - said...

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ஹேமா.

superlinks said...

உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

- இரவீ - said...

@superlinks,
அடுத்தவரை சுட்டிகாட்டும் முன் நீ என்ன கிழித்தாய் என எண்ணிப்பார்க்கவும்.
சோகமும் - துக்கமுமே உன் வாழ்கையாய் இருக்கவேண்டும் என்று நினைத்தால் - உனக்கும் - சிங்களனுக்கும் என்ன வேறுபாடு.

அடுத்தவர் நிம்மதி கெடுப்பது மிக சுலபம் ... அதற்க்கு உன் வார்த்தைகளே உதாரணம்.

ஹேமா said...

வாங்க முனியப்பன்.கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைதான் சந்தோஷமாக.எப்பவும் கவலையா இருக்கிறேன் என்கிற குற்றச்சாட்டு இனி இருக்காதுதானே!

ஹேமா said...

//சந்தடி சாக்குல இதையும் இழுக்கிறீர்களே!!! //

ஆதவா,வாங்கோ.சந்தடி சாக்கில நம்ம சங்கதிகளையும் அவுட் ஆக்கிடறது நல்லதுதானே.

//இலங்கை ராணுவம் காவலன் என்று சொல்லாதீர்கள்.... //

ஐயோ நம்ம இராவணுவத்தை சும்மா ஒரு பேருக்குக் காவலர் என்று சொல்லிட்டேன்.அதை விடுங்க.
அவங்களைப் பத்தி நானா சொல்லித் தெரியணும் நீங்களே சொல்லிட்டீங்களே!

ஹேமா said...

ஆதவா,முத்தப் போர் முடியுதா...தொடங்குதா!

நன்றி ஆதவா.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.கவிதை நீண்டு போச்சா!இரண்டாக்கிட்டேனே!

ஹேமா said...

//காதலர் தின கவிதை முழுதும் முத்தத்தை சுற்றியே வருகிறது...//

புதியவன்,திட்டம் போட்ட முத்தக் கவிதை இது.நல்லாயிருக்குத்தானே!

ஹேமா said...

அது சரி முதன்முதலா காதலர் தினத்தோட வந்திருக்கீங்க.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நிறைவான சந்தோஷமான கருத்துக்கும் நன்றி.

//உங்க பதிவுல பாதி பக்கம் எம்ப்டியா இருக்கு....நான் கூட பேஜ் லோட் ஆகலைன்னு நெனைச்சேன்....உங்களுக்கு விருப்பமிருந்தா லே அவுட்டை கொஞ்சம் மாத்தலாமே?//

நல்லது சொல்றதில என்ன தப்பு இருக்கு.எனக்குத் தெரிந்தும் அதைத் திருத்த முடியாமல் இருக்கிறேன்.
கவனத்தில் எடுக்கிறேன்.
நன்றி அது சரி.

ஹேமா said...

நிஜமா நல்லவன்,ஜமால் காதலர்தினம் கொண்டாடப் போய்ட்டார்.அதுதான் நான் முற்றம் திறந்து விட்டும் கும்மியடிக்க யாரும் இல்லை.நீங்களும் வந்திட்டும் போய்ட்டீங்க.இராகவனையும் காணல.

ஹேமா said...

அபுஅஃப்ஸர் நீங்களும் இருந்தீங்களா.
எங்கே ஜமால்?காதலர் தினக் கொண்டாட்டமா.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

//ஆஹா இந்தளவிற்கு பொறுமையிழப்பா..//

அப்போ எவ்வளவு காலம் காத்திருக்கிறது.

ஹேமா said...

கவின் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எங்கே கமல்.
இந்தியாவுக்குப் போய்ட்டாரா!

ஹேமா said...

நசரேயன் வாங்க.எங்க நம்மவங்க எல்லாரும்.நானும் காதலர் தினம் ஒரு களை கட்டும்ன்னுதான் இருந்தேன்.இல்லாமப்போச்சு.

ஹேமா said...

இரவீ,நான் முரட்டுக் கழுதைன்னு சொல்லாமச் சொல்லிட்டீங்க.
ம்ம்ம்....ஆனாலும் பரவாயில்லை.முரட்டுத்தனம் வாழ்வின் அனுபவத்தால் வளரும்போது வந்தது என்றுதான் நினைக்கிறேன்.நன்றி எனக்கும்,என் கவிதைக்குமான கருத்துக்கும்.

ஹேமா said...

//சந்தேகமில்லாமல் எல்லாரும் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு உண்மை சொல்கிறேன்....
நீங்கள் ஒரு சேலை கட்டிய 'கண்ணதாசன்'.//

மாதவ்,இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.உங்களுக்கு எப்பவுமே என்னைக் கிண்டல் பண்றதே பொழுதாப் போச்சு.

ஹேமா said...

வாசவன்,என் கவிதை பார்த்துக் கல்லூரி நாட்கள் திரும்பி வந்ததா!நல்ல விஷயம்தானே.வாழ்த்துக்கள் உங்களுக்கும்.சந்தோஷமாய் இருந்தால் சரி.

ஹேமா said...

வணக்கம் superlinks.நீங்கள் என் எத்தனை பதிவுகள் படித்தீர்கள்.
முடிந்தால் முழுவதுமாகப் படித்துவிட்டு அதன் பிறகு உங்கள் விசனங்களைத் தெரிவியுங்கள்.
என்றாலும் மனம் நிறைந்த கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

ஹேமா said...

நன்றி இரவீ எனக்காகக் கதைத்த்ருக்கிறீர்கள்.எப்போதுமே எங்களுக்கு மனவேதனையான நாட்கள்தான்.அதற்காக என்ன செய்ய வேன்டுமோ அத்தனையும் செய்துகொண்டுதானே இருக்கிறோம்.ஒரு நிமிஷமும் சிரிக்காதே என்றால்...?கிட்டத்தட்ட கொஞ்சக் காலமாகவே மன உளைச்சலோடுதான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அவர் என்
முழுப்பதிவுகளையும் படித்துவிட்டுச் சொல்வார்.பாருங்களேன்.

Anonymous said...

//கவின் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எங்கே கமல்.
'இந்தியாவுக்குப்' போய்ட்டாரா!//
ஹாஹா...ஹாஹா...

Anonymous said...

அன்பு ஹேமா...உங்களுக்கு எனது இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள்...
உங்கள் "கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...." கவிதை வழக்கம் போல உங்கள் காதலையும் ஏக்கத்தையும் சொல்கிறது..

// என் ஊரில்
திருவிழாக்காலமும்
இல்லை இப்போ.
தொலைந்தாலாவது தேடி எடுத்து
துளி முத்தம் தருவாய். //

தொலைந்தால் தான் காதலர்(ன்) முத்தம் கிடைக்குமோ ஹேமா..?? அப்படி என்றால் நானும் தொலைந்து விட ஆசை...

மேவி... said...

ரொம்ப லாஸ்ட் ஆ வந்துட்டேன்......
நான் உங்கள் கவிதையை மீண்டும் ஒரு முன்று முறை ஆவது படித்து பார்க்க வேண்டும் .....
தாங்கள் மொழியை சூப்பர் ஆ use பண்ணிறிங்க....
உங்களின் புலமையை கண்டு ....
எனக்கும் அசையா இருக்கு இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுனும்ன்னு ....
என்ன செய்ய என் கவிதைகள் எல்லாம் வறண்ட பூமியில் நட படும் நாற்று போல் தான் இருக்கிறது ......

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் காதலுமாய் இருக்க என் வாழ்த்துக்கள்

மேவி... said...

"மெழுகு தோய்த்த உன் முத்தங்களில்
எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை. "
இதுல அவனுக்கு காதல் குறையுதுன்னு telling ah

மேவி... said...

"கோபமும் சோகமும் சந்தோஷமும்
ஒன்றையொன்று முறைத்தபடி."
மனசு confused ஆ இருந்த இப்படி தான்

மேவி... said...

"கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க"
பாசத்தை காதல் வெல்கிறதோ

"கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம். "
கவிதையின் சுவை இருக்க ... எதற்க்கு முத்தம் ன்னு போகிட போறாரு தலைவர்

"மீசை குத்தாமல்
இந்தக் காதலர் தினத்திலாவது"
சாரி.... மீசை என்று எதை சொல்கிறிர்கள்
அவன் தரும் துன்பத்தை யா

ஹேமா said...

கவின் சொல்லிட்டேன் கமலிட்ட எல்லாம் நீங்கதான் எண்டு.வாழ்த்தும்தான்.நான் இல்லப்பா.கமல் இன்னும் கவனிக்கேல்ல.இருக்கு இரண்டு பேருக்கும் நல்லா.

ஹேமா said...

மது,காதலர் தினத்தைச் சந்தோஷமா நண்பர்களுக்குக் கொடுப்போம்ன்னுதான் கலாட்டாவா ஒரு கவிதை போட்டேன்.அதுக்காக நீங்க திருவிழாவில தொலஞ்சிடாதீங்க.அப்புறம் எங்கே போய் நாங்க மதுவைத் தேடுறதாம்.

ஏன் இப்பிடிக் கரைஞ்சு போயிடறீங்க மது?

ஹேமா said...

மேவி,நிறைய சந்தோஷமாயிருக்கு உங்க கருத்துக்கள் பார்த்து.நான் பெரிசாப் படிக்க இல்ல.தமிழின் பற்றுதல் அதிகம் அவ்வளவுதான்.

//என்ன செய்ய என் கவிதைகள் எல்லாம் வறண்ட பூமியில் நட படும் நாற்று போல் தான் இருக்கிறது ...//

உங்கள் மனதுக்குள் உருவாகும் கருவைப் பொறுத்தே உங்கள் கவிதையின் அழகும் உருவாகும்.அது போதுமான அளவு உங்கள் கவிதையில் இருக்கிறது.

ஹேமா said...

MayVee //"மெழுகு தோய்த்த உன் முத்தங்களில்
எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை. "
இதுல அவனுக்கு காதல் குறையுதுன்னு telling ah//

காதல் குறைவாயில்லை.
மீசைமேல் காதல் அதிகம்.

//சாரி.... மீசை என்று எதை சொல்கிறிர்கள் .//

மீசை போட்ட படமே போட்டுக் காட்டியிருக்கிறேனே.

Anonymous said...

கரைந்து போய்விட்டால் நன்றாக இருக்குமே ஹேமா...தினம் தினம் தேய்படும் வலி இருக்காதல்லவா??

ஜியா said...

அட்டகாசம்.... வெள்ளிக் கிழமையே ஆபிஸ்ல இந்த பதிவ வாசிக்க தொடங்குனேன்.. அதுக்குள்ள பல வேளைகள் வந்து வாசிக்க முடியாம போச்சு... இப்ப ஞாபகம் வந்த உடனே வந்து படிச்சிட்டேன்... செம கலக்கல்..

//கிராதகன் // இதெல்லாம் பழைய படத்துல வில்லன் அடிக்குற டையலாக்லதான் கேட்டிருக்கோம்... கலக்குங்க...

தமிழ் மதுரம் said...

ஹேமா said...
கமல்,சொல்லாமக் கொள்ளாம இந்தியா போய்ட்டீங்களா?என்றாலும் பரவாயில்ல.உங்களுக்கும் உங்கள் காதல் தேவதைக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.நான் ஒண்டும் இல்ல.எல்லாம் கவின்தான்.//

ஒரு சில நாள் வேலைப் பளுவாக இருந்தால் அதுக்குள்ளை என்னவெல்லாம் யோசிக்கிறீங்கள்?? வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....என்னம்மா யோசிக்கிறாங்கப்பா..........???

தமிழ் மதுரம் said...

‍ஹேமா வாசிக்கும் போதே புல்லரிக்குது...

