*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, February 10, 2009

தூரம் அதிகமில்லை...

வா...மகனே...வா.
விரைந்து வா.
இன்னும் தூரம் சிறிதுதான்.
வலிக்காது கால்கள்.
வளரும் உனக்கு வலு அதிகம்.


உன் தாத்தா நான்.
உன் அப்பா நடந்த பாதை இது.
இப்போ உனக்கும்
திருத்தித் தருகிறேன்.
கொஞ்சம் கரடு முரடுதான்
சிரமம் தவிர்.
இன்று சோர்வு அகற்றிய
உன் நடையில்தான்
நாளைய எம் தேசம்.


கோலி விளையாட
நேரம் தள்ளி வை.
இப்போ முற்றிய கதிரின்
அறுவடையின் காலம்.
கதிர் அறுக்காமல்...!


என்னடா நீ...
அங்கும் இங்குமாய்
பராக்குப் பார்த்தபடி.
வா...வா
தூரம் இன்னும் சிறிதேதான்.


அன்னையின் கை பிடிக்கத்தானே
அரக்கப் பரக்கப்
இறக்கை கட்டிப்
பறந்துகொண்டிருக்கிறோம்.
அரக்கர்
எம் முற்றத்து மண் பரப்பில்
அளம்ப முன்.


அதோ...அதோ
அந்த வயல்
அதைத் தாண்ட
நிலவு அழகாய் பட்டுத் தெறிக்கும்
பாழுங் கிணறு ஒன்று.
அதன் பின்....பிறகு என்ன
எம் நிலம்தானே.


மகனே...மகனே
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
துரிதமாய் அடியெடு.
காலடிச் சத்தம் கேட்டே
பின்னால் உன் நண்பர்கள்
தொடர்வார்கள் உன்னை.


திரும்பிப் பார்த்துத் தாமதித்து
நொடியும் வீணாக்காதே காலத்தை.
வா...மகனே...வா
தூரம் இன்னும் அதிகமில்லை.
சிறிது மாத்திரமே!!!

ஹேமா(சுவிஸ்)

(கடையம் ஆனந்த் பதிவில் படம் தரும் கவிதைக்காக எழுதியது)

64 comments:

தமிழ் said...

/வா...மகனே...வா.
விரைந்து வா.
இன்னும் தூரம் சிறிதுதான்.
வலிக்காது கால்கள்.
வளரும் உனக்கு வலு அதிகம்./

சரியாகச் சொன்னீர்கள்

ஒவ்வொரு வார்த்தைகளும்
வலியை மட்டுமல்ல வழியையும் சொல்லுகின்றது

தமிழ் said...

/மகனே...மகனே
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
துரிதமாய் அடியெடு.
காலடிச் சத்தம் கேட்டே
பின்னால் உன் நண்பர்கள்
தொடர்வார்கள் உன்னை/

இப்படி அடி எடுத்து வைத்தால்
ஈழத்தில் தான்
இன்னல் இருந்து இடுமா ?

தமிழ் said...

படத்திற்கு கவிதை
மட்டுமல்ல
காலத்திற்கும் ஏற்ற கருத்தும்,
கவிதையும் தான்

தமிழ் said...

படத்திற்கு கவிதை
மட்டுமல்ல
காலத்திற்கும் ஏற்ற கருத்தும்,
கவிதையும் தான்

தமிழ் said...

/கோலி விளையாட
நேரம் தள்ளி வை.
இப்போ முற்றிய கதிரின்
அறுவடையின் காலம்.
கதிர் அறுக்காமல்...!


என்னடா நீ...
அங்கும் இங்குமாய்
பராக்குப் பார்த்தபடி.
வா...வா
தூரம் இன்னும் சிறிதேதான்.

/

அத்தனையும் உண்மை தோழி

வாழ்த்துகள்

ஹேமா said...

தோழி திகழ் உங்கள் முதல் பின்னூட்டம் சந்தோஷம் தருகிறது.

