*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 01, 2008

சக்கரவியூகம்...

மனிதம் மருகிப்
பணம் பறிக்கும் பேய்களாய்
மாறிய மனிதன்.
தொலைக்கப்பட்டதாய்
தொலைந்து நிற்கும்
மனிதர்களில் மாத்திரம்
மனிதம் கொஞ்சம் வாழ்வதாய்.

சலனமில்லா மௌனம்.
என்னைச் சுற்றி "சக்கரவியூகம்"
ஓடி ஓய்ந்து நிற்கிறது.
பணம்...பணம்...பணம்
காய்ந்து வறுத்த தொண்டைக் குழிக்குள்
தேவைப்படுகிறது ஒரு சொட்டு ஈரம்.

ஒரு மிடர் நீர்
மிண்டு விழுங்கிக் கொள்கிறேன்.
என்றாலும் ஆழ்மனதிற்குள்
அமைதியா இரைச்சலா!
கடற்கரைக்கு
அமைதி தேடிப் போனால்
அலை அமைதியைக்
கெடுக்காத மாதிரி.

மீண்டும் தாவுகிறது சக்கரவியூகம்.
பணம்...பணம்...பணம்
நாட்டைப் பிளந்து
மனிதனைப் பிளந்து
மனிதத்தைப் பிளந்து
தன்னையே பிளந்து கொல்லும்
சாகசப் பேய்.

நாய் தின்னாக் காசு என்று
வாய் ஜாலம் பிளந்தாலும்
ஆ...வென்று வாய் பிளக்கும்.
பிணமும் மெல்லமாய் அசையும்.
மனிதனால் முடியாததெல்லாம்
ஆக்கிக் காட்டும்.

பொய்யான பனிக்கட்டு இதழுக்குள்
போலிப் புன் சிரிப்பு.
ஆசைகளால் அடுக்கிய
எலும்பைப் போர்த்திக்கொண்டு
ஓர் உடலும் பொய்யாய்.
நிழலில்கூட நிஜமில்லா
வேஷதாரிக் கூட்டம்.

உள்ளுக்குள் போராடும்
எரிமலைச் சிந்தனைகள்.
நாலு பேர் போற்றப்
படித்தவனும்
பல் இளித்துப் பண்பையே
பரணுக்குள் ஏற்றும் பரிதாபம்.
மனிதன் தொலைய விட்டது
ஆறாவது அறிவையா
ஆறு அறிவையும் புதைத்த
புதைகுழியா மூளை.

மண் ஆசை பெண் ஆசை
பொன் ஆசை கொண்டவர்களை
ஒரே செல்லில் கொன்று குவித்து
ஒரே படுக்கையில்
மூச்சை இழுத்துச் செல்கிறார்களே.
எங்கே பணம்?

மனம் வறண்டு தவிக்க
வானம் வெடித்து மழையாய்.
அண்டவெளிகள் முழுதும்
அனைத்து ஜீவராசிகளும்
காத்துக் கிடக்கிறதே
வேறு ஏதோ ஒன்றுக்காய்.
புரிகிறதா!!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

கோவை விஜய் said...

தள வடிவைப்பு அருமை. பாராட்டுக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

உருப்புடாதது_அணிமா said...

2வது போனி ஆஜர் ஸார்


மிக அருமையான பதிவு.

பாராட்டுக்கள்!!!

உருப்புடாதது_அணிமா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்>>>>>>

இது சும்மா டமாஸுக்கு

ஹேமா said...

வணக்கம் கோவைவிஜய்.முதன் முதலாக வந்திருக்கிங்க.நன்றி.

உங்க பேர் தெரில.நன்றி.
உருப்படாதவன்.மன்னிச்சிடுங்க.
உருப்புடாதது.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழன் said...

ஹேமா நலமா, எப்படி போய் கொண்டுஇருகிறது உங்கள் கவிதை பயணம்.

Unknown said...

தங்கள் கவிதைகளும்,தள வடிவமைப்பும் மிக அருமை....

குரங்கு said...

====
மண் ஆசை பெண் ஆசை
பொன் ஆசை கொண்டவர்களை
ஒரே செல்லில் கொன்று குவித்து
ஒரே படுக்கையில்
மூச்சை இழுத்துச் செல்கிறார்களே.
எங்கே பணம்?
====

உண்மை...

நன்றாக இருக்கிறது.

thamizhparavai said...

//தொலைக்கப்பட்டதாய்
தொலைந்து நிற்கும்
மனிதர்களில் மாத்திரம்
மனிதம் கொஞ்சம் வாழ்வதாய்//
தொலையத்தான் விரும்புகிறேன்....உறவுச்சங்கிலிக்குள் விரும்பி விலங்கிட்டுக் கொள்கையில் தொலைவதைக் காட்டிலும்,பணத்திற்கு அலைவது விருப்பமாகி விடுகிறது...
//பொய்யான பனிக்கட்டு இதழுக்குள்
போலிப் புன் சிரிப்பு.
ஆசைகளால் அடுக்கிய
எலும்பைப் போர்த்திக்கொண்டு
ஓர் உடலும் பொய்யாய்.
நிழலில்கூட நிஜமில்லா
வேஷதாரிக் கூட்டம்//
வேஷம் போட்டுப்போட்டு என்னால் நாட்குறிப்பில் எழுதுகையில் கூட எழுத்திற்கு வேஷங்கட்டி விடுகிறேன்...
//ஆறு அறிவையும் புதைத்த
புதைகுழியா மூளை.//
நன்று...க‌விதை வ‌ரிகள் ப‌ணத்திற்கே வியூக‌மிட்டு விட்ட‌ன‌...


//கடற்கரைக்கு
அமைதி தேடிப் போனாலும்
அலை அமைதியைக்
கெடுக்காத மாதிரி//
ஏதோ பிழை போல் தெரிகிறது...
"கடற்கரைக்கு
அமைதி தேடிப் 'போனால்'
அலை அமைதியைக்
கெடுக்காத மாதிரி"
அல்லது
"கடற்கரைக்கு
அமைதி தேடிப் போனாலும்
அலை அமைதியைக்
'கெடுக்கிற'‌ மாதிரி" என்றிருக்கலாமென எனக்குத் தோன்றுகிறது...
//தள வடிவைப்பு அருமை. பாராட்டுக்கள்//
//தள வடிவமைப்பும் மிக அருமை....//
வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன்...

உங்க‌ள் ப‌க்க‌த்திற்கு வ‌ந்தால் க‌விதை வ‌ருவ‌தற்கு முன் அதைத் த‌விர‌ எல்லாம் வ‌ருகிற‌து...(பார‌த் ஸ்டுட‌ன்ட்ஸ் பாப்‍ அப் விண்டோ உள்ப‌ட‌)...
இதில் ஏற்ப‌டும் தாம‌தத்தில் வெறுத்து முந்தைய‌ இரு க‌விதைக‌ளையும் முழுக்க‌ப் ப‌டிக்க‌ முடிய‌வில்லை...
ஸ்லைடு ஷோ அருமை... பாட‌ல் அருமை போல் தோன்றிய‌து...(த‌னிப்பாட‌லா,அல்ல‌து திரை இசையா...?)முழுக்க‌க் கேட்க‌வில்லை..ஆனால் க‌விதை இன்னும் ந‌ன்றாக‌ இருக்குமென‌ நினைக்கிறேன்...
கவிதைக‌ளைத் த‌னியாக‌ப் ப‌திவேற்றினால் கூகுள் ரீட‌ரில் ப‌டிக்க‌ வ‌ச‌தியாயிருக்கும்...

ஹேமா said...

வாங்க தமிழ்ப்பறவைஅண்ணா.
கவிதையை ஆழமாக ரசித்து இருக்கிறீர்கள்.நான் எழுதும் நேரத்தைவிட இப்படி யாராவது சொல்லும் போதுதான் அதன் ஆழத்தை நானும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.நன்றி உங்களுக்கு.
கவிதையில் திருத்தம்.கவனிக்கிறேன்.

அடுத்து என் தள அமைப்பைக் கண்டிக்கிறீர்கள்.என்ன செய்யலாம் நான்?Lee அவர்களிடம் சொன்னேன்.
தளத்தில் எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறுகிறார்.
புரியவில்லை எனக்கு.

ஸ்லைட் ஷோ என் முதல் முயற்சி.அதன் கவிதைகள் 5 ம் ஏற்கனவே கவிதைகளுக்குள் இருக்கின்றன.பாடல் மலேசியாவில் திலீப் வர்மன் என்பவரால் பாடப்பட்ட தனிப்பாடல்.அழகான பாடல்.
தேடும்போது கிடைத்தது.அருமையாய் இருக்கிறது.
நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.

ஹேமா said...

வணக்கம் சண் சிவா.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

//புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.//

இனி அடிக்கடி வருவேன்.உங்கள் புகைப்படங்களை பார்க்க என்றே.

ஹேமா said...

வாங்க வணக்கம் குரங்கு.
(ஒரு மாதிரி இருக்கு குரங்கு ன்னு சொல்ல)உங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றி.

ஹேமா said...

வாங்க திலீபன்.நான் மிக்க நலமே.
நீங்களும் நாடும் நலம்தானே.
என் கவிதைகளோடு என் தளம் மனதிற்குத் திருப்தியாய் இருக்கிறது.
மனதின் வலிகளுக்கு ஏற்ற தளமாகவே இருக்கிறது.நிறைந்த முகம் அறியா நண்பர்கள் வேறு.சந்தோஷமாக இருக்கிறேன்.

மீண்டும் நன்றி சொல்கிறேன் திலீபன்.எங்களை விட முழு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் தமிழ் ஈழத்தில்.எங்கள் நம்பிக்கைகள் நிச்சயம் மலரும்.விகடனின் கருத்துக் கணிப்பில் உங்கள் முழு மனதின் மலர்வைக் காண்கின்றேன்.
நன்றி திலீபன்.

Anonymous said...

hi

neengal muthal muraiyagaga kavithikalai
slide show potathu nanraga ullathu.inni varum naatkalil innum meruku ooti poodungal


kutti kannah
uk

Post a Comment