*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, January 24, 2009

குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்...

http://orkutluv.com/ graphic comments-Sweet Birthday
அடியெடுத்த ஓராண்டின் பூர்த்தி
குழந்தைநிலாவுக்கு.
இனியவள் அவளுக்கு நான்தான் முதலில்
நிறைந்த நன்றி சொல்வேன்.
எத்தனை ஆறுதல் எனக்கு அவள்.

பெற்றெடுத்தவள் நானாய் ஆனாலும்
தந்தையாய் உயிர் கொடுத்த
என் பெற்றோருக்கு முதல் நன்றி.
உயிர் கொடுத்த கவிதைக் கடதாசிகளுக்கு
பக்குவம் சொல்லி வர்ணங்கள் கொண்டு
"வானம் வெளித்த பின்னும்" என்று
பாதை போட்டு வானிலே குழந்தைநிலாவை
உலவ விட்ட
தீபசுதனுக்கும்

அரவிந் ஆறுமுகத்திற்கும்(Lee)
மனம் நிறைந்த நன்றி பல.

இன்னும் சொல்ல இணையத்து நண்பர்கள்
கைகொடுத்து ஊக்கம் தெளித்து
வளர்த்துவிட்ட
பெயர் சொல்லி என் அன்பை
நன்றியை மழுங்கவிடா
அத்தனை என் உள்ளங்களுக்கும்
நிறைந்த நன்றி.
உள்ளம் நெகிழ்ந்த நன்றி பல.

என்றும் அன்போடு ஹேமா.
என் கவிதைகள்...
தூவானச் சாரல் கோலமிட
நெஞ்சு நொந்து
கிழிந்த பக்கங்களின்
கீறல்கள் கவிதைகளாய்.
உண்டாக்கப் படாமல்
உள்ளம் கருக்கொண்டு
பிரசவிக்கும் எண்ணக் குழந்தை
கவிதைகளாய்.

கற்பனையாய் சும்மாவாய்
நினைத்து முனைந்து முக்காமல்
மனம் களைத்து
முளைவிட்டுப் பூத்தவையே
கவிதைகளாய்.
அழகு வசனம் எடுத்து
வார்த்தைகள் கோர்த்தெடுத்து
தொடுக்காமல்
நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே
கவிதைகளாய்

கருச்சொந்தம் காததூரம் இருக்கையிலும்
அருவமாய் உருவமாய்
அருகிருந்து சந்தம் தருவது
கவிதைகளாய்.
இன்பம் துன்பம் எதுவோ
கோல்கொண்டு கீறும்
என் இதயத்தை
மயில் இறகால் மெல்ல வருடி
இதம் தருவதும் கவிதைகளாய்.

உணர்வோடு ஒன்றி
ஓரிரண்டு வார்த்தைகள் உள் நுழைந்து
ஓராயிரம் கதைகள் சொல்லி
திணறச் செய்வதும் கவிதைகளாய்.
ஐயோ என்று அரட்டிடாமல்
அழுது புரண்டு ஊர் கூட்டிடாமல்
மனதோடு விம்மியழுது
மனப்பாரம் குறைத்துவிட
கசிகின்ற இரத்தம் கொண்டு
கிறுக்குவதும் கவிதைகளாய்.

வாய் எதிர்த்துப் பேசிடாமல்
வாக்குவாதம் பண்ணிடாமல்
பேனாவின் மை கொண்டு
வையத்தை வியக்க வைப்பதும்
கவிதைகளாய்.
வாரம் ஒரு கவிதை கருவாக
காற்றில் கலக்கும்
கவிதை என்கிற பெயரில்.
உணர்வுக்குள் மை எடுத்து
சிதறிய ஊற்றே கவிதைகளாய்.
நொந்த மனம் நோ மறக்க
மருந்தானது கவிதைகளாய்.

"வானம் வெளித்த பின்னும்"
நானும் நாமமிட்டேன்.
என்றாலும்
ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.
தமிழின் தாயே நன்றியோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

61 comments:

நசரேயன் said...

குட்டி நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

/*"வானம் வெளித்த பின்னும்"
நானும் நாமமிட்டேன்.
என்றாலும்
ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.
தமிழின் தாயே நன்றியோடு நான்!!!
*/
தமிழ் தாய் தமிழனை கை விடமாட்டாள், விரைவில் விடியல் பிறக்கும் தமிழனுக்கு என நம்புவோம்

ஹேமா said...

