சும்மாதான் கிறுக்கினேன்
புத்தாண்டுப் பரிசாய்"பட்டாம் பூச்சி"விருது.
சும்மாதான் கிறுக்கினேன்
எழுத்துக்கள் கவிதையாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சுமைகள் சுளுவாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சொந்தங்கள் கூடியதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கனவுகள் சுகமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
தனிமை தொலைந்ததாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சிநேகிதங்கள் நெருக்கமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
உணர்வுகளின் சேமிப்பாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
இயலாததையும் சொல்வதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கோபங்களைக் கிறுக்கல்களாய்.
இன்னும்...இன்னும்
சும்மாதான்...சும்மாதான்
என்றாலும்,
வலிகளின் ரணங்களாய்
வாழ்வின் வரைபடமாய்
காதலின் தூதாய்
சந்தோஷங்களின் இறக்கைகளாய்
சமூகத்தின் சாட்டையாய்
சொந்தங்களின் பகிர்வாய்
என் தேசத்தின் ஏக்கமாய்!!!
பிறக்கிற தையில்
வயது ஒன்றாய்
பூத்தவள் குழந்தைநிலா.
அதற்குள் தட்டிய விருதோ மூன்று.
சேவியர் அண்ணா ஒருமுறை.
மலேசியா விக்கி ஒருமுறை
வியப்போடு நானிருக்க
புன்னகைக் குழந்தையாய்
புதியவன் ` இப்போ
"பட்டாம் பூச்சி"விருதாய்.
சிறகு முளைக்காத குறைதான்
ஆனாலும்...
பறக்கிறேன்...பறக்கிறேன்
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளைத்ததாய்
ஒரு ஞாபகத்தோடு
பறக்கிறேன்... பறக்கிறேன்.
பகிர மனமில்லை.
எனக்கே எனக்காய்
புதியவன் தந்த பட்டாம் பூச்சி இது.
என்றாலும் பகிர்கிறேன்.
நூறாவது பதிவின் திளைப்பில் இருக்கும்
கடையம் ஆனந்த்
அக்கினிக் குஞ்சுகளாய் தரும்
எங்கள் மெல்போர்ண் கமல்
தமிழில் தத்தித் தவழ்ந்து
விழுந்து எழும்பும் இரவீ.
பகிர்ந்து கொள்வார்கள்
இனி அவர்கள் பதிவின் பக்கத்தில்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
32 comments:
அன்புடன் ஹேமாவிற்கு!
காதல், சோகம், ஏக்கம், பிரிவு எல்லாம் சேர்த்து இடையிடையே ஊர் மோதல் பற்றியும் கவியுரைக்கும் பக்கம் இது!
வானம் வெளித்த பின்னும் தெரியும் விம்பங்கள் போல மனதை தொடுகின்றன கவிதைகள். வார்த்தைகள் ஒவ்வொன்றும் வர்ணஜாலங்கள் கொண்டு எம் மனதை இடையிடையே வர்ணமயமாக்குகின்றன.
தொடர்ந்தும் எழுதிப் தொடர்ந்தும் பதிவுகள் தர வாழ்த்துகிறேன்!
இன்று நடைபயிலும் (குழந்த) நிலா நாளை நற்பதிவு பல தர வாழ்த்துகிறேன். //
இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில்: வெகு விரைவில் எனது பக்கத்தில் ஒரு ஆக்க இலக்கியப் பதிவரின் நேர்காணல் ஒன்று பதிவேற்றப்படவுள்ளது. அவர் யாரென்று உங்களால் முடிந்தால் கண்டு பிடியுங்கள்... முடிந்தால் முயலுங்கள்.... இவர் யாரென்பது இப்போது ரகசியமாய்....??????? இதுவும் தெரிவிப்பது நாங்கள்.....! தீர்மானிப்பது நீங்கள்...!
புள்ளி வைத்து பெண்கள் போடும்
கோலமும் ஒரு வகையில்
கிறுக்கல் தான் அதே போல்
உங்கள் அழகிய கிறுக்கல்களுக்கு
பட்டாம்பூச்சி விருது
வாழ்த்துக்கள் ஹேமா...
மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
இது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கிடைத்தது பட்டாம்பூச்சி
வலை முழுதும் இதே பேச்சி
வாழ்த்துக்கள் பெற்றவருக்கும்
பங்கிட்டவருக்கும்...
