Wednesday, April 16, 2014

காலம் அளக்கும் காலம்...


உன்னை மட்டுமல்ல
உனக்கான கவிதைகளையும்
தொலைத்துவிட்டிருக்கிறேன்
உன்னைத் தெரிந்தும்
கவிதைகளைத் தெரியாமலும்.

யாகசாலைச் சிலந்தியென
வளர்தீயின் வண்ணமாய்
உன் நினைவுகளைப் பின்னியபடி
அதே சுழற்சி வட்டத்துள்.

உள்ளிருந்தபடியே
அகற்றிய விட்டத்தை
பெரிதாக்கிவிட்டு
வெளிவரா
என் குடங்கை நிலை
திராணியற்று
எனக்கே பரிதாபமாய்.

இந்தக் கோடையிலும்
உனக்கான
மேகநிறப் பூ மொட்டுக்கள்
இப்போதும்
உன் பெயரோடு
அவிழ்ந்துகொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

2 comments: