Saturday, July 13, 2013

வாழ்வு (1)


விழுந்தால்
ஏந்திக்கொள்ள இரு கைகள்.
பள்ளம் நிரம்பிய பூக்கள்
ஆற்றில் இழுத்தாலும்
அணைத்துக்கொள்ளப்
பாறைகள்.
கொத்தாமல்
துரத்தும் பாம்பு.
தயார்ப்படுத்தியபிறகே
கனவுகள்கூட
மிரட்டுகின்றன.

அந்த இரக்கம்கூட
சில மனங்களுக்கு
இல்லாமல் போனதேனோ !

சீரான
வார்த்தைக் கோர்வைபோல்
அழகாய்
அடுக்கடுக்காய்
எதிர்பார்த்த வண்ணத்தில்
அமைவதில்லை
வாழ்க்கை !

ஒவ்வொரு நிமிடங்களும்
விட்டுச் செல்கிறது
தேடலின் அதிசயங்களை
முடியாத கனவைத்
தொடர வரும்
அடுத்த இரவுக்கான
காத்திருப்புப்போல!

கடின தருணங்களை
கடந்துகொண்டிருக்கிறேன்
விளக்கம் தேவையில்லை
அவசியமற்றது
தெரிந்தவர்களுக்கு
மிச்சமிருப்பவர்களோ
நம்பமாட்டாதவர்கள் !

ஒற்றைப் புள்ளியில்
குந்தியிருக்கிறேன்
கனகாலம்.
எங்கு சுற்றிலும்
பெரிய முள்ளை
உரசிப்போகும்
சின்னமுள்ளை
நிர்வாணப் பகலிலும்
தேடுகிறதென் கண்
நேற்றைய கனவில்
தவறி விழுந்ததாய்
பின் வந்த செய்தி !

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !

ஹேமா(சுவிஸ்)

12 comments:

  1. unmaithaan nallaa sollideenga...

    ReplyDelete

  2. வணக்கம்!

    வாழ்வைக் குறித்து வடித்த கவிகண்டேன்!
    தாழ்வை ஒழித்தல் தகை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. விருப்பமான வழிகளை
    நாங்களே
    தேர்ந்தெடுத்த பிறகு
    வலிகளை
    ஏன்...
    தாங்க மறுக்கிறோம் !//

    சரிதானே...!

    ReplyDelete
  4. ஹேமா,
    என்ன சொல்வது..
    எப்படி சொல்வது..
    ஏதும் தெரியவில்லை..
    வார்த்தைகளைத் தேடுகிறேன்
    வழுக்கியே செல்கிறது..
    வாழ்ந்தாலும்
    வீழ்ந்தாலும்
    வாழ்க்கை நம்முடையதே!

    ReplyDelete
  5. வாழ்க்கை இப்படித்தான்...

    த.ம: 3

    ReplyDelete
  6. கடின தருணங்களை
    கடந்துகொண்டிருக்கிறேன்
    விளக்கம் தேவையில்லை//அதுதான் நீண்ட நாட்களுக்குபிறகு பதிவிடுகிரீர்களோ? வருந்த வேண்டாம்

    ReplyDelete
  7. விருப்பமான வழிகளை
    நாங்களே
    தேர்ந்தெடுத்த பிறகு
    வலிகளை
    ஏன்...
    தாங்க மறுக்கிறோம் !

    ----

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. \\\சீரான
    வார்த்தைக் கோர்வைபோல்
    அழகாய்
    அடுக்கடுக்காய்
    எதிர்பார்த்த வண்ணத்தில்
    அமைவதில்லை \\\\
    வாழ்க்கை ! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....பாடல்தான் நியாபகத்திற்கு வருகிறது...

    ReplyDelete
  9. \\
    விருப்பமான வழிகளை
    நாங்களே
    தேர்ந்தெடுத்த பிறகு
    வலிக//

    இந்த யதார்த்தம் உணர்ந்துவிட்டால் இன்பம் துன்பம் எல்லாமே கடந்து போகும்.

    ReplyDelete
  10. இன்னும் என்னை மறக்காமல் இணைந்துகொண்டிருக்கும் உங்கள் கருத்துக்கள் கண்கலங்க வைக்கிறது.இதுவும் வாழ்க்கை.நன்றி !

    ReplyDelete
  11. தேர்ந்தெடுத்த வழிகளில்,வலி எனில் தாங்கவே வேண்டும்!

    ReplyDelete
  12. வலிகளை
    ஏன்...
    தாங்க மறுக்கிறோம் !//

    வலிகளும் கடந்துபோகும்.

    ReplyDelete