திகழ்,நேற்று உப்புமடச் சந்தியில் "மருவி வரும் அழகு தமிழ்"போட்டுவிட்டேன்...உங்களுக்கு நன்றியோடு.அந்தத் தளம் என்னமோ திருத்த வேலையில் இருக்கிறது.1-2 நாட்களில் சரியாகிவிடும் நன்றி திகழ்.

தமிழன்-கறுப்பி... said...

இப்பல்லாம் நிறைய பதிவுகள் எழுதுமுகிறீர்கள் ஹேமா...
எனக்கெல்லாம் ஒரு பதிவு எழுதறதே பெரிய விசயமா இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

எப்படி இருக்கறீர்கள்? உப்புமடம் சந்திப்பக்கம் வந்து கன நாள் ஆகிவிட்டது என்ன நேரம் கிடைக்ககுதில்லை, பார்க்கலாம்..

ஹேமா said...

தமிழன் வாங்க.உங்கள் தேவதைகளின் பதிவுகளோட ஒப்பிடாதேங்கோ.இருந்திட்டு எழுதினாலும் ஆழமா அனுபவிச்சு எழுதுறீங்க.

ஹேமா said...

தமிழன் நான் சுகம் உங்கள் கால் சுகம்தானே!இதற்கு முந்தைய கவிதைப் பக்கம் வரவில்லையே நீங்க.ஒரு எட்டுப் பாத்திட்டுப் போங்க.

உப்புமடச் சந்தியில் நேற்று ஒரு பதிவு போட்டேன்.ஆனால் அது என்னமோ திருத்த வேலையாம் அந்தப் பக்கம் போக ஏலாம இருக்கு.

ஆதவா said...

சகோதரி,

பின்புலத்தில் மையக்கரு புதைந்திருக்கு வலிய கவிதை இது.

நாளைய சமுதாயம் எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி இருக்க ஆசைப்படுகிறோம் என்பதைச் சொல்லுகிறது.. தாத்தா, இன்றைய குண்டுக்கு காலிழந்தவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்,

இன்னும் பாதை சரிசெய்து கொண்டிருக்கிறார்.... ஏனெனில் நாளைய சமுதாயம் கரடு முரடான பாதையில் செல்வதைத் தவிர்க்க விரும்புகிறார்...

அறுவடை காலம்.... அப்படியொரு குறியீடுதான்..

இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் குறியீடுகளை அமைத்து எழுதுவது அசாத்தியம். அதைச் சாத்தியப்படுத்திய உங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள்..

அன்புடன்
ஆதவா/

Anonymous said...

நம்பிக்கை வரிகள்....

Anonymous said...

கவிதை கூடவே நாங்களும் வருகிறோம்

நட்புடன் ஜமால் said...

வரிகள் அனைத்தும் அருமை.

\\கோலி விளையாட
நேரம் தள்ளி வை.
இப்போ முற்றிய கதிரின்
அறுவடையின் காலம்.
கதிர் அறுக்காமல்...!\\

அந்த குழந்தையை நினைத்து மனம் வெம்புகிறது.

குழந்தை பருவத்தை தொலைக்கவேண்டிய நிர்பந்தம்.

நட்புடன் ஜமால் said...

\\கடையம் ஆனந்த் பதிவில் படம் தரும் கவிதைக்காக எழுதியது\\

ஓஹ்! ...

ஹேமா said...

ஆதவா,நன்றி.நாங்கள் ,எங்கள் இளைய சமுதாயம் உணர்வோடு நகரவேண்டுமானால் உணர்வுள்ள எம் முன்னோரின் பின்புலம் நிச்சயம் தேவை.இல்லையேல் என்ன நடக்குது...ஏது செய்யவேணும் என்றே தெரியாமல் எம் கொள்கைகள் தளர்ந்து போய்விடும்.எங்கள் வழிகாட்டிகள் எம் முன்னோர்தான்.

ஹேமா said...

