Thursday, July 04, 2013

கிச்சு கிச்சு...


குடை மறைத்த
தலைகள்
எதைப்பற்றியும் பேசலாம்.....

இலக்குகள்
இலட்சியங்கள் பற்றியும்
இளையராஜா
இசை பற்றியும்....

குடும்பம் பற்றியும்
குழந்தைகள் பற்றியும்
சமூகம் பற்றியும்
கவிதை பற்றியும்
நண்பர்கள் பற்றியும்
அவர்களின் காதல்
பற்றியும் கூடப் பேசலாம்.

ஆனால்....

தெருக்கரைகளை
பற்றிக்கொண்டு
மறைந்திருப்பதே
குசுகுசுக்கவைக்கிறது
காமமென்று !

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. ஹா... ஹா...

    குடைக்குள் இப்படியும் பேசுவார்களோ?

    கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நிஜம்தான். மனசுக்கு கடிவாளாமுண்டா?!

    ReplyDelete
  4. அவர்கள் இதழ்களை பற்றி பேசுவார்களோ டவுட்டு ஹேமா....

    வழக்கம்போல வரிகள் அழகு..

    ReplyDelete
  5. உங்கள் கண்களில் வந்து விழுந்த படங்களுக்கு மோட்சம்.

    ReplyDelete
  6. இதெல்லாம் இனிமேல் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டாச்சே?

    ReplyDelete
  7. குடைகளும் அழகிய கவியாகிறது

    குடையைத்தான் கேட்க வேண்டும் என்ன பேசினார்கள் என்று :)


    ReplyDelete