மாறத்தொடங்கியிருந்தான்
என்னவன்....
உருவெடுத்திருந்தாள்
அவள்
அன்பு மலையென
எனக்கும்
அவனுக்குமிடையில்.
கணங்கள் சுருங்கும்
வேளை
அன்புக் கயிற்றை
அவள் மெல்ல இழுக்க
அவனுக்கான
என் கவிதைகளை
அழிக்கத் தொடங்கியிருந்தது
பெருமழை.
நச்சு நாகமென
மாறியவள்
என்னை மெல்ல
மிண்டி
விழுங்கிக் கொண்டிருந்தாள்.
நன்றியுள்ள அவனால்
கடிக்கவோ குதறவோ
முடியாமல் போனது
அப்பொழுது.
விட்டு விட்டு விழுங்கும்
நாகமும்
நானும்
வேண்டிக்கொண்டிருந்தோம்
அன்பின் அவனுக்காக!!!
ஹேமா(சுவிஸ்)
Nice hema
ReplyDeleteNice hema
ReplyDeleteகவிதை அருமை ஹேமா.
ReplyDeleteம்... வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கவிதை...
ReplyDeleteஅழகான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
படிமங்கள் அதிகம் கொண்ட கவி வரிகள் அருமை கவிதாயினி.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமிண்டி?
ஸ்ரீராம்....மிண்டி = கடினம்,நெம்பு,தைரியம்
ReplyDelete