Tuesday, July 23, 2013

காதல் சேமிப்பு...


உன் அத்தனை நினைவுகளையும்
சேமிக்கத் தொடங்குகிறேன்
சிரிக்கும்பலூன்
பேசும் பலூன்
திட்டும் பலூன்
கொஞ்சும் பலூன்
அதட்டும் பலூனென...

பலூன்கள் வெடிக்கும்
காற்றில் பறக்கும்
ஒருநாள் என்பாய்
உண்மைதான்
காலம்...
என்னையும் காற்றாக்கியிருக்கும்
உன் அன்பின் துகள்களோடு
அந்நேரம்!!!



அடித்து ஓய்ந்த
கனத்த மழை
களைத்துவிட்ட
மூன்றாம் நாளில்
குப்புறக் கிடக்கும்
ஒற்றைச்சருகொன்று
ஒளித்து வைத்திருக்கிறது
உன் பெயரை
மென்னீரம் தடவி
உனக்குள் கிடக்கும்
என் நினைவுபோல்!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

  1. மழை முடிந்ததும் குப்புறக்கிடக்கும் சருகை எடுத்துப்பார்த்தால் அதனுள் மட்டும் ஈரப்பசை இருப்பதை மனதினுள் கிடக்கும் நினைவுகளோடு ஒப்பிட்டது அருமையான கவிச்சிந்தனை... மிக அருமை...

    ReplyDelete
  2. சொன்ன விதம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சிறுசேமிப்புதெரியும்இதென்னவித்தியாசமாய்காதல்சேமிப்பு

    ReplyDelete
  4. \\\\குப்புறக் கிடக்கும்
    ஒற்றைச்சருகொன்று
    ஒளித்து வைத்திருக்கிறது
    உன் பெயரை
    மென்னீரம் தடவி
    உனக்குள் கிடக்கும்
    என் நினைவுபோல்!!\\\\

    என்ன அருமையான ஒப்புமை !

    ReplyDelete
  5. அடித்து ஓய்ந்த
    கனத்த மழை
    களைத்துவிட்ட
    மூன்றாம் நாளில்
    குப்புறக் கிடக்கும்
    ஒற்றைச்சருகொன்று
    ஒளித்து வைத்திருக்கிறது
    உன் பெயரை
    மென்னீரம் தடவி
    உனக்குள் கிடக்கும்
    என் நினைவுபோல்!!!

    ------------

    கவிதை அருமை....

    ReplyDelete
  6. இரண்டுமே அருமை! இரண்டாவது கவிதையை மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  7. இரண்டாவது கவிதையை கவிதாயினியை தவிர வேறு யார் எழுத முடியும்...

    ReplyDelete
  8. ஓயாமல் பெய்ய தொடங்கி விட்டது என்னுள் ....

    ReplyDelete