கவின் நாங்கள் கூப்பிடும் வரையில் காத்திருக்காமல் எங்கள் தேசத்திற்கு உங்கள் கடமைகள் நிறையவே இருக்கிறது.செயல்படுங்கள்.

ஹேமா said...

ஜமால்,எங்கள் நாட்டின் குழந்தைகள் நிலைமை பரிதாபம்.அவர்கள் தங்கள் வயதுக்கேற்ற வாழ்வா வாழ்கிறார்கள்.உணவு...விளையாட்டு
...படிப்பு...சுதந்திரம்....சந்தோஷம் எல்லாம்...எல்லாமே!

ஹேமா said...

ஜமால்.கடையம் ஆனந்த் சிலசமயம் நல்ல கவிதைகளைப் பிறப்பிக்கிறார்.நன்றி அவருக்கு இந்தச் சமயத்தில்.

நசரேயன் said...

கலக்கல் வரிகள் வாழ்த்துக்கள்,யாரும் கும்மி அடிக்கலை அதனாலே வாழ்த்தோட போறேன்

Muniappan Pakkangal said...

Nalla kavithai & nalla padam.

தேவன் மாயம் said...

கோலி விளையாட
நேரம் தள்ளி வை.
இப்போ முற்றிய கதிரின்
அறுவடையின் காலம்.
கதிர் அறுக்காமல்...//

கலக்குங்க!
வலைச்சர வேலை இருக்கு!!
தேவா..

ஹேமா said...

வாங்க நசரேயன்.கும்மியடிக்கன்னு ஒரு கவிதை போட்டாப் போச்சு.
பாக்கலாம் காதலர் தினத்துக்கு.

ஹேமா said...

முனியப்பன்,நன்றி கருத்துக்கு.படம் ஆனந்த் தந்தது.

ஹேமா said...

தேவா,இன்றைய வேலைப்பளுவுக்குள்ளும் இங்கும் எட்டிப்பார்க்க நேரம் கிடைத்ததா!நன்றி தேவா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.ஆறுதலாக வாருங்கள்.

புதியவன் said...

//அதோ...அதோ
அந்த வயல்
அதைத் தாண்ட
நிலவு அழகாய் பட்டுத் தெறிக்கும்
பாழுங் கிணறு ஒன்று.
அதன் பின்....பிறகு என்ன
எம் நிலம்தானே.//

வார்த்தைகளில் வலியையும் தாண்டி நம்பிக்கை தெரிகிறது ஹேமா...

புதியவன் said...

//திரும்பிப் பார்த்துத் தாமதித்து
நொடியும் வீணாக்காதே காலத்தை.
வா...மகனே...வா
தூரம் இன்னும் அதிகமில்லை.
சிறிது மாத்திரமே!!! //

இதே போல் சிறிது காலத்தில் எல்லாம் சரியானால் எவ்வளவு நன்றாக இருக்கும்...ம்ம்ம்...காத்திருப்போம்...

காரூரன் said...

இது நடையின் கவிதை அல்ல‌
கவிதையின் நடை.

அருமை ஹேமா, எப்படி இப்படி எல்லாம்..
கவி படைக்க தெரியாவிட்டாலும்
இரசிக்கத் தெரிந்தவன்.

வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

உன் தாத்தா நான்.
உன் அப்பா நடந்த பாதை இது.
இப்போ உனக்கும்
திருத்தித் தருகிறேன்.
கொஞ்சம் கரடு முரடுதான்
சிரமம் தவிர்.
இன்று சோர்வு அகற்றிய
உன் நடையில்தான்
நாளைய எம் தேசம்.

நல்ல கவிதை!
10.30 மணிக்கு வலைச்சரம் வரவும்
தேவா.

மேவி... said...

me th 30

மேவி... said...

"வா...மகனே...வா.
விரைந்து வா.
இன்னும் தூரம் சிறிதுதான்.
வலிக்காது கால்கள்.
வளரும் உனக்கு வலு அதிகம்."
ஆமாம்.... வளரும் கால்களுக்கு வலு இருப்பதால் தான் வாழ்கையின் வலி தெரியாமல் இருக்கிறது......

உங்கள் ராட் மாதவ் said...

சீரியஸ் ஆக கேட்கிறேன். நீங்கள் ஏன் தமிழ்
திரை உலகில் பாடல்கள், கவிதைகள் எழுத
முயற்சிக்கக்கூடாது?

தாமரை என்றொரு பெண் கவிஞர் ஏற்கனவே
பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

சோதனை முயற்சியாக ஒரு தலைப்பு
தருகிறேன். 'நித்திரை மேகங்கள்'

எனக்கு உறுதி. நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்.

அப்துல்மாலிக் said...

//உன் தாத்தா நான்.
உன் அப்பா நடந்த பாதை இது.
இப்போ உனக்கும்
திருத்தித் தருகிறேன்.
கொஞ்சம் கரடு முரடுதான்
சிரமம் தவிர்.
இன்று சோர்வு அகற்றிய
உன் நடையில்தான்
நாளைய எம் தேசம்//

நல்ல வரிகள்

தமிழ் மதுரம் said...

ஹேமா கவிதை மொழி வழக்கோடு அருமையாய் நகர்கிறது. இருப்பினும் ''நானோர் அகதியை' இது நினைவு படுத்துகிறது. பிஞ்சையும் நஞ்சாய் நினைக்கும் சிங்களத்திற்கு மகனை அனுப்பினால் என்ன? மகவை அனுப்பினால் என்ன எல்லாம்??


என்றோர் ஓர் நாள் தமிழன் தன் இலட்சியத்தை அடைவான் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.. கடைசித் தமிழன் இருக்கும் வரை ..அவன் ஈழத் தமிழனோ/ புலம்பெயர் தமிழனோ என்றில்லை எவனாக இருந்தாலும் அவன் தன் இலட்சியத்திற்காய் எதையும் செய்து கொண்டே இருப்பான் என்பதிலும் ஐயமில்லை.

மாதவராஜ் said...

அந்த வயல்
அதைத் தாண்ட
நிலவு அழகாய் பட்டுத் தெறிக்கும்
பாழுங் கிணறு ஒன்று.
அதன் பின்....பிறகு என்ன
எம் நிலம்தானே.//

தாங்க முடியவில்லை. அவஸ்தைப்படுத்துகிறது.

ஹேமா said...

புதியவன்,இன்று எனக்கொரு யோசனை.வலி என்கிற உணர்வை இறைவன் ஈழத்தமிழருக்கு என்றே படைத்திருப்பானோ!

ஹேமா said...

//இதே போல் சிறிது காலத்தில் எல்லாம் சரியானால் எவ்வளவு நன்றாக இருக்கும்...ம்ம்ம்...
காத்திருப்போம்...//


காத்திருப்புக்களூம் நம்பிக்கையோடு!

ஹேமா said...

//இது நடையின் கவிதை அல்ல‌
கவிதையின் நடை.//

காரூரன் இதையெல்லாம் கவிதை என்றா நினைக்கிறீர்கள்.மனதின் அங்கலாய்ப்பு.

ஹேமா said...

தேவா,வந்தேன் வாழ்த்தும் சொன்னேன்.இந்த இடைஞ்சலான வேளையிலும் உங்கள் வருகைக்குச் சந்தோஷம்,.

ஹேமா said...

//ஆமாம்.... வளரும் கால்களுக்கு வலு இருப்பதால் தான் வாழ்கையின் வலி தெரியாமல் இருக்கிறது......//

மேவி,முப்பதாய் முத்தாய் வந்தீர்கள்.சந்தோஷம்.

வாழ்வின் வலியை...வழியைச் சொல்லி உணர வைக்கவேண்டும்.இலையேல் வழிதவறி வழிவிட்டு...பின் எமக்கென்ற வழியே இல்லாமல் வலியோடு வாழவேண்டி வரும்.

ஹேமா said...

