ஆறாம் விரலோடு
என் கனவில் வரும்
நான்
சிவப்பு வண்ணத்திலும்...
சொற் கேளா
குழந்தையென
என் பொழுதுகளும்....
ஒற்றை அலைவரிசையில்
இயங்கும் மனம்
ஏதோ ஒரு பய
கிலேசத்தோடும்....
நூறு முறை
வானொலியில்
எவரினதோ
மரண அறிவித்தல்
சொல்லும் உன் குரல்
என்னுள்
அமிழ்ந்து
மூழ்கிக்கொண்டிருக்க....
அலையடித்துத் தூக்கியெறியப்பட்ட
சிறுமீனின் துடிப்பு
இன்னும் ஒரு
நொடிதானென
அறிவிக்கிறது
வானிலிருந்து
நூலிறங்கிய வாழ்வொன்று!!!
ஹேமா(சுவிஸ்)
சொற்கேளா மனுஷி என்பதில் நியாயம் உள்ளதா?
ReplyDeleteWav.... Beautiful lines...
ReplyDeleteஅலையடித்து தூக்கியெறியப்பட்ட
ReplyDeleteமீனின் துடிப்பு
அருமையான உவமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அலையடித்துத் தூக்கியெறியப்பட்ட
ReplyDeleteசிறுமீனின் துடிப்பு//
ரசித்தேன்....!
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅற்புதம் ஹேமா.
ReplyDeleteஎன்னவெனச் சொல்ல என் தோழியே!..
ReplyDeleteஅனைவரும் ரசித்த சிறுமீனின் துடிப்பு என்னியத்திலும் துடிக்கின்றது...
அருமை!
வாழ்த்துக்கள்!
த ம.4
சிறப்பான வரிகள்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDelete