தலைதான் சிதறிவிட்டதாம்ஒற்றைக் கீறல்கள கூட
ஏதுமில்லையாம்
ஒருகாலை மடக்கி
கைகளை விரித்து
படுத்திருப்பதுபோல
அவரை
வரைந்திருந்தார்கள்
எத்தனையோ தடவைகள்
கடந்த இடமிதில்
பலரும்....நானும்
படத்தில் வரைந்தவரை
புன்சிரிப்போடு கண்டிருக்கிறோம்
சந்தியை கட்டம் கட்டி
வட்டத்திற்குள்
வரைந்திருக்கிறார்கள்
இனி எப்போதுமே
காணப்போவதில்லை அவரை
என்றாலும் அந்தச் சந்தியை
நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||