வாங்க மாதவ்,என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.
பயமாயிருக்கு.சோதனை... முயற்சின்னு.சரி ஒரு கவிதைக்குத் தலைப்புத் தந்திருக்கீங்க.முயற்சி பண்றேன்.நன்றி.ஆனா அவகாசம் வேணும்.

ஹேமா said...

அபுஅஃப்ஸர்,நன்றி.ரசித்துக் கருத்துச் சொல்கிறீர்கள்.

ஹேமா said...

கமல் வாங்கோ.எனக்கு'நானோர் அகதியை'ப்பற்றித் தெரியாது.நானே ஓர் அகதி.அது மட்டும் உணர்கிறேன்.வலிக்கிறது.நித்திரையில் கூட பிதற்றிப் பைத்தியமாய் உளறுகிறேன்.அதன் வரிகள்தான் இவைகள்.

என் தேசம்...என் நாடு...
என் ஊர்.சாகுமுன் போகவேணும்.அங்குதான் நான் சாகவேணும் முடியுமா...?

ஹேமா said...

மாதவராஜ்,நன்றி.எங்கள் அவஸ்தைகள் உங்களையும் வதைக்கிறதே.அதுகூடக் கவலையாய்தான் இருக்கிறது.
யாருக்குமே கஸ்டம் கொடுக்க
வேண்டாம் என்றுதான் நினைக்கிறோம்.ஆனாலும் கொடுக்கிறோம்.

Anonymous said...

அன்பு ஹேமா...நலமா?
சிறிது இடைவெளி விட்டு உங்கள் பதிவுகளை சுவைக்க ஓடோடி வந்தேன்..உங்கள் தோழிக்காக எழுதிய பதிவு மிக அழகு...
"தூரம் அதிகமில்லை"
மகனே...மகனே
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
துரிதமாய் அடியெடு.
காலடிச் சத்தம் கேட்டே
பின்னால் உன் நண்பர்கள்
தொடர்வார்கள் உன்னை.


திரும்பிப் பார்த்துத் தாமதித்து
நொடியும் வீணாக்காதே காலத்தை.
வா...மகனே...வா
தூரம் இன்னும் அதிகமில்லை.
சிறிது மாத்திரமே!!!

இவ்வரிகள் நம் தமிழின விடுதலைக்காக நாம் எடுக்கும் முயற்சிகளை விரைவாக்க சொல்கிறது..
இது என் எண்ணம்...நீங்கள் பதித்த கருத்தும் அது தானோ??

நிஜமா நல்லவன் said...

கவிதையை ரசிக்க முடிந்தாலும் வலியே பிரதானமாய் இருக்கிறது!

ஹேமா said...

//இவ்வரிகள் நம் தமிழின விடுதலைக்காக நாம் எடுக்கும் முயற்சிகளை விரைவாக்க சொல்கிறது..
இது என் எண்ணம்...நீங்கள் பதித்த கருத்தும் அது தானோ??//

மது நன்றி வரவுக்கு.ஒரு நம்பிகையோடு சொன்ன வரிகள்தான் அவைகள்.

ஹேமா said...

நல்லவன்,வலியையேதாய் வாழ்வாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

\\ஹேமா said...

புதியவன்,இன்று எனக்கொரு யோசனை.வலி என்கிற உணர்வை இறைவன் ஈழத்தமிழருக்கு என்றே படைத்திருப்பானோ!\\


இல்லை இல்லை

இல்லவே இல்லை.

வலி என்பதை நீங்கள் உணர்வதால், நீங்கள் மட்டுமே வலிக்கு உள்ளானீர்கள் என கருத்து வந்திருக்கலாம்.

உலகை சுற்றி கொஞ்சம் கவணியுங்கள் ...

சக்(ங்)கடத்தார் said...