நன்றி...நன்றி நசரேயன்.உங்கள் வாழ்த்துக்கள்தான் முதலில் குழந்திநிலாவுக்கு.அவள் இனிதே வளர மனதார வாழ்த்தியதுக்கு என் இனிய நன்றி.

ஹேமா said...

//தமிழ் தாய் தமிழனை கை விடமாட்டாள், விரைவில் விடியல் பிறக்கும் தமிழனுக்கு என நம்புவோம்.//

எங்கள் ஈழத்தின் வானமும் வெளிக்கும்,விடியும்,காத்திருப்போம்.

கானா பிரபா said...

மிகுந்த மகிழ்ச்சி ஹேமா

இந்த வலைத்தளத்தை ஒரு அனானி அன்பர் என் தளத்தில் வந்து அறிமுகப்படுத்தியிருந்தார், அதன் பின்னர் உங்கள் கவிதைகள், நினைவுப்பதிவுகளைத் தவறாது படித்தும், ரசித்தும் வருகின்றேன். வலைப்பதிவில் வந்த பலர் காணாமல் போய்விட்டார்கள் அந்தப் பட்டியலில் நீங்கள் இருக்கக்கூடாது என்பது என் அன்பு வேண்டுகோள்.

தேவன் மாயம் said...

கருச்சொந்தம் காததூரம் இருக்கையிலும்
அருவமாய் உருவமாய்
அருகிருந்து சந்தம் தருவது
கவிதைகளாய்.
இன்பம் துன்பம் எதுவோ
கோல்கொண்டு கீறும்
என் இதயத்தை
மயில் இறகால் மெல்ல வருடி
இதம் தருவதும் கவிதைகளாய்.///

கவிதை
கண்ணீர்
இரண்டும்
கலந்தோடும்
உங்கள்
எழுத்துக்கள்!!!
தேவா...

அப்புச்சி said...

முதலாவது ஆண்டை தங்களின் வலைப்பூ ஒராண்டின் விடியலாக கொண்டாடுவது இட்டு மகிழ்வு அடைகிறேன்,கவைதைகளுக்கும் எனக்கும் உண்மையில் தூரம் அதிகம்,ஆனாலும் வாசிப்பு என்னும் ஒரு வெளியில் உங்களது கவிதைகளும் வாசிக்கப்பட்டது.தங்களின் கவிதை தளத்தில் எனக்கு பிடித்தது அடிப்படையான உணர்வுகளின் வரிகளும் அந்த உணர்வுகளை வெளி கொணர்வதற்கான தங்களின் வார்த்தைகளும்,ஒரே ஒரு உண்மையையாக நான் நம்பும் ஒரு விடயத்தையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்,அடிப்படையில் புலம் பெயர்ந்த தமிழர்பலர் எப்போதும் தமது ஊரையும் ஊர் வாழ்வும் பற்றி எழுதி பிரபல்யம் அடைகிறார்கள்.எழுத்து என்பது அப்படி அல்ல,தனக்கான உலகத்தை அது எப்போதும் திறந்து வழிவிடுகிறது,எந்த ஓரு சக்தியாலும் ஒரு எழுத்தை கொல்லமுடியாது,தங்களுக்கான ஒரு எழுத்து தளம் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் திறந்துவிடப்பட்டுள்ளது,ஆகவே தொடருங்கள்...........தங்களது ஒருவருட கவிதை உணர்வின் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்,எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,மாணவர்கள் என எல்லோரையும் நினைவுகொள்வோம்,மரணங்கள் எப்போதும் மலிவானவை அல்ல,, கருத்து வெளிப்பாடு சுதந்திரத்துக்காக கொடூரமாக காட்டுமிராண்டிதனமாக கொலை செய்யப்பட்ட அத்தனை பேரையும் இந்த நேரத்தில் நினைவு கொள்வோம்.....

மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.
மிருகங்களில் கூட
ஏதோ எங்கோ ஒன்றுதான்
அதிசயமாய்
தன் இனத்தைத்
தானே தின்னும்.
மிருகங்களை வென்றவனாய்
இங்கு மனிதனும் இப்போ....


தோழமையுடன்


அப்புச்சி........

தேவன் மாயம் said...

அன்புடன்
குழந்தை
நிலாவுக்கு
வாழ்த்துக்கள்!!!

தேவா/

ஹேமா said...