புத்தாண்டு வாழ்த்துகள்
ஈழ மலரட்டும்
இன்னலும் தொலையட்டும்
பட்டாம் பூச்சிக்கே விருதா? பலே
பிறந்தநாளை கொண்டாடும் குழந்தை நிலாவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓராண்டில் 3 விருதுகள் பெற்ற சகோதரி ஹேமாவிற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கவித்திறனுக்கு இன்னும் பல விருதுகளை தரலாம். காதல், சோகம், மகிழ்ச்சி என்று பல தரப்பட்ட விஷங்களை எளிய முறையில் கவிதை வடிவில் உலாவ விட்ட உங்களுக்கு கவியரசி என்ற பட்டத்தையும் கொடுக்கலாம்.
நீங்கள் இன்னும் பல கவிதைகளை படைக்க வேண்டும். வாழ்வில் எப்போதும் ஏற்றத்தையும், மகிழ்ச்சியை பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஹேமா,
உங்களை சந்தோஷமான பதிவு போடச்சொன்னா, இப்படி சந்தோஷ சுனாமியில் சிக்கவச்சிட்டீங்களே. நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
2009 வருடத்தில் மேன் மேலும் விருது பல பெற வாழ்த்துகின்றேன்
குழந்தை நிலாவிற்கு பாராட்டுக்கள்.குழந்தை நிலா இன்னும் பல பல கவிதைகள் தந்து மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்.
விம்பங்கள்
அப்புச்சி
வண்ணத்துப் பூச்சி போல்
வண்ணங்கள் கலந்து
எண்ணங்கள் பட்டாம் பூச்சி போல்
சிறகடித்து
சிரிப்புக்கும் பூரிப்புக்கும் உங்கள் படைப்புக்கள்
உரமூட்ட காரூரனின் புது வருட வாழ்த்துக்கள்!
பட்டாம்பூச்சிக்கு...
வாழ்த்துக்கள் ஹேமா...
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
2009 உங்களுக்கு மிக சந்தோசமானதாய் இருக்கட்டும்...
புதுவருசத்தினை பட்டாம்பூச்சி விருதுடன் தொடங்குகிறிர்கள் வாழ்த்துக்கள்.......
கமல்,வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் என் மனம் நிறைந்த பட்டாம்பூச்சி வாழ்த்துக்கள்.அது என்ன...இலக்கியப் பதிவு.. நேர்காணல்...கண்டிபிடியுங்கள்.ஒண்டுமா விளங்கேல்ல.யாரையோ மாட்டிவிடத் திட்டம் என்று மட்டும் விளங்குது.
புதியவன்,என் கிறுக்கலகளை அழகாய் இருக்கு என்று அதற்குள்ளும் அழகு தேடித் தெரிவித்த உங்களுக்கும் ந்ன்றி.
ஜமால்,பட்டாம் பூச்சி கொடுத்தவர்கள் வாங்கியவர்கள் எல்லோருமே புத்தாண்டில் மிக மிகச் சந்தோஷமாக இருக்கிறோமே.அதற்கே முதல்ல நன்றி சொல்ல வேணும்.
//ஈழ மலரட்டும்
இன்னலும் தொலையட்டும்//
திகழ்,எல்லோரும் புதிய ஆண்டின் வருகையில் வேண்டிக் கொண்டிருக்கும் வேண்டுதல் இதுவே.
ANANTHEN வாங்க.முதன் முதலா வந்தீங்க.ஒரு வாழ்த்து,ஒரு கருத்து இல்லையா?இன்னும் வரணும்.நன்றி.
ஆனந்த்,சந்தோஷமாயிருக்கு உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்.
ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.
இரவீ,இவ்.....ளோ சந்தோஷமா!எனக்கும் பட்டாம்பூச்சியை உங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்ததில் சந்தோஷம்.
இராகவன்,நன்றி வாழ்த்துக்கு.நீங்களும் பட்டாம்பூச்சி கிடைச்ச சந்தோஷத்தில்தானே இருக்கிறீர்கள்.
அப்புச்சி சுகம்தானே!எங்க இருக்கிறீங்க.எப்போ வாறிங்கன்னு தெரியாம எப்பாச்சும் வாறீங்க.சந்தோஷமா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறீங்க.நன்றி...நன்றி.
காரூரன்,உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.என்றும் கை கோர்த்திருங்கள்.
தமிழன் வாங்கோ.கால் சுகம்தானே!உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கவின் வாங்கோ.நிறைஞ்ச சந்தோஷம் உங்கள் வாழ்துக்கு.
உங்களுக்கும் கூட.