ஹேமா said...
என் தேசம்...என் நாடு...
என் ஊர்.சாகுமுன் போகவேணும்.அங்குதான் நான் சாகவேணும் முடியுமா...?//

பிள்ளை தமிழன் வாழ வேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால் அது நிச்சயம் நடக்கும். என்னை மாதிரியே உம்மடை ஆசை உள்ளதுக்கும் வாழ்த்துக்கள். எல்லோரும் ஊர் கூடித் தேர் இழுக்கும் காலம் விரை விலை வரும் மோனை.

VASAVAN said...

//நானே ஓர் அகதி.அது மட்டும் உணர்கிறேன்.வலிக்கிறது.நித்திரையில் கூட பிதற்றிப் பைத்தியமாய் உளறுகிறேன்.அதன் வரிகள்தான் இவைகள்.?//

வரிகளை வாசிக்கும்போதே வலிக்கிறது.

முதலில் இது போன்ற எதிர்மறை சிந்தைகளை மனதில் நின்று பிடிவாதமாக களைந்து விடுங்கள்.
மனது என்றும் தளரக்கூடாது.

பாதையை தேடி நடப்பதை விட பாதச் சுவடுகளை விட்டுச் செல்வது, ஒரு புதிய பாதைக்கு வழி வகுக்கும் அல்லவா?

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

புது தலைப்பு கிடைத்து விட்டது (நித்திரை மேகங்கள்). நன்றாக இருக்கின்றது.
எப்போது ரிலீஸ் செய்யப் போகிறீர்கள்?

உங்கள் ராட் மாதவ் said...

//Blogger நட்புடன் ஜமால் said...
\\ஹேமா said...
புதியவன்,இன்று எனக்கொரு யோசனை.வலி என்கிற உணர்வை இறைவன் ஈழத்தமிழருக்கு என்றே படைத்திருப்பானோ!\\
இல்லை இல்லை
இல்லவே இல்லை.
வலி என்பதை நீங்கள் உணர்வதால், நீங்கள் மட்டுமே வலிக்கு உள்ளானீர்கள் என கருத்து வந்திருக்கலாம்.
உலகை சுற்றி கொஞ்சம் கவணியுங்கள் ...//

இதை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

புதுசா வந்தால்தான் வலி, அதுவே பழகிப்போச்சுன்னா வெறும் சுண்டெலி...

கஷ்டம் சின்ன கல்லு மாதிரி, கண்ணுக்கிட்ட வச்சுப்பாத்தா பெருசு, கொஞ்சம் தள்ளி வச்சா சிறுசு, அதையே தூக்கி தூரப்போட்டுட்டு திரும்பி பாக்காம போனா, அப்படி ஒன்னே இல்ல...... அவ்வளவுதாங்க வாழ்க்கை...

அப்துல்மாலிக் said...

என் வலைப்பக்கம் வந்து பாருங்க‌
கொஞ்சம் புதுமையா

Poornima Saravana kumar said...

//வா...மகனே...வா.
விரைந்து வா.
இன்னும் தூரம் சிறிதுதான்.
வலிக்காது கால்கள்.
வளரும் உனக்கு வலு அதிகம்//

அழகா இருக்குங்க.. மொத்தத்தில் கவிதை அருமை..

ஹேமா said...

//வலி என்பதை நீங்கள் உணர்வதால், நீங்கள் மட்டுமே வலிக்கு உள்ளானீர்கள் என கருத்து வந்திருக்கலாம்.//

ஜமால,ஒத்துக்கொண்டாலும் ,
எனக்கென்று வரும்போது அதுவே பெரிதாய் தெரிகிறது.உங்கள் ஆறுதலுக்கு நன்றி ஜமால்.

ஹேமா said...

சங்கடத்தார்,அப்பு உங்கட மனசால வாழ்த்துங்கோ.உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு.நிச்சயம் பலிக்கும்.

ஹேமா said...

வாசவன்,இது எதிர்மறை அல்ல.அது எனது...வேணும் என்கிற ஆதங்கம்.யாரோ எடுத்து போக, எனதில்லை இனி என்று ஆகும்போது...!என்றாலும் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் இதமாக இருக்கிறது.

