Friday, April 04, 2014

கடவுள்களான பாவிகள்...


கடலில்
நிலவைக் குளிக்கவைத்து
அசுத்தப்பட்டதாகக்
கழுவிக்கொண்டிருந்தார்கள் கடலை
ஒருபோதும்
தங்களை முகர்ந்து பார்க்காதவர்கள்.

பைத்தியமெனப் பெயரிட்டுவிட்டு
சுற்றிச் சூழ்ந்து பிடுங்கிக்கொண்டார்கள்
சுதந்திர தேசத்து வாழ்வையும்.

பின்னொருநாளில்
பேயனவும் விமர்சித்தார்கள்
பேயகற்றும் வித்தையில்
கைதேர்ந்தவர்கள்.

வாதைகளுக்குள் பழக்கப்பட்டாலும்
முடி பிடுங்கப்பட கதறி அலறுகையில்
அன்பறுத்து நசுங்கிய
வன்ம ஓலமெனவும்
பேசிக்கொண்டார்கள்.

பைத்தியங்களைத் துரத்தும் காமுகர்களும்
பேயை விரட்டும் ஆனந்தாக்களும்
மாறுவதற்கில்லை
ஆனால்...
கடலையும் நிலவையும்
என்ன செய்வார்கள் இனி ?!!!

ஹேமா(சுவிஸ்)



7 comments:

  1. வணக்கம்.

    நன்றாக உள்ளது இறுதியில் வினாவை கேட்டு முடித்த விதம் சிறப்பு...வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. என்னதான் முயற்ச்சித்தாலும் மாற்றமுடியாதவைகள்
    ஆயிரம் உண்டு என விளம்பும் அழகிய கவிதை சகோதரி...

    ReplyDelete
  3. யாரையும் யாராலும் மாற்ற இயலாது ஹேமா....

    அழகா சொல்லிருக்கீங்க....

    ReplyDelete
  4. ம்ம்...என்ன செய்வார்கள்?

    ReplyDelete
  5. அழுக்கு ................நீக்கமற நிறைந்திருக்கும்/கிறது!

    ReplyDelete
  6. மாறுவது சந்தேகம்.ம்ம்

    ReplyDelete