பிரபா,அன்போடு நன்றி.எனக்கும் குழந்தைநிலாவுக்கும் இறுக்கமாய் ஒரு இணைப்பு இருந்துகொண்டுதான் இருக்கும்.காலம் என்றும் நிறைந்த நேரங்களைத் தந்து உதவட்டும்.
இன்னும் நிறைய எழுத உணர்வுகளும் இற்றுப்போகாமல் இருக்க வேண்டுகிறேன்.நன்றி பிரபா.

ஹேமா said...

தேவா,என் கவிதைகள் கூடுதலாகக் கண்ணீராலேயே நனைகின்றன.
காரணம் உண்மையில் எனக்கே புரியாதது.நன்றி தேவா இனிய வாழ்த்துக்கு.

ஹேமா said...

நன்றி அப்புச்சி நிறைவான உங்கள் வாழ்த்துக்கு.என்றும் எமக்காக உயிர் விட்ட அத்தனை செம்மல்கள் அத்தனை பேரையுமே நினைவில் கொள்வோம்.

தமிழ் said...

வாழ்த்துகள்

நானானி said...

நிலாக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் ஹேமா... மேலும் நிறைய எழுதுங்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் ஹேமா... மேலும் நிறைய எழுதுங்கள்...

நட்புடன் ஜமால் said...

நிலாக்குட்டிக்கு எமது இதயம் கணிந்த வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

\\உள்ளம் கருக்கொண்டு
பிரசவிக்கும் எண்ணக் குழந்தை
கவிதைகளாய்.\\

அருமை,

தாங்கள் சிறந்த தாய்
தங்கள் கவி-குழந்தைகள் அனைத்தும் சிறந்ததாய்.

RAMYA said...

குட்டி பாப்பா நிலாவிற்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே
கவிதைகளாய் \\

ஈழத்து தாய்
வலிகள்லிருந்து மீளாததாய்

நட்புடன் ஜமால் said...

\\என் இதயத்தை
மயில் இறகால் மெல்ல வருடி
இதம் தருவதும் கவிதைகளாய்.\\

அழகானதாய்
ஆழமானதாய்

RAMYA said...

//
தூவானச் சாரல் கோலமிட
நெஞ்சு நொந்து
கிழிந்த பக்கங்களின்
கீறல்கள் கவிதைகளாய்.
உண்டாக்கப் படாமல்
உள்ளம் கருக்கொண்டு
பிரசவிக்கும் எண்ணக் குழந்தை
கவிதைகளாய்
//

எண்ணக் குழந்தைகளின்
வருகை அருமை ஹேமா !!!

நட்புடன் ஜமால் said...

\\ஐயோ என்று அரட்டிடாமல்
அழுது புரண்டு ஊர் கூட்டிடாமல்
மனதோடு விம்மியழுது \\

வலியானதாய்
வலிமையானதாய்

நட்புடன் ஜமால் said...

\\கவிதை என்கிற பெயரில்.
உணர்வுக்குள் மை எடுத்து
சிதறிய ஊற்றே கவிதைகளாய்.
நொந்த மனம் நோ மறக்க
மருந்தானது கவிதைகளாய்.\\

உணர்வானதாய்
உரமானதாய்

நட்புடன் ஜமால் said...

\\"வானம் வெளித்த பின்னும்"
நானும் நாமமிட்டேன்.
என்றாலும்
ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.
தமிழின் தாயே நன்றியோடு நான்!!!\\


ஈரமானதாய்
தீரமானதாய்

RAMYA said...

//
உணர்வோடு ஒன்றி
ஓரிரண்டு வார்த்தைகள் உள் நுழைந்து
ஓராயிரம் கதைகள் சொல்லி
திணறச் செய்வதும் கவிதைகளாய்.
ஐயோ என்று அரட்டிடாமல்
அழுது புரண்டு ஊர் கூட்டிடாமல்
மனதோடு விம்மியழுது
மனப்பாரம் குறைத்துவிட
கசிகின்ற இரத்தம் கொண்டு
கிறுக்குவதும் கவிதைகளாய்.
//

ஆமாம் ஹேமா
மனபாரம் குறைய வேண்டுமானால்
இது போல் பல துறைகளிலும்
மிளர நம்மால் முடியும்.

போராட்டம் என்று நினைக்காமல்
எதையும் நமக்கு சாதகமாக்கி
கொள்ள துணிந்துவிட்டால்
அங்கு எந்தவித போராட்டமே இல்லை.