கவிதைத் தலைப்பு....காதலர் தினம் ஒரு வாரம்.அதன் பிறகு "நித்திரை மேகங்கள்"கொண்டாடுவோம் OK யா?

ஹேமா said...

//புதுசா வந்தால்தான் வலி, அதுவே பழகிப்போச்சுன்னா வெறும் சுண்டெலி...//

மாதவ்,இது பழமொழிக்கு மட்டுமே.எங்கள் வலியைத் தள்ளி வைக்க வைக்கக்கூடுதே தவிர,குறைவதயோ மறைவதாயோ இல்லையே!

//கஷ்டம் சின்ன கல்லு மாதிரி, கண்ணுக்கிட்ட வச்சுப்பாத்தா பெருசு, கொஞ்சம் தள்ளி வச்சா சிறுசு, அதையே தூக்கி தூரப்போட்டுட்டு திரும்பி பாக்காம போனா, அப்படி ஒன்னே இல்ல...... அவ்வளவுதாங்க வாழ்க்கை...//

மாதவ்,எப்படி எப்படி ...இப்படி சுலபமாக விடமுடியும்.என் தேசம்.இருப்பிடம் கலைந்தோம்.
இழந்தோம் எல்லா விதத்திலும்.
இன்னும் இன்னும் ....!எப்படி அதைப்பற்றி யோசிக்காமலோ கவலைப்படாமலோ விடமுடியும்.
முடிந்த அளவு முட்டித்தான் பார்ப்போமே.நன்றி ஆறுதலுக்கு.

ஹேமா said...

அபுஅஃப்ஸர்,வந்தேன் ஐயா.உங்கள் பக்கம் மிகவும் ரசித்தேன்.உங்களுக்கு பின்னூட்டம் போடக்கூடியதாக இருக்கிறது.இரட்டிப்புச் சந்தோஷம்.நன்றி அபுஅஃப்ஸர்.

ஹேமா said...

பூர்ணி,எங்கே ரொம்ப நாளா காணோம்.சுகம்தானே!ரம்யாவுக்கு எங்கூட கோவமாம்.கொஞ்சம் சொல்லுங்க எனக்காக.அவங்களை வலைபதிவு ஆசிரியரா இருக்கிறப்போ வந்து பாக்கலையாம்.முதல் நாள் வாழ்த்துச் சொன்னேன்.அப்புறம் எனக்குச் சுகமில்லை.
நம்பமாட்டாவாம்.

அமுதா said...

வரிகள் அனைத்தும் அருமை.
/*
அன்னையின் கை பிடிக்கத்தானே
அரக்கப் பரக்கப்
இறக்கை கட்டிப்
பறந்துகொண்டிருக்கிறோம்.
அரக்கர்
எம் முற்றத்து மண் பரப்பில்
அளம்ப முன்.

அதோ...அதோ
அந்த வயல்
அதைத் தாண்ட
நிலவு அழகாய் பட்டுத் தெறிக்கும்
பாழுங் கிணறு ஒன்று.
அதன் பின்....பிறகு என்ன
எம் நிலம்தானே
*/
மனதைப் பிசையும் வரிகள். என்று தீரும் இக்கொடுமைகள் என்ற ஏக்கத்தை ஏற்படித்துகின்றன.

- இரவீ - said...

தூரம் அதிகமோ - துயரம் அதிகமோ கூற இயலாது ...
முடிவு மட்டும் நன்றாக தெரியும் - உன்னுடையது உனதாகும்.

ஹேமா said...

நன்றி அமுதா.நிறைவான உங்கள் கருத்துக்கு.இன்னும் வாங்க.

ஹேமா said...

வாங்க இரவீ,மீண்டு(ம்) வந்திட்டீங்க.சந்தோஷம்.சுகம்தானே!வந்தவுடம்குழந்தைநிலாவுக்கு ஓடி வந்திட்டீங்க.நன்றி.

//உன்னுடையது உனதாகும்.//

நிச்சயம் இரவீ,
உண்மையான வாசகம்.

Post a Comment