*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, June 25, 2008

இயலாமையின் எல்லை...

கற்பனைகள் உடைந்த கற்குவியலுக்குள்
கனத்த மனதோடு.
நேசித்தலின் அளவை விட
வெறுத்தலின் வேக்காட்டோடு.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை
விலகுவதைத் தவிர.
சலசலத்த சமூகத்தின் இடையே
சின்ன அமைதியோடு நான்.
உன்னால் அதுவும் தொலையும் தறுவாயில்.

மன்னித்தலும் மறத்தலும்
உன்னைப் பொறுத்தவரை
தேவையற்ற ஒன்று.
வருடங்கள் எட்டின் வாக்குவாதங்கள்
செவிடன் காதில் ஊதிய சங்காய்.
சாக்கடைக்குள் கலந்து கொண்டிருக்கும் உனக்கு
என் புத்திமதிகள்
சாத்தான் காதில் ஓதும் புலம்பலாகவே.

இப்போ எல்லாம்
என்னைவிட புகையும் போதையும்
உன் துணையாக.
கட்டி வைத்துக் காவல் காக்க
ஒன்றும் குழந்தையல்ல நீ.
அன்பின் கட்டுக்குள் அடங்காத நீ
அழிவை நோக்கியே.

என்னவனே...
கண்கள் வலிப்பதை அறிகிறாயா.
கற்பனையில் காதலித்த
அந்த அழகான நாட்கள்.
உனக்குள்ளும் இப்படியா...
நீயுமா... என்பதுபோல.
கற்பனைக்கும் உண்மைக்கும்
எட்டாத் தூரமாய்.
சிறுக்கி நான் ஏமாந்தது என் குற்றமே
சொன்னாயா நீ என்ன!

திறமைகள் நிறைந்திருந்தும்
முயற்சியோ தேடலோ அற்றவனாய்.
மற்றவர்களைக் குறை சொல்லியபடி.
இன்றிருந்தோர் நாளையில்லை.
உலக ஒற்றுமைக்காய்
கூக்குரலிடும் ஒரு பத்திரிகைவாதியாய்.
இருந்தும் அசிங்கமான வார்த்தைகளோடு
படிப்பை பண்பை மறந்து
பிற்போக்காய் ஏனடா நீ.

ஏற்றிவிட ஏணி தருகிறேன்
ஏறாமலேயே எட்டியும் உதைக்கிறாய்.
தனித்த இரவில் கூட வந்து பார்
உன்னோடுதான் பேசிக்கொண்டிருப்பேன்
உலகம் ஒன்று எங்களுக்காய் உருவாக்கியபடி
உன் உயர்வின் எதிர்பார்ப்போடு.
காற்றோடு கலக்கும்
உன் திறமைகளைத் திரும்பவும்
கேட்க மிகுந்த ஆவலுடன்!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Anonymous said...

//ஏற்றிவிட ஏணி தருகிறேன்
ஏறாமலேயே எட்டியும் உதைக்கிறாய்.
தனித்த இரவில் கூட வந்து பார்
உன்னோடுதான் பேசிக்கொண்டிருப்பேன்
உலகம் ஒன்று எங்களுக்காய் உருவாக்கியபடி
உன் உயர்வின் எதிர்பார்ப்போடு//

மிக்க நன்றி...

என் வாழ்வில் நடந்தது உங்களின் வைர வரிகளாய்....

என் மன ரணத்தின் வெளிப்பாடு உங்களின் கவிதையாய்......

மிக்க நன்றி...

ஹேமா said...

வணக்கம் குமார்.வருகைக்கு நன்றி.எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகும் போது வருகின்ற மனதின் வலிகளே வரிகளாகின்றன.
நீங்களும் இதே வலியை உணர்ந்திருக்கிறீர்கள் போலும்.

Anonymous said...

25 Jun 08, 11:04
kathal vali patri padippadai vida antha anubava vali erugkirade ! adai unaramatdume mudiyum.yaralum katru dharamudiyathu.entha eluthugalai thirumba thirumba padigkum podhu ennai ariyamal enko pokiren Enn? deriyavillai. Somu

ஹேமா said...

சோமு,கவிதையை அழகாக ரசிக்கிறீர்கள்,அதன் உணர்வையும் புரிந்துகொள்கிறீர்கள்.நன்றி.

Anonymous said...

Hi Hema naaddin vethanai,sonthangkalin vethanai,samookathin vethanai,ithodu ungkal sontha manathin vethanai eppadi ithanaiyaiyum varikalaka thara mudikirathu ungkalal.supperb Hema.Ram

ஹேமா said...

வணக்கம் Ram எங்கே அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்கள்.என்றாலும் வருகின்ற சமயத்தில் உற்சாகமாக ஊக்கம் தருகிறீர்கள்.நன்றி.

விச்சு said...

தனித்த இரவில் கூட வந்து பார்
உன்னோடுதான் பேசிக்கொண்டிருப்பேன்// காதலர்களின் பிம்பங்கள்.

Post a Comment