என்ன கவின் இப்பிடி அநியாயம் செய்திட்டீங்க.உங்கள் பதிவுகளுக்கு என்னால் இனிமேல் பின்னூட்டம் போட முடியாது.நீங்கள் உங்கள் பின்னூட்ட முறையை மாற்றி
விட்டீர்கள்.ஏனோ அந்தப் பின்னூட்ட முறையில் பின்னூட்டம் இட என் கணணி மறுக்கிறது.இதனால் பல நண்பர்களுக்கு என்னால் பின்னூட்டம் இடாமைக்குக் கவலைப்
படுவதுண்டு.முடிந்தால் பழைய முறைப்படி மாற்றிவிடுங்கள்.
வாழ்த்துக்கள்
இதை நான் கண்டிப்பா சொல்லணும்.
\\கவின் வாங்கோ.நிறைஞ்ச சந்தோஷம் உங்கள் வாழ்துக்கு.
உங்களுக்கும் கூட.
என்ன கவின் இப்பிடி அநியாயம் செய்திட்டீங்க.உங்கள் பதிவுகளுக்கு என்னால் இனிமேல் பின்னூட்டம் போட முடியாது.நீங்கள் உங்கள் பின்னூட்ட முறையை மாற்றி
விட்டீர்கள்.ஏனோ அந்தப் பின்னூட்ட முறையில் பின்னூட்டம் இட என் கணணி மறுக்கிறது.இதனால் பல நண்பர்களுக்கு என்னால் பின்னூட்டம் இடாமைக்குக் கவலைப்
படுவதுண்டு.முடிந்தால் பழைய முறைப்படி மாற்றிவிடுங்கள்.
January 1, 2009 8:53 PM
\\
எனக்கும் ஏன் என்று புரியவில்லை..... இரவுமுழுவதும் யேசிச்சும்!?(இவன் எல்லம் யோசிக்கிறான்.. நீங்கள் புலம்றது நல்லாவே கேக்குது....) நீங்க கருத்துரை இடும்போது கனனி என்னா சொல்லுது..... உங்கள் google account மூலம் கருத்துரையிட முடியாவிட்டால்... பெயரினையும்... urlமுகவரியையும் கொடுத்து கருத்துரையிட்டு பாருங்கள் சரிவரும் எண்டு நினைக்கிறன் ...(நான் நினைக்கிறது எப்பதான் நடந்திருக்கு)
பழைய நிலைகு கொண்டுவரலாம்..... ஆனால் ஒரு சின்ன பிரச்சினை வந்து கன்னக்க வெட்டி கொத்துகள் செய்துதான் இந்த கருத்துரை பேட்டியை சேர்த்தனான், பழைய நிலைக்கு மாற்றினா சிலவேளை இருக்கிறதும் இல்லாமல் போகும்....... என்னங்க செய்யிறது விதி... நீங்க கருத்துரையிடும் போது என்னா messege வருது என்பதை கூறினால் எனக்கு தெரிந்த ஒரு கணணி எக்ஸ்பேட் ஒருவர் இருக்கிறார் (நான் தாங்க) முடிந்த உதவிகளை செய்வாரு.... அதுவரைக்கும் நான்கடவுளுக்கு நன்றி சொல்லிகிறன் எதுக்குன்னா..... என்னை ஒரு திட்டு(கருத்துரை)லிருந்து தப்பிக்க வைசதுக்குதான்.........ஹிஹி
இந்த மின்னஞ்சலுக்கு tamileboy@hotmail.com அனுப்புங்கள்,,,,,
பிறக்கிற தையில்
வயது ஒன்றாய்
பூத்தவள் குழந்தைநிலா.
அதற்குள் தட்டிய விருதோ மூன்று.
சேவியர் அண்ணா ஒருமுறை.
மலேசியா விக்கியும் ஒருமுறை.///
தன் பெருமை தான் அறியாள்!!!!
தேவா...
கவின் எல்லா மாதிரியும் அதில் சொன்னபடி போட்டுப் பார்த்தாச்சு.சரிவரவில்லை.
//தன் பெருமை தான் அறியாள்!!!!//
தேவா,நான் சந்தோஷத்தில சொன்னதை நீங்க கொஞ்சம் நக்கல் பண்ணிட்டுப் போற மாதிரி இருக்கே!
வாங்க வண்ணாத்தியாரே.கருத்தும் சொல்லிட்டுப் போங்களேன்.நன்றி வந்ததுக்கு.
\\ ஹேமா said...
கவின் எல்லா மாதிரியும் அதில் சொன்னபடி போட்டுப் பார்த்தாச்சு.சரிவரவில்லை.
\\
என்ன கொடுமை..இது
Kuzhandai Nila summa ezhuthavillai.You are writing nicely & Wishing your Kuzhandainila to touch peaks.Also wishes for ur Pattaam Poochchi award.
Post a Comment