Wednesday, April 09, 2014

மூட்டம்...


காதலின் வெப்பத்தால்
அந்தரங்க
தருணங்களைத் தவிர்க்கவும்...

அந்தகார நேரங்களில்
தண்ணீர் தாகம் எடுக்கவும்...

என்றோ
கூரையில் சொருகிய வாள்
தவறி விழுந்து
வயிற்றைக் கிழிக்கவும்...

சொற்கள் சிதறிய
முகத்தில்
முத்தாய் வியர்க்கவும்...

குற்றங்கள் மறைத்து
முகம் சுருங்கி
கூம்பவும்...

நெஞ்சு முடிக்குள்
முகம் புதைக்கும்
துணையை விலக்கவும்...

கலவி கலைத்து
கவிந்த இருளுக்குள்
கரைந்த
காதலைத் தேடவும்...

தனித்த பொழுதுகளில்
கரையோர நண்டாய்
கடல் முழுகி எழும்பவும்...

உடைந்த இரவில்
சொல்லாமல் வரும்
மழைபோல் பொழியும்

இளமைக்கால நினைவுகள்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

  1. உடைந்த இரவில்
    சொல்லாமல் வரும்
    மழைபோல் பொழியும்

    இளமைக்கால நினைவுகள்!!!//ம்ம் நின்று கொல்லும் நினைவுகள். கவிதை அருமை.

    ReplyDelete
  2. நினைவில் நின்றாடும் உணர்வின் ஒளியில் வந்த
    சிறப்பான( வலி தரும் )கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
  3. அருமையான கவிதை சகோதரி.

    ReplyDelete
  4. ஆற்றா நினைவுகள்!

    ReplyDelete
  5. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,மகளே!நலமுடன்,வளமுடன் வாழ்க!!!

    ReplyDelete