*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, March 23, 2008

விதிக்கு ஓர் வேள்வி...

வாழ்வு புயல் வேகம்.
விழுதலும் எழுவதுமாகி
வலிக்கிறது.
வழி கடக்க
உடம்பும் மனமும்
சேர்ந்தே சோர்கிறது.
வைராக்கியத்தை
விட்டு விட்டால்...
கிடையில் கிடந்தேவிடும்.
தொடர்ந்து நடக்க...
காடும் கரம்பும்
கல்லும் முள்ளும்.
மலர்ப்பாதை ஒன்றுக்காய்
தாகம் தீர்க்க...
தடாகம் ஒன்றுக்காய்
ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும்
வாழ்வுக்குக்குள்.
ஏக்கமும்...எதிர்பார்ப்புக்களும்
இயற்கையே.
வாழ்வே ஏக்கமானால்....?
விடுகதைக்கு விடையுண்டு.
விடையில்லா வாழ்விது.
விதி என்ற பெயரில்
வேளை என்ற பெயரில்
வாழ்வின் எல்லை வரை
எல்லாமே ஆசாபாசங்கள்.
கொள்ளை போகிறதே வாழ்வு.
விதியும் வேளையும்
எதுவரை...?
விதிக்கும் வேளைக்கும்
வராதா சாவொன்று.
கொள்ளி கொண்டு
நான் கொழுத்திவிட!!!!!!

ஹேமா(சுவிஸ்)11.02.2003

1 comment:

விச்சு said...

ரொம்பவும் விரக்தியடைந்து எழுதியுள்ளீர்கள். ரசிக்கனும்னு நினைத்தாலும் உங்கள் விரக்தி அதை தடுக்கிறது.

Post a Comment