சாவி தொலைந்த
வீடென்றார்கள்
நானும்.....
'சாவி' என்று
சொல்லிக்கொள்கிறேன்.
வீட்டுக்குள்.....
இரு தேவ அர்ச்சகர்கள்
ஒருவர்
வேதம் சொல்ல சொல்ல
இன்னொருவர்
எழுதிக்கொண்டிருக்கிறார்.
தேடட்டும் சாவியை அவர்கள்
கிடைக்குமட்டும்
அவர்கள் அர்ச்சிப்பும்
எழுத்தின் பதிவுகளும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
எனக்கும் சாவி தொலைந்த
வீடொன்று
கா(க)ட்டித் தாங்களேன்
அப்படியே அவனுக்கும்
சொல்லி வையுங்கள்!!!
ஹேமா(சுவிஸ்)
தொடருங்கள்...
ReplyDeleteசொல்லிவிடுகிறோம்... பா.
ReplyDeleteநல்லது...!
ReplyDeleteவாருங்கள்வாழ்த்துகிறேன்
ReplyDeleteவாங்கோ ஹேமா... வீட்டினுள் போய்விட்டு சாவியைத் தொலைத்துவிடலாம்...:)
ReplyDeleteநல்ல கற்பனை!அருமை!
வாழ்த்துக்கள்!
த ம.3
அருமை..
ReplyDeleteஅருமையான கவிதை, ஹேமா.
ReplyDeleteஅருமையான கவிதை சகோதரி.
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..
சொல்லிட்டாப்போச்சு...!
ReplyDeleteதொலைந்து போன சாவிகள் இங்கெ பதிந்து செல்லும் அடையாளம் நிறையவே/நன்றி
ReplyDeleteசாவியைத் தொலைத்த வீடும், வீட்டைத் தொலைத்த சாவியும் சந்திக்கும் நாளில் சாசுவதமாகலாம் ஒரு சங்கமம். அழகான வரிகளில் ஹேமாவின் முத்திரைக்கவிதை. பாராட்டுகள் ஹேமா.
ReplyDeleteஇறுதி பத்தி வாசிக்கையில் 'பாபி' திரைப்படத்தின் 'ஹம் தும் ஏக் கமரே மேம் பந்த் ஹோ... ஔர் சாபி கோ ஜாய்..' என்னும் பாடல் நினைவுக்கு வந்துபோகிறது.