![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxHykHVFbt4PKRgbZIzaCqysTtlncy2oBwg-S64XuDyFmyHUvtnz3r0uYvaR6SnHms0G1csehmP0wR3bjzeepJJD6DyJYPBtK2eSJzUnTLslXPIMgbCBYtW8l14MlVhkc62pyum6BRLbtz/s280/565326_362835163810091_872703147_n.jpg)
நரக வழி தவறி
கூர்ப்பிழந்து தவிக்கையில்
தேவதைகளை செதுக்கும்
அன்பின் உளியொன்றாய்
நெருங்கிச் சிரிக்கிறது
ஒரு நிழல்.
கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு
தேடிய கனவொன்றை
கையேந்தும் சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
என்னை
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.
தூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது.
மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்....
காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!
ஹேமா(சுவிஸ்)
வணக்கம்
ReplyDeleteதூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது
அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காமமும் காதலும் வேறுதான்
ReplyDeleteவாமன முத்தம்!
ReplyDeleteஅருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆழமான பொருளுடன்
ReplyDeleteஅற்புதமான சொல்லாட்சியுடன் அமைந்த
அழகான கவிதைப் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDelete//கசங்கிய துணியொன்றை
ReplyDeleteஅழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு//
அழகு.
அழகிய கவிதை வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி....