*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, July 21, 2008

நடிகர் திலகம்...

மனதைக் கழற்றி
முகிலுக்குள் முடக்கி,
மேடையேறிப் பாட்டும் கூத்துமாய்
காற்றோடு கதைப்பவனாய்...

சொந்த நினைவுகளை
ஓட்டுக்குள் ஆமையாய்
உள் இழுத்து,
வெள்ளைச் சிரிப்போடு
கலைக்குள் தொலந்தவனாய்...

இயல்பைத் தொலைத்து
நெருஞ்சி முள்ளுக்குள்ளும்
கண்ணில் நீர் மறைக்கும்
கலைஞனாய்...

எதைக் குறித்தும்
அக்கறை தவிர்த்து
தன் தொழில் ஒன்றையே
குறி வைத்து,
கூர்க் கோல் எறியும்
நடிகன் இவனாய்...
சிவாஜி கணேசன்.

இயற்கை அழியும் வரை
எமக்குள் நினைவோடு வாழும்
எங்கள் நடிகர் திலகத்தின்
நினைவோடு
இன்று ஒரு கணம்!!!

ஹேமா(சுவிஸ்

7 comments:

puduvaisiva said...

Hema Vanakam

your thought is very nice
our Sivaji in every Tamil people never forgot is moment.

Thank you share with you

puduvai siva

ஹேமா said...

வணக்கம் புதுவை சிவா.இன்றுதான் வதிருக்கிறீர்கள்போல...வாருங்கள்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
உண்மைதான் சிவா,சிவாஜி அவர்களின் நடிப்பால் சிகரத்துக்கே கௌரவம் கிடைத்த பெருமை.
தமிழின் மூத்த புதல்வன் அவர்.அவர் வழி செல்ல யாருமில்லை என்பதுதான் கவலை.
(கமல் ஓரளவு அவர் பெயர் சொல்வார் என்று நம்புவோம்)

thamizhparavai said...

நல்ல நினைவு அஞ்சலி.. தமிழ் திரைஉலகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளாத கலைஞன் அவன்...இருந்தும் தமிழனுக்கு அவனும் ஓர் அடையாளம்..

thamizhparavai said...

its just for email follow up..

Anonymous said...

'சிவாஜிக்கு இன்டர்நெட் ல எல்லாம் ரசிகர்கள் இருக்கேங்களா? குடுத்த காசுக்கு மேல் நடிப்பவர் சிவாஜி.

The Tamilish Team

thamizhparavai said...

//குடுத்த காசுக்கு மேல் நடிப்பவர் சிவாஜி.

//அப்படி நடிக்க வச்சுட்டாங்க.. அவரோட இயல்பான நடிப்புக்கு 'தேவர்மகன்','முதல் மரியாதை','பராசக்தி' இதுவே போதும்...

ஹேமா said...

வணக்கம்.என்ன சார் நக்கலாக்கும்.சரி பரவாயில்ல.
எப்பிடியோ சிவாஜி மாதிரி மாதிரி காசு குடுத்தாலும் நடிக்க ஆருமே இல்லதானே!!!நன்றி கருத்துக்கும் இணைவுக்கும் கூட.

விடாதீங்க தமிழ்ப்பறவை.நானும் விடமாட்டேன் சிவாஜி பத்திப் பேச!!!

Post a Comment