நட்புடன் ஜமால் said...

குண்டுகளாய் சூல் கொண்டு இரத்தச்சிதற்களாய் பொழியும் மேகம் ஒரு நாள் கலையும்

வானம் வெளித்து தோன்றும்

பிரார்த்தனைகளுடன் ...

RAMYA said...

//
வாய் எதிர்த்துப் பேசிடாமல்
வாக்குவாதம் பண்ணிடாமல்
பேனாவின் மை கொண்டு
வையத்தை வியக்க வைப்பதும்
கவிதைகளாய்.
வாரம் ஒரு கவிதை கருவாக
காற்றில் கலக்கும்
கவிதை என்கிற பெயரில்.
உணர்வுக்குள் மை எடுத்து
சிதறிய ஊற்றே கவிதைகளாய்.
நொந்த மனம் நோ மறக்க
மருந்தானது கவிதைகளாய்.
//

அருமை அருமை அனைத்தும்
சத்தியமான வார்த்தைகள்
ரொம்ப அழகாக
எழுத்துக் கோர்வை

RAMYA said...

//
"வானம் வெளித்த பின்னும்"
நானும் நாமமிட்டேன்.
என்றாலும்
ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.
தமிழின் தாயே நன்றியோடு நான்!!!
//

தமிழன் துயர் தீர்க்க
இருகரம் கூப்பி
வணங்குகிறேன் தோழியே
தமிழ்த்தாய் நம் கண்ணீரை ஏற்று
கண்டிப்பாக கைவிடாமல்
தமிழனை காப்பாற்றுவாள்
என்று ஆணித்தரமாக
நம்புவோம்.

புதியவன் said...

முதலில் குழந்தை நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//தூவானச் சாரல் //

அழகிய வார்த்தை தேர்வு ஹேமா...

புதியவன் said...

//நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே
கவிதைகளாய் //

வலிகளை சொல்லும் வழிகளாய் கவிதைகள்...

புதியவன் said...

//கோல்கொண்டு கீறும்
என் இதயத்தை
மயில் இறகால் மெல்ல வருடி
இதம் தருவதும் கவிதைகளாய்.//

அருமை ஹேமா...

புதியவன் said...

//மனப்பாரம் குறைத்துவிட
கசிகின்ற இரத்தம் கொண்டு
கிறுக்குவதும் கவிதைகளாய்.//

ரொம்ப உணர்வுப் பூர்வமான வரிகள்...

புதியவன் said...

//ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.//

துயரம் தீரும்...அதற்கான நேரம் விரைவில் வரும்...

கவிதை மிக அழகாக உண்ர்வுப் பூர்வமாக இருக்கு...
மேலும் மேலும் பல கவிதைகளைப் படைக்க வாழ்த்துக்கள் ஹேமா...

Anonymous said...

குழந்தை நிலா தொடர்ந்து பல கவிதைகளை படைத்து வாழ்வில் ஏற்றங்களை காண வாழ்த்துகிறேன்.

தமிழன் said...

வாழ்த்துகள் ஹேமா, முன்பு போல் என்னால் பதிவும் போட முடியவில்லை தங்கள் பதிவுகளுக்கு மறுமொழியும் கூற இயலவில்லை. என்னை மன்னியுங்கள், ஆனால் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு முறை வந்து செல்வேன் நேரமின்மை காரணமாக.

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் ஹேமா! மேலும் மேலும் பல தடைகளையும் தடங்கல்களையும் தாண்டிப் பயணிக்க வாழ்த்துகிறோம்.. யதார்த்தம் நிரம்பிய எளிய சொல்லாடல் கலந்த உங்கள் கவிதைகளும் உங்கள் நிலாவும் என்றென்றும் வீறு நடை போட வாழ்த்துகிறேன்,

சக்(ங்)கடத்தார் said...

அடி பிள்ள ஹேமா எப்பிடிச் சுகம்??? கவிதகளாலயே கலகம் செய்கிறாய்.. நல்ல கருப்பொருள் , அப்புறம் எளிய சொல்லாடல் எல்லாம் சேர்த்த கவிதையாக தொடர்ந்தும் இதே வழியில புதுமைகள் கலந்து தர இந்தப் பழசும் வாழ்த்துது... வேறை என்ன புள்ள... குழந்தை நிலா இப்ப நடக்குமோ??? இல்லை தவழுமோ??? என்ன தான் இருந்தாலும் தொடர்ந்தும் குழந்தை நிலா குழந்தையாகத் கவிதை தந்து அனைவர் மனங்களிலும் மழலைக் கவி மொழியாலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்....! அப்ப நான் வரட்டே???

