தூதென வந்த அரூப முத்தத்தை
அநாதையாய்
தவித்தலையவிடாமல்
என்னைச் சோதிக்கும் வைத்தியன்.
தீண்டிச் சீண்டும் இசையென
ஒட்டுமொத்தமாய்
துளைத்து நுழைகிறான்
சூரியக்கதிரென
மனத்திரை விலக்கி.
முடிக்க முடியாத் துவக்கம் இது.
தகுதியற்ற சில சங்கதிகளும்
சில எதார்த்தங்களும்
நமக்கிசைவில்லா
வெற்று வேட்டுக் காலங்களை
சப்பணம் கட்டிக்கொண்டு
ஆத்மார்த்தமெனும் வார்த்தைக்குள்
தீரக் கரைக்கிறது.
மனம் கலைத்தவன்
தலைசாய்க்க
உப்பில் பக்குவப்படுத்தும்
உயிரில் பூத்த பிம்பங்கள்
காதலாய் அன்றி நட்பாய்.
அச்சம் கலந்த சாமிக்கதைகளிலும்
கெக்கலித்த பூதக்கதைகளிலும்
காணாமல் போன காதல்
இதோ இங்கே...
தெருக்கூத்துத் தவிர்த்த
நாகரீகம்போல்
கடந்து நடக்கிறான்
முதன் முதலாய்
மழித்து முகச்சவரம் செய்யப்பட்ட
குழந்தை முகத்தோடு.
உயிரில்லாச் சில முத்தங்கள்
முதல் மோகத்து
அவசர ஆலிங்கனங்களில்
கருக்கொள்ளுமாம்.
அதற்கு அப்பாலும்....
உடை தவிர்த்து
ஒற்றைப் பழத்தில்
இரு பசி !!!
ஹேமா(சுவிஸ்)
எண்ணங்களை சிறகடிக்க செய்தது ...
ReplyDeleteதெருக்கூத்துத் தவிர்த்த
ReplyDeleteநாகரீகம்போல்
கடந்து நடக்கிறான்
முதன் முதலாய்
மழித்து முகச்சவரம் செய்யப்பட்ட
குழந்தை முகத்தோடு.//ம்ம் அருமை ஓப்பீடு!
ஒரு பழம். இரு பசி.
ReplyDeleteஅருமையான தலைப்பு.
அருமை...
ReplyDeleteஅழகான கவிதை...
வாவ் வாவ்..
ReplyDeleteகருத்தாழமிக்க வரிகள்!மயக்கும் சொற்பிரயோகம்!!நன்று!!!
ReplyDelete