உள்ளுக்குள்...உறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பை விட
உடையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.
கனவை
கனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.
அந்த...
இரவின் வார்த்தைகள்
அன்று...சந்திரனை
பாம்பு விழுங்கிய தருணமென்று
தலையோடு நீருற்றி
முழுகிக் கொள்ளுங்களேன்
தயவு செய்து!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||