தேவன் மாயம் said...

ஹேமா!!
வருக கருத்துரை தருக...

தேவா.

Anonymous said...

வாழ்த்துகிறேன்.

- இரவீ - said...

குழந்தைநிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!


//நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே //(கவிதைகளாய்)...

இந்த வரிகள் கவிதைக்கு மட்டுமல்ல ...
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் இன்றைய பிரதிபலிப்பு.

thamizhparavai said...

குழந்தைநிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
ஓராண்டாய்க் கடந்து போன உமது கவிதைத் தடங்களில் இளைப்பாறினோம்,இசை கேட்டோம்,கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் உற்சாகம், கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் வலி, கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் தத்துவம், கொஞ்சும் காதல் இன்னும் எழுத்திலிட முடியா உணர்வுகள் பலப்பல...
படபடக்கும் கவிதைச் சிறகுகளில் காற்றையே தன் வசப் படுத்திய குழந்தை நிலாவின் கவிதைநடை மேலும் தொடர வாழ்த்துக்கள்...

ஹேமா said...

திகழ்,நானானி,விக்கி,ஜமால்,ரம்யா,புதியவன்,ஆனந்த்,திலீபன்,கமல்,சக்(ங்)கடத்தார்,கவின்.

எனக்கு உடம்பு சுகமில்லை.தலை நிமிர்ந்து கண்ணை பார்த்து எழுதமுடியாமல் இருக்கிறது எனவே என் குழந்தைநிலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அத்தனை என் அன்பு உள்ளங்கள் அத்தனை பேருக்கும் என் இனிய அன்பான நன்றி.

தமிழ்ப்பறவை அண்ணா,இரவீ விடுமுறையில் இருந்தாலும் வாழ்த்துச் சொல்ல நேரமெடுத்துக் கொண்டதுக்கும் மிக்க நன்றி.

இன்னும் நிறையப்பேரை எதிர் பார்த்தேன்.காணவில்லை அவர்களை.

நானானி,உங்கள் வாழ்த்தோடுகூடிய முதல் வருகைக்கும் நன்றி.

Anonymous said...

அன்பு ஹேமா... அழகு குழந்தைநிலா தளிர் நடை போட்டு ஓராண்டை நிறைவு செய்து உள்ளாள்.. என்னை அறியாமலே இன்று அவள் என் இணைய வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டாள்... உங்கள் கவிதை என்னும் விருந்தை அள்ளி அள்ளி தரும் அவளின் பால் எனக்கு ஓர் மையலே உள்ளது.. அவள் இன்று போல் என்றென்றும் மென் மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஹேமா...

தமிழன் said...

நீங்கள் விரைவில் சுகமடைய வாழ்த்துக்கள் ஹேமா

Muniappan Pakkangal said...

First wishin ur Kuzhandai nila,a happy birthday.Neethiyin kol eduththu em thuyaram theerththu vidu thamizh thaaye-wonderful finish to nice kavithai.You can post ur medical queries to my maduraimuniappan@gmail.com.Nandri for giving a nalla kavithai.

Anonymous said...

என்ன ஹேமா உடம்பு சரியில்லையா?
அன்பு சகோதிரி விரைவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

Unknown said...

ஓராண்டை எட்டிய
என் இனிய குழந்தை நிலாவே
சூராதி சூரனாய் வலையுலகில்
சரித்திரம் படைக்க வேண்டும்!

பிரளய வசன நடையகன்று
பல்லாயிரம் கவிதைகள் படைத்து
பரவசமாம் யாப்பிலக்கிய வாசமூட்ட
பாராயணம் பண்ண கவி வேண்டும்!

தரணியில் ஹேமாவின் எழுத்துக்கள்
தார்மீக உணர்வோடு குதூகலிக்க - நிலாவின்
குரலோசை காத்திரமாய் பதிவாக
களத்துமேட்டின் நிறைவான வாழ்த்துக்கள்!

Muniappan Pakkangal said...

How are u today Hema,hope you have recovered from your sickness.

காரூரன் said...

குழந்தை நிலாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
உற்சாகமாய் தொடர்ந்து உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்.

மேவி... said...