பாவம் புரிந்துணர்வைக் கிழித்தெறிந்த இலங்கை அரசு போல் உங்களைப் புரியாதிருக்கும் அவர்?? எதுக்கும் நான் பேசிப் பார்க்கவா??

அது சரி என்னை வைச்சுப் கொமடிப் படமே எடுத்திடுவீங்கள் போல இருக்கு???

தமிழ் மதுரம் said...

கற்னைய விட நிஜங்களைக் கலந்து கவிதை சொல்லிச் செல்வதால் வாசிக்கும் போது ஏதோ ஒரு வித மாற்றத்தைத் தருகிறது கவிதை..

அவன்யன் said...

Hema good Kavithai. Neriya padipeengalo

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோதரி

ஹேமா said...

//கிராதகன் // இதெல்லாம் பழைய படத்துல வில்லன் அடிக்குற டையலாக்லதான் கேட்டிருக்கோம்... கலக்குங்க...//

ஜி,முதன் முதலா வந்திருக்கீங்க நன்றி.வாங்க...வாங்க.இல்லாட்டி இனி உங்களுக்கும் திட்டு விழும்.

ஹேமா said...

//என்னம்மா யோசிக்கிறாங்கப்பா..........???
அது சரி என்னை வைச்சுப் கொமடிப் படமே எடுத்திடுவீங்கள் போல இருக்கு???//

கமல்,அப்போ இனி எங்கெயண்டாலும் போனா ஒழுங்கா சொல்லிட்டு போகவேணும்.இல்லாட்டி நாங்க எங்க போய்த் தேடுறது.

சீ...சீ நானும் கவினும் நல்ல பிள்ளையள்.அப்பிடி உங்களையெல்லாம் வச்சு முஸ்பாத்திப் படமெல்லாம் எடுக்கமாட்டோம்.

ஹேமா said...

//பாவம் புரிந்துணர்வைக் கிழித்தெறிந்த இலங்கை அரசு போல் உங்களைப் புரியாதிருக்கும் அவர்?? எதுக்கும் நான் பேசிப் பார்க்கவா??//

கமல்,நிஜங்களின் உணர்வுகள்தான் உயிரோட்டமாய் அமையும்.

என் அவரை நான் இப்போதைக்குக் கவனிச்சுக்கொள்றன்.ஆக முடியாட்டில் உங்கட உதவி கேக்கிறன்.நன்றி அக்கறையோட கேட்டதுக்கு.

ஹேமா said...

//அவன்யன் said...
Hema good Kavithai. Neriya padipeengalo//

அவன்யன் வாங்க.முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.

அவன்யன் வாழ்க்கையை நிறைவாகப் படிக்கிறேன்.சமூகம்,உலகம்
படிப்பிக்கிறது என் வாழ்க்கையை.

ஹேமா said...

ஆனந்த்,வாழ்த்துக்கள் மட்டும்தானா?நீங்கள் தந்த படத்துக்குக் கவிதை போட்டேனே.ஒண்னும் சொல்லல நீங்க.எங்க அடிக்கடி காணாம போய்ட்டீங்க.என்ன...காதலர் தினக் கொண்டாட்டமா! உங்களுக்கும் இனிய காதலின் தின வாழ்த்துக்கள்.

- இரவீ - said...

//இரவீ,என்ன ஆச்சு.சிரிச்சு முடிஞ்சாச்சா?எங்க திரும்பவும் வருவிங்கன்னு பாத்திட்டு இருக்கேன்.காணல.//
என் நினைவலை கொஞ்சம் பெரிதாகிவிட்டது... நினைக்கவே சந்தோசமா இருக்கு...


//நீங்க கேட்ட அப்புறம்தான் முடிஞ்ச அளவுக்குச் சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறேன்.//
மிக்க நன்றி ஹேமா. சொற்க்களுக்கான விளக்கத்துக்கும் அருமையான நினைவு கவிதைக்கும்.

Anonymous said...

Very nice friend
i'm copy to some kavithi
my site www.navaneethan.co.tv

Unknown said...

nice kavithaigal

Anonymous said...

nice kavithaigal

Post a Comment