மூர்த்தியோடு ஜோதியாகினான்.
கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.
இன்று...
ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.
பெரிய அண்ணாவாய்...தந்தையாய்...ஆசானாய்
என்னை வளர்த்த என் அண்ணாவுக்கு,
பூத்தூவி என் கண்ணீரோடு என் இதய அஞ்சலி.
என்றென்றும் மறவோம் நாம்.
தூரம் இருந்து தவிக்கிறோம் அண்ணா.
நாதஸ்வரத்துள் நாதம் வாழும் வரை
நீங்களும் எங்களோடு.
அண்ணா...அண்ணா...அண்ணா!!!
(நாதஸ்வர வித்வான் கோண்டாவில் V.K.கானமூர்த்தி)
அன்புத் தங்கை ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
17 comments:
கானமூர்த்தி அவர்களின் செழித்த முகமும், பஞ்சமூர்த்தியோடு கலக்கும் அவரின் நாதசுர இசையும் இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது, நம் கலைஞர்கள் பலர் இன்னும் பத்தோ இருபதோ வருடங்களோ வாழ்ந்து கலைச்சேவை தந்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஏக்கம் இன்னும் தொடர்கின்றது.
உங்கள் பகிர்வுக்கும், குறித்த நேரத்தில் செய்தியைச் சொன்னமைக்கும் என் நன்றி ஹேமா
அவர் யார் என்று தெரியாவிட்டாலும்? அன்னார் ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துகள்.
கானமூர்த்திக்கு அஞ்சலி, அவரின் பிரிவால் துயருற்றுள்ள அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
தகவலுக்கு நன்றி ஹேமா!
பாரம்பரிய நாகஸ்வர இசையின் நாதமாய் திகழ்ந்த கலைஞரின் இழப்பில் துயருரும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
Veteran Nathaswaram exponent Kaanamoorthy passes away
[TamilNet, Friday, 12 September 2008, 11:50 GMT]
V.K.Kaanamoorthy, an exponent in Eezham Nathaswaram music passed away Wednesday night in Jaffna Teaching Hospital after a brief illness at 60 years of age. Kaanamoorthy with his younger brother Panchamoorthy, excelled in playing Nathaswaram not only in Sri Lanka but also in Tamil Nadu in South India, Singapore and Malaysia for more than three decades.
V.K.KaanamoorthyKaanamoorthy was born in the year 1948 in Koa'ndaavil in Jaffna district.
At the age of 14 he learnt Nathaswaram music from veteran Vidwan Narayanasamy and later learnt most techniques in the music from Mr. Rasa of Maaviddapuram.
Once mastered in Nathaswaram, he and Panchamoorthy, had been playing the instrument in temples and other musical functions.
Both the artists have been described by the music world as the twins of Nathaswaram.
நன்றி பிரபா.நினைவுகளோடு மனம் பாரமாய்க் கனக்கிறது.ஓடிப் போக மனம் அடித்துக் கொள்கிறது.என்ன செய்ய?இறப்பு இயற்கைதான் என்று மனதை ஆற்றிக் கொள்கிறேன்.
உங்கள் பதிவும் பார்த்துக் கேட்டு இன்னும் நினைவலைகளுக்குள் மூழ்கிப்போனேன்.
திலீபன்,களத்துமேடு,ஆயில்யன் உங்கள் ஆறுதலுக்கும் என் நன்றி.
கானமூர்த்தியின் கானமழை இனிப்பொழியாது. வருத்தம்தான். வெகுவாக எல்லோரையும் கவர்ந்தவர் பிரிந்தபோது வருத்தமும் வெகுவாகியது. நாகசுர உலகிற்கு ஒரு பேரிழப்பு. கலை உலகில் அடுத்தடுத்து இரண்டாவது அடி. வாழ்க கானமூர்த்தி புகழ்!
சங்கீதத்தை படைப்பவர்கள் அனைவரும் கடவுளுக்கு அடுத்து இருப்பவர்கள். அவர்களும் இசையை 'படைக்கிறவர்கள்' அல்லவா. உங்களுடன் சேர்ந்து உங்கள் அண்ணாவுக்கு என் அஞ்சலி.
நன்றி தமிழ்விரும்பி.இறப்பும் இழப்பும் இயல்பானாலும் எம் நாட்டின் நிலைமை அதை ஈடு செய்யவோ சமப்படுத்தவோ முடியாத நிலையும் அல்லவா இருக்கிறது!
நேரம் கிடத்திருக்கிறதா முகிலன்?நன்றி.இசைக்கு அவர் படைத்தவர் என்றாலும் எனக்கு...என்னைப் பாதுகாத்தவர்,வழிகாட்டி என்றெல்லாம் சொல்லலாம்.நீங்களும் என்னோடு இணந்து கொண்டமைக்கு நிறைந்த நன்றி.
சகோதரி, உங்கள் சோகத்தின் பின்னணி மனதைக் கனக்க வைக்கிறது.
அவர் ஆன்மா அமைதியடையட்டும்.
18 Sep 08, 13:08 thankyou sistar message kaanamoorthi avarkaludaiya kudumpathararukku anuthapankal iam from jaffna mallakam
நன்றி சேவியர் அண்ணா.
இழப்புக்களின் வலி பழகிய ஒன்றானாலும் பெரியண்ணாவின் இழப்பைச் சுமக்கக் கஸ்டமாகவே இருக்கிறது.காலம் பழக்கிவிடுமென்ற நம்பிக்கையோடு...
நன்றி முரளி.உங்கள் இரங்கலை கோண்டாவிலுக்கும் அறிவித்தேன்.
மன்னிக்கவும் சகோதரி... அந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன். தங்கள் அண்ணா மற்றும் வழிகாட்டி என அறிந்து கொண்டேன். முதலில் புகைப்படம் பார்த்தவுடன், எனக்கு யாரென்று தெரியாததால் படிக்கவில்லை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
தங்களது சோகம் விரைவில் மாறவும் வேண்டுகிறேன்...
நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.அவர் என் ஒன்றுவிட்ட அண்ணாதான்.
என்றாலும் என் அப்பா பாடசாலை விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வந்து போவார்.எங்களுக்கு அப்பா போல என் அண்ணா.மரணம் இயல்பானாலும் மறப்பதுதான் கடினம்.
Post a Comment