வாழ்த்துக்கள்....

தேவன் மாயம் said...

கவிதை தேநீர் பருக
வலைக்கு
வருக.....

அமுதா said...

குட்டி நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

NILAMUKILAN said...

ஹேமா குழந்தை நிலாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவளுக்கு என் அன்பும் முத்தங்களும்.
சந்திப்போம்

ஹேமா said...

ஓரளவு உடல் சுகமடைந்தேன்.
சந்தோஷமாய் வந்துவிட்டேன் உங்களை எல்லோரையும் காண.
சுகம் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நிறைந்த நன்றி பல.

ஹேமா said...

இன்னும் என் குழந்தைநிலாவுக்குப் புதிதாய் வந்து வாழ்த்துச் சொல்லிய MaYVee,அமுதா அவர்களுக்கும் அன்பு மது,ஈழவன்,காரூரனுக்கும்.எங்கேயோ காணாமல் போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த எங்கள் நிலா முகிலனுக்கும் மிக்க மிக்க நன்றி.

Anonymous said...

கேமாக்கா குழந்தைநிலாவுக்கு 1 வயதாகிவிட்டதா? அச்சோ நம்பவே முடியலை. இப்பதான் பிறந்தவள் போல இருந்திச்சு. நல்லா வளர்ந்துட்டாள். ம்ம் இன்னும் பலவாண்டு வளரட்டும். வாழ்த்துக்கள்.

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் அக்கா.

ஹேமா said...

வாங்கோ...வாங்கோ...வாங்கோ நிலா.சுகம்தானே.நீங்களும் உங்கள் காதலும்.

நிறையக் கோவம் உங்களோட.
இப்போ 2-3 மாததிற்கு முன்னர்கூட ஒரு மெயில் போட்டேன்.பதில் இல்லை.ஒருவேளை என்னோட என்னாச்சும் கோவமாக்கும் எண்டு இருந்திட்டேன்.என்றாலும் உங்கள் தளம் வருவேன் அடிக்கடி.கவிதைகள் இப்போ தரம் கூடிக் கலக்குகிறது.

நிலா குழந்தைநிலாவின் பிறந்தநாளுக்குப் பிந்தியாவது வந்ததற்கு மிக்க நன்றி.
குழந்திநிலாவின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்குத்தானே.
மறக்கவே மாட்டேன் நான்.நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நிலா நான் உங்களுக்கு.நீங்கள் சொல்லித்தானே Black template போட்டோம்.ஞாபகம் இருக்கா!

நிலா,நீங்கள் உங்களை இணைத்திருந்தீர்கள்.என்னமோ செய்திட்டேன்.எனக்கே தெரியவில்லை.உங்களது,இன்னொருவரினதும் இணைப்பு இல்லாமல் blocked என்று வருகிறது.காரணம் புரியவில்லை.கவனிக்கிறேன்.

Anonymous said...

ம்ம்ம்ம்ம் ஹேமாக்கா நான் மறக்கவே இல்லை எதையும். அச்சோ அக்கா ம்ம் மெயில் வந்தது வாசித்தேன்.. பதில் எழுத தாமதமாகிவிட்டது. அக்கா தெரியும் தானே தற்போதைய நாட்டு நிலைமைகள், சோஒ அடிக்கடி நியூஸ் படங்கள் தரவேற்றம் செய்யணும், கவிதைகள் போடணும் சகல பொறுப்புக்களும் என்மீது சுமத்தப்பட்டதால் நேரப்பற்றாக்குறையாகி விட்டது, இன்றுதான் கொஞ்சம் ரைம் கிடைச்சது சோ உங்கள் வலைப்பூவை நாடி வந்துள்ளேன்.

அப்புறம் என் நிலவொளியில் உங்கள் குழந்தைநிலாவையோ எந்த ஒரு தளத்தையும் இணைக்கமுடியவில்லை. மன்னிக்கவும். காரணம் மெயிலில் அனுப்புகின்றேன். சரிக்கா மீண்டும் சந்திப்போம்

Anonymous said...

தெரியாமல் போய்விட்டதே :) வாழ்த்துக்கள்...............................வாழ்த்துக்கள் !!!

ஹேமா said...

நன்றி சேவியர் அண்ணா.உங்கள் வாழ்த்துப் பிந்தியதாக இருந்தாலும் பெறுமதியானது.வந்தீர்களே அதுவே சந்தோஷம்.

Post a Comment