எத்தனை
யூலைகள் வந்தபோதும்
நாம் நினைத்தாலும்
பிரசவிக்கமுடியா
உயிர்களின்
கரி நாள் இது.
உடைந்த ஏதோவொன்றில்
ஞாபகமூட்டி
மனம் எப்போதும்
துடித்தாலும்
இடம் மாறி
மனம் மாறி
நகர்ந்தாலும்
தடக்கும் அலைவரிசையில்
நின்று நலம்கேட்கும்
கரிநாள் இது.
அழகான
மறக்க முடியாத
ஒரு வசந்தத்தின் போது
அருகில் இருந்தவர்கள்
அது போதும்
உயிர் உள்ள வரை.
கருத்த நாட்களுக்கும்
வர்ணம் பூசிக்கொண்டிருந்தோம்
களவாடியது உலகம்
நிறம்மாறுமுன்.
காத்திருங்கள்....
முன்னறிவிப்பேதுமில்லா
ஓவியன்
இன்னொரு சந்திப்புக்கு
உறுதியளிப்பான்.
மண்பார்த்து விழிமூடுமுன்
நிச்சயம் நினைத்திருப்பீர்
இனிவரும் சந்திப்பை.
சொல்ல நினைக்கிறேன்
மறுமுறை
கரிநாளாய் இல்லாநாளில்தான்
சந்திப்போம்
நிச்சயமிது!!!
கண்ணீருடன் ஹேமா(ஈழம்)
கரிநாள் இல்லாது போகட்டும்...
ReplyDelete.. அழகான
ReplyDeleteமறக்க முடியாத
ஒரு வசந்தத்தின் போது
அருகில் இருந்தவர்கள்
அது போதும்
உயிர் உள்ள வரை.,,
அழகிய வரிகள்...
உருகியது உடல்களுடன்
ReplyDeleteஉள்ளமும் உணர்வுகளுந்தான்
கருகிய கறுப்பு ஆடி
கலக்கியது என் வாழ்விலும்...
உணர்வினைப்பகிர்ந்தாய்
உன்னதமான கவியிலே தோழி!
உயிருள்ளவரை
உறையாது அந்நினைவுகளே!...
ஆடிக்கொரு தரம் வாடித்தான் ஆகவேண்டும்.
ReplyDeleteம்ம்ம்!ம்ம் கவிதையில் ஒரு கலகம்!
ReplyDeleteவலி நிறைந்த கவிதை.
ReplyDeleteஉங்களின்மனவலிபுரிகிறது
ReplyDeleteகண்ணீர் வேண்டாம் ஹேமா... விரைவில் மகிழ்ச்சி ஏற்ப்படும் ஹேமா... மன வலியைத் தாங்கிக்கொள்ளுங்கள்...
ReplyDeleteதமிழ் மனம்: 5
ReplyDeleteநம்பிக்கை தான் வாழ்க்கை.நம்மை 'மட்டும்' நம்புவோம்!
ReplyDeleteநிச்சயம் சந்திக்கலாம் நம்பிக்கையோடு இருங்கள் ஹேமா.
ReplyDelete