Thursday, March 26, 2015

ஆசுவாசம்...

ஈரூற்றுக் குருதியின் பெருவலியோடு
வானம் கூடடைகிறது ஒற்றையாய்.

இந்நிகழ்வுக்குத் தேவையாய்
கண்களைக் குளிப்பாட்டித் திரும்ப
வானவில் சமைக்கும்
நிறுத்தல் குறிகளின் விளம்பல்.

தேவையற்ற அலங்காரமும்
பரப்பிய பூவும்
தட்டோடு காத்திருக்கும்
பழங்களும் பாவம்.

ஆதிமனிதன் தின்று
போட்ட விதையில்
முளைத்த முத்தக்கோட்பாடு
எச்சிலாய் வழியும்
அக்கினிக்குச் சாட்சியாய்.

ஏன் இத்தனை
ஆயுதக் கண்கள் கொக்கியாய்
இங்கவிழும் ஆடைக்குள்.

அவசியமற்றது.....

கனவுகளைத் தின்ற
இந்த இரவும் முடியும்
போதும்
மிச்சம் மிச்சமென
தாய் சேய் நலமென்பதோடு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

5 comments:

  1. நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களை வாசிக்கிறேன்....
    கவிதை எப்போதும் போலவே அருமை... :)
    கடைசி வரியில் ஒரு சிறுகதையின் ஆச்சர்யத்தை உணர்ந்தேன்.... வாழ்த்துக்கள் அக்கா...

    பிரபு எம்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஒவ்வொரு வார்த்தைகளும் அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவிதை அருமை அக்கா...

    ReplyDelete
  4. அருமையான கவிதை !முத்தக்கோட்பாடு வேறுபடம் வரிகள் அருமை!

    ReplyDelete
  5. முத்தக்கோட்பாடு எந்த அறிவியல் புத்தகத்தில் இருக்குதோ! கவி நன்று. தேர்ந்தெடுத்த படம் அருமை.

    ReplyDelete