வதை முகாம்களில்
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !
வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !
இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!
பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !
மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !
வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !
மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !
நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !
குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !
வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !
இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!
பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !
மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !
வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !
மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !
நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !
குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)
வாரத்தில் ஏழு நாட்கள்தான். எட்டு முத்தங்களா!! கவி நச் நச்சுனு இருக்கு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநலம்தானே ஹேமா!
ReplyDeleteபாடிடலாம் இந்த கவிதையை என
ReplyDeleteதுவங்கத்தான் செய்தேன்.
ஓரிரு சந்தங்களும் பாடினேன்.
மேலே பாட முடியவில்லை.
நெஞ்சு கனக்கிறது.
வலிக்கிறது.
விரக்திக்குள்ளே
வீரமும் விவேகமும்
காதலும் சங்கமம் ஆன
கதை இது.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
நெஞ்சைப் பிழிந்த frappe!
ReplyDeleteஇரத்தம் சொரியும் வீரத்தமிழ் முத்தம்தான் நெஞ்சை கனக்க செய்கிறது.
ReplyDeleteநெருப்பில் வெடித்த
ReplyDelete'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !
எட்டில் பிடித்தது இம்முத்தம் அருமை