*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 06, 2008

எப்போதாவது உன் நினைவு...

வாழ்வு நரையாகி
நகர்ந்துகொண்டிருக்கிறது.
மன இடுகைகள்
என்றும் இளமையாக.

உன்னை நான்
எப்போதாவது நினைப்பதுண்டு.
பல நாட்கள்
பிரிந்திருந்த காதலர்கள் போல
வேகமாக ஓடி வரும்
கடல் அலை
கரையைத் தொட்டுத்
தழுவிக் கொள்ளும் போது.

கோடைகாலத்தில்
ஆண் குருவியும் பெண் குருவியும்
சேர்ந்தே தும்பு தேடி
கூடு கட்டிப் பின் அடை காக்கும்
பெண் குருவிக்கு ஆண் குருவி
ஆசையோடு
இரை தேடித் தரும்போது.

உன்னோடும் என்னோடும்
ஒன்றாய்ப் படித்த சிநேகிதர்கள்
என்றாவது நிமிட விசாரிப்புச் சந்திப்பில்
"அவனுக்காகவா இன்னும் காத்திருக்கிறாய்"என்று
பரிகாசமாய் கேட்டுச் செல்லும் போது.

பக்கத்து வீட்டுக்
கணவன் மனைவியின்
சின்னச் சின்னச் சண்டைகள்
வேலி தாண்டிக்
காதில் விழும் போது.

மூக்குக் கண்ணாடியை
இடம் மாறி வைத்துவிட்டுத்
தேடும்போது.

எல்லாவறையும் விட
இரவில் தூக்கம் வராமல்
விழித்திருக்கும் போது
இல்லாவிட்டாலும்...
தூங்கும் போது கனவில்
படுக்கையின் பக்க வாட்டில்
கைகளால் தலையணையைத்
துழாவித் தேடி
எடுத்துக் கொள்ளும்போது!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

g said...

ஹேமாவுக்கு முதலில் எத்தனை வயது என்று தெரியவேண்டும்.

இதே கன்றாவி, 60 வயதில் ஏன் வருவதில்லை. இதெல்லாம் பருவக்கோளாறு. ஆண்-பெண் சேர்ந்து வாழவேண்டும். அவ்வளவே. ஒருவனையே நினைத்துக்கொண்டு அழுது தீர்ப்பது பைத்தியக்காரத்தனம். திருந்தப்போவதில்லை. என் நேரத்தை வீணடிக்கவிருப்பமில்லை.

Anonymous said...

5 Jul 08, 19:09
மிகவும் நன்றாக உள்ளது.எனது வாழ்த்துக்கள்.sharmilan.

Anonymous said...

6 Jul 08, 11:52
junaid: neenda wittu pona kavidaigalai padithu warugiren. padithu witu comment eludukiren. nanri .
www.junaid-hasani.blogspot.com

ஹேமா said...

வணக்கம் Sharmilan வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் என் நன்றி.

ஹேமா said...

வாங்க Junaid எங்க ரொம்ப நாளாவே காணோம்.ஊருக்குப் போய் வந்தீங்களா.திரும்பவும் வந்ததற்கு நன்றி.உங்கள் தளம் வந்தேன். பார்த்தேன்.

ஹேமா said...

வணக்கம் ஜிம்ஷா.வாங்க.என்ன முதல் முதலா வாறீங்க.சூடாவே வாறீங்க.என்னமோ விரக்தியா இருக்கிங்கபோல.Ok OK Cool.என் வயசா!!!!!!வேணாம் நீங்களே கண்டு பிடிங்க.நீங்க சொன்ன கருத்துக்கு எனக்கு உடன்பாடு இல்லேங்க ஜிம்ஷா.உண்மையா மனசில அன்பு வச்சிட்டா காலத்துக்கும் அழிக்க முடியாது. இன்னொருத்தரோட வாழ்றது கஸ்டம்.ஏனோ தானோன்னு வாழ்ந்தா நீங்க சொன்னது சரி.உங்க சில நிமிடத்துளிகளை என்னோட செலவழிச்சதுக்கு
நன்றி. கருத்துக்கும் கூட.

Anonymous said...

http://xavi.wordpress.com
ஜூலை 7, 2008 இல் 6:15 பிற்பகல்
//இங்காவது என்னைப் பாராட்டினீர்களே! நன்றி அண்ணா.//

உண்மையிலேயே உங்கள் கவிதைகளை மிகவும் ரசிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு தளம் ஸ்லோவாக இருக்கிறது. அலுவலகம் வீடியோ, ஆடியோ, பிளாஷ் எல்லாம் இருந்தால் திறக்காது. அதனால் கூட இருக்கலாம் !http://xavi.wordpress.com

Anonymous said...

ஹேமா உண்மையாய் உங்கள் வயது என்ன?உங்கள் பெயரையும் கவிதைகளையும் வைத்து புரிந்துகொள்ள முடியாமல் இருக்கு.ஜிம்ஷா மாதிரியே எனக்கும் குழப்பம் உங்கள் வயது பற்றி.காதலின் ஆழம் உங்கள் கவிதையில்.

ஹேமா said...

வாங்க சுமதி.நீங்களுமா.... சரிதான்.நன்றி.

Post a Comment